LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

பட்டதாரி இளைஞர்களுக்கான தமிழக அரசின் வேலைவாய்ப்பு பயிற்சி !! விண்ணப்பிக்க செப். 30 கடைசி நாள் !!

கடந்த வியாழக்கிழமை அன்று, இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 


தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம், தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஐ.சி.டி அகாடமி இணைந்து 2000 பட்டதாரி இளைஞர்களுக்காக நடத்தும் BFSI துறைகளுக்கான வேலை வாய்ப்பு பயிற்சித் திட்டம். 


தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம், தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஐ.சி.டி அகாடமி இணைந்து நடத்தும் பட்டதாரி இளைஞர்களுக்கான வங்கித்துறை, நிதியியல் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் சார்ந்த குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. 


இப்பயிற்சி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 150 மணி நேர பயிற்சி வகுப்புகளாக நடைபெறவுள்ளது. இதில் முழுமையாக பங்கேற்று, பயிற்சியில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெறுவோருக்கு BFSI துறை சார்ந்த வேலைவாய்ப்பு உதவியும் கிடைக்க வாய்ப்புள்ளது.

  1.  

இப்பயிற்சி திட்டத்தில் பங்குபெறுவோர் வங்கியியல், நிதியியல் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் சார்ந்த திறன்கள், வாடிக்கையாளர் சேவைத்திறன் மற்றும் தகவல் தொழில் நுட்பத் திறன்கள் சார்ந்த திறன் மேம்பாட்டைப் பெறுவர்.


2013-2014 ஆம் ஆண்டில் BA, B.Com, BBA, BBM, B.Sc, MA, M.Com, MBA, M.Sc ஆகிய துறைகளில் பட்டம் பெற்ற இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரிகள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.ictact.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30 செப்டம்பர் 2014. நுழைவுத் தேர்வின் அடிப்படையில் பயிற்சிக்கான அனுமதி நடைபெறும்.


இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

by Swathi   on 20 Sep 2014  0 Comments
Tags: திறன் மேம்பாட்டு பயிற்சி   இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு   தமிழக அரசு வேலைவாய்ப்பு   BFSI துறை வேலைவாய்ப்பு   BFSI Jobs   TN Govt Skill Development Center     
 தொடர்புடையவை-Related Articles
பட்டதாரி இளைஞர்களுக்கான தமிழக அரசின் வேலைவாய்ப்பு பயிற்சி !! விண்ணப்பிக்க செப். 30 கடைசி நாள் !! பட்டதாரி இளைஞர்களுக்கான தமிழக அரசின் வேலைவாய்ப்பு பயிற்சி !! விண்ணப்பிக்க செப். 30 கடைசி நாள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.