LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்து இலக்கியம்

எண்ணெய்ச் சிந்து

காப்பு
சீர்பூத்த தென்குடவை தேவி ஆனந்தவல்லி
பார்பூத்த செங்கமலப் பாதம் தனைப்போற்றி
1. சீர்புத்த - சிறப்பு மிகுந்த
பார்பூத்த ... பாதம் - அன்னையின் திருவடி உலகின் 
தோற்றத்திற்குக் காரணம் என்றபடி. "இருதாள் நிழற்கீழ் 
மூவகை உலகும் முகிழ்த்தன"- ஐங்குறுநூறு 1
செப்பரிய எண்ணெய்ச் சிந்து தனைப்பாட
கற்பகக் கன்றான கணபதி காப்பாமே
2. கற்பகக் கன்று - அருள் வழங்கும் இளங்களிறு 2
வெள்ளைக் கலையாளே வெண்டா மரையாளே
தெள்ளரிய ஞானத் திரவியமே வந்துதவாய் 3
வீறுதரு சூரர்களை வென்றுலகைத் தானாண்ட
ஆறுமுகனே அடியாற்கு வந்துத வாய் 4
தெள்ளரிய எண்ணெய்ச் சிந்து தனைப்பாட
வள்ளி தெய்வானை மலரடியே காப்பாமே 5
கடவுள் வாழ்த்து
பனிமதிச் சடையாள் ஈசன் பரமனார் பாதம் போற்றி
கனியிதழ் உமையாள் சோதி காரணி தன்னை வாழ்த்தி
6. காரணி - காரணமானவள் 6
புனிதமாம் எண்ணெய்ச் சிந்தைப் புவிமிசை பாடுதற்குத்
தனியொரு கடவுளான தந்தியைச் சிந்தை செய்வோம்
7. கடவுளான தந்தி - ஆனை முகக் கடவுள் 7
அடிமுடி இல்லான் பின்னும் யாவையும் படைத்தோன் என்றும்
படிநமக் களக்கும் ஈசன் பரமனார் கிருபை யாலே 8
மடிதனில் அமிர்த மூட்டி வளர்த்தாய் மனதி ரங்கி
சடுதியில் அனுப்பு மம்மா சரணம் சரணம் தாயே
9. மடிதனில் - கருவறையில்; சடுதியில் - விரைவில் 9
வேறு
மண்ணுலகும் விண்ணுலகும் மற்றும் புவிவாழ்க
எண்ணும் புவியில் இருநிதியம்தான் பெருக 
10. இருநிதியம் - பெருஞ்செல்வம் 10
கோதில்லா ஞானக் குருதே சிகனருளால்
தீதில்லா எண்ணெய்ச் சிந்துதனைப் பாடுகிறேன்
11. கோது - குற்றம் 11
ஒன்றுமில்லாக் காலம் உலகம் யாவும் படைத்து
இன்றுநமை நடத்தும் ஏகன் திருவருளால்
12. ஒன்றுமில்லாக் காலம் - மகா சங்காரகாலம், கடையூழிக்காலம்
ஏகன் - ஒப்பற்ற ஒருவன் (ஏகன் அநேகன் - திருவாசகம்) 11
முட்டைக் கருவால் முடிந்து புவிதனிலே
விட்டஇறை யோன்இரக்கம் விள்ளமுடியாது 
13. இறையோன் இரக்கம் - உலகினைப் படைத்த தனிப்பெருங்கருணை 13
எட்டாது புத்திதன்னால் பாவிக்கக் கூடாது
சட்டமெமைப் படைத்த சுவாமி கிருபையதால்
14. பாவிக்கக் கூடாது - பாவனைக்கு எட்டாது, நினைப்பரிது
சட்டமெனப் படைத்த என்றும் பாடம் 14
திட்டமதாய்ச் சூழுகின்ற தீவினைக்கெல் லாம்பிழைத்து
சட்டமாய் இப்போ தமிழறியும் காலமதில் 
15. சட்டமாய் - சட்டம் - செப்பம். 
சட்ட - செப்பம் உணர்த்த நின்ற தோர் இடைச்சொல் 
அது சட்டம் என மருவியது. (சிவஞானமுனிவர்) 15
துட்டத் தனம்போக சூதுவஞ் சனையகல
பட்டமரம் தனிலே பச்சைத்தளிர் ஆனாற்போல 16
ஆவ லுடனே அண்ணாவி தன்னிடத்தில்
பாவ புண்ணிய மறியப்பள்ளிக்கு வைத்ததுவும்
17. அண்ணாவி - கூத்து முதலியன பழக்குவோர் - 
இங்கு எழுத்தறிவிக்கும் ஆசிரியரைக் குறித்தது
பள்ளிக்கு வைத்தல் - பள்ளிக்கு அனுப்பல் 17
அண்ணாவி தாமும் அறிவித்த ஞானமது
நண்ணாகச் சொல்லுகிறேன் நாட்டிலெந்தன் மாதாவே 18
மண்ணும் புவியில் மணவாளனும் மாதும்
மின்னதிகச் செல்வம் மிகவாழ்ந் திருக்கையிலே
19. மணவாளன் - கணவன் 19
புத்திரனே வேணுமென்று புண்ணியம்செய் யத்துணிந்து
சத்திரங்கள் அம்பலங்கள் சாலை மடங்கள்செய்து
20. சத்திரம் - தங்கும் இலவசக் கூடம்
அம்பலம் - மன்றம்; சாலை - உணவிடுமிடம் 20
ஆதித்த வாரம் வாசி ஆதரித்து
நீதியுடன் தானதவம் நேராக வேபுரிய
21. ஆதித்த வாரம் - ஞாயிறு; வாசி - மூச்சோட்டம் 21
கண்டு சிவனார் கருணை மிகவிரங்கி
தொண்டு மிகச்செய்த தோகையாள் தன்வயத்தில் 
22. வயத்தில் - வயிற்றில் 22
சற்புத் திரனாகத் தானருளிச் செய்தனராம்
விற்புருவ மாதுநல்லாள் மேன்மையுடன் பெற்றெடுத்த
23. சற்புத்திரனாக - உயர்ந்த மகனாக 23
வல்ல பிறையும் வளரும் வகைபோல்
செல்லக் குமரனையும் சீக்கிர மாய்வளர்த்து 24
பண்ணு தமிழைப் படிப்பிக்க வேணு மென்று
மன்னவனும் தேவியுமாய் மனதில் மிகநினைந்து
25. பண்ணு - ஓசை 25
காலுக்குத் தண்டை கழுத்துக்குக் காறையுடன்
கோலவர்ணச் சோமனையும் கொய்து மிகவுடுத்தி
26. காறை - கழுத்தணியுள் ஒன்று; சோமன் - வேட்டி
கொய்து - கொசுவி, மடித்து 26
வீரச்ச தங்கை விரலுக்கு மோதிரமும்
ஆரமிகப் பூட்டி அன்பாய் அலங்கரித்து
27. ஆரம் - மாலை 27
திரிபுண்ட ரீகத் திருநீறும் தான்பூசி 
வெறிமாலை சுற்றி விளங்கு திலகமிட்டு
28. திரிபுண்ட ரீகம் - திரி புண்டரம், மூன்றுவரியாய்ப் 
பூசும் திருநீறு; வெறிமாலை - மணமிக்க மாலை 28
காதில் கடுக்கனிட்டுக் கனத்த முருகும் தூக்கிச்
சீதநறும் வெள்ளி எழுத்தாணி தான்சேர்த்து
29. முருகு - காதணியில் ஒன்று; கனத்த - பருத்த 29
வாத்தியார் தன்னை வரவழைத்து அந்நேரம்
கோத்திரத்தில் உள்ளோரும் கூடி மிகஎழுந்து
30. கோத்திரத்தில் உள்ளோர் - சுற்றத்தார் 30
பள்ளிக் கூடத்தில் பண்பாகச் சென்றுபுக்கு
விள்ளரிய ஞான விமலன் திருவருளால்
31. விள்ளரிய - கூறமுடியாத 31
சாணியைக் கொண்டு தரையை மிகமெழுகி
பேணியே தூபமிட்டுப் பிள்ளையா ரைநிறுத்தி
32. சாணி - பசுவின் சாணம் 32
வாசமலரும் மகிழருகும் தான் சார்த்தி
நேசமிகும் தாம்பூலம் நிறைநாழி தானும்வைத்து
33. மகிழருகு - அருகம்புல்
தாம்பூலம் - வெற்றிலை பாக்கு
நிறைநாழி - மங்கலக்குறியாக நெல் வைத்து நிரப்பிய நாழி 33
கடலைஅவல் பயறு கனிவகைகள் சர்க்கரையும்
விடலையுயர் தரமிக்க வாழைப் பழமும்
34. விடலை - திண்ணிய 34
மாம்பழம் பலாப்பழமும் வரிசையா கப்படைத்து
சாம்பிராணி கற்பூரம் தாலத் திருவிளக்கும் 35
தாம்பிரம் வெள்ளிபொன் குருதட்சனை தானும்வைத்து
ஆம்பொருளான மத யானைமுகனைத் தொழுது 36
சீராக வாத்தியார் செய்யபனை ஓலைதனை
நேராகச் செப்பமிட்டு நிறைந்தமகு டம்பிடித்து
37. மகுடம் - தொடக்கத்தில் முழங்கும் பொருள் நிறைவுடைய 
சொற்கள், அறிவோம் நன்றாக என்பது போல. 37
அரிஎன்ற எழுத்தை அப்போதி லேஎழுதி 
தெரியப் படுத்தி சித்தரியும் தானெழுதி
38. அரி - கல்வி தொடங்குமுன் அறிவோம் நன்றாக 
எனத் தொடங்குதலின் முன் எழுத்துக்கள்-அரி- 
திருமாலைக் குறிப்பதாகக் கொள்ளப்பட்டது 38
கற்பகக் கன்றைக் கைதொழுது ஆதரித்து
அற்புதமாய் மைந்தனையும் அருகிலே தானிருத்தி 
39. கற்பகக் கன்று - ஆனைமுகன் 39
கையைப் பிடித்து கதிபெறவே அண்ணாவி
மெய்யாக அண்ணாவி மெய்ஞ்ஞான மேவழங்க
40. கதி - பேறு; மெய்ஞ்ஞானம் - உண்மைஅறிவு 40
அரிவரி கொன்றைவேந்தன் அன்னையும் பிதாவுடனே
விரிவான எண்சுவடி மிக்க உலகநீதி
41. அரிவரி - அகரமுதலாகக் கோவை செய்யப்பட்ட 
வரி வடிவ எழுத்துக்கள் 41
பிள்ளையார் விருத்தம் பெரியஅவ்வை மூதுரையும்
வள்ளுவமாலை வளம்குறள் நாலடியார் 42
நல்லபொருளை நவிலும் திவாகரமும்
சொல்லரிய நிகண்டும் சுப்பிரமண்யர் புகழும்
43. திவாகரம் - நிகண்டு. சேந்தன் எனும் அரசன் காலத்தில் 
திவாகர முனிவரால் இயற்றப்பட்டது.
சுப்ரமண்யர் புகழ் - திருப்புகழ் 43
நல்பிள்ளைத் தமிழும் ராசரிசி பாடல்களும்
நல்ல புவியில் நலமுடனே எங்களுக்கு
44. ராசரிசி - ராஜரிசி - இளங்கோவடிகள் 44
படிப்பித்தார் வேறுபல சாஸ்திரம் தன்னையும்
படித்தோம்காண் மாதாவே பாருலகில் அண்ணாவி
45. சாஸ்திரம் - கலை நூல்; காண் - முன்னிலை அசை
அண்ணாவி நெடியோன் - அண்ணாவியாகிய பெரியோன் 45
நெடியோன் திருவருளால் நிமிடமிது தட்சணமே
வடிவாக எண்ணெய்தனை வாங்கிவரச் சொன்னார்கள்
46. தட்சணம் - உடன் 46
என்றறிந்து நாங்கள் இயம்பியசொல் தட்டாமல்
சிந்தை மகிழ்ந்து திருத்தாள் கரம்குவித்து
47. திருத்தால் கரம் குவித்து - திருவடிகளைத் தொழுது 47
சனி எண்ணெய்க் கென்று வந்தோம் தாயே சலியாதே
இனிதான நல்லெண்ணெய் இலுப்பெண்ணெய் ஆனாலும் 48
நான்கெண்ணெய் ஆனாலும் நறுநெய் ஆனாலும்
மங்கெண்ணெய் முத்தெண்ணெய் பொதுவாய்ச் சேர்த்தெண்ணெய் 49
எந்தநோ வானதுக்கும் எருக்கிடுமே வேப்பெண்ணெய்முதல்
எந்தஎண்ணெய் ஆனாலும் இப்போதே விட்டனுப்பு 
50. எருக்கிடும் - அழித்திடும் 50
பேரம்மை சிற்றம்மை பெரியதாய் உடன்பிறந்தாள்
அத்தைமகள் மதனி அன்பான மச்சினமார்
51. பேரம்மை - பெரிய தாய்; சிற்றம்மை - சிறிய தாய்
மதனி - மைத்துனி 51
இத்தனை பேரும் எமக்கிரங்கி எண்ணெய் தனைச்
சித்தம் மகிழ்ந்து சீக்கிரமாய்த் தந்தனுப்பும் 52
செல்லக் குமாரருங்கள் திண்ணையிலே வந்துநிற்க
அல்லற்படுத் தாதேஎங்கள் அன்புடைய மாதாவே
53. அல்லல் - துன்பம் 53
முத்துக் குமாரருங்கள் முத்தத்தில் வந்துநிற்க
சித்தம் இரங்கிச் சீக்கிரத்தில் எண்ணெய்தனைத்
54. முத்தத்தில் - முற்றத்தில் 54
தந்தனுப்பும் எங்களுக்குத் தாயேநீ மாதாவே
மைந்தன் தனக்கிரங்கி வார்த்துவிடு எண்ணெய்தனை
55. வார்த்தல் - கொடுத்தல் 55
பிள்ளை தனக்கிரங்கிப் பெற்றார் உதவிசெய்தால்
கொள்ளை தவம்பெறுவீர் கொற்றவன்போல் வாழ்ந்திடுவீர்
56. கொள்ளை - மிகுதி
கொற்றவன் - அரசன் 56
அன்ன மணியே அருமையுள்ள மாதாவே
சின்னஞ்சிறு பாலகர்மேல் சித்தம் இரங்கியன்பாய் 57
மாதா மகிழ்ந்தெண்ணெய் வார்த்திடுவார் என்று சொல்லி
ஆதலால் வந்தோம்காண் அன்னையரே நீர்கேளிர் 
காண் - முன்னிலை அசை 58
சோதிதிரு அண்ணாவி சொன்ன மொழிதவறி
நீதியுடனே நெடுநேர மான துண்டோ 59
எங்களையும் அண்ணாவி எண்ணாம லேஅடிப்பார்
பங்கய முகத்தழகு பவளவிதழ்த் தாய்மாரே 
60. பங்கயம் - தாமரை 60
நன்னயமாய் எண்ணெய்தனை நலமாகத் தந்தனுப்பும்
இன்னமொரு சற்றுநேரஞ்சென்றால் எங்களையும் அண்ணாவி 61
கோவித் திடுவார் கொடிப்பிரம் பாலடிப்பார் 
நாவூற நகட்டுவார் எங்க ளைத்தான் 
62. நகட்டுவார் - நசுக்குவார் 62
அல்லாமல் சட்டம்பிள்ளை அவன்கொடுமை சொல்லரிது
செல்லப்பிள்ளை யானாலும் சினமே பொறுக்கறியான் 
63. சட்டம்பிள்ளை - மாணவத்தலைவன் 63
கோதண்ட ராமனிலே கூசாமல் போட்டிடுவான்
மாதண்ட மாக வடுப்படவே தண்டிப்பான்
64. கோதண்டம் - பள்ளிச் சிறுவர் தண்டனையில் ஒன்று
கோதண்டந் தன்னிலே என்றும் பாடம்
வடுப்படவே - காயம்படவே 64
முட்டுக்கண்ணி போட்டு முதுகில்கல் எடுத்திடுவான்
கட்டியடிப்பான் கசையால் உரித்திடுவான்
65. கசையால் - சவுக்கால் 65
தூதுளை விளாறுவெட்டித் துடிக்க அடித்திடுவான் 
மாதுளையம் கொம்பாலே மலர அடித்திடுவான்
66. தூதுளை விளாறு - தூதுவளை வளாறு 66
குட்டிப் பிரம்பாலே எட்டி அடித்திடுவான்
சட்டம்பிள்ளை துட்டனவன் சற்றும் இரக்கமில்லான்
67. துட்டன் - கொடியன் 67
காணிகன் கையாலும் காசினியி லண்ணாவி
தாணிகன் கையாலும் தானடியே பட்டுழன்று
68. தாணிகன் - உரிமை உடையவன் (ஸ்தாணிகன்) 68
பிள்ளை நாங்கள் புலம்பி அழுகையிலே
தள்ளைநீங்கள் கண்டால்தான் பொறுக்குமோ மனது 
69. தள்ளை - தாய் 69
ஆதலினால் நாங்கள் அவசரமாய்ப் போவதற்கு
மாதாவே தாயே மனதிரங்கி யேயனுப்பும் 70
வந்தோம் வெகுநேரம் வருத்தமிகக் காணுதம்மா
தந்தை மனதிரங்கி தாய்மாரே நீங்களும்தான் 71
நிறுத்திவிட்டுப் பாராதே நீதியில்லாத் தாய்மாரே
சுறுதிதனில் அனுப்பும் சுகம்பெறுவீர் மாதாவே
72. சுறுதி - சுறுசுறுப்பு - விரைவு 72
உந்தனுட வீட்டிலெண்ணெய் உண்டில்லை யானாலும்
எந்த வீட்டிலானாலும் வாங்கிவிடு எண்ணெய்தனை
73. உந்தனுடைய - உன்தன் உடைய என்பதன் பேச்சுத் திரிபு 73
உண்டான எண்ணெய் ஒருகரண்டி குறையாமல்
கொண்டாந்து விட்டிடுவீர் கூர்மையுள்ள மாதாவே
74. கொண்டாந்து - கொண்டுவந்து என்பதன் பேச்சு வழக்கு 74
பழஞ்சோ றுண்ணாமல் வயிறு கொதிக்குதம்மா
குழைந்து விழுகுதம்மா கொவ்வையிதழ் மேனி யெல்லா 
75. பழஞ்சோறு - நீரிட்டசோறு 75
வேர்த்து நடுங்குதப்பா மெய்சோர்ந்து காணுதிப்போ
ஆத்தில் நட்ட கோரைகள்போல் அலையுது சடலமெல்லாம்
76. ஆற்றில் நட்ட கோரை - அலைதலுக்கு உவமை 76
திண்ணக்க மில்லாமல் தியங்குதே என்னுடம்பு
அண்ணாவி தாமும் அடிப்பாரென் றென்மனது 
77. திண்ணக்கம் - மனஉரம் 77
உள்ளம் பதறுதம்மா ஒளிச்சுதான் போகவென்று
கள்ளமனம் போலே கலங்குதம்மா உள்ளமெல்லாம் 
78. ஒளிச்சு - ஒளிஞ்சு 78
சட்டமெழுதித் தயவுடனே தான்கணக்கு
திட்டம்தாய்ப் பார்க்கச் சிறுவர் தனக்கிரங்கி 79
ஆத்தாள் எனப்பயின்ற அன்னையே எண்ணெய்தனை

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.