|
||||||||
உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம் - Thirukkural Translations in world Languages நூல் வெளியீடு |
||||||||
மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம், நூல்கள் வெளியீடு வியாழக்கிழமை நடைபெற்றது. உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் (பொறுப்பு) முனைவர் ஔவை ந. அருள் தலைமை வகித்தார். வலைத்தமிழ் நிறுவனர் ச. பார்த்தசாரதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 'திருக்குறள் மொழிபெயர்ப்புகளும், உலகப் பரவலாக்கலும்' என்ற தலைப்பில் பேசினார். இந்நிகழ்வில் முனைவர் சோமசுந்தரி வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில் பேசிய நூலாசிரியர் வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி இந்நூல் குறித்த ஆழமான ஆய்வுப்பயணத்தை விளக்கி திருக்குறள் மொழிபெயர்ப்புகளும் உலகப் பரவலாக்கலும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் குறிப்பிடுகையில் 2018 ஆம் ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி ஒருங்கிணைப்பில் ஆறு பேர் கொண்ட குழு வட அமெரிக்காவில் அமைக்கப்பட்டது. இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக செயின்ட் லூயிஸ் மாகாணத்தில் வசிக்கும் இளங்கோ தங்கவேலு பொறுப்பேற்றார். இத்திட்டக்குழுவில் சி.ராஜேந்திரன் IRS (ஓய்வு), முனைவர்.அஷ்ரப் , செந்தில் துரைசாமி (டெக்ஸாஸ் ) , அஜய் குமார் ஆகியோர் சீரிய பங்காற்றினர். இத்திட்டத்திற்காக 100க்கும் மேற்பட்ட நாடுகளைத் தொடர்புகொண்டும், அறிஞர்களிடம் உரையாடியும் , சமூக இணையத்தில் தேடியும் சரியான தொடர்புகளை ஏற்படுத்தி இதுவரை 62 மொழிகளில் 350 முறை திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்ற தரவுகளை உறுதிசெய்து ஆண்டுவாரியாக ஆவணப்படுத்தி நூலாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை வெளிவந்துள்ள அனைத்து நூல்களில் சில பிரதிகளை சென்னைக்கு கொண்டுவந்து சேர்க்கும் பணியும் முடிந்துள்ளதாகக் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் நோக்கமாக உலகின் அங்கீகரிக்கபட்ட அனைத்து மொழிகளிலும் திருக்குறளை மொழிபெயர்க்க அமைப்புகளுக்கு, அரசுகளுக்கு உரிய தரவுகளை வழங்கி துணைநிற்பதும் , இத்திட்டத்தின் இறுதியில் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் , ஆங்கில மொழிபெயர்ப்பையும் அனைத்து யுனெஸ்கோ நாடுகளுக்கு வழங்கி யுனெஸ்கோவின் Heritage book of mankind, Memory of the world ஆகிய திட்டங்களில் திருக்குறளை உலக ஆங்கீகாரம் பெற வைப்பது முதன்மை நோக்கமாகும்.. இந்த ஆய்வின் அடிப்படையில் முதல் திருக்குறள் மொழிபெயர்ப்பு மலையாளத்தில் 1595 ஆம் ஆண்டும், இரண்டாம் மொழிபெயர்ப்பு லத்தீன் மொழியில் 1730 ஆம் ஆண்டிலும் வெளிவந்துள்ளது என்று குறிப்பிட்டார். கடந்த ஆண்டு வெளிவந்த சமீபத்திய மொழிபெயர்ப்பு தென்னாப்பிரிக்காவின் சூலு மொழியிலும், ஆப்பிரிக்கான் மொழியிலும் வெளிவந்துள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் இந்தியாவின் சிந்தி மொழி தவிர்த்து மற்றைய அனைத்து இந்திய அலுவல் மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்காக இண்டாம் கட்டத் திட்டம் ஒன்றை அறிவித்து அதில் 8 முக்கிய செயல்பாடுகளை உள்ளடக்கி செயல்பட பல்வேறு அறிஞர் குழுவை அமைத்துவருவதாகக் குறிப்பிட்டார். இதுவரை செம்மொழி ஆய்வு நிறுவனம், தமிழ்நாடு அரசு, உலகின் பல நாடுகளின் தமிழ் அமைப்புகள் அறிவித்த மொழிபெயர்ப்புகளை கணக்கில் கொண்டு மேலும் 126 மொழிபெயர்ப்புகளை 2030க்குள் செய்துமுடிக்க சமூகம் முன்வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்நிகழ்வில் தகைசால் பேராசிரியர் முனைவர். வீ.ரேணுகாதேவி அவர்களின் நூல் திறனாய்வு இந்நூலுக்கு மேலும் பெருமைசேர்த்தது. இந்நிகழ்ச்சியில் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. அழகுராஜ், உலகத் தமிழ்ச்சங்கத்தில் மேனாள் தலைவர் முனைவர்.பசும்பொன் உள்ளிட்ட பலர் நூலை பரிசாக வழங்கி சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் மதுரை பட்டிமன்றப் பேச்சாளர் டோக்கியோ ராமநாதன் 'வையத் தலைமை கொள்' என்ற தலைப்பில் பேசினார். நிகழ்ச்சியை ஜான்சிராணி நன்றியுரையாற்றி நிறைவு செய்தார். நூலைப்பெற https://estore.valaitamil.com/ |
||||||||
![]() ![]() |
||||||||
by Swathi on 14 Mar 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|