|
||||||||
7000 திருக்குறள் நூல்களைத் தொகுக்க திருக்குறள் நூல்கள் தொகுப்புத் திட்டம் தொடங்கப்பட்டது - நீங்களும் பங்களிக்கலாம் |
||||||||
![]() திருக்குறள் நூல்கள் தொகுப்புத் திட்டம் (Project to Collect 7K books written in Thirukkural across the World)
திருக்குறள் குறித்து உலக நாடுகளில் இதுவரை வெளிவந்துள்ள சுமார் 7000 நூல்களைத் தொகுத்துப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திருக்குறள் நூலகம் ஒன்றைத் தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் அமைக்கும் நோக்கில் குழு அமைக்கப்பட்டு, முதல் கட்டமாக நூல்களைத் தொகுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், திருக்குறள் நூல்களை சேமித்து வைத்துள்ளவர்கள் எப்படி உதவலாம்? 1) நீங்கள் எழுதிய. பதிப்பித்த திருக்குறள் நூல்கள் இத்தொகுப்பில் சேர, ஒரு புரவலராக இரண்டு படிகளை உங்கள் விவரங்களுடன் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பலாம். எழுத்தாளர், பதிப்பாளர். புரவலர், நூல் தூதர் என்று நான்கு இடங்களில் நூலின் புரவலர் பகுதியிலும் உங்கள் பெயர் இடம்பெறும். நூலைப் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் கடிதமும், நூலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வரிசை எண். www.KuralWorld.org இணையதளத்தில் ஏற்றப்பட்ட விவரமும் அனுப்பப்படும். 2) திருக்குறள் நூல்களை புரவலராக வழங்க விருப்பமில்லாதவர்கள் நூல்களின் விவரங்களையும், கழிவு போக நூலின் விலையையும் குறிப்பிட்டுக் கீழ்காணும் புலன எண்ணிற்கு அனுப்பவும். புரவலர்களை அடையாளம் கண்டு பணம் கொடுத்து நூல்கள் பெற்றுக்கொள்ளப்படும். 3) திருக்குறள் நூல்களை உங்கள் நூலகத்தில் ஒரு பிரதி மட்டுமே சேமித்து வைத்துள்ளவர்கள், இத்தொகுப்புத் திட்டத்திற்கு வழங்க முடியாத நிலையில் உள்ளவர்கள், நூல்களின் அட்டைப்படம், பதிப்பக விவரங்களை மட்டும் பகிரவும். பதிப்பகத்தாரைத் தொடர்புகொண்டுப் பெற முயற்சிப்போம். "நூல் தூதர்" பகுதியில் உங்கள் பெயர் இடம்பெறும்.
இந்த வரலாற்றுப் பணியில் உங்கள் பங்களிப்பை பதிவு செய்ய நூல்களை அனுப்பவேண்டிய முகவரி Thirukkural Library Project, No. 16A, N.P.P. COMPLEX, Cutcherry Road, Mayiladuthurai. 609001, TamilNadu, India கைபேசி/புலனம்: +91 7305571897, மின்னஞ்சல்: kuralbooks@gmail.com
திட்ட ஒருங்கிணைப்பாளர்: வலைத்தமிழ் ச. பார்த்தசாரதி
நூல் ஒருங்கிணைப்புக் குழு: முனைவர் எ. திருமலை ராஜா, நாமக்கல் முனைவர் மெய். சித்ரா, ஆங்காங் |
||||||||
![]() |
||||||||
|
||||||||
by hemavathi on 07 Mar 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|