LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பாம்பன் பழைய பாலம் நினைவுச்சின்னமாக மாற்றப்படுமா?

நூற்றாண்டைக் கடந்த பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்ற, இந்திய ரயில்வே நிர்வாகம் ஒப்பந்தப்புள்ளி விட்டுள்ளது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ஷெர்ஜர் தூக்குப்பாலம் கடந்த 24.2.1914 அன்று ரயில் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டது. இதன்மூலம் பாம்பன் தீவில் உள்ள ராமேஸ்வரம் இந்தியாவின் பெருநிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டது.

1964ம் ஆண்டில் பாம்பன் தீவைத் தாக்கிய பெரும் புயல், சூறாவளியின்போது இந்தப் பாலம் கடுமையாகச் சேதமடைந்தது. இதனைச் சீராக்க விரிவான பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பழைய ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழா 2014ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. ராமேஸ்வரம் தீவை ஆன்மீகச் சுற்றுலா நகரமாக மாற்றியதில் இந்த ரயில் பாலம் பெரும் பங்கு வகித்தது. கடந்த 2019ம் ஆண்டு பழைய பாம்பன் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில் நுட்பப் பிரச்சினைகள் மற்றும் விரிசல்கள் காரணமாக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பழைய ரயில் பாலம் அருகே புதிய ரயில் பாலத்தைக் கட்டுவதற்குத் திட்டமிட்டு இருந்த ரயில்வே நிர்வாகம், அதே ஆண்டில் பாலக் கட்டுமான பணிகளைத் தொடங்கியது.

சுமார் 5 ஆண்டுகளில் புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுக் கடந்த ஏப்.16ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். புதிய ரயில் பாலத்திற்கு இணையாகப் பழைய ரயில் ஷெர்ஜர் தூக்குப்பாலத்தை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து 110 ஆண்டுகள் பழமையான ரயில் பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. தற்போது இப்பாலத்தை அகற்ற இந்திய ரயில்வே நிர்வாகம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுமார் ரூ.2.81 கோடி மதிப்பில் 4 மாதத்திற்குள் பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டும் என ஒப்பந்தப்புள்ளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியாவின் முதல் கடல் பாலமாக அமைந்த பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்றுவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி உள்ள நிலையில், இதனை நினைவுச் சின்னமாக மாற்றி ரயில் பயணிகள் பார்வையிட்டுச் செல்லும் வகையில் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். .

 

by hemavathi   on 24 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜி.எஸ்.டி வரி சீரமைப்பு - விலை குறையும், உயரும் பொருள்களின் பட்டியல் ஜி.எஸ்.டி வரி சீரமைப்பு - விலை குறையும், உயரும் பொருள்களின் பட்டியல்
இந்தியாவில் 10 ஆண்டுகளில்  குழந்தைகள் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்தது இந்தியாவில் 10 ஆண்டுகளில் குழந்தைகள் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்தது
இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவில் சட்டப்பூர்வமாகத் தங்கிக்கொள்ள அனுமதி இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவில் சட்டப்பூர்வமாகத் தங்கிக்கொள்ள அனுமதி
ஹைத​ரா​பாத், அமராவ​தி, சென்னை, பெங்​களூருவை இணைக்கும் புல்லட் ரயில்- சர்வே பணிகள் தொடக்கம் ஹைத​ரா​பாத், அமராவ​தி, சென்னை, பெங்​களூருவை இணைக்கும் புல்லட் ரயில்- சர்வே பணிகள் தொடக்கம்
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக உர்ஜித் பட்டேல் நியமனம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக உர்ஜித் பட்டேல் நியமனம்
2 தமிழக ஆசிரியர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருது 2 தமிழக ஆசிரியர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருது
நதிநீர் இணைப்பும்.  உயரும் இந்தியப் பொருளாதாரமும் - நதிகளை இணைப்பதால் உள்ள லாப நட்ட கணக்கு! நதிநீர் இணைப்பும். உயரும் இந்தியப் பொருளாதாரமும் - நதிகளை இணைப்பதால் உள்ள லாப நட்ட கணக்கு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.