ABOUT US |
தமிழில் ஒரு அரிய தகவல் களஞ்சியம் உருவாக்கவேண்டும் என்ற எம்முடைய நீண்டநாள் முயற்சியின் வெளிப்பாடே வலைத்தமிழ்.காம் ஆகும். இதன் மூலம் தமிழின் சிறப்பை, தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளை தொகுப்பதும், அவற்றை உலகின் எட்டுத்திக்கும் உள்ள நம் தமிழ்ச் சொந்தங்களுக்கு கொண்டு சேர்ப்பதும், நம் மொழியை , பண்பாட்டை மறவாமல், நம் தமிழ் உறவுகள் ஒருவரோடு ஒருவர் உறவாட பாலம் அமைத்துக்கொடுப்பதும் இந்த இணையத்தின் நோக்கமாகும். இதுபோன்ற முயற்சிகள் வெற்றியடைவது வாசகர்களாகிய உங்கள் கையில்தான் இருக்கிறது. வணிக வாய்ப்பு இல்லாத தமிழ் சூழலில், ஒரு இணையத்தை தொடர்ந்து நடத்துவதும், தரமான தகவல்களை அளிப்பதும் மிகக் கடுமையான போராட்டமாகும். இருப்பினும், தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் நம் மொழிக்கு செய்யும் சிறிய பங்களிப்பாக இதை உங்கள் ஆதரவுடன் தொடர்கிறோம்... நீங்கள் எழுதாளராக இருந்தால் உங்கள் படைப்புகளை எங்களுக்கு அனுப்புங்கள், வாசகர்களாக இருந்தால் உங்கள் கருத்த்துக்களை எழுதுங்கள்... உங்கள் சிந்தனைகளை தமிழ் உலகிற்கு கொண்டுசெல்லவே இந்த வலைத்தளம். வலைத்தமிழ் ஆசிரியர் குழு கீழ்காணும் கொள்கைகளை /நம்பிக்கைகளை அடிப்படைகளை கொண்டு செயல்படுகிறது. நம் தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தல். புதிய தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்தல். நல்ல தரமான தகவல்களை வெளியிட்டு, அரசியல், மதம், சாதிக்கு அப்பாற்பட்டு நடுநிலையுடன் தமிழ் சமுதாய முன்னேற்றத்தை முதன்மையாகக் கொண்டு செயல்படுதல். தமிழ் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் மொழி ஆய்வு, வளர்ச்சி சார்ந்த சிந்தனைகள், காணொளிகள், உரையாடல்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் சாதனையாளர்கள் என அனைவரையும் வலைத்தமிழ் வாயிலாக சந்தித்து அவர்களின் கருத்துக்களை, சிந்தனைகளை பதிவுசெய்தல் மற்றும் பாதுகாத்தல். தமிழில் உள்ள அரிய மொழி சார்ந்த தகவல்களை சேகரித்து தொகுத்தல். தமிழால் இணைவோம்! தமிழர்களாய் உயர்வோம்! வாழ்க தமிழ்! என்றும் உங்கள் ஆதரவுடன்.... வலைத்தமிழ் ஆசிரியர் குழு. |