|
||||||||
கம்பு தோசை - Kambu Dosai How to cook kambu Dosai? (கம்பு தோசை செய்வது எப்படி?) |
||||||||
தேவையானவை:
கம்பு - 2 கப் இட்லி அரிசி - 1 கப் உளுந்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் வரமிளகாய் - 2 சின்ன வெங்காயம் - 4 கறிவேப்பிலை - சிறிது உப்பு
செய்முறை
1.முதலில் கம்பு, அரிசி, உளுந்து, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைக்கவும். 2.நன்கு ஊறியதும், கிரைண்டரில் அரைக்கவும். 3.பாதி அரையும் போது, அத்துடன், மிளகாய், வெங்காயம், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைத்து உப்பு கலந்து வைக்கவும். 4.பிறகு மெல்லிசான தோசைகளாக ஊற்றி எடுக்கவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|