துபாயில் ஓட்டுநர் உரிமம் பெற நடத்தப்படும், சாலை போக்குவரத்து துறை தேர்வில் தமிழ், இந்தி, மலையாளம், பெங்காலி, உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் கேள்வித்தாள் அச்சிடப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
துபாயில் இந்திய மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அவர்கள் வாகனங்களை இயக்குவதற்கு லைசென்ஸ் பெற, போக்குவரத்து துறை நடத்தும் தேர்வை எழுத வேண்டும். இதுவரையில் இந்த தேர்வு ஆங்கிலம், உருது, அரபிக் ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இதனால் தங்கள் நாட்டு மொழிகளிலும் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பல்வேறு இந்திய அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. அதன்படி, தற்போது, சாலை போக்குவரத்து துறை தேர்வில், தமிழ், இந்தி, மலையாளம், பெங்காலி உள்ளிட்ட 11 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
தேர்வு முடிவுகளும் அந்தந்த மொழியிலேயே தரப்படுகிறது. இதன் மூலம் அந்தந்த மொழியை சார்ந்த மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயிற்சி வகுப்புகளும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
|