|
||||||||||||||||||
யார் இந்த காளிதாசன்! (பாகம் 1) |
||||||||||||||||||
![]() காளிதாசரைப் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வாசித்ததுண்டு ஆனால் அக்கவிஞனின் படைப்புகளின் சுவையை இதுவரைப் பருகியதில்லை அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. இணையத்தில் சங்கப்பாடல்களைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் அவர் இயற்றிய ஓரிரு பாடல்களை வாசிக்க முடிந்தது, அதனூடே அக்கவிஞனின் வரலாற்றையும் அவரின் கவித்தொகுப்புகளைப் பற்றிய தேடலும் தொடங்கிற்று.
அத்தகு கவிஞனின் சிறப்பை உணர்த்தும் சில எடுத்துக்காட்டுகளை பின்வருமாறு காணலாம்;
“காளிதாசனின் கவிதை
காளிதாசன் வெறும் வார்த்தை ஜாலம் நிகழ்த்தும் கவி மட்டுமல்ல, பன்முக அறிவுத்திறன் உடைய ஒரு மேதையாவார். அவருடைய காவியங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவருடைய கவிதைகளின் பாதிப்பு அதற்கு பின் வந்த பல்வேறு கவிஞர்களின் காவியங்களிலும் நிச்சயம் காண முடிகிறது.
“மழையின் முதல் துளிகள்
அவளின் கண் இமைகளில்
சிறிது தங்கின…
பின் அவள் மார்பகங்களில்
சிதறின…
இறங்கி அவள் வயிற்று
சதைமடிப்பு வரிகளில்
தயங்கின…
வேகுநேரத்திற்கு பின்
அவள் நாபிச் சுழியில்
கலந்தன…”
நன்றி,
அருள்மொழிவர்மன்
(www.entamilpayanam.blogspot.com) |
||||||||||||||||||
by varun on 27 Apr 2018 1 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|