LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மரணத்துள் வாழ்வோம்

எங்கள் வீதியை எமக்கென மீட்போம்

வீதியில் போகும்போது விபத்து நேராதிருக்க
விதிமுறை உள்ளன; விதிமுறை உள்ளன.

விதிமுறை இருந்தும், விதிமுறை இருந்தும்
ஒதுங்கியே செல்லும் பாதசா¡¢களின்
உயிர்களுக்கு ஏதும் உத்தரவாதமே இல்லை.

உறுமியே செல்லும் ராணுவ உந்துகளின்
உள்ளிருந்து இயங்கும் துவக்குகளாலே
எந்தநேரமும் இவர்தலை சிதறலாம்
எந்தச் சமயமும் எம்தலை உருளும்.

ஒதுங்கியே செல்லினும் ஒதுங்கியே செல்லினும்
எம்முயிர்க்கு இங்கு உத்தரவாதமே இல்லை.

சேதிகள் வருவன நாள் தோறும்
வீதியின் நடப்புகள் விபத்துகள் அல்லவே.

இப்போதெல்லாம்
எமது நகரத்து வீதிகள்
காவற் கருவிப் பேய்களுக்கென்றே
எழுதப் பட்டதாய்ப் போனதே போலும்.

'எவரையும் சுடலாம் விசாரணையின்றியே
எ¡¢க்கலாம் அன்றிப் புதைக்கலாம்' என்று
இயற்றப்பட்ட புதிய விதிகளால்
குருதியில் தோயும் நிகழ்வுகள் இங்கே.

இருளுக்கும் இருட்புலையர்க்கும் என்றே
விடப்பட்டுப் போன எங்கள் வீதிகளில்
வெளிப்படுவோரெல்லாம்
சுடப்படலாம் தெருநாய்களைப்போல.
எக்கணமேனும் எக்கணமேனும்
எமக்கிது நிகழலாம்.

குருதியை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தே
கொழுத்துப் போகும் இரவுகள் நீளலாம்;
கட்டித்த ரத்தமாய் இரவுகள் தடிக்கலாம்.

வீதிகளை இருளரக்கனே ஆள
மின்விளக்கு அணைத்தே வீட்டினுள்
கூடியிருந்து பீதி வளர்ப்பவர் மத்தியில்
எத்தனை இரவுகள் இப்படிக் கழியலாம்?

குருதியை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தே
கொழுத்துக் கிடக்கும் இருளரக்கனைத் தறிக்க
கோடா¢ ஏந்தி யார் வெளிவருவார்?

வீட்டினுள் பதுங்கி இருந்தே பீதியில்
ஓ¡¢ரா ஈ¡¢ராக் கழியலாம்;
எத்தனை இரவுகள் இப்படிக் கழியலாம்?

எத்தனை காலம் எங்கள் பூமியை
இருளரக்கனிடமே ஒப்படைத்திருக்கலாம்?

அதோ
தூரத்தே வீழும் எ¡¢ நட்சத்திரமல்ல,
உன் அயலவன் வீட்டு முகட்டிலே அரக்கர்
வீசி எறியும் தீப்பந்தம்.

தூரத்து இடியல்ல
அதோ அடுத்த வீதி வளைவில்
அவன் தீர்க்கும் வேட்டொலி.

வீங்கிருள் நிகழ்வுகள் இவையே ஆக
வீட்டினுள் உயிரோடு எத்தனை நாட்கள்?
வீடு நிறைந்த பீதி விடுத்தே
கோடா¢ ஏந்தி அனைவரும் வருக.

எங்கள் இரவை எமக்கென மீட்போம்
எங்கள் வீதியை எமக்கே ஆக்குவோம்.

இன்றைய இரவை அவனிடம் இழந்தோம்,
இனிவரும் பகலும் எமதென்பதில்லை;
எங்கள் வீதியை அவனிடம் இழந்தபின்
எங்கள் முன்றிலும் எமதென்றில்லை.

எங்கள் முன்றிலும் எறித்த நிலவுமாய்
இன்புறு நாட்கள் எங்கோ தொலைந்தன
இருட்டுள் சீவியம் எத்தனை நாட்கள்?

வீடு நிறைந்த பீதி விடுத்தே
கோடா¢ ஏந்தியே யாவரும் வருக
விழுதுகள் ஊன்றிய இருளரக்கனைத் தறிப்போம்.

எங்கள் வீதியை எமக்கென மீட்போம்!
எங்கள் முன்றிலை நிச்சயம் செய்வோம்.

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சூழ்நிலையின் உயிர்ப்பு சூழ்நிலையின் உயிர்ப்பு
குயில் பாட்டு குயில் பாட்டு
எனக்கு ஒன்றுமில்லை என்றாலும் யாரோ சொல்லிவிட்டதற்காக.! எனக்கு ஒன்றுமில்லை என்றாலும் யாரோ சொல்லிவிட்டதற்காக.!
மனமும் மனிதர்களும் மனமும் மனிதர்களும்
நாணப்படுகிறாள் நதி நாணப்படுகிறாள் நதி
விளக்கின் வெளிச்சம் விளக்கின் வெளிச்சம்
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.