LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- நன்னூல்

எழுத்ததிகாரம்

2.1. எழுத்தியல்

பூ மலி அசோகின் புனை நிழல் அமர்ந்த
நான்முகன் தொழுது நன்கு இயம்புவன் எழுத்து ஏ     56
எண் பெயர் முறை பிறப்பு உருவம் மாத்திரை
முதல் ஈறு இடைநிலை போலி என்றா
பதம் புணர்பு என பன்னிரு பாற்று அது ஏ     57

2.1.1.எண்

மொழி முதல் காரணம் ஆம் அணு திரள் ஒலி
எழுத்து அது முதல் சார்பு என இரு வகைத்து ஏ     58
உயிர் உம் உடம்பு உம் ஆம் முப்பது உம் முதல் ஏ     59
உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு
அஃகிய இ உ ஐ ஔ மஃகான்
தனிநிலை பத்து உம் சார்பெழுத்து ஆகும்     60
உயிர்மெய் இரட்டு நூற்றெட்டு உயர் ஆய்தம்
எட்டு உயிரளபு எழு மூன்று ஒற்றளபெடை
ஆறு ஏழ் அஃகும் இ முப்பான் ஏழ்
உகரம் ஆறு ஆறு ஐகான் மூன்று ஏ
ஔகான் ஒன்று ஏ மஃகான் மூன்று ஏ
ஆய்தம் இரண்டு ஒடு சார்பெழுத்து உறு விரி
ஒன்று ஒழி முந்நூற்று எழுபான் என்ப     61

2.1.2. பெயர்

இடுகுறி காரண பெயர் பொது சிறப்பின     62
அ முதல் ஈர் ஆறு ஆவி க முதல்
மெய் மூ ஆறு என விளம்பினர் புலவர்     63
அவற்று உள்
அ இ உ எ ஒ குறில் ஐந்து ஏ     64
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ நெடில்     65
அ இ உ முதல் தனி வரின் சுட்டு ஏ     66
எ யா முதல் உம் ஆ ஓ ஈற்று உம்
ஏ இரு வழி உம் வினா ஆகும் ஏ     67
வல்லினம் க ச ட த ப ற என ஆறு ஏ     68
மெல்லினம் ங ஞ ண ந ம ன என ஆறு ஏ     69
இடையினம் ய ர ல வ ழ ள என ஆறு ஏ     70
ஐ ஔ இ உ செறிய முதலெழுத்து
இவ் இரண்டு ஓர் இனம் ஆய் வரல் முறை ஏ     71
தானம் முயற்சி அளவு பொருள் வடிவு
ஆன ஒன்று ஆதி ஓர் புடை ஒப்பு இனம் ஏ     72

2.1.3. முறை

சிறப்பின் உம் இனத்தின் உம் செறிந்து ஈண்டு அ முதல்
நடத்தல் தான் ஏ முறை ஆகும் ஏ
    73

2.1.4. பிறப்பு

நிறை உயிர் முயற்சியின் உள் வளி துரப்ப
எழும் அணு திரள் உரம் கண்டம் உச்சி
மூக்கு உற்று இதழ் நா பல் அண தொழிலின்
வெவ்வேறு எழுத்து ஒலி ஆய் வரல் பிறப்பு ஏ
    74
அ வழி
ஆவி இடைமை இடம் மிடறு ஆகும்
மேவும் மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை     75
அவற்று உள்
முயற்சி உள் அ ஆ அங்காப்பு உடைய     76
இ ஈ எ ஏ ஐ அங்காப்பு ஓடு
அண் பல் முதல் நா விளிம்பு உற வரும் ஏ     77
உ ஊ ஒ ஓ ஔ இதழ் குவிவு ஏ     78
க ங உம் ச ஞ உம் ட ண உம் முதல் இடை
நுனி நா அண்ணம் உற முறை வரும் ஏ     79
அண் பல் அடி நா முடி உற த ந வரும்     80
மீ கீழ் இதழ் உற ப ம பிறக்கும்     81
அடி நா அடி அணம் உற ய தோன்றும்     82
அண்ணம் நுனி நா வருட ர ழ வரும்     83
அண் பல் முதல் உம் அண்ணம் உம் முறையின்
நா விளிம்பு வீங்கி ஒற்ற உம் வருட உம்
லகாரம் ளகாரம் ஆய் இரண்டு உம் பிறக்கும்     84
மேல் பல் இதழ் உற மேவிடும் வ ஏ     85
அண்ணம் நுனி நா நனி உறின் ற ன வரும்     86
ஆய்த கு இடம் தலை அங்கா முயற்சி
சார்பெழுத்து ஏன உம் தம் முதல் அனைய     87
எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்
திரிபு உம் தத்தமின் சிறிது உள ஆகும்     88
புள்ளி விட்டு அ ஒடு முன் உரு ஆகி உம்
ஏனை உயிர் ஓடு உருவு திரிந்து உம்
உயிர் அளவு ஆய் அதன் வடிவு ஒழித்து இரு வயின்
பெயர் ஒடு உம் ஒற்று முன் ஆய் வரும் உயிர்மெய்     89
குறியதன் முன்னர் ஆய்த புள்ளி
உயிர் ஒடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்து ஏ     90
இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்
அளபு எழும் அவற்று அவற்று இன குறில் குறி ஏ     91
ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம்
அளபு ஆம் குறில் இணை குறில் கீழ் இடை கடை
மிகல் ஏ அவற்றின் குறி ஆம் வேறு ஏ     92
யகரம் வர குறள் உ திரி இகரம் உம்
அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய     93
நெடில் ஓடு ஆய்தம் உயிர் வலி மெலி இடை
தொடர் மொழி இறுதி வன்மை ஊர் உகரம்
அஃகும் பிற மேல் தொடர உம் பெறும் ஏ     94
தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்
நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்     95
ண ன முன் உம் வஃகான் மிசை உம் ம குறுகும்     96
ல ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்     97

2.1.5. உருவம்

தொல்லை வடிவின எல்லா எழுத்து உம் ஆண்டு
எய்தும் எகர ஒகர மெய் புள்ளி     98

2.1.6. மாத்திரை

மூன்று உயிரளபு இரண்டு ஆம் நெடில் ஒன்று ஏ
குறில் ஓடு ஐ ஔ குறுக்கம் ஒற்றளபு
அரை ஒற்று இ உ குறுக்கம் ஆய்தம்
கால் குறள் மஃகான் ஆய்தம் மாத்திரை     99
இயல்பு எழும் மாந்தர் இமை நொடி மாத்திரை     100
ஆவி உம் ஒற்று உம் அளவு இறந்து இசைத்தல் உம்
மேவும் இசை விளி பண்டமாற்று ஆதியின்     101

2.1.7. முதநிலை

பன்னீர் உயிர் உம் க ச த ந ப ம வ ய
ஞ ங ஈர் ஐந்து உயிர்மெய் உம் மொழி முதல்     102
உ ஊ ஒ ஓ அல ஒடு வ முதல்     103

அ ஆ உ ஊ ஓ ஔ ய முதல்     104
அ ஆ எ ஒ ஓடு ஆகும் ஞ முதல்     105
சுட்டு யா எகர வினா வழி அ ஐ
ஒட்டி ங உம் முதல் ஆகும் ஏ     106

2.1.8. இறுதிநிலை

ஆவி ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள மெய்
சாயும் உகரம் நால் ஆறு உம் ஈறு ஏ     107
குற்று உயிர் அளபின் ஈறு ஆம் எகரம்
மெய் ஒடு ஏலாது ஒ ந ஒடு ஆம் ஔ
ககர வகரம் ஓடு ஆகும் என்ப     108
நின்ற நெறி ஏ உயிர்மெய் முதல் ஈறு ஏ     109

2.1.9. இடைநிலை மயக்கம்

க ச த ப ஒழித்த ஈர் ஏழன் கூட்டம்
மெய்ம்மயக்கு உடனிலை ர ழ ஒழித்து ஈர் எட்டு
ஆகும் இவ் இரு பால் மயக்கு உம் மொழி இடை
மேவும் உயிர் மெய் மயக்கு அளவு இன்று ஏ     110
ங முன் க ஆம் வ முன் ய ஏ     111
ஞ ந முன் தம் இனம் யகரம் ஒடு ஆகும்     112
ட ற முன் க ச ப மெய் உடன் மயங்கும்     113
ண ன முன் இனம் க ச ஞ ப ம ய வ வரும்     114
ம முன் ப ய வ மயங்கும் என்ப     115
ய ர ழ முன்னர் மொழி முதல் மெய் வரும்     116
ல ள முன் க ச ப வ ய ஒன்றும் ஏ     117
ர ழ அல்லன தம் முன் தாம் உடன் நிலையும்     118
ய ர ழ ஒற்றின் முன் க ச த ப ங ஞ ந ம
ஈர் ஒற்று ஆம் ர ழ தனி குறில் அணையா     119
ல ள மெய் திரிந்த ன ண முன் மகாரம்
நைந்து ஈர் ஒற்று ஆம் செய்யுள் உள் ஏ     120
தம் பெயர் மொழியின் முதல் உம் மயக்கம் உம்
இ முறை மாறி உம் இயலும் என்ப     121

2.1.10.போலி

மகர இறுதி அஃறிணை பெயரின்
னகரம் ஓடு உறழா நடப்பன உள ஏ     122
அ ஐ முதல் இடை ஒக்கும் ச ஞ ய முன்     123
ஐகான் ய வழி ந ஒடு சில் வழி
ஞஃகான் உறழும் என்மர் உம் உளர் ஏ     124
அ முன் இகரம் யகரம் என்ற இவை
எய்தின் ஐ ஒத்து இசைக்கும் அ ஓடு
உ உம் வ உம் ஔ ஓர் அன்ன     125
மெய்கள் அகரம் உம் நெட்டு உயிர் காரம் உம்
ஐ ஔ கான் உம் இருமை குறில் இவ்
இரண்டு ஒடு கரம் உம் ஆம் சாரியை பெறும் பிற     126
மொழி ஆய் தொடரின் உம் முன் அனைத்து எழுத்து ஏ     127

2.2. பதவியல்

2.2.1.பதம்

எழுத்து ஏ தனித்து உம் தொடர்ந்து உம் பொருள் தரின்
பதம் ஆம் அது பகாப்பதம் பகுபதம் என
இரு பால் ஆகி இயலும் என்ப     128
உயிர் ம இல் ஆறு உம் த ப ந இல் ஐந்து உம்
க வ ச இல் நால் உம் ய இல் ஒன்று உம்
ஆகும் நெடில் நொ து ஆம் குறில் இரண்டு ஓடு
ஓர் எழுத்து இயல் பதம் ஆறு ஏழ் சிறப்பின     129
பகாப்பதம் ஏழு உம் பகுபதம் ஒன்பது உம்
எழுத்து ஈறு ஆக தொடரும் என்ப     130
பகுப்பு ஆல் பயன் அற்று இடுகுறி ஆகி
முன்னே ஒன்று ஆய் முடிந்து இயல்கின்ற
பெயர் வினை இடை உரி நான்கு உம் பகாப்பதம்     131
பொருள் இடம் காலம் சினை குணம் தொழிலின்
வரு பெயர் பொழுது கொள் வினை பகுபதம் ஏ     132
பகுதி விகுதி இடைநிலை சாரியை
சந்தி விகாரம் ஆறின் உம் ஏற்பவை
முன்னி புணர்ப்ப முடியும் எ பதங்கள் உம்     133

2.2.2. பகுதி

தத்தம்
பகாப்பதங்கள் ஏ பகுதி ஆகும்     134
செம்மை சிறுமை சேய்மை தீமை
வெம்மை புதுமை மென்மை மேன்மை
திண்மை உண்மை நுண்மை இவற்று எதிர்
இன்ன உம் பண்பு இன் பகா நிலை பதம் ஏ     135
ஈறு போதல் இடை உகரம் இ ஆதல்
ஆதி நீடல் அடி அகரம் ஐ ஆதல்
தன் ஒற்று இரட்டல் முன் நின்ற மெய் திரிதல்
இனம் மிகல் இனைய உம் பண்பின் கு இயல்பு ஏ     136
நட வா மடி சீ விடு கூ வே வை
நொ போ வௌ உரிஞ் உண் பொருந் திரும் தின்
தேய் பார் செல் வவ் வாழ் கேள் அஃகு என்று
எய்திய இருபான் மூன்று ஆம் ஈற்ற உம்
செய் என் ஏவல் வினை பகாப்பதம் ஏ    137
செய் என் வினை வழி வி பி தனி வரின்
செய்வி என் ஏவல் இணையின் ஈர் ஏவல்     138
விளம்பிய பகுதி வேறு ஆதல் உம் விதி ஏ     139

2.2.3. விகுதி

அன் ஆன் அள் ஆள் அர் ஆர் ப மார்
அ ஆ கு டு து று என் ஏன் அல் அன்
அம் ஆம் எம் ஏம் ஓம் ஒடு உம் ஊர்
க ட த ற ஐ ஆய் இ மின் இர் ஈர்
ஈயர் க ய உம் என்ப உம் பிற உம்
வினையின் விகுதி பெயரின் உம் சில ஏ     140

2.2.4. இடைநிலை

இலக்கியம் கண்டு அதன் கு இலக்கணம் இயம்பலின்
பகுதி விகுதி பகுத்து இடை நின்றது ஐ
வினைப்பெயர் அல் பெயர் கு இடைநிலை எனல் ஏ     141
த ட ற ஒற்று இன் ஏ ஐம் பால் மூ இடத்து
இறந்தகாலம் தரும் தொழில் இடைநிலை     142
ஆநின்று கின்று கிறு மூ இடத்தின்
ஐம் பால் நிகழ்பொழுது அறை வினை இடைநிலை     143
ப வ மூ இடத்து ஐம் பால் எதிர்பொழுது
இசை வினை இடைநிலை ஆம் இவை சில இல     144
ற ஒடு உகர உம்மை நிகழ்பு அல்ல உம்
த ஒடு இறப்பு உம் எதிர்வு உம் ட ஒடு
கழிவு உம் க ஓடு எதிர்வு உம் மின் ஏவல்
வியங்கோள் இ மார் எதிர்வு உம் பாந்தம்
செலவு ஒடு வரவு உம் செய்யும் நிகழ்பு எதிர்வு உம்
எதிர்மறை மும்மை உம் ஏற்கும் ஈங்கு ஏ     145

2.2.5. வடமொழி ஆக்கம்

இடை இல் நான்கு உம் ஈற்று இல் இரண்டு உம்
அல்லா அச்சு ஐ வருக்கம் முதல் ஈறு
ய ஆதி நான்மை ள ஆகும் ஐ ஐம்
பொது எழுத்து ஒழிந்த நால் ஏழு உம் திரியும்     146
அவற்று உள்
ஏழ் ஆம் உயிர் இ உம் இரு உம் ஐ வருக்கத்து
இடையின் மூன்று உம் அ அ முதல் உம்
எட்டு ஏ ய உம் முப்பது ச ய உம்
மேல் ஒன்று ச ட உம் இரண்டு ச த உம்
மூன்று ஏ அ க உம் ஐந்து இரு க உம்
ஆ ஈறு ஐ உம் ஈ ஈறு இகரம் உம்     147
ரவ்வின் கு அ முதல் ஆம் மு குறில் உம்
லவ்வின் கு இ முதல் இரண்டு உம் யவ்வின் கு
இ உம் மொழி முதல் ஆகி முன் வரும் ஏ     148
இணைந்து இயல் காலை ய ர ல கு இகரம் உம்
ம வ கு உகரம் உம் நகர கு அகரம் உம்
மிசை வரும் ர வழி உ உம் ஆம் பிற     149
ற ன ழ எ ஒ உம் உயிர்மெய் உம் உயிரளபு
அல்லா சார்பு உம் தமிழ் பிற பொது ஏ     150

2.3. உயிரிற்றுப் புணரியல்

2.3.1. புணர்ச்சி

மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்கள் உம்
தன் ஒடு உம் பிறிது ஒடு உம் அல்வழி வேற்றுமை
பொருளின் பொருந்துழி நிலை வரு மொழிகள்
இயல்பு ஒடு விகாரத்து இயைவது புணர்ப்பு ஏ     151
வேற்றுமை ஐ முதல் ஆறு ஆம் அல்வழி
தொழில் பண்பு உவமை உம்மை அன்மொழி
எழுவாய் விளி ஈர் எச்சம் முற்று இடை உரி
தழுவுதொடர் அடுக்கு என ஈர் ஏழ் ஏ    152
விகாரம் அனைத்து உம் மேவலது இயல்பு ஏ     153
தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
மூன்று உம் மொழி மூ இடத்து உம் ஆகும்     154
வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல்
விரித்தல் தொகுத்தல் உம் வரும் செய்யுள் வேண்டுழி     155
ஒரு மொழி மூ வழி குறைதல் உம் அனைத்து ஏ     156
ஒரு புணர் கு இரண்டு மூன்று உம் உற பெறும்     157

2.3.2. பொதுப் புணர்ச்சி

எண் மூ எழுத்து ஈற்று எ வகை மொழி கு உம்
முன் வரும் ஞ ந ம ய வக்கள் இயல்பு உம்
குறில் வழி ய தனி ஐ நொ து முன் மெலி
மிகல் உம் ஆம் ண ள ன ல வழி ந திரியும்     158
பொது பெயர் உயர்திணை பெயர்கள் ஈற்று மெய்
வலி வரின் இயல்பு ஆம் ஆவி ய ர முன்
வன்மை மிகா சில விகாரம் ஆம் உயர்திணை     159
ஈற்று யா வினா விளி பெயர் முன் வலி இயல்பு ஏ     160
ஆவி ய ர ழ இறுதி முன்னிலை வினை
ஏவல் முன் வல்லினம் இயல்பு ஒடு விகற்பு ஏ     161

2.3.3. உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி

இ ஈ ஐ வழி ய உம் ஏனை
உயிர் வழி வ உம் ஏ முன் இவ் இருமை உம்
உயிர் வரின் உடம்படுமெய் என்று ஆகும்     162
எகர வினா மு சுட்டின் முன்னர்
உயிர் உம் யகரம் உம் எய்தின் வ உம்
பிற வரின் அவை உம் தூக்கு இல் சுட்டு
நீளின் யகரம் உம் தோன்றுதல் நெறி ஏ     163
உயிர் வரின் உ குறள் மெய் விட்டு ஓடும்
ய வரின் இ ஆம் முற்று உம் அற்று ஒரோ வழி     164

2.3.4. உயிரீற்றுமுன் வல்லினம்

இயல்பின் உம் விதியின் உம் நின்ற உயிர் முன்
க ச த ப மிகும் விதவாதன மன் ஏ     165
மர பெயர் முன்னர் இன மெல்லெழுத்து
வர பெறுன உம் உள வேற்றுமை வழி ஏ     166
செய்யிய என்னும் வினையெச்சம் பல் வகை
பெயரின் எச்சம் முற்று ஆறன் உருபு ஏ
அஃறிணை பன்மை அம்ம முன் இயல்பு ஏ     167
வாழிய என்பதன் ஈற்றின் உயிர்மெய்
ஏகல் உம் உரித்து அஃது ஏகின் உம் இயல்பு ஏ     168
சாவ என் மொழி ஈற்று உயிர்மெய் சாதல் உம் விதி     169
பல சில எனும் இவை தம் முன் தாம் வரின்
இயல்பு உம் மிகல் உம் அகரம் ஏக
லகரம் றகரம் ஆகல் உம் பிற வரின்
அகரம் விகற்பம் ஆகல் உம் உள பிற     170
அல்வழி ஆ மா மியா முற்று முன் மிகா     171
குறியதன் கீழ் ஆ குறுகல் உம் அதன் ஓடு
உகரம் ஏற்றல் உம் இயல்பு உம் ஆம் தூக்கின்     172
அன்றி இன்றி என் வினையெஞ்சு இகரம்
தொடர்பின் உள் உகரம் ஆய் வரின் இயல்பு ஏ     173
உரி வரின் நாழியின் ஈற்று உயிர்மெய் கெட
மருவும் டகரம் உரியின் வழி ஏ
யகர உயிர்மெய் ஆம் ஏற்பன வரின் ஏ     174
சுவை புளி முன் இன மென்மை உம் தோன்றும்     175
அல்வழி இ ஐ முன்னர் ஆயின்
இயல்பு உம் மிகல் உம் விகற்பம் உம் ஆகும்     176
ஆ முன் பகர ஈ அனைத்து உம் வர குறுகும்
மேலன அல்வழி இயல்பு ஆகும் ஏ     177
ப ஈ நீ மீ முன்னர் அல்வழி
இயல்பு ஆம் வலி மெலி மிகல் உம் ஆம் மீ கு ஏ     178
மூன்று ஆறு உருபு எண் வினைத்தொகை சுட்டு ஈறு
ஆகும் உகரம் முன்னர் இயல்பு ஆம்     179
அது முன் வரும் அன்று ஆன்று ஆம் தூக்கின்     180
வன் தொடர் அல்லன முன் மிகா அல்வழி     181
இடை தொடர் ஆய்த தொடர் ஒற்று இடையின்
மிகா நெடில் உயிர் தொடர் முன் மிகா வேற்றுமை     182
நெடில் ஓடு உயிர் தொடர் குற்றுகரங்கள் உள்
ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிக ஏ     183
மென் தொடர் மொழி உள் சில வேற்றுமை இல்
தம் இன வன் தொடர் ஆகா மன் ஏ     184
ஐ ஈற்று உடை குற்றுகரம் உம் உள ஏ     185
திசை ஒடு திசை உம் பிற உம் சேரின்
நிலை ஈற்று உயிர்மெய் க ஒற்று நீங்கல் உம்
றகரம் ன ல ஆ திரிதல் உம் ஆம் பிற     186
தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய் வரின்     187
எண் நிறை அளவு உம் பிற உம் எய்தின்
ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண் உள்
முதல் ஈர் எண் முதல் நீளும் மூன்று ஆறு
ஏழ் குறுகும் ஆறு ஏழு அல்லவற்றின்
ஈற்று உயிர்மெய் உம் ஏழன் உயிர் உம்
ஏகும் ஏற்புழி என்மனார் புலவர்     188
ஒன்றன் புள்ளி ரகரம் ஆக
இரண்டன் ஒற்று உயிர் ஏக உ வரும் ஏ     189
மூன்றன் உறுப்பு அழிவு உம் வந்தது உம் ஆகும்     190
நான்கன் மெய் ஏ ல ற ஆகும் ஏ     191
ஐந்தன் ஒற்று அடைவது உம் இனம் உம் கேடு உம்     192
எட்டன் உடம்பு ண ஆகும் என்ப     193
ஒன்பான் ஒடு பத்து உம் நூறு உம் ஒன்றின்
முன்னது இன் ஏனைய முரணி ஒ ஒடு
தகரம் நிறீஇ பஃது அகற்றி ன ஐ
நிரல் ஏ ண ள ஆ திரிப்பது நெறி ஏ     194
முதல் இரு நான்கு ஆம் எண் முனர் பத்தின்
இடை ஒற்று ஏகல் ஆய்தம் ஆகல்
என இரு விதி உம் ஏற்கும் என்ப     195
ஒருபஃது ஆதி முன் ஒன்று முதல் ஒன்பான்
எண் உம் அவை ஊர் பிற உம் எய்தின்
ஆய்தம் அழிய ஆண்டு ஆகும் த ஏ     196
ஒன்று முதல் ஈர் ஐந்து ஆயிரம் கோடி
எண் நிறை அளவு உம் பிற வரின் பத்தின்
ஈற்று உயிர்மெய் கெடுத்து இன் உம் இற்று உம்
ஏற்பது ஏற்கும் ஒன்பது உம் இனைத்து ஏ     197
இரண்டு முன் வரின் பத்தின் ஈற்று உயிர்மெய்
கரந்திட ஒற்று ன ஆகும் என்ப     198
ஒன்பது ஒழித்த எண் ஒன்பது உம் இரட்டின்
முன்னதின் முன் அல ஓட உயிர் வரின்
வ உம் மெய் வரின் வந்தது உம் மிகல் நெறி     199
பூ பெயர் முன் இன மென்மை உம் தோன்றும்     200
இடைச்சொல் ஏ ஓ முன் வரின் இயல்பு ஏ     201
வேற்றுமை ஆயின் ஐகான் இறு மொழி
ஈற்று அழிவு ஓடு உம் அம் ஏற்ப உம் உள ஏ     202
பனை முன் கொடி வரின் மிகல் உம் வலி வரின்
ஐ போய் அம் உம் திரள் வரின் உறழ்வு உம்
அட்டு உறின் ஐ கெட்டு அ நீள்வு உம் ஆம் வேற்றுமை     203

2.4.மெய்யீற்று புணரியல்

உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பு ஏ     204
தனி குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும்     205
தன் ஒழி மெய் முன் ய வரின் இகரம்
துன்னும் என்று துணிநர் உம் உளர் ஏ     206
ஞ ண ந ம ல வ ள ன ஒற்று இறு தொழிற்பெயர்
ஏவல் வினை நனி ய அல் மெய் வரின்
உ உறும் ஏவல் உறா சில சில் வழி     207
ந இறு தொழிற்பெயர் கு அ உம் ஆம் வேற்றுமை     208
ண ன வல்லினம் வர ட ற உம் பிற வரின்
இயல்பு உம் ஆகும் வேற்றுமை கு அல்வழி கு
அனைத்து மெய் வரின் உம் இயல்பு ஆகும் ஏ     209
குறில் அணைவு இல்லா ண னக்கள் வந்த
நகரம் திரிந்துழி நண்ணும் கேடு ஏ     210
சாதி குழூஉ பரண் கவண் பெயர் இறுதி
இயல்பு ஆம் வேற்றுமை கு உணவு எண் சாண் பிற
ட ஆகல் உம் ஆம் அல்வழி உம் ஏ     211
னஃகான் கிளைப்பெயர் இயல்பு உம் அஃகான்
அடைவு உம் ஆகும் வேற்றுமை பொருள் கு ஏ     212
மீன் ற ஒடு பொரூஉம் வேற்றுமை வழி ஏ     213
தேன் மொழி மெய் வரின் இயல்பு உம் மென்மை
மேவின் இறுதி அழிவு உம் வலி வரின்
ஈறு போய் வலி மெலி மிகல் உம் ஆம் இரு வழி     214
மரம் அல் எகின் மொழி இயல்பு உம் அகரம்
மருவ வலி மெலி மிகல் உம் ஆகும்     215
குயின் ஊன் வேற்றுமை கண் உம் இயல்பு ஏ     216
மின் பின் பன் கன் தொழிற்பெயர் அனைய
கன் அ ஏற்று மென்மை ஓடு உறழும்     217
தன் என் என்பவற்று ஈற்று ன வன்மை ஓடு
உறழும் நின் ஈறு இயல்பு ஆம் உற ஏ     218
ம ஈறு ஒற்று அழிந்து உயிர் ஈறு ஒப்ப உம்
வன்மை கு இனம் ஆ திரிப உம் ஆகும்     219
வேற்றுமை ம போய் வலி மெலி உறழ்வு உம்
அல்வழி உயிர் இடை வரின் இயல்பு உம் உள     220
நும் தம்
எம் நம் ஈறு ஆம் ம வரு ஞ ந ஏ     221
அகம் முனர் செவி கை வரின் இடையன கெடும்     222
ஈம் உம்
கம் உம் உரும் உம் தொழிற்பெயர் மானும்
முதலன வேற்றுமை கு அ உம் பெறும் ஏ     223
ய ர ழ முன்னர் க ச த ப அல்வழி
இயல்பு உம் மிகல் உம் ஆகும் வேற்றுமை
மிகல் உம் இனத்து ஓடு உறழ்தல் உம் விதி மேல்     224
தமிழ் அ உற உம் பெறும் வேற்றுமை கு ஏ
தாழ் உம் கோல் வந்து உறுமேல் அற்று ஏ     225
கீழின் முன் வன்மை விகற்பம் உம் ஆகும்     226
ல ள வேற்றுமை இல் ற ட உம் அல்வழி
அவற்று ஓடு உறழ்வு உம் வலி வரின் ஆம் மெலி
மேவின் ன ண உம் இடை வரின் இயல்பு உம்
ஆகும் இரு வழி ஆன் உம் என்ப     227
குறில் வழி ல ள த அணையின் ஆய்தம்
ஆக உம் பெறூஉம் அல்வழி ஆன் ஏ     228
குறில் செறியா ல ள அல்வழி வந்த
தகரம் திரிந்த பின் கேடு உம் ஈர் இடத்து உம்
வரு ந திரிந்த பின் மாய்வு உம் வலி வரின்
இயல்பு உம் திரிபு உம் ஆவன உள பிற     229
ல ள இறு தொழிற்பெயர் ஈர் இடத்து உம் உ உறா
வலி வரின் அல்வழி இயல்பு உம் ஆவன உள     230
வல் ஏ தொழிற்பெயர் அற்று இரு வழி உம்
பலகை நாய் வரின் உம் வேற்றுமை கு அ உம் ஆம்     231
நெல் உம் செல் உம் கொல் உம் சொல் உம்
அல்வழி ஆன் உம் றகரம் ஆகும்     232
இல் என் இன்மை சொல் கு ஐ அடைய
வன்மை விகற்பம் உம் ஆகாரத்து ஒடு
வன்மை ஆகல் உம் இயல்பு உம் ஆகும்     233
புள் உம் வள் உம் தொழிற்பெயர் உம் மானும்     234
சுட்டு வகரம் மூ இனம் உற முறை ஏ
ஆய்தம் உம் மென்மை உம் இயல்பு உம் ஆகும்     235
தெவ் என் மொழி ஏ தொழிற்பெயர் அற்று ஏ
ம வரின் வஃகான் ம உம் ஆகும்     236
ன ல முன் ற ன உம் ண ள முன் ட ண உம்
ஆகும் த நக்கள் ஆயும்கால் ஏ     237
உருபின் முடிபவை ஒக்கும் அ பொருளின் உம்     238
இடை உரி வடசொலின் இயம்பிய கொளாத உம்
போலி உம் மரூஉ உம் பொருந்திய ஆற்றின் கு
இயைய புணர்த்தல் யாவர் கு உம் நெறி ஏ     239

2.5. உருபு புணரியல்

ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என
வரு பெயர் ஐந்து ஒடு பெயர் முதல் இரு நான்கு
உருபு உம் உறழ்தர நாற்பது ஆம் உருபு ஏ     240
பெயர் வழி தம் பொருள் தர வரும் உருபு ஏ     242
ஒற்று உயிர் முதல் ஈற்று உருபுகள் புணர்ச்சியின்
ஒக்கும் மன் அ பெயர் வேற்றுமை புணர்ப்பு ஏ     242
பதம் முன் விகுதி உம் பதம் உம் உருபு உம்
புணர் வழி ஒன்று உம் பல உம் சாரியை
வருதல் உம் தவிர்தல் உம் விகற்பம் உம் ஆகும்     243
அன் ஆன் இன் அல் அற்று இற்று அத்து அம்
தம் நம் நும் ஏ அ உ ஐ கு ன
இன்ன பிற உம் பொது சாரியை ஏ     244
எல்லாம் என்பது இழிதிணை ஆயின்
அற்று ஓடு உருபின் மேல் உம் உறும் ஏ
அன்றேல் நம் இடை அடைந்து அற்று ஆகும்     245
எல்லார் உம் எல்லீர் உம் என்பவற்று உம்மை
தள்ளி நிரல் ஏ தம் நும் சார
புல்லும் உருபின் பின்னர் உம் ஏ     246
தான் தாம் நாம் முதல் குறுகும் யான் யாம்
நீ நீர் என் எம் நின் நும் ஆம் பிற
குவ்வின் அ வரும் நான்கு ஆறு இரட்டல     247
ஆ மா கோ ன அணைய உம் பெறும் ஏ     248
ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண் ஊர்
பத்தின் முன் ஆன் வரின் ப ஒற்று ஒழிய மேல்
எல்லாம் ஓடும் ஒன்பது உம் இற்று ஏ     249
வ இறு சுட்டின் கு அற்று உறல் வழி ஏ     250
சுட்டின் முன் ஆய்தம் அன் வரின் கெடும் ஏ     251
அத்தின் அகரம் அகர முனை இல்லை     252
இதன் கு இது சாரியை எனின் அளவு இன்மையின்
விகுதி உம் பதம் உம் உருபு உம் பகுத்து இடை
நின்ற எழுத்து உம் பதம் உம் இயற்கை உம்
ஒன்ற உணர்த்தல் உரவோர் நெறி ஏ     253
விகுதி பதம் சாரியை உருபு அனைத்தின் உம்
உரைத்த விதியின் ஓர்ந்து ஒப்பன கொளல் ஏ     254
இயல்பின் விகாரம் உம் விகாரத்து இயல்பு உம்
உயர்திணை இடத்து விரிந்து உம் தொக்கு உம்
விரவுப்பெயரின் விரிந்து உம் நின்று உம்
அன்ன பிற உம் ஆகும் ஐ உருபு ஏ     255
புள்ளி உம் உயிர் உம் ஆய் இறு சொல் முன்
தம்மின் ஆகிய தொழில் மொழி வரின் ஏ
வல்லினம் விகற்பம் உம் இயல்பு உம் ஆகும்     256
இதன் கு இது முடிபு என்று எஞ்சாது யா உம்
விதிப்ப அளவு இன்மையின் விதித்தவற்று இயல் ஆன்
வகுத்து உரையாத உம் வகுத்தனர் கொளல் ஏ     257

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.