|
||||||||
மயிலாடுதுறையில் உலகத் திருக்குறள் ஆராய்ச்சி நடுவம் கூட்டம் |
||||||||
உலகத் திருக்குறள் ஆராய்ச்சி நடுவம் அமைப்பதற்கான முதல் சந்திப்பு மார்ச் 15ம் தேதி மயிலாடுதுறையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாட்டில் திருக்குறள் அடையாளமாக உலகத் தமிழ்ச்சமூகம் போற்றும் கன்னியாகுமரி சிலை, சென்னை வள்ளுவர் கோட்டம் இரண்டை அடுத்து மூன்றாவதாக மயிலாடுதுறையில் திட்டமிடப்படும் உலகத் திருக்குறள் ஆராய்ச்சி நடுவம் , திருக்குறள் அறிவுத்தளமாக , ஆய்வு நடுவமாகத் திகழும்.
திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள், திருக்குறள் உரைகள், 7000-க்கும் மேற்பட்ட திருக்குறள் நூல்கள், திருக்குறள் ஆய்வுத் தொகுப்புகள், திருக்குறள் கண்காட்சி என்று மிகப்பெரிதாகக் கனவு விதைக்கப்பட்டது.
முதல்கட்டக் குழு மயிலாடுதுறையில் நேரடியாகச் சந்தித்து முன்னெடுக்க அமைக்கப்பட்டு,உலகத் திருக்குறள் ஆர்வலர்கள் குழு ஒன்றும் விரைவில் அமைக்கப்படும். அரசுகளுடன் உரையாடி, ஆதீனங்களுடன் உரையாடி , உலகத் தமிழர்களுடன் உரையாடிச் செய்து முடிப்போம்.
|
||||||||
![]() ![]() |
||||||||
![]() ![]() |
||||||||
![]() |
||||||||
by hemavathi on 17 Mar 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|