LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF

காத்திருக்கிறாள்

காத்திருக்கிறாள்

 

எச்சரிக்கை 1 “டப்” என்று அந்த துப்பாக்கியில் இருந்து கிளம்பிய தோட்டா அவனை

கீழே விழ வைப்பதை கதவு சந்து வழியாக பார்த்தாள். சுட்டவனின் முதுகு மட்டுமே தெரிந்தது. கீழே விழுந்தவனை இவளால் நன்றாக பார்க்க முடிந்தது.

 

       எச்சரிக்கை 2-  இந்த புதிய முதலாளி புரியாத புதிராய் இருந்தார்  

 

ஈரல் குலை நடுங்க நடந்து கொண்டிருந்தாள் பொன்னம்மா, நடந்து கொண்டிருந்தாள்

என்பதை விட ஓடுவது போலத்தான் இருந்தது நடை. சுற்று முற்றும் பார்த்து நடப்பதை பார்த்தால் பயந்து ஓடுவது போலவும் தெரிகிறது, இல்லை ஏதாவது தப்பு தண்டா

செய்துவிட்டு ஓடுகிறாளா தெரியவில்லை.

       அவளின் முகம் பேயறைந்தது போல் இருந்தது, எந்த நேரத்திலும் அவளை யாராவது

ஒருவர் வழி மறிக்கலாம், அது போலீசாகவும் இருக்கலாம், அல்லது அந்த கூட்டத்திலிருந்து

ஒருவராக இருக்கலாம். எங்கு போவது என்று இலக்கில்லாமல் ஓடிக்கொண்டிருந்தாள்.

இரவு மணி பத்திருக்கலாம், அவளுக்கு ஒன்றும் புரியவில்லை, எங்கு ஓடுவது?

ஊரை விட்டு இவன் கூட சொல்லாமல் கொள்ளாமல் வந்தது முதல், இவன் வீட்டை விட்டு எங்கும் வெளியில் சென்றதில்லை. அவள் கிராமத்தை விட்டு வெளி வந்ததே இந்த பாவியினால்தான்,

“அவனை கொல்ல வேண்டுமென்று” தான் நினைத்தேன். ஆனால் கொல்ல வில்லையே, அதற்குள் அவன் எதிரிலிருப்பவன் சுட்டு இறந்து விட்டால் அதற்கு நானா பொறுப்பு? இருந்தாலும் போலீஸ் அங்கு வந்தால் நான் சமைத்து வைத்திருந்த சாப்பாட்டை சோதித்தால், ஐயோ நான் மாட்டிக்கொள்வேனே? அவனுக்கு விசம் வைத்த்து தெரிந்து விடுமோ, அதை நான்தான் வைத்தேன் என்பதை எப்படியும் கண்டு பிடித்து விடுவார்கள். நான்

நன்றாக மாட்டிக்கொண்டேன், அவளின் சிந்தனை தாறு மாறாக ஓடிக்கொண்டிருந்தவள், அடுத்த சந்தில் இருந்து வேகமாக வந்த காரை கவனிக்காத்தால் “தட்” என்று மோதி அப்படியே

மயங்கி விழுந்தாள்., அந்த நேரத்திலும் நான்கைந்து பேர் அந்த இடத்தை சுற்றிக்கொண்டனர்.

       கண் விழித்த பொன்னம்மா எங்கிருக்கிறோம் என்று மலங்க மலங்க விழித்தாள்.

தான் கட்டிலில் படுத்திருப்பது புரிந்த்து, சடாரென எழுந்தவளை “பேசாமல் படு” என்ற கர்ண

கடூரமான குரல் கேட்டதும், அப்படியே பயந்து நடுங்கி மெல்ல திரும்பி பார்த்தாள்

       ஐம்பது ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தகுந்த ஒருவர் நின்று கொண்டிருந்தார்,

குரல் கடூரமாய் கேட்ட அளவுக்கு தோற்றம் அப்படி தோன்றவில்லை. “க்கும்” என்று கணைத்து விட்டு காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு

நடந்தார்.

       காலை பத்து மணி இருக்கலாம், பொன்னம்மா நன்றாக தெளிந்திருந்தாள். அந்த பெரியவரின் முன்னால் நின்று கொண்டிருந்தாள். நன்றாகிவிட்டாயல்லவா ? இனி கிளம்பு,

ஏதாவது வண்டியில மறுபடியும் மோதிக்காத, சொன்னவரின் காலில் தடாலென விழுந்தாள்.

எனக்கு ஏதாவது வேலை போட்டு கொடுங்கய்யா, போறதுக்கு வேற போக்கிடம் இல்லையா !

அப்படியே குப்புற விழுந்து அவரின் பாதத்தை தொடாமல் அழுதாள்.சிறிது நேரம் அவரிடம் எந்த அசைவும் இல்லை.

       சரி எழுந்திரு, போ போய் சமையல் ரூமுக்கு போய் ஏதாவது சமைச்சுட்டு வா

பாக்கலாம். உனக்கு சமைக்க தெரியுமா? அவரின் கேள்விக்கு இவள் தன்னையும் அறியாமல்

முதல்ல ஒரு இடத்துல சமையல்காரியாத்தான் இருந்தேன். சொன்னவளை கூர்ந்து பார்த்தார்.

சொல்லிவிட்டாளே தவிர அட்டா சொல்லிவிட்டோமே” எங்கே வேளை செஞ்சேன்னு கேப்பாரே என்று பயந்தாள். ஆனால் உற்று பார்த்ததை தவிர வேறு ஒன்றும் கேட்கவில்லை. “க்கும்”

என்று கணைத்த்தோடு சரி, அப்படியே கண்ணை மூடி உட்கார்ந்து கொண்டார்.

       அவரிடம் எந்த அசைவும் காணாத்தால் இவள் சமையலறை எங்கே என்று துழாவி அதற்குள் நுழைந்தாள்.என்ன என்ன பொருட்கள் உள்ளன என்று ஆராய்ந்து எடுத்து வைத்துக்கொண்டவள் சமையலை ஆரம்பித்தாள்,

       ஒரு வாரம் ஆயிற்று, அந்த பெரியவர் எங்கும் செல்வதாக காணோம், ஏதோ எப்பொழுதும் சிந்தனையில் இருப்பது போலவே காணப்பட்டார். இவளுக்கு குண்டடி பட்டு விழுந்தவன் ஞாபகம் வந்தது, இந்நேரம் அவளை எப்படி எல்லாம் பாராட்டி பேசியிருப்பான், அவளின் சமையலை எல்லாம் எப்படி பாராட்டி இருப்பான், பாவி, பாவி பேசி பேசியே என் வாழ்க்கையை கெடுத்தான். விட்டிருந்தால் என்னை கொண்டு போய் விற்றிருப்பான்.அதை நினைத்தவுடன் அவளுக்கு தன்னையும் அறியாமல் “ஜிவ்” என்று கோபம் வந்தது. இந்த மாதிரி ஆட்கள் இருப்பதை விட போவது மேல்தான்.,

பெரியவருக்கு ஓரளவு ஏற்க கூடிய சமையல்காரியாகி விட்டாள்.ஆனால் வெளீயே போய் ஏதாவது வாங்குவதென்றாலும் பயந்து நடுங்க ஆரம்பித்தாள்.அந்த கூட்டத்தாரின் கண்களில் பட்டு விடுவோம் என்ற பயத்திலேயே இருந்தாள்.

       பொன்னம்மாள் கிராமத்தில் இருந்தவரை அவள் கனவே திரை[ப்படத்தில் வரும் கதாநாயகிகளை பற்றியதாகவே இருக்கும், அவள் நல்ல சிவப்பாய் இருந்ததால்

அவளுடைய கனவுகளே வேறு மாதிரியாகத்தான் இருந்தது. தன்னை விட அழகான பெண்கள் யாருமில்லை, தன்னையும் கூட்டி செல்ல கண்டிப்பாய் திரைப்படத்தில் வரும் கதாநாயகன் போல் ஒருவன் வருவான் என்ற கற்பனையிலேயே இருந்தாள்.

       அந்த நேரம் வாட்ட சாட்டமாய், அந்த ஊருக்கு ஒரு திரைபடத்துக்கு “லொகேசன்

பார்க்க வந்த சதீஷ் என்பவன் கண்ணில் இவள் பட்டாள், இவள் கதாநாயகியாய் காணும்

கனவை அவன் உபயோகப்படுத்திக்கொண்டான். அவனை நம்பி அந்த ஊரை விட்டு கிளம்பி விட்டாள்.அவளை தான் தங்கியிருந்த வீட்டுக்கே கூட்டி சென்று சமையல் மற்றும் சில வேலைகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டவன், எப்படியும் உன்னை கதாநாயகி ஆக்கியே

தீருவேன் என்று அவ்வப்போது உறுதி மொழிகளும் கொடுத்துக்கொண்டிருந்தான்.

       அன்று இரவு இவனை காண நான்கைந்து பெண்களும், ஆண்களும் உள்ளே வந்தனர்.

இவள்தான் கதவை திறந்து விட்டாள். அவர்கள் இவளை வியப்புடன் உற்று உற்று பார்த்து

“யாரையோ தள்ளிட்டு வந்து வச்சிருக்கான்” என்று பேசிக்கொள்வதை கூட இவள் காதுகள் கேட்டன. சட்டென்று வெளியே வந்தவன் இவளை பார்த்து “இங்க பாரு இன்னைக்கு நைட்டு

இங்க ஒரு பார்ட்டி இருக்கு” உன்னுடைய ஸ்பெசல் பிரியாணியை இன்னைக்கு சமைச்சு எங்களுக்கு கொடுக்கற, என்று அவளை சமையல் அறைப்பக்கம் தள்ளி விட்டு கதவை சாத்தி விட்டான்

       இவள் சமையல் வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தாலும்,வெளியே அவ்வப்பொழுது கூச்சலும், கும்மாளமுமாய் இருப்பதை காதில் கேட்டுக்கொண்டுதான் இருந்தாள்.. ஒரு முறை ஆவல் தாங்காமல் சாத்தியிருந்த கதவை மெல்லமாய் திறந்தவள், அவர்கள் இருந்த கோலத்தை கண்டு அருவருப்புடன் கதவை சாத்தினாள், ஆத்திரம் ஆத்திரமாக வந்த்து அவளுக்கு, சே என்ன கண்றாவி, சொல்லிக்கொண்டிருந்தவளுக்கு வெளியே பேசிக்கொள்வது இப்பொழுது காதில் விழுந்தது.

       “என்னடா இவ உண்மையிலேயே சமையல்காரிதானா? இல்லே, அவர்கள் கெக்கலிட்டு சிரிப்பது கேட்டது, ஸ்..ஸ் சத்தம் போடாதே, இவளுக்கு விலை பேசிட்டேன், அடுத்த வாரம்

பாம்பே பார்ட்டிக்கு தள்ளி விட்டுடலாமுன்னு இருக்கேன்.இவன் சொல்வது காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவது போல் இருந்தது.

       அவளின் உடலும் உள்ளமும் பயந்து நடுங்கியது, இவன் தன்னை விற்று விடத்தான்

இவ்வளவு நாட்களாக இங்கு வைத்திருக்கிறான், இங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று சிந்தித்தாள்.திடீரென்று அவளுக்கு ஞாபகம் வந்த்து. வெளியே கிடந்த மூட்டை பூச்சி மருந்து பாட்டில் ஒன்றை சமையலறையை ஒட்டி உள்ள பாத்ரூமில் கொண்டு வந்து வைத்து இருந்த்தை.சத்தமில்லாமல் பாத்ரூம் கதவை திறந்து அதை தேடினாள். அகப்பட்டுக்கொண்டது. எடுத்து வந்தவள் அவர்களுக்கு எடுத்து செல்வதற்கு வைத்திருந்த உணவு பதார்த்தங்களில் அவனுக்கு என்று தனியாக ஒரு தட்டை எடுத்து அதில் சுட சுட பிரியாணியையும், அதன் மேல் இந்த மருந்தையும் ஊற்றி வைத்து விட்டாள். அவைகளை ஒழுங்காக அடுக்கி, இந்த தட்டை மட்டும் அடையாளம் தெரிவதற்காக தன் கை அருகில் இருப்பது போல வைத்துக்கொண்டாள்.

       வெளியே போனதும் இந்த தட்டை அவன் கையில் கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்து இரு கைகளால் தட்டை எடுத்துக்கொண்டு தோளால் கதவை மெல்ல திறக்க முயற்சி செய்தாள். அப்பொழுது வெளியே காரசாரமாய் பேசிக்கொள்வதும், திடீரென “டப்”என்ற சத்தம்

கேட்டவள் பயந்து நடுங்கி அப்படியே கையில் வைத்திருந்த தட்டை அங்கிருந்த மேடை மேல் வைத்து விட்டு, கதவு சந்து வழியாக பார்த்தாள்,குண்டு பட்டு அவன் கீழே விழுவதையும்,

சுட்டவன் முதுகை காட்டிக்கொண்டு நிற்பதையும் பார்த்தாள்.உடனே பாத்ரூமுக்குள் நுழைந்து. வெளிப்புறம் வருவதற்கு வழி இருந்ததால், அதை தள்ளி திறந்து வெளியே வந்தவள் கிடு கிடுவென அந்த இடத்தை விட்டு நடக்க ஆரம்பித்து விட்டாள். அந்த இருட்டு, கொட்டிக்கிடந்த கழிவுகள், எதுவும் அவளுக்கு தெரியவில்லை, இந்த இடத்தை விட்டு போனால் போதும் என்று ஓட ஆரம்பித்து விட்டாள்.

       மாலை நாலு மணி இருக்கும், கதவு தட்டப்பட்டது, இவள் கதவை திறந்தாள். வெளியே போலீஸ் நின்று கொண்டிருந்தது. அப்படியே வெல வெலத்து போனாள். “போச்சு கடைசியில் கண்டு பிடிச்சுட்டாங்க, கால்கள் சோர்ந்து வாய் உலர்ந்து விட்ட்து.

       வீட்டில யார் இருக்காங்க? அதிகாரமான குரல், இவள் பிரமை பிடித்தாற்போல் நின்று

கொண்டிருந்தாள். உன்னைத்தாம்மா மீண்டும் அந்த குரல் அதட்ட அதற்குள் சத்தம் கேட்டு

உள்ளே இருந்த பெரியவர் வெளியே வந்து போலீசை பார்த்த்தும், வாங்க இன்ஸ்பெக்டர்

என்றார்,

       பொன்னம்மாளை ஒதுக்கி தள்ளி உள்ளே வந்த இன்ஸ்பெக்டரும் போலீஸ்கார்ர்களும்

சாரி சார் நீங்க ஓய்வு பெற்ற போலீஸ் ஆபிசர்னாலும், என் கடைமைய செய்யறேன் என்று பணிவுடன் சொன்னவர், அந்த பையனை சுட்டதுக்கு உங்களை கைது செய்யறேன்.

. அவர் போலீஸ் அதிகாரியிடம், ஒரு நிமிசம் கொடுங்க இன்ஸ்பெக்டர், இந்த பெண் எங்கிட்ட சமையல்காரியாய் இருந்தாள், அவளுக்கு சம்பள பாக்கியை கொடுத்துட்டேன்னா,

கிளம்பிடலாம்.

       இந்தாம்மா, என்று அங்கிருந்த டேபிள் டிராயிரிலிருந்து பணத்தை எடுத்து கொடுத்தவர் இந்தாம்மா இந்த பணத்தை வாங்கிட்டு எங்கியாவது பிழைச்சுக்கோ, சொன்னார்.

 

‘ஐயா”உங்களை எதுக்கு போலீஸ் பிடிச்சுகிட்டு போகணும்

கேட்ட அவளிடம் புன்னகையாய் சொன்னார் போன மாதம் ஒருத்தனை சுட்டுட்டேன், அதுக்காகத்தான்,

       ஐயா அந்த கோயில் பக்கத்துல இருக்கற வீட்டுல இருந்தவனைங்களா? கேட்பவளை

ஆச்சர்யத்துடன் பார்த்த அவர் அவனை உனக்கு தெரியுமா? என்று கேட்டார். இவள் சட்டென

சுதாரித்து இல்லையில்லை கேள்விப்பட்டேன், அவனை எதுக்காக ஐயா? என்று இழுத்தவளிடம். என்னோட ஒரே பொண்ணை ஏமாத்தி அவளை தற்கொலை பண்ணிக்க வச்சவனை வேற என்ன செய்ய சொல்றே? அவரின் பதில் அவளை அப்படியே அதிர்ச்சியாக்கியது. அப்படியானால் நான் கொல்ல நினைத்தவனை !

       ஐயா அந்த பணத்தை கொடுங்க, வாங்கியவள், இதை அப்படியே பத்திரமா வச்சிக்கிறேன், நீங்க திரும்ப வர்ற வரைக்கும், இந்த வீட்டுக்கு காவல்காரியா இருக்கறதுக்கு

அனுமதி கொடுங்க, உங்களுக்காக இங்க ஒரு நாய் காத்திருக்கும்ங்கறதை மறந்திடாதீங்க..

சொன்னவள் பொங்கிய கண்ணீரை தன் முந்தானையால் துடைத்துக்கொண்டாள்.

       பெரியவருக்கு ஒன்றும் புரியாமல் போலீசாருடன் திரும்பி திரும்பி பார்த்து சென்றார்.

              இவளுக்கு இப்பொழுது பெரியவர் தெய்வமாய் தெரிந்தார், அவர் மகளுக்காக மட்டுமல்ல, தனக்காகவும் அந்த கொலையை செய்ததாக நினைத்துக்கொண்டாள்.    

She waiting
by Dhamotharan.S   on 11 Mar 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.