பொதுமக்களாகிய நாம் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்றால், - நமது கிராமத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களையும், செலவிடப்படும் அனைத்து வரவு, செலவு கணக்குகளையும் ஆய்வு செய்ய முடியும். - நமது கிராமத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுக்கடையை மூட நிர்பந்திக்க முடியும். - நமது ஊர் அரசு பள்ளியைச் சிறப்பாக செயல்படவைக்க முடியும். - அழிவுத் திட்டங்களிலிருந்து நமது மண்ணையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்க முடியும். - நமது ஊரின் ஏரி, குளங்களை சீர் செய்ய முடியும். - மொத்தத்தில் நமது ஊரை முன்மாதிரி கிராமமாக மாற்றமுடியும்.
மேற்கண்ட விசயங்களுக்காக கிராமசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றுவோம்! இதற்கு அரசு அதிகாரிகளோ, பஞ்சாயத்து தலைவரோ தடை சொல்ல முடியாது.
கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் நாட்கள் : ஜனவரி 26 | மே 1 | ஆகஸ்ட் 15 | அக்டோபர் 2
|