அமெரிக்காவின் ஹூஸ்டன் தமிழ் இருக்கை, கனடாவின் டொரொண்டோ தமிழிருக்கை, லண்டனின் ஐக்கிய இராச்சி

 • Venue
  • Online
  • Wahsington D.C
  • USA
 • Organizer

  ValaiTamil Academy

Events Schedule
DATE TIMINGS
24 Apr 2021 10:00AM EST

 

உலகெங்கும் உருவாகிவரும் தமிழ் வளர்ச்சி மற்றும் ஆய்வுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தும் அமெரிக்காவின் ஹூஸ்டன் தமிழ் இருக்கை , கனடாவின் டொரொண்டோ தமிழிருக்கை, லண்டனின் ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை ஆகிய அமைப்புகளுக்கு நிதிதிரட்டும் சிறப்பு தமிழிசை நிகழ்வு..
டொரண்டோ தமிழ் இருக்கைக்கு நன்கொடை திரட்டும் பொருட்டு வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் (Valaitamil Music Academy ) மற்றும் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை இணைந்து வழங்கும் தமிழிசை விழா வரும் ஏப்ரல் 24, சனிக்கிழமை கிழக்கு நேரம் 10 மணிக்கு மிகப்பெரிய அளவில் திட்டமிடப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் தமிழிசையின் ஆகச்சிறந்த மேடை ஆளுமைகள் கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன் , பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் இன்னிசையேந்தல் திருபுவனம் குரு.ஆத்மநாதன் ஆகியோருடன் ஐந்து இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டு ஒன்றரை மணி நேரம் நிகழ்சசியை வழங்கவிருக்கிறார்கள். இதில் தமிழும் இசையும் என்ற தலைப்பில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்கள் சிற்றுரை வழங்குகிறார்.
தமிழிசையின் தொன்மையை வியந்து போற்றும் வண்ணம் சித்திரை சிறப்பு நிகழ்ச்சியாக கீழ்க்காணும் பல்வேறு பக்தி, சங்க இலக்கியங்கள் , கவிஞர்களின் பாடல்களிலிருந்து பல்வேறு பாடல்கள் இடம்பெறும். தவறாமல் கலந்துகொண்டு தமிழிசையை பருகவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்..
சிலப்பதிகாரம் - மணிமேகலை - புறநானூறு - தொல்காப்பியம் - திருப்பாவை - தேவாரம் - திருப்புகழ் - திருவருட்பா - முத்துத்தாண்டவர் - அருணாச்சலக் கவிராயர் - மாரிமுத்தாப்பிள்ளை - பாரதியார் - பாரதிதாசன் - சங்கரதாஸ் சுவாமிகள்
நம் அடுத்த தலைமுறைக்கு உதவும் தமிழ் இருக்கைகளுக்கு தாராளமாக நிதியளித்து கைகொடுப்போம். .

அமெரிக்காவின் ஹூஸ்டன் தமிழ் இருக்கை, கனடாவின் டொரொண்டோ தமிழிருக்கை, லண்டனின் ஐக்கிய இராச்சி