LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF
- தமிழ் எழுத்தாளர்கள் (இந்தியா)

தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் பாவண்ணன் -2022ம் ஆண்டுக்கான இயல் விருது பெறுகிறார்

வழக்கமாக வருடாவருடம் வழங்கப்படும் இயல்விருது, கோவிட் நோய்த் தொற்று காரணமாக 2020ம் வருடம் வழங்கப்படவில்லை. ஆகவே 2022ல், இரண்டு இயல் விருதுகள் அளிக்கப்படுகின்றன. அவை 2023 யூன் மாதம் ரொறொன்ரோவில் வழங்கப்படும். பாவண்ணன் (இயற்பெயர் பலராமன் பாஸ்கரன்)

தமிழ் இலக்கியத் தோட்டம், 2022ம் ஆண்டுக்கான வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் இயல் விருதை, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் பாவண்ணன் அவர்களுக்கு வழங்குகிறது.

பாவண்ணன் 1980 களில் எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களின் தலைமுறையை சேர்ந்தவர். 'தீபம்' என்னும் இதழில் வெளிவந்த முதல் சிறுகதையை தொடர்ந்து சிற்றிதழ்களிலும், பெரிய இழழ்களிலும் இவர் இன்றுவரை தொடர்ந்து எழுதுகிறார்.

தமிழ் சிறுகதைகளையும், தமிழில் வெளிவந்த பிறமொழிச் சிறுகதைகளை ளயும் முன்வைத்து திண்ணை இணைய இதழில் 'எனக்குப் பிடித்த கதைகள்' என்னும் தலைப்பில் இவர் அந்தக் கதைகளில் காணப்பட்ட அழகியலையும் வாழ்வியலையும் இணைத்து புரிந்துகொள்ளும் விதமாக எழுதிய நூறு விமர்சனக் கட்டுரைகள் மிகப்பெரிய வாசக கவனத்தை பெற்றன.

ஐம்பது தமிழ்க் கவிஞர்களின் படைப்புகளை முன்வைத்து 'உயிரோசை' இணையதளத்தில் 'மனம் வரைந்த ஓவியம்' எனும் தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை. ரசனையை அடிப்படையாகக் கொண்டு இவர் எழுதிய பல இலக்கியக் கட்டுரைகள் இவரை தமிழ் அழகியல் விமர்சகர்களின் முன் வரிசையில் வைக்கத் தகுதியாக்கின.

பாவண்ணன், வளவனூர் என்னும் சிற்றூரில் அக்டோபர் 20, 1958 அன்று பிறந்தார். பள்ளிக் கல்வியை வளவனூரிலும் புகுமுக வகுப்பை விழுப்புரம் அரசுக் கல்லூரியிலும், பட்டப்படிப்பை புதுச்சேரி தாகூர் கலைக் - கல்லூரியிலும் படித்து தேறினார். கோட்டப் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவருடைய கவிதை தொகுதிகள் மூன்றும், சிறுகதை தொகுதிகள் 21ம், நாவல்கள் மூன்றும். குறுநாவல்கள் மூன்றும், கட்டுரை தொகுப்புகள் 34ம், சிறுவர் இலக்கியத் தொகுப்புகள் ஒன்பதும், மொழிபெயர்ப்புகள் (கன்னடத்திலிருந்து) 24 நூல்களும்,(ஆங்கிலத்திலிருந்து) ஐந்து நூல்களும் (எல்லாமாக 99 நூல்கள்) இதுவரை வெளியாகியுள்ளன.

இவர் பெற்ற இலக்கிய விருதுகள்:

  • புதுச்சேரி அரசு சிறந்த நாவல் விருது - 1987 இலக்கியச் சிந்தனை சிறந்த நாவல் விருது-1995.
  • கதா அமைப்பு சிறந்த சிறுகதை விருது - 1995.
  • சாகித்திய அகாதெமி சிறந்த மொழிபெர்ப்பு விருது - 2005
  • தமிழக அரசு சிறந்த குழந்தை இலக்கிய விருது - 2009
  • சுஜாதா உயிர்மை அறக்கட்டளை சிறுகதை தொகுப்பு விருது என்.சி.பி.எச் சிறந்த கட்டுரை தொகுதி விருது - 2015
  • இந்திய அமெரிக்க வாசகர் வாழ்நாள் சாதனை விருது - 2018 விளக்கு அமைப்பு புதுமைப்பித்தன் விருது-2019
  • எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு நினைவு விருது - 2021

இவருடைய இலக்கிய படைப்புகள் சக எழுத்தாளர்களின் மதிப்பை பெற்றவை. முக்கியமாக இவருடைய மொழிபெயர்ப்புகள் தமிழ் இலக்கியத்தின் வளத்தை பெருக்கின. இவருடைய தமிழ் இலக்கியச் சாதனைகளைப் பாராட்டி 2022ம் ஆண்டுக்கான இயல் விருதை வழங்குவதில் தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது.

by Swathi   on 27 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு. ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு.
பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர் பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர்
பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம் பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம்
சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார்
அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு
தியா (காண்டீபன் இராசையா) தியா (காண்டீபன் இராசையா)
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா  அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா 
அமெரிக்கத் தமிழ் எத்தாளர்கள் - 25, ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, டெக்சாஸ் அமெரிக்கத் தமிழ் எத்தாளர்கள் - 25, ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, டெக்சாஸ்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.