|
||||||||
எல்லாம் அழகுதான் |
||||||||
![]() பற பறவென இறக்கை அடித்து பறந்தன பறவைகள் எல்லாம் குடு குடுவென குட்டி கரணம் அடித்தது குட்டி முயல்கள்
பச்சை பசேல் புல்லை படக் படக்கென பறித்து மேய்ந்த்து
புள்ளி மான்களும் காட்டெருமைகளும்
அழகாய் நடந்து, தலையை வளைத்து கொத்தி தின்றன மயில்கள்
மரங்களின் மேலே க்க்ர்.. சத்தமிட்டு விளையாடின குரங்குகள்
அழகுச்சோலையில் இத்துணை அழகுகள் சடக்கென அசைவற்று நின்றது
ஒரு கணம் ! ஏனென்று பார்க்க
உர்ரென முகத்தை காட்டி முன்னே வந்தது வரி புலி ஒன்று !
எல்லாம் அசைவற்று நின்றதை கண்ட வரிப்புலி
சட்டென அவ்விடத்தை விட்டு அகன்றது.
அதுவரை பயத்துடன் நின்ற அழகுச்சோலையின் ஆராவார்ங்கள்
மீண்டும் எழுந்தது.,
எத்தனை அழகு! எத்தனை அழகு எல்லாம் அழகுதான். |
||||||||
Always beauty | ||||||||
by Dhamotharan.S on 17 Mar 2018 2 Comments | ||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|