LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF

தண்டனை

 

 தண்டனை 

இந்த இராத்திரி குளிருக்கு மதமதப்பாத்தான் இருக்கு ! புது சரக்கு, இன்னும் கொஞ்சம் கிடைச்சிருந்தா, நினைக்கும்போதே எச்சில் ஊறியது அவனுக்கு, கூடாது, இன்னும் கொஞ்சம் அடிச்சிருந்தா பிளாட் ஆயிடுவோம். அப்புறம் தொழில் கெட்டு போயிடும், பின் சீட்டில் உட்கார்ந்திருந்தவன் அப்படியே காலை தூக்கி ஓட்டுநர் சீட்டின் மேல் போட்டு உடம்பை வளைத்து படுத்தான்.தூக்கம் சுகமாய் வந்தது. மணி என்ன இருக்கும், ஒரு மணி இருக்குமா?

      இந்த நைட் ஷிப்ட் வண்டி ஓட்ட வந்தா இதுதான் பேஜாரு, ஒருத்தன் கூட கம்பெனி கிடைக்கமாட்டேங்கறான்.இருந்தாலும் இதுதான் வசதி. எந்த பார்ட்டி வந்தாலும் போட்டி இல்லையே.

      காலையில் இருந்து இரவு பத்து மணி வரை பரபரப்பாய் இருக்கும் அந்த ரயில் நிலைய பாதை சந்தடி அடங்கி அங்கொன்றும் இங்கொன்றுமாய் இரு சக்கர வாகனங்கள் மட்டும் கடந்து சென்று கொண்டிருந்தன.அந்த போதை மயக்கத்தில் இருந்தாலும் இப்ப ஒரு டிரெயின் வரும், ஆளுங்க இறங்கி வருவாங்க, பாக்கலாம், ஏதாவது கிடைக்குதான்னு.மனதுக்குள் நினைத்து கொஞ்சம் விழிப்பாக்கிக்கொண்டான்.

      “ஆட்டோ” வருமா? தயக்கத்துடன் ஒரு பெண் குரல் சட்டென விழித்தவன் கண்ணை விழித்து பார்த்தான்.

      நாற்பதுக்குள் இருக்கலாம், சேலையை இழுத்து போர்த்துகொண்டிருந்தாலும்

அந்த இருளிலும் அழகு பளிச்சிட்டது. கழுத்தில் போட்டிருந்த நகைகளும் கண்ணை உறுத்தின. தோளில் ஒரு பையை தொங்க விட்டிருந்தாள் கண்கள் மிரளுவது போல் பார்த்துக்கொண்டிருந்தன. சட்டென்று வாயை திறந்து பேசப்போனவன், “வேண்டாம் வாயை திறந்தால் குடித்த வாடை வந்து விடும்,அப்புறம் போய் விட்டால் பாடுதான்” கீழே இறங்கி ஓட்டுநர் இருக்கையில் உட்கார்ந்து முகத்தை திருப்பியவாறு எங்க போகணும்?

      “லட்சுமி புரம் வரைக்கும்” மெதுவாய் சொன்னது, எவ்வளவு கேப்பீங்க?

எப்பவும் இரு நூறுபாய் கேப்போம், இராத்திரி “அன் டைம்” அம்பது சேத்திக்கொடுங்க

      பதில் எதுவும் பேசாமல் ஏறி உட்கார்ந்து கொண்டாள் அந்த பெண்

மனதில் சுறு சுறுப்பு ஏற ஓட்டுனர் முன் இருந்த கண்ணாடியில் பார்த்தான். இருட்டு உள்புறம் இருந்தாலும், பெண்ணின் பளீரென்ற வெண்மையும், காதிலும் கழுத்திலும் இருந்த நகைகள் அந்த பெண்ணுக்கு பேரழைகை கொடுத்தன.

      இன்னும் டிரெயின் வரலையே, அதுக்குள்ள இந்த பெண் எப்ப வந்து இறங்குச்சு, அடடா, இப்ப என்ன பண்ணலாம்? வண்டியை ஸ்டார்ட் செய்தவன், அந்த பெண் கவனிக்காதாவாறு கால் சட்டை பையில் இருந்த செல்லை எடுத்து, இடது கையில் பட்டன்களை அழுத்தினான். இந்த பார்ட்டியை கொண்டு போற இடத்துல ரெடியா இருப்பானுங்க, நினைத்தவன் போன மாசம் அந்த பொண்ணை முடிச்சதுக்கே நீ மட்டுமான்னு சண்டைக்கு வந்தானுங்க..வண்டி வேகம் பிடிக்க ஆரம்பித்தது..

      “அம்மா” கதவை திறந்த உடன் கட்டிக்கொண்ட மகளை மெல்ல தள்ளி விட்டு

“ஏண்டி அறிவிருக்கா? நடு இராத்திரி வராதேன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்.

போம்மா, உன்னைய பாக்கணும்னு ஆசையா வந்தா இப்ப எதுக்கு இப்படி கூப்பாடு போடறே?

மகளை உள்ளே இழுத்து கதவை சாத்தி விட்டு, மணி என்ன பாத்தியா?இரண்டு மணி

இன்னும் இரண்டு மணி நேரம் அங்கயே உட்கார்ந்துட்டு கொஞ்சம் விடிஞ்சப்புறம் வந்தா என்ன? வீட்டுல ஆம்பளைங்க இருந்தாலாவது போன் பண்ணுனயின்னா அனுப்பலாம்..முணு முணுத்துக்கொண்டாள்.

ஏம்மா இப்படி பயந்து சாகறே? எனக்கு ஒண்ணும் ஆகாது, தைரியமா இரு, பெங்களுருல எல்லாம் நாங்க இராத்திரி பகலெல்லாம் பாக்க மாட்டோம்.

அது வேற இது வேற, நாம அந்தளவுக்கு புழங்கற டவுனுக்குள்ள இருக்கலை.

அம்மா ப்ளீஸ், எனக்கு இராத்திரி முழுக்க ரயில்ல வந்த டயர்டா இருக்கு, நான் போய் தூங்கறேன். காலையில உன் புலம்பலை கண்டினியூ பண்ணு…

      மகள் தூங்க போய் விட்டாள், இவளுக்கு தூக்கம் போயிற்று. திமிரும் காளை போல் வளர்ந்த பெண். பார்த்தவுடன் சபலம் அடையும் உடல்வாகு, இப்படி நடு ராத்திரி வீட்டுக்கு வருகிறாள். இராத்திரி பத்து மணிக்குள் வரப்பார் என்று எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேனெங்கிறாள். ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால்?. “ஐயோ”நினைக்கும்போதே குலை நடுங்குகிறதே.

      சே நான் ஏன் இப்படி நினைக்கிறேன்? ஒரு காலத்தில் என்னைப்போல் தைரியசாலி இருக்க முடியாது, அப்படிப்பட்ட நான் இந்த பெண் பிறந்து வளர வளர பயந்து சாகிறேன். என்ன செய்வது இவள் அப்பா உயிருடன் இருந்திருந்தால் பயமில்லாமல் இருந்திருப்பேனோ என்னவோ? இவளுக்காகவே வாழ்ந்து, இவளையே நினைத்து கொண்டே இருப்பதால் கூட இவளுக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று பயப்படுகிறேனோ?

      ஆட்டோ பறந்து கொண்டிருந்தது, ஓட்டிக்கொண்டிருந்தவன் மனம் பரபரப்புடன் இருந்தது, பின்னே அழகான பெண், கூடவே நகைகள் ஐந்தாறு பவுன் தேறும்.

ஆட்டோ வழி மாறி இடப்பக்கம் வளைந்தது. பின்னால் இருந்த பெண் வழி மாறியதை உணர்ந்து எதோ சொல்ல முற்பட …ஆட்டோ இருந்தாற்போல் படு பயங்கரமாக முறுக்கி,எதிரில் பிரமாண்டமாய் தெரிந்த பாலத்தில் பறந்தது,

இதென்ன..சட்டென தன் தலைமேல் இருள் கவிழ்வது போல் உணர எதிரில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் வண்டி கட்டுப்பாடு விலகி, ஐயோ நிறுத்த முயற்சிப்பதற்குள் பாலத்தின் கைப்பிடியில் மோதி தடுமாறி கீழே..கீழே தூக்கி விசப்பட்டான்.

      நிகழ்வு நடந்த நிமிடத்திற்கு முன் அவன் தலையில் போர்த்திருந்த துணியை உருவிக்கொண்டு கீழே உருண்டு விழுந்திருந்த அந்த பெண் தடுமாறி எழுந்து துணியை அந்த பையிலேயே சுருட்டி வைத்துக்கொண்டு வந்த பாதையிலே நடந்து இருளில் மறைந்தாள்.

      காலையில் ஆட்டோ முழுவதுமாக நொறுங்கியும், ஆள் பாலத்தின் கீழே

இறந்தும் கிடந்தான். உடல் பரிசோதனை குடித்திருப்பதை உறுதி செய்து குடிபோதையில் வண்டியை கைப்பிடி சுவரில் மோதி ஆள் தூக்கி வீசப்பட்டு இறந்து விட்டான் என்று முடிக்கப்பட்டது.

      மருத்துவமனையில் இன்டன்சிவ் கேர் யூனிட்டில் ஜான்சி ஜான்சி நர்ஸ் கூப்பிட தூக்க மயக்கத்தில் இருந்த அந்த பெண் விலுக்கென்று நிமிர்ந்து நர்ஸை

நோக்கி விரைந்தாள்.

      உங்க பெண் முழிச்சுகிட்டாங்க, உங்க பேரை சொல்லி கூப்பிடறாங்க, சீக்கிரம்

பாத்துட்டு உடனே வந்துடுங்க..

      பரபரப்புடன் ஓடினாள் ஜான்சி..மகளின் அருகில் சென்றவள் ஒரு மாதமாய் கோமாவில் இருந்து கண் விரித்து தன்னை பார்ப்பதை கண்டவள், மகிழ்ச்சியுடன் கவலைப்படாதேடா செல்லம், உன்னைய இந்தளவுக்கு கொடுமை பண்ணினவனை என் கையால தண்டனை கொடுத்துட்டேன்.மகளின் தலையை வருடிக்கொண்டே சொன்னாள்  

Punishment
by Dhamotharan.S   on 09 Dec 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.