LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கம்பர் (Kambar )

யுத்த காண்டம்-நாகபாசப் படலம்-2

 

இந்திரன் மகன் மைந்தனை, 'இன் உயிர்
தந்து போக!' எனச் சாற்றலுற்றான் தனை,
வந்து, மற்றைய வானர வீரரும்,
முந்து போர்க்கு முறை முறை முற்றினார். 151
மரமும், குன்றும், மடிந்த அரக்கர்தம்
சிரமும், தேரும், புரவியும், திண் கரிக்
கரமும், ஆளியும் வாரிக் கடியவன்
சரமும் தாழ்தர, வீசினர், தாங்கினார். 152
அனைய காலையில், ஆயிரம் ஆயிரம்
வினைய வெங் கண் அரக்கரை, விண்ணவர்
நினையும் மாத்திரத்து, ஆர் உயிர் நீக்கினான் -
மனையும், வாழ்வும், உறக்கமும் மாற்றினான். 153
ஆனையும், தடந் தேரும், தன் ஆர் உயிர்த்
தானையும், பரியும், படும் தன்மையை
மான வெங் கண் அரக்கன் மனக் கொளா, 
போன வென்றியன், தீ எனப் பொங்கினான். 154
சீர்த் தடம் பெருஞ் சில்லி அம் தேரினைக்
காத்து நின்ற இருவரைக் கண்டனன்-
ஆர்த்த தம் பெருஞ் சேனை கொண்டு, அண்டமேல்
ஈர்த்த சோரிப் பரவை நின்று ஈர்த்தலால். 155
நேர் செலாது, இடை நின்றனர்-நீள் நெடுங் 
கார் செலா; இருள் கீறிய கண் அகல் 
தேர் செலாது; விசும்பிடைச் செல்வது ஓர்
பேர் செலாது;-பினத்தின் பிறக்கமே. 156
அன்று தன் அயல் நின்ற அரக்கரை
ஒன்று வாள் முகம் நோக்கி, 'ஒரு விலான்
நன்று நம் படை நாற்பது வெள்ளமும்
கொன்று நின்றபடி!' எனக் கூறினான். 157
ஆய வீரரும், 'ஐய! அமர்த்தலை, 
நீயும், நாற்பது வெள்ள நெடும் படை
மாய, வெங் கணை மாரி வழங்கினை;
ஓய்வு இல் வெஞ் செரு ஒக்கும்' என்று ஓதினார். 158
வந்து நேர்ந்தனர்; மாருதிமேல் வரும்
அந்திவண்ணனும், ஆயிரம் ஆயிரம்
சிந்தினான், கணை; தேவரை வென்றவன்
நுந்த நுந்த, முறை முறை நூறினான். 159
ஆறும், ஏழும், அறுபதும் ஐம்பதும்,
நூறும், ஆயிரமும், கணை நூக்கி, வந்து
ஊறினாரை உணர்வு தொலைத்து, உயிர்
தேறினாரை நெடு நிலம் சேர்த்தினான். 160
கதிரின் மைந்தன் முதலினர், காவலார்,
உதிர வெள்ளத்தின் ஒல்கி ஒதுங்கலும்,
எதிரில் நின்ற இராவணி ஈடுற,
வெதிரின் காட்டு எரிபோல், சரம் வீசினான். 161
உளைவு தோன்ற, இராவணி ஒல்கினான்;
கிளையின் நின்ற இருவர் கிளைத்தலும்,
அளவு இல் சேனை அவிதர, ஆரியற்கு
இளைய வீரன் சுடு சரம் ஏவினான். 162
தெரி கணை மாரி பெய்ய, தேர்களும், சிலைக் கைம்மாவும்,
பரிகளும், தாமும், அன்று பட்டன கிடக்கக் கண்டார்,
இருவரும் நின்றார்; மற்றை இராக்கதர் என்னும் பேர்கள்
ஒருவரும் நின்றார் இல்லை; உள்ளவர் ஓடிப் போனார். 163
ஓடினர் அரக்கர், தண்ணீர் உண் தசை உலர்ந்த நாவர்,
தேடின, தெரிந்து கையால் முகிலினை முகந்து தேக்கி,
பாடு உறு புண்கள் தோறும் பசும் புனல் பாயப் பாய,
வீடினர் சிலவர்; சில்லோர், பெற்றிலர்; விளிந்து வீழ்ந்தார். 164
வெங் கணை திறந்த மெய்யர், விளிந்திலர், விரைந்து சென்றார்,
செங் குழல் கற்றை சோரத் தெரிவையர் ஆற்ற, தெய்வப்
பொங்கு பூம் பள்ளி புக்கார், அவர் உடல் பொருந்தப் புல்லி,
அங்கு அவர் ஆவியோடும் தம் உயிர் போக்கி அற்றார். 165
பொறிக் கொடும் பகழி மார்பர், போயினர், இடங்கள் புக்கார்,
மறிக் கொளும் சிறுவர் தம்மை, மற்று உள சுற்றம் தம்மைக்
'குறிக்கொளும்' என்று கூறி, அவர் முகம் குழைய நோக்கி,
நெறிக் கொளும் கூற்றை நோக்கி, ஆர் உயிர் நெடிது நீத்தார். 166
'தாமரைக் கண்ணன் தம்பி தன்மை ஈதுஆகின், மெய்யே
வேம், அரைக் கணத்தின் இவ் ஊர்; இராவணி விளிதல் முன்னம்,
மா மரக் கானில், குன்றில், மறைந்திரும்; மறைய வல்லே
போம்' எனத் தமரைச் சொல்லி, சிலர் உடல் துறந்து போனார். 167
வரை உண்ட மதுகை மேனி மருமத்து, வள்ளல் வாளி
இரை உண்டு துயில், சென்றார், 'வாங்கிடின், இறப்பம்' என்பார்,
பிரை உண்ட பாலின் உள்ளம் பிறிதுற, பிறர் முன் சொல்லா
உரையுண்ட நல்லோர் என்ன, உயிர்த்து உயிர்த்து, உழைப்பதானார். 168
தேரிடைச் செல்லார், மானப் புரவியில் செல்லார், செங் கண்
காரிடைச் செல்லார், காலின் கால் எனச் செல்லார், காவல்
ஊரிடைச் செல்லார், நாணால் உயிரின்மேல் உடைய அன்பால்
போரிடைச் செல்லார், நின்று நடுங்கினர், புறத்தும் போகார். 169
இந்திரசித்தின் கவசத்தை இலக்குவன் பிளத்தல்
நொய்தினின் சென்று கூடி, இராவணி உளைவை நோக்கி,
'வெய்தினின் கொன்று வீழ்ப்பல்' என்பது ஓர் வெகுளி வீங்கி,-
பெய்துழிப் பெய்யும் மாரி அனையவன்-பிணங்கு கூற்றின்
கையினின் பெரிய அம்பால், கவசத்தைக் கழித்து வீழ்த்தான். 170
கவசத்தைக் கழித்து வீழ்ப்ப, காப்புறு கடன் இன்று ஆகி,
அவசத்தை அடைந்த வீரன் அறிவுறும் துணையின் வீரத்
'துவசத்தின் புரவித் திண் தேர் கடிதுறத் தூண்டி, யாம் இத்,
திவசத்தின் முடித்தும், வெம் போர்' எனச் சினம் திருகிச் சென்றார். 171
மாருதிமேலும், ஐயன் மார்பினும் தோளின்மேலும்,
தேரினும் இருவர் சென்றார், செந் தழல் பகழி சிந்தி,
ஆரியன், வாகை வில்லும், அச்சுடைத் தேரும், அத் தேர்
ஊர்குவார் உயிரும், கொண்டான்; புரவியின் உயிரும் உண்டான். 172
இருவரும் இழந்த வில்லார், எழு முனை வயிரத் தண்டார்,
உரும் எனக் கடிதின் ஓடி, அனுமனை இமைப்பின் உற்றார்,
பொரு கனல் பொறிகள் சிந்தப் புடைத்தனர்; புடைத்தலோடும்,
பரு வலிக் கரத்தினால் தண்டு இரண்டையும் பறித்துக் கொண்டான். 173
புகை நிறக்கண்ணனும் மாபக்கனும் ஓடி ஒளிதல்
தண்டு அவன் கையது ஆன தன்மையைத் தறுகணாளர்,
கண்டனர்; கண்டு, செய்யலாவது ஒன்றானும் காணார்;
'கொண்டனன் எறிந்து நம்மைக் கொல்லும்' என்று, அச்சம் கொண்டார்,
உண்ட செஞ்சோறும் நோக்கார், உயிருக்கே உதவி செய்தார். 174
இந்திரசித்து வானரப்படையை அழித்தல்
காற்று வந்து அசைத்தலாலும், காலம் அல்லாமையாலும்
கூற்று வந்து உயிரைக் கொள்ளும் குறி இன்மை குறித்தலாலும்,
தேற்றம் வந்து எய்தி, நின்ற மயக்கமும், நோவும் தீர்ந்தார்,
ஏற்றமும் வலியும் பெற்றார்; எழுந்தனர்-வீரர் எல்லாம். 175
அங்கதன், குமுதன், நீலன், சாம்பவன், அருக்கன் மைந்தன்
பங்கம் இல் மயிந்தன், தம்பி, சதவலி, பனசன் முன்னாச்
சிங்க ஏறு அனைய வீரர் யாவரும், சிகரம் ஏந்தி,
மங்கலம் வானோர் சொல்ல, மழை என ஆர்த்து, வந்தார். 176
அத்தனையோரும், குன்றம் அளப்பு இல, அசனி ஏற்றோடு
ஒத்தன, நெருப்பு வீசும் உரும் என ஒருங்க உய்த்தார்
'இத்தனை போலும் செய்யும் இகல்' எனா, முறுவல் எய்தி,
சித்திர வில் வலோனும் சின்ன பின்னங்கள் செய்தான். 177
கதிரவன் மறைதல்
மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி, வந்து
நெருங்கினார்; நெருங்கக் கண்டும்; ஒரு தனி நெஞ்சும், வில்லும்,
சரங்களும், துணையாய் நின்ற நிசாசரன் தனிமை நோக்கி
இரங்கினன் என்ன, மேல்பால் குன்று புக்கு, இரவி நின்றான். 178
'வாழிய வேதம் நான்கும், மனு முதல் வந்த நூலும்,
வேள்வியும், மெய்யும், தெய்வ வேதியர் விழைவும் அஃதே,
ஆழி அம் கமலக் கையான் ஆதி அம் பரமன்' என்னா
ஏழையர் உள்ளம் என்ன இருண்டன-திசைகள் எல்லாம். 179
இலக்குவன் இந்திரசித்தைக் கொல்ல முயல்தல்
'நாகமே அனைய நம்ப! நாழிகை ஒன்று நான்கு
பாகமே காலம் ஆகப் படுத்தியேல், பட்டான்; அன்றேல்,
வேக வாள் அரக்கர் காலம் விளைந்தது, விசும்பின் வஞ்சன்
ஏகுமேல், வெல்வன்' என்பது, இராவணற்கு இளவல் சொன்னான். 180
அத்தனை வீரர் மேலும், ஆண் தகை அனுமன் மேலும்,
எத்தனை கோடி வாளி மழை என எய்யாநின்ற
வித்தக வில்லினானைக் கொல்வது விரும்பி, வீரன்
சித்திரத் தேரைத் தெய்வப் பகழியால் சிதைத்து வீழ்ந்தான். 181
அழித்த தேர் அழுந்தாமுன்னம், 'அம்பொடு கிடந்து வெம்பி,
உழைத்து உயிர் விடுவது அல்லால், உறு செரு வென்றேம் என்று
பிழைத்து இவர் போவர் அல்லர்; பாசத்தால் பிணிப்பன்' என்னா,
விழித்து இமையாத முன்னம், வில்லொடும் விசும்பில் சென்றான். 182
'பொன் குலாம் மேனி மைந்தன் தன்னொடும் புகழ்தற்கு ஒத்த,
வன் கலாம் இயற்றி நின்றான், மற்றொரு மனத்தன் ஆகி,
மின் குலாம் கழல் கால் வீரன் விண்ணிடை விரைந்த தன்மை
என்கொலாம்!' என்ன அஞ்சி, வானவர் இரியல்போனார். 183
தாங்கு வில் கரத்தன், தூணி தழுவிய புறத்தன், தன்னுள்
ஓங்கி உற்று எரியாநின்ற வெகுளியன், உயிர்ப்பன், தீயன்,
தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம் சீரியன், மாயச் செல்வன்,
வீங்கு இருட் பிழம்பின், உம்பர் மேகத்தின் மீதின் ஆனான். 184
தணிவு அறப் பண்டு செய்த தவத்தினும், தருமத்தாலும்
பிணி அறுப்பவரில் பெற்ற வரத்தினும், பிறப்பினானும்,-
மணி நிறத்து அரக்கன்-செய்த மாய மந்திரத்தினானும்,
அணு எனச் சிறியது, ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான். 185
வாங்கினான்-மலரின் மேலான், வானக மணி நீர்க் கங்கை
தாங்கினான், உலகம் தாங்கும் சக்கரத்தவன் என்றாலும்
வீங்கு வான் தோளை வீக்கி வீழ்த்து அலால் மீள்கிலாத
ஓங்கு வாள் அரவின் நாமத்து ஒரு தனிப் படையை உன்னி. 186
ஆயின காலத்து, ஆர்த்தார், 'அமர்த்தொழில் அஞ்சி, அப்பால்
போயினன்' என்பது உன்னி, வானர வீரர் போல்வார்;
நாயகற்கு இளைய கோவும் அன்னதே நினைந்து, நக்கான்;
மாயையைத் தெரிய உன்னார், போர்த் தொழில் மாற்றி நின்றார். 187
அது கணத்து, அனுமன் தோள் நின்று ஐயனும் இழிந்து, வெய்ய
கது வலிச் சிலையை வென்றி அங்கதன் கையது ஆக்கி,
முதுகு உறச் சென்று நின்ற கணை எலாம் முறையின் வாங்கி,
விதுவிதுப்பு ஆற்றலுற்றான், விளைகின்றது உணர்ந்திலாதான். 188
இலக்குவன் முதலியோரை நாகபாசம் பிணித்தல்
விட்டனன் அரக்கன் வெய்ய படையினை; விடுத்தலோடும்,
எட்டினோடு இரண்டு திக்கும் இருள் திரிந்து இரியஓடி,
கட்டினது என்ப மன்னோ, காகுத்தற்கு இளைய காளை
வட்ட வான் வயிரத் திண் தோள் மலைகளை உளைய வாங்கி. 189
இறுகுறப் பிணித்தலோடும், யாவையும் எதிர்ந்த போதும்
மறுகுறக் கடவான் அல்லன்; மாயம் என்று உணர்வான் அல்லன்;
உறு குறைத் துன்பம் இல்லான்; ஒடுங்கினன்; செய்வது ஓரான்,
அறு குறைக் களத்தை நோக்கி, அந்தரம் அதனை நோக்கும். 190
மற்றையோர் தமையும் எல்லாம் வாள் எயிற்று அரவம் வந்து
சுற்றின; வயிரத் தூணின், மலையினின், பெரிய தோள்கள்,
'இற்றன, இற்ற' என்ன, இறுக்கின; இளகா உள்ளம்
தெற்றென உடைய வீரர் இருந்தனர், செய்வது ஓரார். 191
காலுடைச் சிறுவன், 'மாயக் கள்வனைக் கணத்தின் காலை
மேல் விசைத்து எழுந்து நாடிப் பிடிப்பென்' என்று உறுக்கும்வேலை,
ஏல்புடைப் பாசம், மேல் நாள், இராவணன் புயத்தை வாலி
வால் பிணித்தென்ன, சுற்றிப் பிணித்தது, வயிரத் தோளை. 192
நாக பாசத்தால் கட்டுண்டவர் நிலை
மலை என எழுவர்; வீழ்வர்; மண்ணிடைப் புரள்வர்; வானில்
தலைகளை எடுத்து நோக்கி, தழல் எழ விழிப்பர்; தாவி
அலைகிளர் வாலால் பாரின் அடிப்பர்; வாய் மடிப்பர்; ஆண்மைச்
சிலையவற்கு இளைய கோவை நோக்குவர்; உள்ளம் தீவர்; 193
வீடணன் முகத்தை நோக்கி, 'வினை உண்டே, இதனுக்கு?' என்பர்;
மூடின கங்குல் மாலை இருளினை முனிவர்; 'மொய்ம்பின்
ஈடுறத் தக்க போலாம் நம் எதிர்' என்னா, ஏந்தல்
ஆடகத் தோளை நோக்கி, நகை செய்வர்; விழுவர்; அஞ்சார். 194
'ஆர், இது தீர்க்க வல்லார்? அஞ்சனை பயந்த வள்ளல்,
மாருதி, பிழைத்தான் கொல்லோ?' என்றனர், மறுகி, நோக்கி,
வீரனைக் கண்டு, 'பட்டது இதுகொலாம்!' என்று விம்மி,
'வார் கழல் தம்பி தன்மை காணுமோ, வள்ளல்?' என்பார். 195
என், சென்ற தன்மை சொல்லி? எறுழ் வலி அரக்கன் எய்தான்
மின் சென்றது அன்ன; வானத்து உரும் இனம் வீழ்வ என்ன,
பொன் சென்ற வடிம்பின் வாளி, புகையொடு பொறியும் சிந்தி,
முன் சென்ற முதுகில் பாய, பின் சென்ற மார்பம் உற்ற. 196
மலைத்தலைக் கால மாரி, மறித்து எறி வாடை மோத,
தலைத் தலை மயங்கி வீழும் தன்மையின் தலைகள் சிந்தும்;
கொலைத்தலை வாளி பாயக் குன்று அன குவவுத் தோளார்
நிலைத்திலர் உலைந்து சாய்ந்தார்; நிமிர்ந்தது, குருதி நீத்தம். 197
ஆயிர கோடி மேலும் அம்பு தன் ஆகத்தூடு
போயின போதும், ஒன்றும் துடித்திலன், பொடித்து, மானத்
தீ எரி சிதறும் செங் கண் அஞ்சனை சிங்கம், தெய்வ
நாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட, நடுங்குகின்றான். 198
வேறு உள வீரர் எல்லாம் வீழ்ந்தனர், உருமின் வெய்ய
நூறும் ஆயிரமும் வாளி உடலிடை நுழைய, சோரி
ஆறு போல் ஒழுக, அண்ணல் அங்கதன் அனந்த வாளி
ஏறிய மெய்யனேனும், இருந்தனன், இடைந்திலாதான். 199
கதிரவன் காதல் மைந்தன், கழல் இளம் பசுங் காய் அன்ன,
எதிர் எதிர் பகழி தைத்த, யாக்கையன்; எரியும் கண்ணன்;
வெதிர் நெடுங் கானம் என்ன வேகின்ற மனத்தன்; மெய்யன்;
உதிர வெங் கடலுள், தாதை உதிக்கின்றான் தனையும் ஒத்தான். 200
வெப்பு ஆரும் பாசம் வீக்கி, வெங் கணை துளைக்கும் மெய்யன்-
ஒப்பு ஆரும் இல்லான் தம்பி-உணர்ந்திருந்து இன்னல் உய்ப்பான்,
'இப் பாசம் மாய்க்கும் மாயம், யான் வல்லென்' என்பது ஓர்ந்தும்,
அப் பாசம் வீச ஆற்றாது, அழிந்த நல் அறிவு போன்றான். 201
அம்பு எலாம் கதிர்கள் ஆக, அழிந்து அழிந்து இழியும் ஆகச்
செம் புனல் வெயிலின் தோன்ற திசை இருள் இரிய, சீறிப்
பம்பு பேர் ஒளிய நாகம் பற்றிய படிவத்தோடும்,
உம்பர் நாடு இழிந்து வீழ்ந்த ஒளியவனேயும் ஒத்தான். 202
இந்திரசித்து இராவணன் அரண்மனை அடைதல்
மயங்கினான் வள்ளல் தம்பி; மற்றையோர் முற்றும் மண்ணை
முயங்கினார்; மேனி எல்லாம் மூடினான், அரக்கன் மூரித்
தயங்கு பேர் ஆற்றலானும், தன் உடல் தைத்த வாளிக்கு
உயங்கினான், உளைந்தான், வாயால் உதிர நீர் உமிழாநின்றான். 203
'சொற்றது முடித்தேன்; நாளை, என் உடற் சோர்வை நீக்கி,
மற்றது முடிப்பென்' என்னா, எண்ணினான், 'மனிசன் வாழ்க்கை
இற்றது; குரங்கின் தானை இறந்தது' என்று, இரண்டு பாலும்
கொற்ற மங்கலங்கள் ஆர்ப்ப, இராவணன் கோயில் புக்கான். 204
ஈர்க்கு அடைப் பகழி மாரி இலக்குவன் என்ன நின்ற
நீர்க் கடை மேகம் தன்னை நீங்கியும், செருவின் நீங்கான்,
வார்க் கடை மதுகைக் கொங்கை, மணிக் குறு முறுவல், மாதர்
போர்க் கடைக் கருங் கண் வாளி புயத்தொடு பொழியப் புக்கான். 205
ஐ-இரு கோடி செம் பொன் மணி விளக்கு அம் கை ஏந்தி,
மை அறு வான நாட்டு மாதரும், மற்றை நாட்டுப்
பை அரவு அல்குலாரும், பலாண்டு இசை பரவ, தங்கள்
தையலர் அறுகு தூவி வாழ்த்தினர் தழுவ, சார்ந்தான். 206
தந்தையை எய்தி, அன்று ஆங்கு உற்றுள தன்மை எல்லாம்
சிந்தையின் உணரக் கூறி, 'தீருதி, இடர் நீ; எந்தாய்!
நொந்தனென் ஆக்கை; நொய்தின் ஆற்றி, மேல் நுவல்வென்' என்னா,
புந்தியில் அனுக்கம் தீர்வான், தன்னுடைக் கோயில் புக்கான். 207
இலக்குவன் முதலானோர் நிலை கண்டு வீடணன் புலம்பல்
இத் தலை, இன்னல் உற்ற வீடணன் இழைப்பது ஓரான்,
மத்து உறு தயிரின் உள்ளம் மறுகினன், மயங்குகின்றான்,
'அத் தலைக் கொடியன் என்னை அட்டிலன்; அளியத்தேன் நான்;
செத்திலென்; வலியென் நின்றேன்' என்று போய், வையம் சேர்ந்தான். 208
பாசத்தால் ஐயன் தம்பி பிணிப்புண்ட படியைக் கண்டு
'நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார்; யான் ஒரு தமியென் நின்றேன்;
தேசத்தார், என்னை என் என் சிந்திப்பார்!' என்று, தீயும்
வாசத் தார் மாலை மார்பன் வாய் திறந்து அரற்றலுற்றான். 209
'"கொல்வித்தான், உடனே நின்று அங்கு" என்பரோ? "கொண்டு போனான்
வெல்வித்தான், மகனை" என்று பகர்வரோ? "விளைவிற்கு எல்லாம்
நல் வித்தாய் நடந்தான், முன்னே" என்பரோ? நயந்தோர் தம் தம்
கல்வித்து ஆம் வார்த்தை' என்று கரைவித்தான் உயிரைக் கண்போல். 210
'போர் அவன் புரிந்த போதே, பொரு அரு வயிரத் தண்டால்,
தேரொடும் புரண்டு வீழச் சிந்தி, என் சிந்தை செப்பும்
வீரம் முன் தெரிந்தேன் அல்லேன்; விளிந்திலேன்; மெலிந்தேன்; இஞ்ஞான்று
ஆர் உறவு ஆகத் தக்கேன்? அளியத்தேன், அழுந்துகின்றேன்! 211
'ஒத்து அலைத்து, ஒக்க வீடி, உய்வினும் உய்வித்து, உள்ளம்
கைத்தலை நெல்லி போலக் காட்டிலேன்; கழிந்தும் இல்லேன்;
அத் தலைக்கு அல்லேன்; யான், ஈண்டு, "அபயம்!" என்று அடைந்து நின்ற
இத் தலைக்கு அல்லேன்; அல்லேன்! இரு தலைச் சூலம் போல்வேன்!' 212
நிகழ்ந்தவை அறிந்து இராமன் வருந்துதல்
அனையன பலவும் பன்னி, ஆகுலித்து அரற்றுவானை
'வினை உள பலவும் செய்யத்தக்கன;-வீர!-நீயும்
நினைவு இலார் போல நின்று நெகிழ்தியோ? நீத்தி!' என்னா,
இனையன சொல்லித் தேற்றி, அனலன் மற்று இனைய செய்தான்; 213
'நீ இவண் இருத்தி; யான் போய் நெடியவற்கு உரைபென்' என்னா,
போயினன், அனலன்; போய், அப் புண்ணியவன் பொலன் கொள் பாதம்
மேயினன் வணங்கி, உற்ற வினை எலாம் இயம்பி நின்றான்;
ஆயிரம் பெயரினானும், அருந் துயர்க் கடலுள் ஆழ்ந்தான். 214
உரைத்திலன் ஒன்றும்; தன்னை உணர்ந்திலன்; உயிரும் ஓடக்
கரைத்திலன் கண்ணின் நீரை; கண்டிலன் யாதும் கண்ணால்;
அரைத்திலன் உலகம் எல்லாம் அம் கையால்; பொங்கிப் பொங்கி
இரைத்திலன்; 'உளன்' என்று எண்ண இருந்தனன், விம்மி ஏங்கி 215
விம்மினன், வெதும்பி வெய்துற்று ஏங்கினன், இருந்த வீரன்,
'இம் முறை இருந்து செய்வது யாவதும் இல்' என்று எண்ணி,
பொம்மென விம்மலோடும் பொருக்கென விசையின் போனான்,
தெவ் முறை துறந்து, வென்ற செங்கள மருங்கில் சேர்ந்தான். 216
இராமன் போர்க்களம் காணல்
இழிந்து எழும் காளமேகம், எறி கடல், அனைய மற்றும்
ஒழிந்தன, நீல வண்ணம் உள்ளன எல்லாம் ஒக்கப்
பிழிந்து அது காலம் ஆகக் காளிமைப் பிழம்பு போதப்
பொழிந்தது போன்றது அன்றே-பொங்கு இருட் கங்குற் போர்வை. 217
ஆர் இருள் அன்னது ஆக, ஆயிர நாமத்து அண்ணல்,
சீரிய அனலித் தெய்வப் படைக்கலம் தெரிந்து வாங்கி,
பாரிய விடுத்தலோடு, பகை இருள் இரிந்து பாற,
சூரியன் உச்சி உற்றாலொத்தது, அவ் உலகின் சூழல். 218
படை உறு பிணத்தின் பம்மல் பருப்பதம் துவன்றி, பல்வேறு
இடை உறு குருதி வெள்ளத்து, எறி கடல் எழு நீர் பொங்கி,
உடை, உறு தலைக் கை அண்ணல் உயிர் எலாம் ஒருங்க உண்ணும்
கடை உறு காலத்து, ஆழி உலகு அன்ன, களத்தைக் கண்டான். 219
இலக்குவனைக் கண்ட இராமனின் துயரம்
பிணப் பெருங் குன்றினூடும், குருதி நீர்ப் பெருக்கினூடும்,
நிணப் பெருஞ் சேற்றினூடும், படைக்கல நெருக்கினூடும்,
மணப் பெருங் களத்தில், மோடி மங்கல வாழ்க்கை வைப்பில்,
கணத்தினும் பாதிப் போதில், தம்பியைச் சென்று கண்டான். 220
அய் அவன் ஆக்கைதன் மேல் விழுந்து மார்பு அழுந்தப் புல்லி,
'உய்யலன்' என்ன, ஆவி உயிர்த்து உயிர்த்து, உருகுகின்றான்;
பெய் இரு தாரைக் கண்ணீர்ப் பெருந் துளி பிறங்க, வானின்
வெய்யவன் தன்னைச் சேர்ந்த நீல் நிற மேகம் ஒத்தான். 221
உழைக்கும்; வெய்து உயிர்க்கும்; ஆவி உருகும்; போய் உணர்வு சோரும்;
இழைக்குவது அறிதல் தேற்றான்; 'இலக்குவா! இலக்குவா!' என்று
அழைக்கும்; தன் கையை வாயின், மூக்கின் வைத்து, அயர்க்கும்; 'ஐயா!
பிழைத்தியோ!' என்னும்-மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான். 222
தாமரைக் கையால் தாளைத் தைவரும்; குறங்கைத் தட்டும்;
தூ மலர்க் கண்ணை நோக்கும்; 'மார்பிடைத் துடிப்பு உண்டு' என்னா,
ஏமுறும்; விசும்பை நோக்கும்; எடுக்கும்; தன் மார்பின் எற்றும்;
பூமியில் வளர்த்தும்; 'கள்வன் போய் அகன்றானோ?' என்னும். 223
வில்லினை நோக்கும்; பாச வீக்கினை நோக்கும்; வீயா
அல்லினை நோக்கும்; வானத்து அமரரை நோக்கும்; 'பாரைக்
கல்லுவென், வேரோடு' என்னும்; பவள வாய் கறிக்கும்; கற்றோர்
சொல்லினை நோக்கும்; தன் போல் புகழினை நோக்கும்-தோளான். 224
வீரரை எல்லாம் நோக்கும்; விதியினைப் பார்க்கும்; வீரப்
பார வெஞ் சிலையை நோக்கும்; பகழியை நோக்கும்; 'பாரில்
யார் இது பட்டார்; என்போல் எளி வந்த வண்ணம்?' என்னும்;
'நேரிது, பெரிது' என்று ஓதும்-அளவையின் நிமிர நின்றான். 225
இராமன் வீடணனை நோதல்
'"எடுத்த போர், இலங்கை வேந்தன் மைந்தனோடு இளைய கோவுக்கு
அடுத்தது" என்று, என்னை வல்லை அழைத்திலை, அரவின் பாசம்
தொடுத்த கை தலையினோடும் துணித்து, உயிர் குடிக்க; என்னைக்
கெடுத்தனை; வீடணா! நீ' என்றனன்-கேடு இலாதான். 226
வீடணன் நிகழ்ந்தது கூறல்
அவ் உரை அருளக் கேட்டான், அழுகின்ற அரக்கன் தம்பி,
'இவ் வழி, அவன் வந்து ஏற்பது அறிந்திலம்; எதிர்ந்தபோதும்,
"வெவ் வழியவனே தோற்கும்" என்பது விரும்பி நின்றேன்.
தெய்வ வன் பாசம் செய்த செயல், இந்த மாயச் செய்கை. 227
'அற்று அதிகாயன் ஆக்கை, தலை இலது ஆக்கி, ஆண்ட
வெற்றியன் ஆய வீரன் மீண்டிலன், "இலங்கை மேல்நாள்
பெற்றவன் எய்தும்" என்னும் பெற்றியை உன்னி; பிற்போது
உற்றனன், மைந்தன், தானை நாற்பது வெள்ளத்தோடும், 228
ஈண்டு, நம் சேனை வெள்ளம் இருபதிற்று-இரட்டி மாள,
தூண்டினன், பகழி மாரி; தலைவர்கள் தொலைந்து சோர,
மூண்டு எழு போரில், பாரில் முறை முறை முடித்தான்; பின்னர்
ஆண்தகையோடும் ஏற்றான், ஆயிரம் மடங்கல்-தேரான். 229
'அனுமன்மேல் நின்ற ஐயன் ஆயிரம் தேரும் மாய,
தனு வலம் காட்டி, பின்னை, நாற்பது வெள்ளத் தானை
பனி எனப்படுவித்து, அன்னான் பலத்தையும் தொலைத்து, "பட்டான்
இனி"' என, வயிர வாளி, எண் இல, நிறத்தின் எய்தான். 230
'ஏ உண்ட பகு வாயோடும் குருதி நீர் இழிய நின்றான்,
தூவுண்ட தானை முற்றும் பட, ஒரு தமியன் சோர்வான்;
"போவுண்டது என்னின், ஐய! புணர்க்குவன் மாயம்" என்று,
பாவுண்ட கீர்த்தியானுக்கு உணர்த்தினென்; பரிதி பட்டான். 231
'மாயத்தால் இருண்டது ஆழி உலகு எலாம்; வஞ்சன், வானில்
போய், அத் தானுடைய வஞ்ச வரத்தினால் ஒளிந்து, பொய்யின்
ஆயத்தார்ப் பாசம் வீசி அயர்வித்தான், அம்பின் வெம்பும்
காயத்தான்' என்னச் சொல்லி, வணங்கினான், கலுழும் கண்ணான். 232
வீடணன் "யாரும் இறந்திலர்" எனல்
பின்னரும் எழுந்து, பேர்த்தும் வணங்கி, 'எம் பெரும! யாரும்
இன் உயிர் துறந்தார் இல்லை; இறுக்கிய பாசம் இற்றால்
புல் நுனைப் பகழிக்கு ஓயும் தரத்தரோ? புலம்பி உள்ளம்
இன்னலுற்று அயரல்; வெல்லாது, அறத்தினைப் பாவம்' என்றான். 233
நாகபாச வரலாறு
'யார், இது கொடுத்த தேவன்? என்னை ஈது? இதனைத் தீர்க்கும்
காரணம் யாது? நின்னால் உணர்ந்தது கழறிக் காண்' என்று,
ஆரியன் வினவ, அண்ணல் வீடணன், 'அமல! சாலச்
சீரிது' என்று, அதனை, உள்ள பரிசு எலாம், தெரியச் சொன்னான்: 234
'ஆழி அம் செல்வ! பண்டு இவ் அகலிடம் அளித்த அண்ணல்
வேள்வியில் படைத்தது; ஈசன் வேண்டினன் பெற்று, வெற்றித்
தாழ்வு உறு சிந்தையோற்குத் தவத்தினால் அளித்தது; ஆணை!
ஊழியின் நிமிர்ந்த காலத்து உருமினது; ஊற்றம் ஈதால்; 235
'அன்னதன் ஆற்றல் அன்றே ஆயிரம் கண்ணினானைப்
பின் உற வயிரத் திண்தோள் பிணித்தது;-பெயர்த்து ஒன்று எண்ணி
என், இனி?-அனுமன் தோளை இறுக்கியது; இதனால் ஆண்டும்
பொன்னுலகு ஆளும் செல்வம் துறந்தது, புலவர் எல்லாம். 236
தான் விடின் விடும், இது ஒன்றே; சதுமுகன் முதல்வர் ஆய
வான் விடின், விடாது; மற்று, இம் மண்ணினை எண்ணி என்னே!
ஊன் விட, உயிர் போய் நீங்க, நீங்கும்; வேறு உய்தி இல்லை;
தேன் விடு துளவத் தாராய்! இது இதன் செய்கை' என்றான். 237
இராமன் சினமும் எண்ணமும்
'ஈந்துள தேவர்மேலே எழுகெனோ? உலகம் யாவும்
தீந்து உக நூறி, யானும் தீர்கெனோ? இலங்கை சிந்தப்
பாய்ந்து, அவர் சுற்றம் முற்றும் படுப்பெனோ? இயன்ற பண்போடு
ஏய்ந்தது பகர்தி' என்றான், இமையவர் இடுக்கண் தீர்ப்பான். 238
'வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் தானே நேர் வந்து
இரங்கிடத் தக்கது உண்டேல், இகழ்கிலென்; இல்லை என்னின்
உரம் கெடுத்து, உலகம் மூன்றும், ஒருவன் ஓர் அம்பின் சுட்ட
புரங்களின் தீய்த்து, காண்பென் பொடி, ஒரு கடிகைப் போழ்தின். 239
'எம்பியே இறக்கும் என்னில், எனக்கு இனி, இலங்கை வேந்தன்
தம்பியே! புகழ்தான் என்னை? பழி என்னை? அறம்தான் என்னை?
நம்பியே என்னைச் சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே,
உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும், உதவி பார்த்தால்?' 240
என்று கொண்டு இயம்பி, 'ஈண்டு இங்கு ஒருவன் ஓர் இடுக்கண் செய்ய,
வென்று, இவண் உலகை மாய்த்தல்விதி அன்றால்' என்று விம்மி,
நின்று நின்று, உன்னி உன்னி, நெடிது உயிர்த்து அலக்கணுற்றான்,-
தன் துணைத் தம்பிதன்மேல், துணைவர்மேல், தாழ்ந்த அன்பான். 241
மீட்டும் வந்து, இளைய வீரன் வெற்பு அன்ன விசயத் தோளைப்
பூட்டுறு பாசம் தன்னைப் பல் முறை புரிந்து நோக்கி,
'வீட்டியது என்னின், பின்னை வீவென்' என்று எண்ணும்-வேதத்
தோட்டியின் தொடக்கில் நிற்கும் துணைக் கைம்மால் யானை அன்னான். 242
கருடன் வருகை
இத் தன்மை எய்தும் அளவின்கண், நின்ற இமையோர்கள் அஞ்சி, 'இது போய்
எத் தன்மை எய்தி முடியும்கொல்?' என்று குலைகின்ற எல்லை இதன்வாய்,
அத் தன்மை கண்டு, புடை நின்ற அண்ணல்-கலுழன் தன் அன்பின் மிகையால்,
சித்தம் நடுங்கி இது தீர, மெள்ள, இருளூடு வந்து தெரிவான்,- 243
அசையாத சிந்தை அரவால் அனுங்க, அழியாத உள்ளம் அழிவான்,-
இசையா இலங்கை அரசோடும் அண்ணல் அருள் இன்மை கண்டு நயவான்,-
விசையால் அனுங்க வட மேரு, வையம் ஒளியால் விளங்க, இமையாத் 
திசை யானை கண்கள் முகிழா ஒடுங்க, நிறை கால் வழங்கு சிறையான்,- 244
காதங்கள் கோடி கடை சென்று காணும் நயனங்கள் வாரி கலுழ,
கேதங்கள் கூர, அயர்கின்ற வள்ளல் திரு மேனி கண்டு, கிளர்வான்,-
சீதம் கொள் வேலை அலை சிந்த, ஞாலம் இருள் சிந்த, வந்த சிறையான்,
வேதங்கள் பாட; உலகங்கள் யாவும் வினை சிந்த; நாகம் மெலிய: 245
அல்லைச் சுருட்டி, வெயிலைப் பரப்பி, அகல் ஆசை எங்கும் அழியா
வில்லைச் செலுத்தி, நிலவைத் திரட்டி, விரிகின்ற சோதி மிளிர;
எல்லைக் குயிற்றி எரிகின்ற மோலி, இடை நின்ற மேரு எனும் அத்
தொல்லைப் பொருப்பின் மிசையே விளங்கு சுடரோனின் மும்மை சுடர; 246
நன் பால் விளங்கு மணி கோடியோடு, நளிர்போது, செம் பொன், முதலாத்
தன்பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ;
மின்பால் இயன்றது ஒரு குன்றம் வானின் மிளிர்கின்றது என்ன, வெயிலோன்
தென்பால் எழுந்து, வடபால் நிமிர்ந்து, வருகின்ற செய்கை தெரிய; 247
பல் நாகர் சென்னி மணி கோடி கோடி பல கொண்டு செய்த வகையால்
மின்னால் இயன்றது எனலாய் விளங்கு மிளிர் பூண் வயங்க; வெயில் கால்
பொன்னால் இயன்ற நகை ஓடை பொங்க; வன மாலை மார்பு புரள;
தொல் நாள் பிரிந்த துயர் தீர, அண்ணல் திரு மேனி கண்டு, தொழுவான். 248
முடிமேல் நிமிர்ந்து முகிழ் ஏறு கையன், முகில்மேல் நிமிர்ந்த ஒளியான்,
அடிமேல் விழுந்து பணியாமல் நின்ற நிலை உன்னி உன்னி அழிவான்,
கொடிமேல் இருந்து, இவ் உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற கோளும் இலனாய்,
படிமேல் எழுந்து வருவான், விரைந்து, பல கால் நினைந்து, பணிவான்,- 249
கருடன் துதி
'வந்தாய் மறைந்து; பிரிவால் வருந்தும், மலர்மேல் அயன் தன் முதலோர்-
தம் தாதை தாதை இறைவா! பிறந்து விளையாடுகின்ற தனியோய்!
சிந்தாகுலங்கள் களைவாய்! தளர்ந்து துயர் கூரல் என்ன செயலோ?
எந்தாய்? வருந்தல்; உடையாய்! வருந்தல்' என, இன்ன பன்னி மொழிவான்: 250
'தேவாதிதேவர் பலராலும் முந்து திருநாமம் ஓது செயலோய்
மூவாது எந் நாளும் உலகு ஏழொடு ஏழும் அரசாளும் மேன்மை முதல்வா!
மேவாத இன்பம் அவை மேவி, மேவ நெடு வீடு காட்டு அம் முடியாய்!
ஆவாய்! வருந்தி அழிவாய்கொல்!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 251
'எழுவாய், எவர்க்கும் முதல் ஆகி, ஈறொடு இடை ஆகி; எங்கும் உளையாய்,
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை; அவரால் வரங்கள் பெறுவாய்;
தொழுவாய், உணர்ச்சி தொடராத தன்மை உருவாய் மறைந்து, துயரால்
அழுவாய் ஒருத்தன் உளைபோலும்!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 252
உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி; ஒருவர்க்கும் உண்மை உரையாய்;
முன் ஒக்க நிற்றி; உலகு ஒக்க ஒத்தி; முடிவு ஒக்கின், என்றும் முடியாய்;
"என் ஒக்கும், இன்ன செயலோ இது?" என்னில், இருள் ஒக்கும் என்று விடியாய்;
அந் நொப்பமே கொல்? பிறிதேகொல்?-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 253
'வாணாள் அளித்தி, முடியாமல்; நீதி வழுவாமல் நிற்றி;-மறையோய்!
பேணாய், உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று; பெறுவான் அருத்தி பிழையாய்;
ஊண் ஆய், உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி; உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய்,
ஆண் ஆகி, மற்றும் அலி ஆதி!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 254
'"தான் அந்தம் இல்லை; பல" என்னும், ஒன்று; "தனி" என்னும், ஒன்று; "தவிரா
ஞானம் தொடர்ந்த சுடர்" என்னும், ஒன்று; "நயனம் தொடர்ந்த ஒளியால்,
வானம் தொடர்ந்த பதம்" என்னும், ஒன்று; மறைநாலும் அந்தம் அறியாது,
"ஆனந்தம்" என்னும்; "அயல்" என்னும்!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 255
'மீளாத வேதம், முடிவின்கண், நின்னை மெய்யாக மெய்யின் நினையும்;
"கேளாத" என்று, "பிற" என்று, சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான், 
மாளாத நீதி இகழாமை நின்கண் அபிமானம் இல்லை, வறியோர்;
ஆளாயும் வாழ்தி; அரசாள்தி!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 256
'சொல் ஒன்று உரைத்தி; பொருள் ஆதி; தூய மறையும் துறந்து, திரிவாய்;
வில் ஒன்று எடுத்தி; சரம் ஒன்று எடுத்தி; மிளிர் சங்கம் அங்கை உடையாய்;
"கொல்" என்று உரைத்தி; கொலையுண்டு நிற்றி; கொடியாய்! உன் மாயை அறியேன்;
அல் என்று, நிற்றி; பகல் ஆதி!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 257
'மறந்தாயும் ஒத்தி; மறவாயும் ஒத்தி; மயல், ஆரும் யானும் அறியேம்;
துறந்தாயும் ஒத்தி; துறவாயும் ஒத்தி; ஒரு தன்மை சொல்ல அரியாய்;
பிறந்தாயும் ஒத்தி, பிறவாயும் ஒத்தி, பிறவாமல் நல்கு பெரியோய்!
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 258
'வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி; அவை எய்தி, என்றும் விளையா,
நினைவர்க்கு, நெஞ்சின் உறு காமம் முற்றி, அறியாமை நிற்றி, மனமா;
முனைவர்க்கும் ஒத்தி, அமரர்க்கும் ஒத்தி, முழு மூடர் என்னும் முதலோர்
அனைவர்க்கும் ஒத்தி, அறியாமை-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 259
'எறிந்தாரும், ஏறுபடுவாரும், இன்ன பொருள் கண்டு இரங்குபவரும்,
செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது, உன்னது இடையே;
பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி; பிறியாது நிற்றி; பெரியோய்!
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 260
'பேர் ஆயிரங்கள் உடையாய்; பிறந்த பொருள்தோறும் நிற்றி; பிரியாய்;
தீராய்; பிரிந்து திரிவாய்; திறம்தொறு அவை தேறும் என்று தெளியாய்;
கூர் ஆழி அம் கை உடையாய்; திரண்டு ஓர் உரு ஆதி; கோடல் உரிபோல்,
ஆராயின், ஏதும் இலையாதி-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்?' 261
நாக பாசம் நீங்குதல்
என்று, இன்ன பன்னி அழிவான், எறிந்த எரி சோதி கீற, இருள் போய்,
பொன் துன்னி அன்ன வெயில் வீசுகின்ற பொருள் கண்டு, நின்ற புகழோன்
நின்று உன்னி உன்னி, 'இவன் யாவன்?' என்று நினைகின்ற எல்லை, நிமிரச்
சென்று, உன்னும் முன்னர், உடன் ஆயினான், இவ் உலகு ஏழும் மூடு சிறையான் 262
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை?-மழை என்று
ஆசங்கை கொண்ட கொடை மீளி அண்ணல் சரராமன் வெண்ணெய் அணுகும்,
தேசம் கலந்த மறைவாணர், செஞ் சொல் அறிவாளர், என்று இம் முதலோர்
பாசம் கலந்த பசிபோல், அகன்ற-பதகன் துரந்த உரகம். 263
பல்லாயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச, வந்து படர் கால்
செல்லா நிலத்தின் இருள் ஆதல் செல்ல, உடல் நின்ற வாளி சிதறுற்று,
எல்லா விதத்தும் உணர்வோடு நண்ணி அறனே இழைக்கும் உரவோன்
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன, மேனி வடுவும். 264
அனைவரும் உயிர் பெற்று எழுதல்
தருமத்தின் ஒன்றும் ஒழுகாத செய்கை தழுவிப் புணர்ந்த தகையால், 
உரும் ஒத்த வெங் கண், வினை தீய, வஞ்சர் உடல் உய்ந்தது இல்லை; உலகின்
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம், மலர்மேல் அவ் வள்ளல் கடை நாள்
நிருமித்த என்ன, உயிரோடு எழுந்து நிலை நின்ற, தெய்வ நெறியால். 265
இராமன் மகிழ்தல்
இளையான் எழுந்து தொழுவானை, அன்பின், இணை ஆர மார்பின் அணையா,
'விளையாத துன்பம் விளைவித்த தெய்வம் வெளி வந்தது' என்ன வியவா,
கிளையார்கள் அன்ன துணையோரை, ஆவி கெழுவா, எழுந்து தழுவா,
முளையாத திங்கள் உகிரான் முன் வந்து, முறை நின்ற வீரன் மொழிவான்: 266
இராமன் கருடனிடம் பேசுதல்
'ஐய! நீ யாரை? எங்கள் அருந் தவப் பயத்தின் வந்து, இங்கு
எய்தினை; உயிரும் வாழ்வும் ஈந்தனை; எம்மனோரால்
கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை; மீட்சி
செய் திறம் இலையால்' என்றான்-தேவர்க்கும் தெரிக்க ஒணாதான். 267
'பொருளினை உணர வேறு புறத்தும் ஒன்று உண்டோ, புந்தித்
தெருளினை உடையர் ஆயின்? செயல் அருங் கருணைச் செல்வ!
மருளினில் வரவே, வந்த வாழ்க்கை ஈது ஆகின், வாயால்
அருளினை என்னின், எய்த அரியன உளவோ?-ஐய! 268
'கண்டிலை, முன்பு; சொல்லக் கேட்டிலை; கடன் ஒன்று எம்பால்
கொண்டிலை; கொடுப்பது அல்லால், குறை இலை; இது நின் கொள்கை;
"உண்டு, இலை" என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே!
பண்டு இலை நண்பு; நாங்கள் செய்வது என்? பகர்தி!' என்றான். 269
கருடன் விடை பெறல்
பறவையின் குலங்கள் காக்கும் பாவகன், 'பழைய நின்னோடு
உறவு உள தன்மைஎல்லாம் உணர்த்துவென்; அரக்கனோடு அம்
மற வினை முடித்த பின்னர், வருவென்' என்று உணர்த்தி, 'மாயப்
பிறவியின் பகைஞ! நல்கு, விடை' எனப் பெயர்ந்து போனான். 270
இராமன் புகழ்ச்சியும் அனுமன் பேரொலியும்
ஆரியன் அவனை நோக்கி, 'ஆர் உயிர் உதவி, யாதும்
காரியம் இல்லான் போனான்; கருணையோர் கடமை ஈதால்;
பேர் இயலாளர், "செய்கை ஊதியம் பிடித்தும்" என்னார்;
மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ, வையம்?' என்றான். 271
'"இறந்தனன், இளவல்" என்னா, இறைவியும் இடுக்கண் எய்தும்;
மறந்தனர் உறங்குகின்ற வஞ்சரும் மறுகி, "மீளப் 
பிறந்தனர்" என்று கொண்டு, ஓர் பெரும் பயம் பிடிப்பர் அன்றே;
அறம் தரு சிந்தை ஐய! ஆர்த்தும்' என்று அனுமன் சொன்னான். 272
'அழகிது' என்று அண்ணல் கூற, ஆர்த்தனர்-கடல்கள் அஞ்சிக்
குழைவுற, அனந்தன் உச்சிக் குன்றின்நின்று அண்டகோளம்
எழ மிசை, உலகம் மேல் மேல் ஏங்கிட, இரிந்து சிந்தி
மழை விழ, மலைகள் கீற, மாதிரம் பிளக்க மாதோ. 273
இராவணன் ஆர்ப்பொலி கேட்டல்
பழிப்பு அறு மேனியாள் பால் சிந்தனை படர, கண்கள்
விழிப்பு இலன், மேனி சால வெதும்பினன், ஈசன் வேலும்
குழிப்ப அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளி
கிழிப்புற, உயிர்ப்பு வீங்கிக் கிடந்த வாள் அரக்கன் கேட்டான். 274
தாதை சொல் தலைமேல் கொண்ட தாபதன், தரும மூர்த்தி
ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி ஏங்கும்
சீதையும், அவளை உன்னிச் சிந்தனை தீர்ந்தும் தீராப் 
பேதையும், அன்றி, அவ் ஊர் யார் உளர், துயில் பெறாதார்? 275
சிங்கஏறு, அசனிஏறு கேட்டலும், 'சீற்றச் சேனை
பொங்கியது' என்ன, மன்னன் பொருக்கென எழுந்து, "போரில்
மங்கினர் பகைஞர்" என்ற வார்த்தையே வலியது!' என்னா,
அங்கையோடு அங்கை கொட்டி, அலங்கல் தோள் குலுங்க நக்கான். 276
'இடிக்கின்ற அசனி என்ன இரைக்கின்றது, இராமன் போர் வில்;
வெடிக்கின்றது அண்டம் என்ன, படுவது தம்பி வில் நாண்;
அடிக்கின்றது என்னை வந்து, செவிதொறும் அனுமன் ஆர்ப்பு;
பிடிக்கின்றது உலகம் எங்கும், பரிதி சேய் ஆர்ப்பின் பெற்றி. 277
'அங்கதன் அவனும் ஆர்த்தான்; அந்தரம் ஆர்க்கின்றானும்,
வெங் கத நீலன்; மற்றை வீரரும், வேறு வேறு,
பொங்கினர் ஆர்த்த ஓசை அண்டத்தும் புறத்தும் போன;
சங்கை ஒன்று இன்றித் தீர்ந்தார் பாசத்தை, தருமம் நல்க. 278
இராவணன் இந்திரசித்தன் மாளிகைக்கு எழுதல்
என்பது சொல்லி, பள்ளிச் சேக்கைநின்று இழிந்து, வேந்தன்,
ஒன்பது கோடி வாட் கை அரக்கர் வந்து உழையின் சுற்ற,
பொன் பொதி விளக்கம் கோடிப் பூங் குழை மகளிர் ஏந்த,
தன் பெருங் கோயில் நின்றும் மகன் தனிக் கோயில் சார்ந்தான். 279
தாங்கிய துகிலார், மெள்ளச் சரிந்து வீழ் குழலார், தாங்கி
வீங்கிய உயிர்ப்பார், விண்ணை விழுங்கிய முலையார், மெல்லத்
தூங்கிய விழியார், தள்ளித் துளங்கிய நடையார்,-வல்லி
வாங்கிய மருங்குல் மாதர்,-அனந்தரால் மயங்கி வந்தார். 280
பானமும், துயிலும், கண்ட கனவும், பண் கனிந்த பாடல்
கானமும், தள்ளத் தள்ள, களியொடும் கள்ளம் கற்ற,
மீனினும் பெரிய, வாட் கண் விழிப்பது முகிழ்ப்பது ஆக,
வானவர் மகளிர் போனார், மழலை அம் சதங்கை மாழ்க. 281
மழையினை நீலம் ஊட்டி, வாசமும் புகையும் ஆட்டி,
உழை உழை சுருட்டி, மென் பூக் குவித்து, இடைக்கு இடையூறு என்னா,
பிழையுடை விதியார் செய்த பெருங் குழல், கருங் கண், செவ் வாய்,
இழை அணி, மகளிர் சூழ்ந்தார், அனந்தரால், இடங்கள்தோறும். 282
தேனிடை, கரும்பில், பாலில், அமுதினில், கிளவி தேடி,
மானிடை, கயலில், வாளில், மலரிடை, நயனம் வாங்கி,
மேல் நடை அனைய மற்றும் நல் வழி நல்க வேண்டி,
வானுடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார். 283
தொடங்கிய ஆர்ப்பின் ஓசை செவிப்புலம் தொடர்தலோடும்,
இடங்கரின் வயப் போத்து அன்ன எறுழ் வலி அரக்கர் யாரும்,
மடங்கலின் முழக்கம் கேட்ட வான் கரி ஒத்தார்; மாதர்
அடங்கலும், அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார். 284
இந்திரசித்தை இராவணன் காணல்
அரக்கனும், மைந்தன் வைகும் ஆடகத்து அமைந்து மாடம்
பொருக்கெனச் சென்று புக்கான், புண்ணினில் குமிழி பொங்கத்
தரிக்கிலன், மடங்கல் ஏற்றால் தொலைப்புண்டு சாய்ந்து போன, 
கருக் கிளர் மேகம் அன்ன, களிறு அனையானைக் கண்டான். 285
எழுந்து அடி வணங்கல் ஆற்றான், இரு கையும் அரிதின் ஏற்றித்
தொழும் தொழிலானை நோக்கித் துணுக்குற்ற மனத்தன், 'தோன்றல்!
அழுங்கினை; வந்தது என்னை அடுத்தது?' என்று எடுத்துக் கேட்டான்;
புழுங்கிய புண்ணினானும், இனையன புகலலுற்றான்: 286
இந்திரசித்தின் மறுமொழி
'உருவின உரத்தை முற்றும் உலப்பு இல உதிரம் வற்றப்
பருகின அளப்பிலாத பகழிகள்; கவசம் பற்று அற்று
அருகின; பின்னை, சால அலசினென்; ஐய! கண்கள்
செருகின அன்றே, யானும் மாயையின் தீர்ந்திலேனேல்? 287
இந்திரன், விடையின் பாகன், எறுழ் வலிக் கலுழன் ஏறும்
சுந்தரன், அருக்கன் என்று இத் தொடக்கத்தார் தொடர்ந்த போரில்,
நொந்திலென்; இனையது ஒன்றும் நுவன்றிலென்; மனிதன் நோன்மை,
மந்தரம் அனைய தோளாய்! வரம்பு உடைத்து அன்று மன்னோ. 288
'இளையவன் தன்மை ஈதால்; இராமனது ஆற்றல் எண்ணின்,
தளை அவிழ் அலங்கல் மார்ப! நம் வயின் தங்கிற்று அன்றால்;
விளைவு கண்டு உணர்தல் அல்லால், வென்றி மேல் விளையும் என்ன
உளை; அது அன்று' என்னச் சொன்னான், உற்றுளது உணர்ந்திலாதான். 289
'வென்றது, பாசத்தாலும், மாயையின் விளைவினாலும்;
கொன்றது, குரக்கு வீரர்தம்மொடு அக் கொற்றத் தோனை;
நின்றனன், இராமன் இன்னும்; நிகழ்ந்தவா நிகழ்க, மேன்மேல்'
என்றனன்; என்னக் கேட்ட இராவணன் இதனைச் சொன்னான்: 290
இராவணன் உரை
'வார் கழல் கால! மற்று அவ் இலக்குவன் வயிர வில்லின்
பேர் ஒலி அரவம் விண்ணைப் பிளந்திட, குரங்கு பேர்ந்த,
கார் ஒலி மடங்க, வேலை கம்பிக்க, களத்தின் ஆர்த்த
போர் ஒலி ஒன்றும், ஐய! அறிந்திலை போலும்!' என்றான். 291
இந்திரசித்தின் வினா
'ஐய! வெம் பாசம் தன்னால் ஆர்ப்புண்டார்; அசனி என்னப்
பெய்யும் வெஞ் சரத்தால் மேனி பிளப்புண்டார்; உணர்வு பேர்ந்தார்;
"உய்யுநர்" என்று உரைத்தது உண்மையோ? ஒழிக்க ஒன்றோ?
"செய்யும்" என்று எண்ண, தெய்வம் சிறிது அன்றோ தெரியின் அம்மா.' 292
களத்தில் நிகழ்ந்ததைத் தூதுவர் கூறல்
ஈது உரை நிகழும் வேலை, எய்தியது அறியப் போன
தூதுவர், விரைவின் வந்தார், புகுந்து, அடி தொழுதலோடும்,
'யாது அவண் நிகழ்ந்தது?' என்ன இராவணன் இயம்ப, ஈறு இன்று,
ஓதிய கல்வியாளர் புகுந்துளது உரைக்கலுற்றார்: 293
'பாசத்தால் பிணிப்புண்டாரை, பகழியால் களப்பட்டாரை,
தேசத்தார் அரசன் மைந்தன் இடை இருள் சேர்ந்து நின்றே,
ஏசத்தான் இரங்கி, ஏங்கி, "உலகு எலாம் எரிப்பென்" என்றான்;-
வாசத் தார் மாலை மார்ப!-வான் உறை கலுழன் வந்தான்; 294
'அன்னவன் வரவு காணா, அயில் எயிற்று அரவம் எல்லாம்
சின்னபின்னங்கள் ஆன; புண்ணொடும் மயர்வு தீர்ந்தார்;
முன்னையின் வலியர் ஆகி, மொய்க் களம் நெருங்கி, மொய்த்தார்;
இன்னது நிகழ்ந்தது' என்றார், அரக்கன் ஈது எடுத்துச் சொன்னான்: 295
இராவணன் கூற்று
"ஏத்த அருந் தடந் தோள் ஆற்றல் என் மகன் எய்த பாசம்
காற்றிடைக் கழித்துத் தீர்த்தான், கலுழனாம்; காண்மின், காண்மின்!
வார்த்தை ஈதுஆயின், நன்றால், இராவணன் வாழ்ந்த வாழ்க்கை!
மூத்தது, கொள்கை போலாம்? என்னுடை முயற்சி எல்லாம்? 296
'உண்டு உலகு ஏழும் ஏழும் உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம்
கொண்டவன், என்னோடு ஏற்ற செருவினில், மறுக்கம் கொண்டான்;
மண்டலம் திரிந்த போதும், மறி கடல் மறைந்த போதும்,
கண்டிலன்போலும், சொற்ற கலுழன், அன்று, என்னைக் கண்ணால்? 297
'கரங்களில் நேமி சங்கம் தாங்கிய கரியோன் காக்கும்
புரங்களும் அழியப் போன பொழுதில், என் சிலையின் பொங்கி,
உரங்களில், முதுகில், தோளில் உறையுறு சிறையில், உற்ற
சரங்களும் நிற்கவேகொல், வந்தது, அவ் அருணன் தம்பி? 298
இராவணன் இந்திரசித்தைப் போரிடக் கூறல்
'ஈண்டு அது கிடக்க; மேன்மேல் இயைந்தவாறு இயைக! எஞ்சி
மீண்டவர்தம்மைக் கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே;
ஆண்தகை! நீயே இன்னும் ஆற்றுதி, அருமைப் போர்கள்;
காண்டலும், நாணும்' என்றான்; மைந்தனும் கருத்தைச் சொன்னான்: 299
இந்திரசித்தின் மறுமொழி
'இன்று ஒரு பொழுது தாழ்த்து, என் இகல் பெருஞ் சிரமம் நீங்கி,
சென்று, ஒரு கணத்தில், நாளை, நான்முகன் படைத்த தெய்வ
வென்றி வெம் படையினால், உன் மனத் துயர் மீட்பென்' என்றான்;
'நன்று' என, அரக்கன் போய், தன் நளிமலர்க் கோயில் புக்கான். 300
மிகைப் பாடல்கள்
எரி முகப் பகழி மாரி தொடுத்து, இகல் அரக்கன் எய்தான்;
எரி முகப் பகழி மாரி தொடுத்து, அவை இறுத்தான், எந்தை,
உரும் இனப் பகழி மாரி உருத்து விட்டு, அரக்கன் ஆர்த்தான்;
உரும் இனப் பகழி மாரி உருத்து விட்டு, இளவல் கொன்றான். 106-1
நெருக்கி மற்று அனந்த கோடி நெடுங் கணை அரக்கன் கோத்தான்;
நெருக்கி மற்று அனந்த கோடி நெடுங் கணை நிமலன் மாய்த்தான்;
முருக்கின் உற்று அனந்த கோடி முகைக் கணை அரக்கன் மொய்த்தான்;
முருக்கின் உற்று அனந்த கோடி முகைக் கணை முடித்தான், மொய்ம்பன் 106-2
சிந்து வாளி செறிதலும், சேவகன்
ஐந்து நூறு கடுங் கணையால்; அவன்
உந்து தேரை ஒறுத்தனன்; வெய்யவன்
வந்து தேர் ஒன்றின் வல்லையில் ஏறினான். 128-1
அழித்தனன் தடந் தேர் என்று அழன்று, தீ
விழித்தனன்; கடு நெஞ்சம் வெகுண்டு எழத்
தெழித்தனன்; சிலையால் திறல் வாளிகள்
கொழித்தனள்; இமையோர் மெய் குலுங்கினார். 148-1
அங்கதன் தடந் தோளினும் மார்பினும்
புங்க வாளி புகப் புக, தேர் எதிர்,
சிங்க ஏறு அனையான் திரள் தோள்வரை
மங்க, வேறொர் மராமரம் வீசினான். 148-2
மல் திண் தோளின் அடித்த மராமரம்
இற்று நூறு திறத்தது, இமைப்பிலோர்
பொன் திண் தேர்மிசைத் தாவினன் பொங்கெலி
முற்று நாளில் முயற்சி முரஞ்சவே. 148-3
கண்ட வாலிதன் காதலனும், கனல்
விண்டதாம் என வெஞ் சினம் உற்றவன்
மண்டு தேர்மிசையில், குதியா வலி
கொண்டு, வான் இடி ஏறு எனக் குத்தினான். 148-4
குத்தி, மற்று அவன் கொய் உளை மாப் பரி
பத்தி பத்தியின் வீழ, பரிந்து எதிர்
தத்தி, வல் வில் தடக் கையினால், சரம்
வித்துராமுனம் வீழ்த்தினன், தேர் அரோ. 148-5
மாறு ஓர் தேரின் மடங்கல் என, கனன்று
ஏறினான், சரம் எண்-இரண்டு ஏவினான்;
ஊறு சோரி சொரிய, உயக்கம் உற்று,
ஆறினான் கடிது, அங்கதன் ஆண்மையான். 148-6
கோல் கொள் ஆளும் பரியும் குழம்பதாய்,
காலின் நூறி, கரங்களின் மற்று அவன்
தாலு மூலத்து அடிப்ப, தனு வலான்,
மால் உழந்தவர் போல மயங்கினான். 148-7
பல் ஆயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்த படர் கால்
செல்லா நிலத்தின் அருளோடு செல்ல, உடல் நின்ற வாளி சிதறுற்று,
எல்லாம் அவித்தும் உணர்வோடும் எண்ணி, அறனே விளைக்கும் உரவோன்,
வல்லான் ஒருத்தன், இடையே படுத்த வடுஆன, மேனி வடுவும். 264-1
பறவை நாயகன் தான் ஏக, படர் உறு துயரம் நீங்கி,
கறவையும் கன்றும் போலக் களிக்கின்ற மனத்தர் ஆகி,
இறைவனும் இளைய கோவும் யாவரும் எழுந்து நின்றார்;
மறை ஒரு நான்கும், மண்ணும், வானமும், மகிழ்ந்த மாதோ. 270-1
இரு நிலம் கிழிய, பாயும் எறி கடல் இரைப்புத் தீர,
பரவும் எண் திசையைத் தாங்கும் பகட்டினம் இரியல் போக,
கரு வயிறு உடைந்து சிந்தி அரக்கியர் கலங்கி வீழ,
அரு வரை அண்ட கோளம் பிளக்க, நின்று, அனுமன் ஆர்த்தவன். 273-1


இந்திரன் மகன் மைந்தனை, 'இன் உயிர்தந்து போக!' எனச் சாற்றலுற்றான் தனை,வந்து, மற்றைய வானர வீரரும்,முந்து போர்க்கு முறை முறை முற்றினார். 151
மரமும், குன்றும், மடிந்த அரக்கர்தம்சிரமும், தேரும், புரவியும், திண் கரிக்கரமும், ஆளியும் வாரிக் கடியவன்சரமும் தாழ்தர, வீசினர், தாங்கினார். 152
அனைய காலையில், ஆயிரம் ஆயிரம்வினைய வெங் கண் அரக்கரை, விண்ணவர்நினையும் மாத்திரத்து, ஆர் உயிர் நீக்கினான் -மனையும், வாழ்வும், உறக்கமும் மாற்றினான். 153
ஆனையும், தடந் தேரும், தன் ஆர் உயிர்த்தானையும், பரியும், படும் தன்மையைமான வெங் கண் அரக்கன் மனக் கொளா, போன வென்றியன், தீ எனப் பொங்கினான். 154
சீர்த் தடம் பெருஞ் சில்லி அம் தேரினைக்காத்து நின்ற இருவரைக் கண்டனன்-ஆர்த்த தம் பெருஞ் சேனை கொண்டு, அண்டமேல்ஈர்த்த சோரிப் பரவை நின்று ஈர்த்தலால். 155
நேர் செலாது, இடை நின்றனர்-நீள் நெடுங் கார் செலா; இருள் கீறிய கண் அகல் தேர் செலாது; விசும்பிடைச் செல்வது ஓர்பேர் செலாது;-பினத்தின் பிறக்கமே. 156
அன்று தன் அயல் நின்ற அரக்கரைஒன்று வாள் முகம் நோக்கி, 'ஒரு விலான்நன்று நம் படை நாற்பது வெள்ளமும்கொன்று நின்றபடி!' எனக் கூறினான். 157
ஆய வீரரும், 'ஐய! அமர்த்தலை, நீயும், நாற்பது வெள்ள நெடும் படைமாய, வெங் கணை மாரி வழங்கினை;ஓய்வு இல் வெஞ் செரு ஒக்கும்' என்று ஓதினார். 158
வந்து நேர்ந்தனர்; மாருதிமேல் வரும்அந்திவண்ணனும், ஆயிரம் ஆயிரம்சிந்தினான், கணை; தேவரை வென்றவன்நுந்த நுந்த, முறை முறை நூறினான். 159
ஆறும், ஏழும், அறுபதும் ஐம்பதும்,நூறும், ஆயிரமும், கணை நூக்கி, வந்துஊறினாரை உணர்வு தொலைத்து, உயிர்தேறினாரை நெடு நிலம் சேர்த்தினான். 160
கதிரின் மைந்தன் முதலினர், காவலார்,உதிர வெள்ளத்தின் ஒல்கி ஒதுங்கலும்,எதிரில் நின்ற இராவணி ஈடுற,வெதிரின் காட்டு எரிபோல், சரம் வீசினான். 161
உளைவு தோன்ற, இராவணி ஒல்கினான்;கிளையின் நின்ற இருவர் கிளைத்தலும்,அளவு இல் சேனை அவிதர, ஆரியற்குஇளைய வீரன் சுடு சரம் ஏவினான். 162
தெரி கணை மாரி பெய்ய, தேர்களும், சிலைக் கைம்மாவும்,பரிகளும், தாமும், அன்று பட்டன கிடக்கக் கண்டார்,இருவரும் நின்றார்; மற்றை இராக்கதர் என்னும் பேர்கள்ஒருவரும் நின்றார் இல்லை; உள்ளவர் ஓடிப் போனார். 163
ஓடினர் அரக்கர், தண்ணீர் உண் தசை உலர்ந்த நாவர்,தேடின, தெரிந்து கையால் முகிலினை முகந்து தேக்கி,பாடு உறு புண்கள் தோறும் பசும் புனல் பாயப் பாய,வீடினர் சிலவர்; சில்லோர், பெற்றிலர்; விளிந்து வீழ்ந்தார். 164
வெங் கணை திறந்த மெய்யர், விளிந்திலர், விரைந்து சென்றார்,செங் குழல் கற்றை சோரத் தெரிவையர் ஆற்ற, தெய்வப்பொங்கு பூம் பள்ளி புக்கார், அவர் உடல் பொருந்தப் புல்லி,அங்கு அவர் ஆவியோடும் தம் உயிர் போக்கி அற்றார். 165
பொறிக் கொடும் பகழி மார்பர், போயினர், இடங்கள் புக்கார்,மறிக் கொளும் சிறுவர் தம்மை, மற்று உள சுற்றம் தம்மைக்'குறிக்கொளும்' என்று கூறி, அவர் முகம் குழைய நோக்கி,நெறிக் கொளும் கூற்றை நோக்கி, ஆர் உயிர் நெடிது நீத்தார். 166
'தாமரைக் கண்ணன் தம்பி தன்மை ஈதுஆகின், மெய்யேவேம், அரைக் கணத்தின் இவ் ஊர்; இராவணி விளிதல் முன்னம்,மா மரக் கானில், குன்றில், மறைந்திரும்; மறைய வல்லேபோம்' எனத் தமரைச் சொல்லி, சிலர் உடல் துறந்து போனார். 167
வரை உண்ட மதுகை மேனி மருமத்து, வள்ளல் வாளிஇரை உண்டு துயில், சென்றார், 'வாங்கிடின், இறப்பம்' என்பார்,பிரை உண்ட பாலின் உள்ளம் பிறிதுற, பிறர் முன் சொல்லாஉரையுண்ட நல்லோர் என்ன, உயிர்த்து உயிர்த்து, உழைப்பதானார். 168
தேரிடைச் செல்லார், மானப் புரவியில் செல்லார், செங் கண்காரிடைச் செல்லார், காலின் கால் எனச் செல்லார், காவல்ஊரிடைச் செல்லார், நாணால் உயிரின்மேல் உடைய அன்பால்போரிடைச் செல்லார், நின்று நடுங்கினர், புறத்தும் போகார். 169
இந்திரசித்தின் கவசத்தை இலக்குவன் பிளத்தல்
நொய்தினின் சென்று கூடி, இராவணி உளைவை நோக்கி,'வெய்தினின் கொன்று வீழ்ப்பல்' என்பது ஓர் வெகுளி வீங்கி,-பெய்துழிப் பெய்யும் மாரி அனையவன்-பிணங்கு கூற்றின்கையினின் பெரிய அம்பால், கவசத்தைக் கழித்து வீழ்த்தான். 170
கவசத்தைக் கழித்து வீழ்ப்ப, காப்புறு கடன் இன்று ஆகி,அவசத்தை அடைந்த வீரன் அறிவுறும் துணையின் வீரத்'துவசத்தின் புரவித் திண் தேர் கடிதுறத் தூண்டி, யாம் இத்,திவசத்தின் முடித்தும், வெம் போர்' எனச் சினம் திருகிச் சென்றார். 171
மாருதிமேலும், ஐயன் மார்பினும் தோளின்மேலும்,தேரினும் இருவர் சென்றார், செந் தழல் பகழி சிந்தி,ஆரியன், வாகை வில்லும், அச்சுடைத் தேரும், அத் தேர்ஊர்குவார் உயிரும், கொண்டான்; புரவியின் உயிரும் உண்டான். 172
இருவரும் இழந்த வில்லார், எழு முனை வயிரத் தண்டார்,உரும் எனக் கடிதின் ஓடி, அனுமனை இமைப்பின் உற்றார்,பொரு கனல் பொறிகள் சிந்தப் புடைத்தனர்; புடைத்தலோடும்,பரு வலிக் கரத்தினால் தண்டு இரண்டையும் பறித்துக் கொண்டான். 173
புகை நிறக்கண்ணனும் மாபக்கனும் ஓடி ஒளிதல்
தண்டு அவன் கையது ஆன தன்மையைத் தறுகணாளர்,கண்டனர்; கண்டு, செய்யலாவது ஒன்றானும் காணார்;'கொண்டனன் எறிந்து நம்மைக் கொல்லும்' என்று, அச்சம் கொண்டார்,உண்ட செஞ்சோறும் நோக்கார், உயிருக்கே உதவி செய்தார். 174
இந்திரசித்து வானரப்படையை அழித்தல்
காற்று வந்து அசைத்தலாலும், காலம் அல்லாமையாலும்கூற்று வந்து உயிரைக் கொள்ளும் குறி இன்மை குறித்தலாலும்,தேற்றம் வந்து எய்தி, நின்ற மயக்கமும், நோவும் தீர்ந்தார்,ஏற்றமும் வலியும் பெற்றார்; எழுந்தனர்-வீரர் எல்லாம். 175
அங்கதன், குமுதன், நீலன், சாம்பவன், அருக்கன் மைந்தன்பங்கம் இல் மயிந்தன், தம்பி, சதவலி, பனசன் முன்னாச்சிங்க ஏறு அனைய வீரர் யாவரும், சிகரம் ஏந்தி,மங்கலம் வானோர் சொல்ல, மழை என ஆர்த்து, வந்தார். 176
அத்தனையோரும், குன்றம் அளப்பு இல, அசனி ஏற்றோடுஒத்தன, நெருப்பு வீசும் உரும் என ஒருங்க உய்த்தார்'இத்தனை போலும் செய்யும் இகல்' எனா, முறுவல் எய்தி,சித்திர வில் வலோனும் சின்ன பின்னங்கள் செய்தான். 177
கதிரவன் மறைதல்
மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி, வந்துநெருங்கினார்; நெருங்கக் கண்டும்; ஒரு தனி நெஞ்சும், வில்லும்,சரங்களும், துணையாய் நின்ற நிசாசரன் தனிமை நோக்கிஇரங்கினன் என்ன, மேல்பால் குன்று புக்கு, இரவி நின்றான். 178
'வாழிய வேதம் நான்கும், மனு முதல் வந்த நூலும்,வேள்வியும், மெய்யும், தெய்வ வேதியர் விழைவும் அஃதே,ஆழி அம் கமலக் கையான் ஆதி அம் பரமன்' என்னாஏழையர் உள்ளம் என்ன இருண்டன-திசைகள் எல்லாம். 179
இலக்குவன் இந்திரசித்தைக் கொல்ல முயல்தல்
'நாகமே அனைய நம்ப! நாழிகை ஒன்று நான்குபாகமே காலம் ஆகப் படுத்தியேல், பட்டான்; அன்றேல்,வேக வாள் அரக்கர் காலம் விளைந்தது, விசும்பின் வஞ்சன்ஏகுமேல், வெல்வன்' என்பது, இராவணற்கு இளவல் சொன்னான். 180
அத்தனை வீரர் மேலும், ஆண் தகை அனுமன் மேலும்,எத்தனை கோடி வாளி மழை என எய்யாநின்றவித்தக வில்லினானைக் கொல்வது விரும்பி, வீரன்சித்திரத் தேரைத் தெய்வப் பகழியால் சிதைத்து வீழ்ந்தான். 181
அழித்த தேர் அழுந்தாமுன்னம், 'அம்பொடு கிடந்து வெம்பி,உழைத்து உயிர் விடுவது அல்லால், உறு செரு வென்றேம் என்றுபிழைத்து இவர் போவர் அல்லர்; பாசத்தால் பிணிப்பன்' என்னா,விழித்து இமையாத முன்னம், வில்லொடும் விசும்பில் சென்றான். 182
'பொன் குலாம் மேனி மைந்தன் தன்னொடும் புகழ்தற்கு ஒத்த,வன் கலாம் இயற்றி நின்றான், மற்றொரு மனத்தன் ஆகி,மின் குலாம் கழல் கால் வீரன் விண்ணிடை விரைந்த தன்மைஎன்கொலாம்!' என்ன அஞ்சி, வானவர் இரியல்போனார். 183
தாங்கு வில் கரத்தன், தூணி தழுவிய புறத்தன், தன்னுள்ஓங்கி உற்று எரியாநின்ற வெகுளியன், உயிர்ப்பன், தீயன்,தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம் சீரியன், மாயச் செல்வன்,வீங்கு இருட் பிழம்பின், உம்பர் மேகத்தின் மீதின் ஆனான். 184
தணிவு அறப் பண்டு செய்த தவத்தினும், தருமத்தாலும்பிணி அறுப்பவரில் பெற்ற வரத்தினும், பிறப்பினானும்,-மணி நிறத்து அரக்கன்-செய்த மாய மந்திரத்தினானும்,அணு எனச் சிறியது, ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான். 185
வாங்கினான்-மலரின் மேலான், வானக மணி நீர்க் கங்கைதாங்கினான், உலகம் தாங்கும் சக்கரத்தவன் என்றாலும்வீங்கு வான் தோளை வீக்கி வீழ்த்து அலால் மீள்கிலாதஓங்கு வாள் அரவின் நாமத்து ஒரு தனிப் படையை உன்னி. 186
ஆயின காலத்து, ஆர்த்தார், 'அமர்த்தொழில் அஞ்சி, அப்பால்போயினன்' என்பது உன்னி, வானர வீரர் போல்வார்;நாயகற்கு இளைய கோவும் அன்னதே நினைந்து, நக்கான்;மாயையைத் தெரிய உன்னார், போர்த் தொழில் மாற்றி நின்றார். 187
அது கணத்து, அனுமன் தோள் நின்று ஐயனும் இழிந்து, வெய்யகது வலிச் சிலையை வென்றி அங்கதன் கையது ஆக்கி,முதுகு உறச் சென்று நின்ற கணை எலாம் முறையின் வாங்கி,விதுவிதுப்பு ஆற்றலுற்றான், விளைகின்றது உணர்ந்திலாதான். 188
இலக்குவன் முதலியோரை நாகபாசம் பிணித்தல்
விட்டனன் அரக்கன் வெய்ய படையினை; விடுத்தலோடும்,எட்டினோடு இரண்டு திக்கும் இருள் திரிந்து இரியஓடி,கட்டினது என்ப மன்னோ, காகுத்தற்கு இளைய காளைவட்ட வான் வயிரத் திண் தோள் மலைகளை உளைய வாங்கி. 189
இறுகுறப் பிணித்தலோடும், யாவையும் எதிர்ந்த போதும்மறுகுறக் கடவான் அல்லன்; மாயம் என்று உணர்வான் அல்லன்;உறு குறைத் துன்பம் இல்லான்; ஒடுங்கினன்; செய்வது ஓரான்,அறு குறைக் களத்தை நோக்கி, அந்தரம் அதனை நோக்கும். 190
மற்றையோர் தமையும் எல்லாம் வாள் எயிற்று அரவம் வந்துசுற்றின; வயிரத் தூணின், மலையினின், பெரிய தோள்கள்,'இற்றன, இற்ற' என்ன, இறுக்கின; இளகா உள்ளம்தெற்றென உடைய வீரர் இருந்தனர், செய்வது ஓரார். 191
காலுடைச் சிறுவன், 'மாயக் கள்வனைக் கணத்தின் காலைமேல் விசைத்து எழுந்து நாடிப் பிடிப்பென்' என்று உறுக்கும்வேலை,ஏல்புடைப் பாசம், மேல் நாள், இராவணன் புயத்தை வாலிவால் பிணித்தென்ன, சுற்றிப் பிணித்தது, வயிரத் தோளை. 192
நாக பாசத்தால் கட்டுண்டவர் நிலை
மலை என எழுவர்; வீழ்வர்; மண்ணிடைப் புரள்வர்; வானில்தலைகளை எடுத்து நோக்கி, தழல் எழ விழிப்பர்; தாவிஅலைகிளர் வாலால் பாரின் அடிப்பர்; வாய் மடிப்பர்; ஆண்மைச்சிலையவற்கு இளைய கோவை நோக்குவர்; உள்ளம் தீவர்; 193
வீடணன் முகத்தை நோக்கி, 'வினை உண்டே, இதனுக்கு?' என்பர்;மூடின கங்குல் மாலை இருளினை முனிவர்; 'மொய்ம்பின்ஈடுறத் தக்க போலாம் நம் எதிர்' என்னா, ஏந்தல்ஆடகத் தோளை நோக்கி, நகை செய்வர்; விழுவர்; அஞ்சார். 194
'ஆர், இது தீர்க்க வல்லார்? அஞ்சனை பயந்த வள்ளல்,மாருதி, பிழைத்தான் கொல்லோ?' என்றனர், மறுகி, நோக்கி,வீரனைக் கண்டு, 'பட்டது இதுகொலாம்!' என்று விம்மி,'வார் கழல் தம்பி தன்மை காணுமோ, வள்ளல்?' என்பார். 195
என், சென்ற தன்மை சொல்லி? எறுழ் வலி அரக்கன் எய்தான்மின் சென்றது அன்ன; வானத்து உரும் இனம் வீழ்வ என்ன,பொன் சென்ற வடிம்பின் வாளி, புகையொடு பொறியும் சிந்தி,முன் சென்ற முதுகில் பாய, பின் சென்ற மார்பம் உற்ற. 196
மலைத்தலைக் கால மாரி, மறித்து எறி வாடை மோத,தலைத் தலை மயங்கி வீழும் தன்மையின் தலைகள் சிந்தும்;கொலைத்தலை வாளி பாயக் குன்று அன குவவுத் தோளார்நிலைத்திலர் உலைந்து சாய்ந்தார்; நிமிர்ந்தது, குருதி நீத்தம். 197
ஆயிர கோடி மேலும் அம்பு தன் ஆகத்தூடுபோயின போதும், ஒன்றும் துடித்திலன், பொடித்து, மானத்தீ எரி சிதறும் செங் கண் அஞ்சனை சிங்கம், தெய்வநாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட, நடுங்குகின்றான். 198
வேறு உள வீரர் எல்லாம் வீழ்ந்தனர், உருமின் வெய்யநூறும் ஆயிரமும் வாளி உடலிடை நுழைய, சோரிஆறு போல் ஒழுக, அண்ணல் அங்கதன் அனந்த வாளிஏறிய மெய்யனேனும், இருந்தனன், இடைந்திலாதான். 199
கதிரவன் காதல் மைந்தன், கழல் இளம் பசுங் காய் அன்ன,எதிர் எதிர் பகழி தைத்த, யாக்கையன்; எரியும் கண்ணன்;வெதிர் நெடுங் கானம் என்ன வேகின்ற மனத்தன்; மெய்யன்;உதிர வெங் கடலுள், தாதை உதிக்கின்றான் தனையும் ஒத்தான். 200
வெப்பு ஆரும் பாசம் வீக்கி, வெங் கணை துளைக்கும் மெய்யன்-ஒப்பு ஆரும் இல்லான் தம்பி-உணர்ந்திருந்து இன்னல் உய்ப்பான்,'இப் பாசம் மாய்க்கும் மாயம், யான் வல்லென்' என்பது ஓர்ந்தும்,அப் பாசம் வீச ஆற்றாது, அழிந்த நல் அறிவு போன்றான். 201
அம்பு எலாம் கதிர்கள் ஆக, அழிந்து அழிந்து இழியும் ஆகச்செம் புனல் வெயிலின் தோன்ற திசை இருள் இரிய, சீறிப்பம்பு பேர் ஒளிய நாகம் பற்றிய படிவத்தோடும்,உம்பர் நாடு இழிந்து வீழ்ந்த ஒளியவனேயும் ஒத்தான். 202
இந்திரசித்து இராவணன் அரண்மனை அடைதல்
மயங்கினான் வள்ளல் தம்பி; மற்றையோர் முற்றும் மண்ணைமுயங்கினார்; மேனி எல்லாம் மூடினான், அரக்கன் மூரித்தயங்கு பேர் ஆற்றலானும், தன் உடல் தைத்த வாளிக்குஉயங்கினான், உளைந்தான், வாயால் உதிர நீர் உமிழாநின்றான். 203
'சொற்றது முடித்தேன்; நாளை, என் உடற் சோர்வை நீக்கி,மற்றது முடிப்பென்' என்னா, எண்ணினான், 'மனிசன் வாழ்க்கைஇற்றது; குரங்கின் தானை இறந்தது' என்று, இரண்டு பாலும்கொற்ற மங்கலங்கள் ஆர்ப்ப, இராவணன் கோயில் புக்கான். 204
ஈர்க்கு அடைப் பகழி மாரி இலக்குவன் என்ன நின்றநீர்க் கடை மேகம் தன்னை நீங்கியும், செருவின் நீங்கான்,வார்க் கடை மதுகைக் கொங்கை, மணிக் குறு முறுவல், மாதர்போர்க் கடைக் கருங் கண் வாளி புயத்தொடு பொழியப் புக்கான். 205
ஐ-இரு கோடி செம் பொன் மணி விளக்கு அம் கை ஏந்தி,மை அறு வான நாட்டு மாதரும், மற்றை நாட்டுப்பை அரவு அல்குலாரும், பலாண்டு இசை பரவ, தங்கள்தையலர் அறுகு தூவி வாழ்த்தினர் தழுவ, சார்ந்தான். 206
தந்தையை எய்தி, அன்று ஆங்கு உற்றுள தன்மை எல்லாம்சிந்தையின் உணரக் கூறி, 'தீருதி, இடர் நீ; எந்தாய்!நொந்தனென் ஆக்கை; நொய்தின் ஆற்றி, மேல் நுவல்வென்' என்னா,புந்தியில் அனுக்கம் தீர்வான், தன்னுடைக் கோயில் புக்கான். 207
இலக்குவன் முதலானோர் நிலை கண்டு வீடணன் புலம்பல்
இத் தலை, இன்னல் உற்ற வீடணன் இழைப்பது ஓரான்,மத்து உறு தயிரின் உள்ளம் மறுகினன், மயங்குகின்றான்,'அத் தலைக் கொடியன் என்னை அட்டிலன்; அளியத்தேன் நான்;செத்திலென்; வலியென் நின்றேன்' என்று போய், வையம் சேர்ந்தான். 208
பாசத்தால் ஐயன் தம்பி பிணிப்புண்ட படியைக் கண்டு'நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார்; யான் ஒரு தமியென் நின்றேன்;தேசத்தார், என்னை என் என் சிந்திப்பார்!' என்று, தீயும்வாசத் தார் மாலை மார்பன் வாய் திறந்து அரற்றலுற்றான். 209
'"கொல்வித்தான், உடனே நின்று அங்கு" என்பரோ? "கொண்டு போனான்வெல்வித்தான், மகனை" என்று பகர்வரோ? "விளைவிற்கு எல்லாம்நல் வித்தாய் நடந்தான், முன்னே" என்பரோ? நயந்தோர் தம் தம்கல்வித்து ஆம் வார்த்தை' என்று கரைவித்தான் உயிரைக் கண்போல். 210
'போர் அவன் புரிந்த போதே, பொரு அரு வயிரத் தண்டால்,தேரொடும் புரண்டு வீழச் சிந்தி, என் சிந்தை செப்பும்வீரம் முன் தெரிந்தேன் அல்லேன்; விளிந்திலேன்; மெலிந்தேன்; இஞ்ஞான்றுஆர் உறவு ஆகத் தக்கேன்? அளியத்தேன், அழுந்துகின்றேன்! 211
'ஒத்து அலைத்து, ஒக்க வீடி, உய்வினும் உய்வித்து, உள்ளம்கைத்தலை நெல்லி போலக் காட்டிலேன்; கழிந்தும் இல்லேன்;அத் தலைக்கு அல்லேன்; யான், ஈண்டு, "அபயம்!" என்று அடைந்து நின்றஇத் தலைக்கு அல்லேன்; அல்லேன்! இரு தலைச் சூலம் போல்வேன்!' 212
நிகழ்ந்தவை அறிந்து இராமன் வருந்துதல்
அனையன பலவும் பன்னி, ஆகுலித்து அரற்றுவானை'வினை உள பலவும் செய்யத்தக்கன;-வீர!-நீயும்நினைவு இலார் போல நின்று நெகிழ்தியோ? நீத்தி!' என்னா,இனையன சொல்லித் தேற்றி, அனலன் மற்று இனைய செய்தான்; 213
'நீ இவண் இருத்தி; யான் போய் நெடியவற்கு உரைபென்' என்னா,போயினன், அனலன்; போய், அப் புண்ணியவன் பொலன் கொள் பாதம்மேயினன் வணங்கி, உற்ற வினை எலாம் இயம்பி நின்றான்;ஆயிரம் பெயரினானும், அருந் துயர்க் கடலுள் ஆழ்ந்தான். 214
உரைத்திலன் ஒன்றும்; தன்னை உணர்ந்திலன்; உயிரும் ஓடக்கரைத்திலன் கண்ணின் நீரை; கண்டிலன் யாதும் கண்ணால்;அரைத்திலன் உலகம் எல்லாம் அம் கையால்; பொங்கிப் பொங்கிஇரைத்திலன்; 'உளன்' என்று எண்ண இருந்தனன், விம்மி ஏங்கி 215
விம்மினன், வெதும்பி வெய்துற்று ஏங்கினன், இருந்த வீரன்,'இம் முறை இருந்து செய்வது யாவதும் இல்' என்று எண்ணி,பொம்மென விம்மலோடும் பொருக்கென விசையின் போனான்,தெவ் முறை துறந்து, வென்ற செங்கள மருங்கில் சேர்ந்தான். 216
இராமன் போர்க்களம் காணல்
இழிந்து எழும் காளமேகம், எறி கடல், அனைய மற்றும்ஒழிந்தன, நீல வண்ணம் உள்ளன எல்லாம் ஒக்கப்பிழிந்து அது காலம் ஆகக் காளிமைப் பிழம்பு போதப்பொழிந்தது போன்றது அன்றே-பொங்கு இருட் கங்குற் போர்வை. 217
ஆர் இருள் அன்னது ஆக, ஆயிர நாமத்து அண்ணல்,சீரிய அனலித் தெய்வப் படைக்கலம் தெரிந்து வாங்கி,பாரிய விடுத்தலோடு, பகை இருள் இரிந்து பாற,சூரியன் உச்சி உற்றாலொத்தது, அவ் உலகின் சூழல். 218
படை உறு பிணத்தின் பம்மல் பருப்பதம் துவன்றி, பல்வேறுஇடை உறு குருதி வெள்ளத்து, எறி கடல் எழு நீர் பொங்கி,உடை, உறு தலைக் கை அண்ணல் உயிர் எலாம் ஒருங்க உண்ணும்கடை உறு காலத்து, ஆழி உலகு அன்ன, களத்தைக் கண்டான். 219
இலக்குவனைக் கண்ட இராமனின் துயரம்
பிணப் பெருங் குன்றினூடும், குருதி நீர்ப் பெருக்கினூடும்,நிணப் பெருஞ் சேற்றினூடும், படைக்கல நெருக்கினூடும்,மணப் பெருங் களத்தில், மோடி மங்கல வாழ்க்கை வைப்பில்,கணத்தினும் பாதிப் போதில், தம்பியைச் சென்று கண்டான். 220
அய் அவன் ஆக்கைதன் மேல் விழுந்து மார்பு அழுந்தப் புல்லி,'உய்யலன்' என்ன, ஆவி உயிர்த்து உயிர்த்து, உருகுகின்றான்;பெய் இரு தாரைக் கண்ணீர்ப் பெருந் துளி பிறங்க, வானின்வெய்யவன் தன்னைச் சேர்ந்த நீல் நிற மேகம் ஒத்தான். 221
உழைக்கும்; வெய்து உயிர்க்கும்; ஆவி உருகும்; போய் உணர்வு சோரும்;இழைக்குவது அறிதல் தேற்றான்; 'இலக்குவா! இலக்குவா!' என்றுஅழைக்கும்; தன் கையை வாயின், மூக்கின் வைத்து, அயர்க்கும்; 'ஐயா!பிழைத்தியோ!' என்னும்-மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான். 222
தாமரைக் கையால் தாளைத் தைவரும்; குறங்கைத் தட்டும்;தூ மலர்க் கண்ணை நோக்கும்; 'மார்பிடைத் துடிப்பு உண்டு' என்னா,ஏமுறும்; விசும்பை நோக்கும்; எடுக்கும்; தன் மார்பின் எற்றும்;பூமியில் வளர்த்தும்; 'கள்வன் போய் அகன்றானோ?' என்னும். 223
வில்லினை நோக்கும்; பாச வீக்கினை நோக்கும்; வீயாஅல்லினை நோக்கும்; வானத்து அமரரை நோக்கும்; 'பாரைக்கல்லுவென், வேரோடு' என்னும்; பவள வாய் கறிக்கும்; கற்றோர்சொல்லினை நோக்கும்; தன் போல் புகழினை நோக்கும்-தோளான். 224
வீரரை எல்லாம் நோக்கும்; விதியினைப் பார்க்கும்; வீரப்பார வெஞ் சிலையை நோக்கும்; பகழியை நோக்கும்; 'பாரில்யார் இது பட்டார்; என்போல் எளி வந்த வண்ணம்?' என்னும்;'நேரிது, பெரிது' என்று ஓதும்-அளவையின் நிமிர நின்றான். 225
இராமன் வீடணனை நோதல்
'"எடுத்த போர், இலங்கை வேந்தன் மைந்தனோடு இளைய கோவுக்குஅடுத்தது" என்று, என்னை வல்லை அழைத்திலை, அரவின் பாசம்தொடுத்த கை தலையினோடும் துணித்து, உயிர் குடிக்க; என்னைக்கெடுத்தனை; வீடணா! நீ' என்றனன்-கேடு இலாதான். 226
வீடணன் நிகழ்ந்தது கூறல்
அவ் உரை அருளக் கேட்டான், அழுகின்ற அரக்கன் தம்பி,'இவ் வழி, அவன் வந்து ஏற்பது அறிந்திலம்; எதிர்ந்தபோதும்,"வெவ் வழியவனே தோற்கும்" என்பது விரும்பி நின்றேன்.தெய்வ வன் பாசம் செய்த செயல், இந்த மாயச் செய்கை. 227
'அற்று அதிகாயன் ஆக்கை, தலை இலது ஆக்கி, ஆண்டவெற்றியன் ஆய வீரன் மீண்டிலன், "இலங்கை மேல்நாள்பெற்றவன் எய்தும்" என்னும் பெற்றியை உன்னி; பிற்போதுஉற்றனன், மைந்தன், தானை நாற்பது வெள்ளத்தோடும், 228
ஈண்டு, நம் சேனை வெள்ளம் இருபதிற்று-இரட்டி மாள,தூண்டினன், பகழி மாரி; தலைவர்கள் தொலைந்து சோர,மூண்டு எழு போரில், பாரில் முறை முறை முடித்தான்; பின்னர்ஆண்தகையோடும் ஏற்றான், ஆயிரம் மடங்கல்-தேரான். 229
'அனுமன்மேல் நின்ற ஐயன் ஆயிரம் தேரும் மாய,தனு வலம் காட்டி, பின்னை, நாற்பது வெள்ளத் தானைபனி எனப்படுவித்து, அன்னான் பலத்தையும் தொலைத்து, "பட்டான்இனி"' என, வயிர வாளி, எண் இல, நிறத்தின் எய்தான். 230
'ஏ உண்ட பகு வாயோடும் குருதி நீர் இழிய நின்றான்,தூவுண்ட தானை முற்றும் பட, ஒரு தமியன் சோர்வான்;"போவுண்டது என்னின், ஐய! புணர்க்குவன் மாயம்" என்று,பாவுண்ட கீர்த்தியானுக்கு உணர்த்தினென்; பரிதி பட்டான். 231
'மாயத்தால் இருண்டது ஆழி உலகு எலாம்; வஞ்சன், வானில்போய், அத் தானுடைய வஞ்ச வரத்தினால் ஒளிந்து, பொய்யின்ஆயத்தார்ப் பாசம் வீசி அயர்வித்தான், அம்பின் வெம்பும்காயத்தான்' என்னச் சொல்லி, வணங்கினான், கலுழும் கண்ணான். 232
வீடணன் "யாரும் இறந்திலர்" எனல்
பின்னரும் எழுந்து, பேர்த்தும் வணங்கி, 'எம் பெரும! யாரும்இன் உயிர் துறந்தார் இல்லை; இறுக்கிய பாசம் இற்றால்புல் நுனைப் பகழிக்கு ஓயும் தரத்தரோ? புலம்பி உள்ளம்இன்னலுற்று அயரல்; வெல்லாது, அறத்தினைப் பாவம்' என்றான். 233
நாகபாச வரலாறு
'யார், இது கொடுத்த தேவன்? என்னை ஈது? இதனைத் தீர்க்கும்காரணம் யாது? நின்னால் உணர்ந்தது கழறிக் காண்' என்று,ஆரியன் வினவ, அண்ணல் வீடணன், 'அமல! சாலச்சீரிது' என்று, அதனை, உள்ள பரிசு எலாம், தெரியச் சொன்னான்: 234
'ஆழி அம் செல்வ! பண்டு இவ் அகலிடம் அளித்த அண்ணல்வேள்வியில் படைத்தது; ஈசன் வேண்டினன் பெற்று, வெற்றித்தாழ்வு உறு சிந்தையோற்குத் தவத்தினால் அளித்தது; ஆணை!ஊழியின் நிமிர்ந்த காலத்து உருமினது; ஊற்றம் ஈதால்; 235
'அன்னதன் ஆற்றல் அன்றே ஆயிரம் கண்ணினானைப்பின் உற வயிரத் திண்தோள் பிணித்தது;-பெயர்த்து ஒன்று எண்ணிஎன், இனி?-அனுமன் தோளை இறுக்கியது; இதனால் ஆண்டும்பொன்னுலகு ஆளும் செல்வம் துறந்தது, புலவர் எல்லாம். 236
தான் விடின் விடும், இது ஒன்றே; சதுமுகன் முதல்வர் ஆயவான் விடின், விடாது; மற்று, இம் மண்ணினை எண்ணி என்னே!ஊன் விட, உயிர் போய் நீங்க, நீங்கும்; வேறு உய்தி இல்லை;தேன் விடு துளவத் தாராய்! இது இதன் செய்கை' என்றான். 237
இராமன் சினமும் எண்ணமும்
'ஈந்துள தேவர்மேலே எழுகெனோ? உலகம் யாவும்தீந்து உக நூறி, யானும் தீர்கெனோ? இலங்கை சிந்தப்பாய்ந்து, அவர் சுற்றம் முற்றும் படுப்பெனோ? இயன்ற பண்போடுஏய்ந்தது பகர்தி' என்றான், இமையவர் இடுக்கண் தீர்ப்பான். 238
'வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் தானே நேர் வந்துஇரங்கிடத் தக்கது உண்டேல், இகழ்கிலென்; இல்லை என்னின்உரம் கெடுத்து, உலகம் மூன்றும், ஒருவன் ஓர் அம்பின் சுட்டபுரங்களின் தீய்த்து, காண்பென் பொடி, ஒரு கடிகைப் போழ்தின். 239
'எம்பியே இறக்கும் என்னில், எனக்கு இனி, இலங்கை வேந்தன்தம்பியே! புகழ்தான் என்னை? பழி என்னை? அறம்தான் என்னை?நம்பியே என்னைச் சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே,உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும், உதவி பார்த்தால்?' 240
என்று கொண்டு இயம்பி, 'ஈண்டு இங்கு ஒருவன் ஓர் இடுக்கண் செய்ய,வென்று, இவண் உலகை மாய்த்தல்விதி அன்றால்' என்று விம்மி,நின்று நின்று, உன்னி உன்னி, நெடிது உயிர்த்து அலக்கணுற்றான்,-தன் துணைத் தம்பிதன்மேல், துணைவர்மேல், தாழ்ந்த அன்பான். 241
மீட்டும் வந்து, இளைய வீரன் வெற்பு அன்ன விசயத் தோளைப்பூட்டுறு பாசம் தன்னைப் பல் முறை புரிந்து நோக்கி,'வீட்டியது என்னின், பின்னை வீவென்' என்று எண்ணும்-வேதத்தோட்டியின் தொடக்கில் நிற்கும் துணைக் கைம்மால் யானை அன்னான். 242
கருடன் வருகை
இத் தன்மை எய்தும் அளவின்கண், நின்ற இமையோர்கள் அஞ்சி, 'இது போய்எத் தன்மை எய்தி முடியும்கொல்?' என்று குலைகின்ற எல்லை இதன்வாய்,அத் தன்மை கண்டு, புடை நின்ற அண்ணல்-கலுழன் தன் அன்பின் மிகையால்,சித்தம் நடுங்கி இது தீர, மெள்ள, இருளூடு வந்து தெரிவான்,- 243
அசையாத சிந்தை அரவால் அனுங்க, அழியாத உள்ளம் அழிவான்,-இசையா இலங்கை அரசோடும் அண்ணல் அருள் இன்மை கண்டு நயவான்,-விசையால் அனுங்க வட மேரு, வையம் ஒளியால் விளங்க, இமையாத் திசை யானை கண்கள் முகிழா ஒடுங்க, நிறை கால் வழங்கு சிறையான்,- 244
காதங்கள் கோடி கடை சென்று காணும் நயனங்கள் வாரி கலுழ,கேதங்கள் கூர, அயர்கின்ற வள்ளல் திரு மேனி கண்டு, கிளர்வான்,-சீதம் கொள் வேலை அலை சிந்த, ஞாலம் இருள் சிந்த, வந்த சிறையான்,வேதங்கள் பாட; உலகங்கள் யாவும் வினை சிந்த; நாகம் மெலிய: 245
அல்லைச் சுருட்டி, வெயிலைப் பரப்பி, அகல் ஆசை எங்கும் அழியாவில்லைச் செலுத்தி, நிலவைத் திரட்டி, விரிகின்ற சோதி மிளிர;எல்லைக் குயிற்றி எரிகின்ற மோலி, இடை நின்ற மேரு எனும் அத்தொல்லைப் பொருப்பின் மிசையே விளங்கு சுடரோனின் மும்மை சுடர; 246
நன் பால் விளங்கு மணி கோடியோடு, நளிர்போது, செம் பொன், முதலாத்தன்பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ;மின்பால் இயன்றது ஒரு குன்றம் வானின் மிளிர்கின்றது என்ன, வெயிலோன்தென்பால் எழுந்து, வடபால் நிமிர்ந்து, வருகின்ற செய்கை தெரிய; 247
பல் நாகர் சென்னி மணி கோடி கோடி பல கொண்டு செய்த வகையால்மின்னால் இயன்றது எனலாய் விளங்கு மிளிர் பூண் வயங்க; வெயில் கால்பொன்னால் இயன்ற நகை ஓடை பொங்க; வன மாலை மார்பு புரள;தொல் நாள் பிரிந்த துயர் தீர, அண்ணல் திரு மேனி கண்டு, தொழுவான். 248
முடிமேல் நிமிர்ந்து முகிழ் ஏறு கையன், முகில்மேல் நிமிர்ந்த ஒளியான்,அடிமேல் விழுந்து பணியாமல் நின்ற நிலை உன்னி உன்னி அழிவான்,கொடிமேல் இருந்து, இவ் உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற கோளும் இலனாய்,படிமேல் எழுந்து வருவான், விரைந்து, பல கால் நினைந்து, பணிவான்,- 249
கருடன் துதி
'வந்தாய் மறைந்து; பிரிவால் வருந்தும், மலர்மேல் அயன் தன் முதலோர்-தம் தாதை தாதை இறைவா! பிறந்து விளையாடுகின்ற தனியோய்!சிந்தாகுலங்கள் களைவாய்! தளர்ந்து துயர் கூரல் என்ன செயலோ?எந்தாய்? வருந்தல்; உடையாய்! வருந்தல்' என, இன்ன பன்னி மொழிவான்: 250
'தேவாதிதேவர் பலராலும் முந்து திருநாமம் ஓது செயலோய்மூவாது எந் நாளும் உலகு ஏழொடு ஏழும் அரசாளும் மேன்மை முதல்வா!மேவாத இன்பம் அவை மேவி, மேவ நெடு வீடு காட்டு அம் முடியாய்!ஆவாய்! வருந்தி அழிவாய்கொல்!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 251
'எழுவாய், எவர்க்கும் முதல் ஆகி, ஈறொடு இடை ஆகி; எங்கும் உளையாய்,வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை; அவரால் வரங்கள் பெறுவாய்;தொழுவாய், உணர்ச்சி தொடராத தன்மை உருவாய் மறைந்து, துயரால்அழுவாய் ஒருத்தன் உளைபோலும்!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 252
உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி; ஒருவர்க்கும் உண்மை உரையாய்;முன் ஒக்க நிற்றி; உலகு ஒக்க ஒத்தி; முடிவு ஒக்கின், என்றும் முடியாய்;"என் ஒக்கும், இன்ன செயலோ இது?" என்னில், இருள் ஒக்கும் என்று விடியாய்;அந் நொப்பமே கொல்? பிறிதேகொல்?-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 253
'வாணாள் அளித்தி, முடியாமல்; நீதி வழுவாமல் நிற்றி;-மறையோய்!பேணாய், உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று; பெறுவான் அருத்தி பிழையாய்;ஊண் ஆய், உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி; உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய்,ஆண் ஆகி, மற்றும் அலி ஆதி!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 254
'"தான் அந்தம் இல்லை; பல" என்னும், ஒன்று; "தனி" என்னும், ஒன்று; "தவிராஞானம் தொடர்ந்த சுடர்" என்னும், ஒன்று; "நயனம் தொடர்ந்த ஒளியால்,வானம் தொடர்ந்த பதம்" என்னும், ஒன்று; மறைநாலும் அந்தம் அறியாது,"ஆனந்தம்" என்னும்; "அயல்" என்னும்!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 255
'மீளாத வேதம், முடிவின்கண், நின்னை மெய்யாக மெய்யின் நினையும்;"கேளாத" என்று, "பிற" என்று, சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான், மாளாத நீதி இகழாமை நின்கண் அபிமானம் இல்லை, வறியோர்;ஆளாயும் வாழ்தி; அரசாள்தி!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 256
'சொல் ஒன்று உரைத்தி; பொருள் ஆதி; தூய மறையும் துறந்து, திரிவாய்;வில் ஒன்று எடுத்தி; சரம் ஒன்று எடுத்தி; மிளிர் சங்கம் அங்கை உடையாய்;"கொல்" என்று உரைத்தி; கொலையுண்டு நிற்றி; கொடியாய்! உன் மாயை அறியேன்;அல் என்று, நிற்றி; பகல் ஆதி!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 257
'மறந்தாயும் ஒத்தி; மறவாயும் ஒத்தி; மயல், ஆரும் யானும் அறியேம்;துறந்தாயும் ஒத்தி; துறவாயும் ஒத்தி; ஒரு தன்மை சொல்ல அரியாய்;பிறந்தாயும் ஒத்தி, பிறவாயும் ஒத்தி, பிறவாமல் நல்கு பெரியோய்!அறம்தான் நிறுத்தல் அரிது ஆக!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 258
'வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி; அவை எய்தி, என்றும் விளையா,நினைவர்க்கு, நெஞ்சின் உறு காமம் முற்றி, அறியாமை நிற்றி, மனமா;முனைவர்க்கும் ஒத்தி, அமரர்க்கும் ஒத்தி, முழு மூடர் என்னும் முதலோர்அனைவர்க்கும் ஒத்தி, அறியாமை-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 259
'எறிந்தாரும், ஏறுபடுவாரும், இன்ன பொருள் கண்டு இரங்குபவரும்,செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது, உன்னது இடையே;பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி; பிறியாது நிற்றி; பெரியோய்!அறிந்தார் அறிந்த பொருள் ஆதி-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 260
'பேர் ஆயிரங்கள் உடையாய்; பிறந்த பொருள்தோறும் நிற்றி; பிரியாய்;தீராய்; பிரிந்து திரிவாய்; திறம்தொறு அவை தேறும் என்று தெளியாய்;கூர் ஆழி அம் கை உடையாய்; திரண்டு ஓர் உரு ஆதி; கோடல் உரிபோல்,ஆராயின், ஏதும் இலையாதி-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்?' 261
நாக பாசம் நீங்குதல்
என்று, இன்ன பன்னி அழிவான், எறிந்த எரி சோதி கீற, இருள் போய்,பொன் துன்னி அன்ன வெயில் வீசுகின்ற பொருள் கண்டு, நின்ற புகழோன்நின்று உன்னி உன்னி, 'இவன் யாவன்?' என்று நினைகின்ற எல்லை, நிமிரச்சென்று, உன்னும் முன்னர், உடன் ஆயினான், இவ் உலகு ஏழும் மூடு சிறையான் 262
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை?-மழை என்றுஆசங்கை கொண்ட கொடை மீளி அண்ணல் சரராமன் வெண்ணெய் அணுகும்,தேசம் கலந்த மறைவாணர், செஞ் சொல் அறிவாளர், என்று இம் முதலோர்பாசம் கலந்த பசிபோல், அகன்ற-பதகன் துரந்த உரகம். 263
பல்லாயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச, வந்து படர் கால்செல்லா நிலத்தின் இருள் ஆதல் செல்ல, உடல் நின்ற வாளி சிதறுற்று,எல்லா விதத்தும் உணர்வோடு நண்ணி அறனே இழைக்கும் உரவோன்வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன, மேனி வடுவும். 264
அனைவரும் உயிர் பெற்று எழுதல்
தருமத்தின் ஒன்றும் ஒழுகாத செய்கை தழுவிப் புணர்ந்த தகையால், உரும் ஒத்த வெங் கண், வினை தீய, வஞ்சர் உடல் உய்ந்தது இல்லை; உலகின்கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம், மலர்மேல் அவ் வள்ளல் கடை நாள்நிருமித்த என்ன, உயிரோடு எழுந்து நிலை நின்ற, தெய்வ நெறியால். 265
இராமன் மகிழ்தல்
இளையான் எழுந்து தொழுவானை, அன்பின், இணை ஆர மார்பின் அணையா,'விளையாத துன்பம் விளைவித்த தெய்வம் வெளி வந்தது' என்ன வியவா,கிளையார்கள் அன்ன துணையோரை, ஆவி கெழுவா, எழுந்து தழுவா,முளையாத திங்கள் உகிரான் முன் வந்து, முறை நின்ற வீரன் மொழிவான்: 266
இராமன் கருடனிடம் பேசுதல்
'ஐய! நீ யாரை? எங்கள் அருந் தவப் பயத்தின் வந்து, இங்குஎய்தினை; உயிரும் வாழ்வும் ஈந்தனை; எம்மனோரால்கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை; மீட்சிசெய் திறம் இலையால்' என்றான்-தேவர்க்கும் தெரிக்க ஒணாதான். 267
'பொருளினை உணர வேறு புறத்தும் ஒன்று உண்டோ, புந்தித்தெருளினை உடையர் ஆயின்? செயல் அருங் கருணைச் செல்வ!மருளினில் வரவே, வந்த வாழ்க்கை ஈது ஆகின், வாயால்அருளினை என்னின், எய்த அரியன உளவோ?-ஐய! 268
'கண்டிலை, முன்பு; சொல்லக் கேட்டிலை; கடன் ஒன்று எம்பால்கொண்டிலை; கொடுப்பது அல்லால், குறை இலை; இது நின் கொள்கை;"உண்டு, இலை" என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே!பண்டு இலை நண்பு; நாங்கள் செய்வது என்? பகர்தி!' என்றான். 269
கருடன் விடை பெறல்
பறவையின் குலங்கள் காக்கும் பாவகன், 'பழைய நின்னோடுஉறவு உள தன்மைஎல்லாம் உணர்த்துவென்; அரக்கனோடு அம்மற வினை முடித்த பின்னர், வருவென்' என்று உணர்த்தி, 'மாயப்பிறவியின் பகைஞ! நல்கு, விடை' எனப் பெயர்ந்து போனான். 270
இராமன் புகழ்ச்சியும் அனுமன் பேரொலியும்
ஆரியன் அவனை நோக்கி, 'ஆர் உயிர் உதவி, யாதும்காரியம் இல்லான் போனான்; கருணையோர் கடமை ஈதால்;பேர் இயலாளர், "செய்கை ஊதியம் பிடித்தும்" என்னார்;மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ, வையம்?' என்றான். 271
'"இறந்தனன், இளவல்" என்னா, இறைவியும் இடுக்கண் எய்தும்;மறந்தனர் உறங்குகின்ற வஞ்சரும் மறுகி, "மீளப் பிறந்தனர்" என்று கொண்டு, ஓர் பெரும் பயம் பிடிப்பர் அன்றே;அறம் தரு சிந்தை ஐய! ஆர்த்தும்' என்று அனுமன் சொன்னான். 272
'அழகிது' என்று அண்ணல் கூற, ஆர்த்தனர்-கடல்கள் அஞ்சிக்குழைவுற, அனந்தன் உச்சிக் குன்றின்நின்று அண்டகோளம்எழ மிசை, உலகம் மேல் மேல் ஏங்கிட, இரிந்து சிந்திமழை விழ, மலைகள் கீற, மாதிரம் பிளக்க மாதோ. 273
இராவணன் ஆர்ப்பொலி கேட்டல்
பழிப்பு அறு மேனியாள் பால் சிந்தனை படர, கண்கள்விழிப்பு இலன், மேனி சால வெதும்பினன், ஈசன் வேலும்குழிப்ப அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளிகிழிப்புற, உயிர்ப்பு வீங்கிக் கிடந்த வாள் அரக்கன் கேட்டான். 274
தாதை சொல் தலைமேல் கொண்ட தாபதன், தரும மூர்த்திஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி ஏங்கும்சீதையும், அவளை உன்னிச் சிந்தனை தீர்ந்தும் தீராப் பேதையும், அன்றி, அவ் ஊர் யார் உளர், துயில் பெறாதார்? 275
சிங்கஏறு, அசனிஏறு கேட்டலும், 'சீற்றச் சேனைபொங்கியது' என்ன, மன்னன் பொருக்கென எழுந்து, "போரில்மங்கினர் பகைஞர்" என்ற வார்த்தையே வலியது!' என்னா,அங்கையோடு அங்கை கொட்டி, அலங்கல் தோள் குலுங்க நக்கான். 276
'இடிக்கின்ற அசனி என்ன இரைக்கின்றது, இராமன் போர் வில்;வெடிக்கின்றது அண்டம் என்ன, படுவது தம்பி வில் நாண்;அடிக்கின்றது என்னை வந்து, செவிதொறும் அனுமன் ஆர்ப்பு;பிடிக்கின்றது உலகம் எங்கும், பரிதி சேய் ஆர்ப்பின் பெற்றி. 277
'அங்கதன் அவனும் ஆர்த்தான்; அந்தரம் ஆர்க்கின்றானும்,வெங் கத நீலன்; மற்றை வீரரும், வேறு வேறு,பொங்கினர் ஆர்த்த ஓசை அண்டத்தும் புறத்தும் போன;சங்கை ஒன்று இன்றித் தீர்ந்தார் பாசத்தை, தருமம் நல்க. 278
இராவணன் இந்திரசித்தன் மாளிகைக்கு எழுதல்
என்பது சொல்லி, பள்ளிச் சேக்கைநின்று இழிந்து, வேந்தன்,ஒன்பது கோடி வாட் கை அரக்கர் வந்து உழையின் சுற்ற,பொன் பொதி விளக்கம் கோடிப் பூங் குழை மகளிர் ஏந்த,தன் பெருங் கோயில் நின்றும் மகன் தனிக் கோயில் சார்ந்தான். 279
தாங்கிய துகிலார், மெள்ளச் சரிந்து வீழ் குழலார், தாங்கிவீங்கிய உயிர்ப்பார், விண்ணை விழுங்கிய முலையார், மெல்லத்தூங்கிய விழியார், தள்ளித் துளங்கிய நடையார்,-வல்லிவாங்கிய மருங்குல் மாதர்,-அனந்தரால் மயங்கி வந்தார். 280
பானமும், துயிலும், கண்ட கனவும், பண் கனிந்த பாடல்கானமும், தள்ளத் தள்ள, களியொடும் கள்ளம் கற்ற,மீனினும் பெரிய, வாட் கண் விழிப்பது முகிழ்ப்பது ஆக,வானவர் மகளிர் போனார், மழலை அம் சதங்கை மாழ்க. 281
மழையினை நீலம் ஊட்டி, வாசமும் புகையும் ஆட்டி,உழை உழை சுருட்டி, மென் பூக் குவித்து, இடைக்கு இடையூறு என்னா,பிழையுடை விதியார் செய்த பெருங் குழல், கருங் கண், செவ் வாய்,இழை அணி, மகளிர் சூழ்ந்தார், அனந்தரால், இடங்கள்தோறும். 282
தேனிடை, கரும்பில், பாலில், அமுதினில், கிளவி தேடி,மானிடை, கயலில், வாளில், மலரிடை, நயனம் வாங்கி,மேல் நடை அனைய மற்றும் நல் வழி நல்க வேண்டி,வானுடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார். 283
தொடங்கிய ஆர்ப்பின் ஓசை செவிப்புலம் தொடர்தலோடும்,இடங்கரின் வயப் போத்து அன்ன எறுழ் வலி அரக்கர் யாரும்,மடங்கலின் முழக்கம் கேட்ட வான் கரி ஒத்தார்; மாதர்அடங்கலும், அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார். 284
இந்திரசித்தை இராவணன் காணல்
அரக்கனும், மைந்தன் வைகும் ஆடகத்து அமைந்து மாடம்பொருக்கெனச் சென்று புக்கான், புண்ணினில் குமிழி பொங்கத்தரிக்கிலன், மடங்கல் ஏற்றால் தொலைப்புண்டு சாய்ந்து போன, கருக் கிளர் மேகம் அன்ன, களிறு அனையானைக் கண்டான். 285
எழுந்து அடி வணங்கல் ஆற்றான், இரு கையும் அரிதின் ஏற்றித்தொழும் தொழிலானை நோக்கித் துணுக்குற்ற மனத்தன், 'தோன்றல்!அழுங்கினை; வந்தது என்னை அடுத்தது?' என்று எடுத்துக் கேட்டான்;புழுங்கிய புண்ணினானும், இனையன புகலலுற்றான்: 286
இந்திரசித்தின் மறுமொழி
'உருவின உரத்தை முற்றும் உலப்பு இல உதிரம் வற்றப்பருகின அளப்பிலாத பகழிகள்; கவசம் பற்று அற்றுஅருகின; பின்னை, சால அலசினென்; ஐய! கண்கள்செருகின அன்றே, யானும் மாயையின் தீர்ந்திலேனேல்? 287
இந்திரன், விடையின் பாகன், எறுழ் வலிக் கலுழன் ஏறும்சுந்தரன், அருக்கன் என்று இத் தொடக்கத்தார் தொடர்ந்த போரில்,நொந்திலென்; இனையது ஒன்றும் நுவன்றிலென்; மனிதன் நோன்மை,மந்தரம் அனைய தோளாய்! வரம்பு உடைத்து அன்று மன்னோ. 288
'இளையவன் தன்மை ஈதால்; இராமனது ஆற்றல் எண்ணின்,தளை அவிழ் அலங்கல் மார்ப! நம் வயின் தங்கிற்று அன்றால்;விளைவு கண்டு உணர்தல் அல்லால், வென்றி மேல் விளையும் என்னஉளை; அது அன்று' என்னச் சொன்னான், உற்றுளது உணர்ந்திலாதான். 289
'வென்றது, பாசத்தாலும், மாயையின் விளைவினாலும்;கொன்றது, குரக்கு வீரர்தம்மொடு அக் கொற்றத் தோனை;நின்றனன், இராமன் இன்னும்; நிகழ்ந்தவா நிகழ்க, மேன்மேல்'என்றனன்; என்னக் கேட்ட இராவணன் இதனைச் சொன்னான்: 290
இராவணன் உரை
'வார் கழல் கால! மற்று அவ் இலக்குவன் வயிர வில்லின்பேர் ஒலி அரவம் விண்ணைப் பிளந்திட, குரங்கு பேர்ந்த,கார் ஒலி மடங்க, வேலை கம்பிக்க, களத்தின் ஆர்த்தபோர் ஒலி ஒன்றும், ஐய! அறிந்திலை போலும்!' என்றான். 291
இந்திரசித்தின் வினா
'ஐய! வெம் பாசம் தன்னால் ஆர்ப்புண்டார்; அசனி என்னப்பெய்யும் வெஞ் சரத்தால் மேனி பிளப்புண்டார்; உணர்வு பேர்ந்தார்;"உய்யுநர்" என்று உரைத்தது உண்மையோ? ஒழிக்க ஒன்றோ?"செய்யும்" என்று எண்ண, தெய்வம் சிறிது அன்றோ தெரியின் அம்மா.' 292
களத்தில் நிகழ்ந்ததைத் தூதுவர் கூறல்
ஈது உரை நிகழும் வேலை, எய்தியது அறியப் போனதூதுவர், விரைவின் வந்தார், புகுந்து, அடி தொழுதலோடும்,'யாது அவண் நிகழ்ந்தது?' என்ன இராவணன் இயம்ப, ஈறு இன்று,ஓதிய கல்வியாளர் புகுந்துளது உரைக்கலுற்றார்: 293
'பாசத்தால் பிணிப்புண்டாரை, பகழியால் களப்பட்டாரை,தேசத்தார் அரசன் மைந்தன் இடை இருள் சேர்ந்து நின்றே,ஏசத்தான் இரங்கி, ஏங்கி, "உலகு எலாம் எரிப்பென்" என்றான்;-வாசத் தார் மாலை மார்ப!-வான் உறை கலுழன் வந்தான்; 294
'அன்னவன் வரவு காணா, அயில் எயிற்று அரவம் எல்லாம்சின்னபின்னங்கள் ஆன; புண்ணொடும் மயர்வு தீர்ந்தார்;முன்னையின் வலியர் ஆகி, மொய்க் களம் நெருங்கி, மொய்த்தார்;இன்னது நிகழ்ந்தது' என்றார், அரக்கன் ஈது எடுத்துச் சொன்னான்: 295
இராவணன் கூற்று
"ஏத்த அருந் தடந் தோள் ஆற்றல் என் மகன் எய்த பாசம்காற்றிடைக் கழித்துத் தீர்த்தான், கலுழனாம்; காண்மின், காண்மின்!வார்த்தை ஈதுஆயின், நன்றால், இராவணன் வாழ்ந்த வாழ்க்கை!மூத்தது, கொள்கை போலாம்? என்னுடை முயற்சி எல்லாம்? 296
'உண்டு உலகு ஏழும் ஏழும் உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம்கொண்டவன், என்னோடு ஏற்ற செருவினில், மறுக்கம் கொண்டான்;மண்டலம் திரிந்த போதும், மறி கடல் மறைந்த போதும்,கண்டிலன்போலும், சொற்ற கலுழன், அன்று, என்னைக் கண்ணால்? 297
'கரங்களில் நேமி சங்கம் தாங்கிய கரியோன் காக்கும்புரங்களும் அழியப் போன பொழுதில், என் சிலையின் பொங்கி,உரங்களில், முதுகில், தோளில் உறையுறு சிறையில், உற்றசரங்களும் நிற்கவேகொல், வந்தது, அவ் அருணன் தம்பி? 298
இராவணன் இந்திரசித்தைப் போரிடக் கூறல்
'ஈண்டு அது கிடக்க; மேன்மேல் இயைந்தவாறு இயைக! எஞ்சிமீண்டவர்தம்மைக் கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே;ஆண்தகை! நீயே இன்னும் ஆற்றுதி, அருமைப் போர்கள்;காண்டலும், நாணும்' என்றான்; மைந்தனும் கருத்தைச் சொன்னான்: 299
இந்திரசித்தின் மறுமொழி
'இன்று ஒரு பொழுது தாழ்த்து, என் இகல் பெருஞ் சிரமம் நீங்கி,சென்று, ஒரு கணத்தில், நாளை, நான்முகன் படைத்த தெய்வவென்றி வெம் படையினால், உன் மனத் துயர் மீட்பென்' என்றான்;'நன்று' என, அரக்கன் போய், தன் நளிமலர்க் கோயில் புக்கான். 300
மிகைப் பாடல்கள்
எரி முகப் பகழி மாரி தொடுத்து, இகல் அரக்கன் எய்தான்;எரி முகப் பகழி மாரி தொடுத்து, அவை இறுத்தான், எந்தை,உரும் இனப் பகழி மாரி உருத்து விட்டு, அரக்கன் ஆர்த்தான்;உரும் இனப் பகழி மாரி உருத்து விட்டு, இளவல் கொன்றான். 106-1
நெருக்கி மற்று அனந்த கோடி நெடுங் கணை அரக்கன் கோத்தான்;நெருக்கி மற்று அனந்த கோடி நெடுங் கணை நிமலன் மாய்த்தான்;முருக்கின் உற்று அனந்த கோடி முகைக் கணை அரக்கன் மொய்த்தான்;முருக்கின் உற்று அனந்த கோடி முகைக் கணை முடித்தான், மொய்ம்பன் 106-2
சிந்து வாளி செறிதலும், சேவகன்ஐந்து நூறு கடுங் கணையால்; அவன்உந்து தேரை ஒறுத்தனன்; வெய்யவன்வந்து தேர் ஒன்றின் வல்லையில் ஏறினான். 128-1
அழித்தனன் தடந் தேர் என்று அழன்று, தீவிழித்தனன்; கடு நெஞ்சம் வெகுண்டு எழத்தெழித்தனன்; சிலையால் திறல் வாளிகள்கொழித்தனள்; இமையோர் மெய் குலுங்கினார். 148-1
அங்கதன் தடந் தோளினும் மார்பினும்புங்க வாளி புகப் புக, தேர் எதிர்,சிங்க ஏறு அனையான் திரள் தோள்வரைமங்க, வேறொர் மராமரம் வீசினான். 148-2
மல் திண் தோளின் அடித்த மராமரம்இற்று நூறு திறத்தது, இமைப்பிலோர்பொன் திண் தேர்மிசைத் தாவினன் பொங்கெலிமுற்று நாளில் முயற்சி முரஞ்சவே. 148-3
கண்ட வாலிதன் காதலனும், கனல்விண்டதாம் என வெஞ் சினம் உற்றவன்மண்டு தேர்மிசையில், குதியா வலிகொண்டு, வான் இடி ஏறு எனக் குத்தினான். 148-4
குத்தி, மற்று அவன் கொய் உளை மாப் பரிபத்தி பத்தியின் வீழ, பரிந்து எதிர்தத்தி, வல் வில் தடக் கையினால், சரம்வித்துராமுனம் வீழ்த்தினன், தேர் அரோ. 148-5
மாறு ஓர் தேரின் மடங்கல் என, கனன்றுஏறினான், சரம் எண்-இரண்டு ஏவினான்;ஊறு சோரி சொரிய, உயக்கம் உற்று,ஆறினான் கடிது, அங்கதன் ஆண்மையான். 148-6
கோல் கொள் ஆளும் பரியும் குழம்பதாய்,காலின் நூறி, கரங்களின் மற்று அவன்தாலு மூலத்து அடிப்ப, தனு வலான்,மால் உழந்தவர் போல மயங்கினான். 148-7
பல் ஆயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்த படர் கால்செல்லா நிலத்தின் அருளோடு செல்ல, உடல் நின்ற வாளி சிதறுற்று,எல்லாம் அவித்தும் உணர்வோடும் எண்ணி, அறனே விளைக்கும் உரவோன்,வல்லான் ஒருத்தன், இடையே படுத்த வடுஆன, மேனி வடுவும். 264-1
பறவை நாயகன் தான் ஏக, படர் உறு துயரம் நீங்கி,கறவையும் கன்றும் போலக் களிக்கின்ற மனத்தர் ஆகி,இறைவனும் இளைய கோவும் யாவரும் எழுந்து நின்றார்;மறை ஒரு நான்கும், மண்ணும், வானமும், மகிழ்ந்த மாதோ. 270-1
இரு நிலம் கிழிய, பாயும் எறி கடல் இரைப்புத் தீர,பரவும் எண் திசையைத் தாங்கும் பகட்டினம் இரியல் போக,கரு வயிறு உடைந்து சிந்தி அரக்கியர் கலங்கி வீழ,அரு வரை அண்ட கோளம் பிளக்க, நின்று, அனுமன் ஆர்த்தவன். 273-1

by Swathi   on 23 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.