வாஷிங்டன், ஆகஸ்ட் 2 : ஆசிய-பசிபிக் நாடுகளில் 10 நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு, நியூயார்க்கில் உள்ள ஆசிய சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க பாதுகாப்புத்துறை இணையமைச்சர் ஆஷ்டன் கார்டர் வெளியிட்ட அறிக்கை. ஆசிய-பசிபிக் நாடுகளில் அமைதியை நிலைநிறுத்தும் அமெரிக்காவின் முயற்சியில், இந்தியாவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய-அமெரிக்க உறவு மிகவும் நம்பிக்கைக்குரியது. ராணுவ வர்த்தக உறவு மட்டுமின்றி தொழில்நுட்ப பகிர்வு மற்றும் கூட்டு உற்பத்தி என உறவை வலுபடுத்த விரும்புகிறோம் என்றார் ஆஷ்டன் கார்டர்.
|