LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- மலேசியா

இணைய தமிழின் வளர்ச்சிக்கு உதவும் விக்கி மாரத்தான் !!

விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கிப் பயனர்களும் ஒன்று கூடி புதிய கட்டுரையைத் துவங்குவது, குறுங்கட்டுரைகளை விரிவாக்கம் செய்வது, பழைய கட்டுரைகளில் உள்ள தகவல்களை மேம்படுத்துவது, மேற்கோள்கள் மற்றும் ஆதாரங்களைத் திரட்டுவது, கட்டுரைகளில் எழுத்துப்பிழை, சந்திப்பிழை உள்ளிட்ட திருத்தங்களைச் செய்வது, கட்டுரைகளுக்குத் தேவையான படிமங்களை இணைப்பது உள்ளிட்ட வழக்கமான விக்கிப்பீடியா தொகுத்தல் பணியை செய்வதாகும்.

சூலை 19, 2015 அன்று தமிழ் விக்கி மாரத்தான், தமிழ் விக்கிப்பீடியர்களால் நடத்தப்படுகிறது. இது உலகம் முழுவதுமுள்ள பழைய பயனர்களை ஒருங்கிணைக்கவும், ஒற்றுமையை உறுதிப்படுத்தவும், புதிய பயனர்களை ஊக்குவிப்பதாகவும் அமையும். 19-ம் தேதியன்று 24 மணிநேரமும் இந்நிகழ்வு நடைபெறவுள்ளதால், பல்வேறு நாடுகளில் இருந்து பயனர்கள் தங்களுக்கு உகந்த நேரத்தில் பங்களிப்பு செய்யலாம்.

இ. மயூரநாதனின் முயற்சியில் தமிழில் விக்கிப்பீடியா துவங்கப்பட்ட 12 ஆண்டுகளில் இது மூன்றாவது விக்கி மாரத்தான் ஆகும். இந்நிகழ்வில் அவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பங்குபெறுகிறார். மூன்று தமிழ் விக்கிப்பீடியர்கள், அதே நாளில் மெக்சிகோவில் நடைபெறும் விக்கிமேனியா கருத்தரங்கில் இருந்து பங்குபெறுகிறார்கள்.

ஏற்கனவே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைபெற்ற இடங்களிலும் இந்நிகழ்வை மேற்கொள்ள முயற்சிகள் நடந்து வருகின்றன. வீட்டிலிருந்தோ அல்லது அலுவலகத்திலிருந்தோ அல்லது நண்பர் குழுமமாக இணைந்தோ, இணையத்தின் வாயிலாக பங்குபெறலாம். தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர்களில் ஒருவரும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான மா. செல்வசிவகுருநாதனின் எதிர்பார்ப்பின்படி, 100 பயனர்கள் தலா 100 தொகுப்புகளைச் செய்தால், சுமார் 10,000 தொகுப்புகள் ஒரே நாளில் சேர்ந்துவிடும்.

நோக்கம்

பழைய பயனர்கள் உற்சாகத்தோடு பங்களிக்கவும், புதிய பயனர்களை இணைக்கவும் இது நல்லதொரு முன்னெடுப்பாகவும் வாய்ப்பாகவும் இருக்கும்.

நேரம், தேதி

சூலை 19 (ஞாயிற்றுக் கிழமை), 2015 அன்று 24 மணி நேரமும் (அவரவர் நேர வலயத்துக்கு ஏற்ப).

இடம்

உங்களுக்கு விருப்பமான இடங்களில்.

வீடு, அலுவலகம், நண்பர்கள் சந்திப்பு, கல்லூரி, தமிழ் இணையக் கல்விக்கழக அலுவலகம், கட்டற்ற மென்பொருள் கூட்டங்கள், பள்ளி ஆய்வகங்கள்.

விருப்பமான பயனர்கள் ஓரிடத்தை தேர்வு செய்து கூடலாம்.

திட்டம் / இலக்குகள்

விக்கியில் பங்களிப்பது தன்னார்வப் பணி என்பது போன்றே மாரத்தான் நிகழ்வில் கலந்துகொள்ளுதலும். பயனர்கள் தமது விருப்பமான தொகுப்புகளை இந்த நிகழ்வின்போது செய்யலாம்.

சில வழிகாட்டல்கள்

புதிய கட்டுரையைத் துவக்கலாம்.
குறுங்கட்டுரைகளை விரிவாக்கம் செய்யலாம்.
பழைய கட்டுரைகளில் உள்ள தகவல்களை மேம்படுத்தலாம்.
கட்டுரைகளில் மேற்கோள்கள் மற்றும் ஆதாரங்களைச் சேர்க்கலாம்.
கட்டுரைகளில் எழுத்துப் பிழை, சந்திப்பிழை உள்ளிட்ட திருத்தங்களைச் செய்யலாம்.
கட்டுரைகளுக்குத் தேவையான படிமங்களை இணைக்கலாம்.
தாம் முன்பு எழுதிய கட்டுரைகளை விரிவாக்கம் செய்யலாம்.
பங்குபெற விரும்பும் பயனர்கள்

https://ta.wikipedia.org/…/விக்கிப்பீடியா:விக்கி_மாரத்தான்_…

by Swathi   on 18 Jul 2015  0 Comments
Tags: விக்கி மாரத்தான்   Wiki Marathon   Tamil Wiki Marathon   Wiki Marathon 2015   இணைய தமிழ்        
 தொடர்புடையவை-Related Articles
இணைய தமிழின் வளர்ச்சிக்கு உதவும் விக்கி மாரத்தான் !! இணைய தமிழின் வளர்ச்சிக்கு உதவும் விக்கி மாரத்தான் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.