LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

சொத்து மதிப்பு 400 பில்லியன் டாலர்களைத் தாண்டியது - இதுவரை யாரும் எட்டாத இலக்கை எட்டிய எலான் மஸ்க்

டெஸ்லா, ஸ்பெஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ் சமூக வலைத்தளம் ஆகியவற்றின் உரிமையாளரான எலான் மஸ்க்-கின்  சொத்து மதிப்பு சமீபகாலமாக ஏற்றமடைந்து வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு எலான் மஸ்க் ஆதரவு அளித்தார். டிரம்ப் வெற்றி பெற்றதும் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனப் பங்குகள் 65 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. அதேபோல் அவரது மற்ற நிறுவனப் பங்குகளும் விலை அதிகரித்தது. இதனால் எலான் மஸ்க் சொத்து மதிப்பு உயர்ந்தது. அதேபோல் அவரது மற்ற நிறுவனப் பங்குகளும் விலை அதிகரித்தது. இதனால் எலான் மஸ்க் சொத்து மதிப்பு உயர்ந்தது.  
இந்த நிலையில், 'உலக பணக்காரர்கள் பட்டியலில் நிகர சொத்து மதிப்பு 400 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிய முதல் நபர்' என்ற வரலாற்றுச் சாதனையை எலான் மஸ்க் படைத்துள்ளார். 

ப்ளூம் பெர்க் பில்லியனர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 447 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.37 லட்சம் கோடி) எட்டியுள்ளது. ஸ்பெஸ்எக்ஸ் நிறுவ னத்தின் முதலீட்டாளர்கள் 1.25 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்க ஒப்புக்கொண்டனர். 


இதையடுத்து எலான் மஸ்க்கின் தனிப்பட்ட சொத்தின் மதிப்பு 50 பில்லியன் டாலர் உயர்ந்து 440 பில்லியன் டாலராக அதிகரித்தது.

மேலும் ஒரு ஒப்பந்தம் காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன மதிப்பு சுமார் 350 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதனால் எலான்மஸ்க்குக்கு கிட்டத்தட்ட 20 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து மஸ்க் தனது நிகர மதிப்பில் 218 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

by hemavathi   on 12 Dec 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள்  -முனைவர்.சுபாஷினி இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள் -முனைவர்.சுபாஷினி
அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்!  கூட்ட அறிக்கை(Minutes Of Meeting) அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்! கூட்ட அறிக்கை(Minutes Of Meeting)
இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது -  ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது - ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர்
ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ் வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ்
ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம் ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம்
இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம்
2025 இறுதிக்குள் ஒரு  மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம் 2025 இறுதிக்குள் ஒரு மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.