முனைவர் மு. இளங்கோவனின் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி

 • Venue
  • அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மன்ற அரங்கு
  • (AUTEAA / AUAC), தூய தாமசு மலை, சென்னை ( No 07, PCM Colony Street, St. Thomas Mount,
  • Chennai
  • Tamil nadu - 600 016 )
  • India
 • Organizer

  முனைவர் மு. இளங்கோவன்

  • 9442029053
Events Schedule
DATE TIMINGS
11 Mar 2023 5:30PM - 7:00PM IST

அன்புடையீர், வணக்கம். சென்னையில் முனைவர் மு. இளங்கோவனின் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுகின்றது. அழைப்பினை இப்பதிவில் இணைத்துள்ளோம். வாய்ப்புடையோர் வருகைபுரிந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். இந்த நிகழ்ச்சியை வயல்வெளிப் பதிப்பகமும், வலைத்தமிழ் இசைக்கல்விக் கழகமும் ஒருங்கிணைத்துள்ளன.

நாள்: 11.03.2023 காரி(சனி)க் கிழமை நேரம்: மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை
இடம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மன்ற அரங்கு
(AUTEAA / AUAC), தூய தாமசு மலை, சென்னை
( No 07, PCM Colony Street, St. Thomas Mount, Chennai -600 016 )
தலைமை: முனைவர் வி.ஜி. சந்தோஷம்
தலைவர், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம்
நூல் வெளியீடு, சிறப்புரை: முனைவர் ம. இராசேந்திரன்,
மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்
முதல்படி பெறுதல்: வழக்கறிஞர் ப. இராம முனுசாமி, புதுச்சேரி
அருளாசியுரை:
தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள்
இருபதாம் பட்டம், மயிலம் பொம்மபுர ஆதீனம்
வரவேற்புரை: பொறியாளர் சிங்கை இளங்கோ
பங்கேற்போர்:
இன்னிசையேந்தல் திருபுவனம் குரு. ஆத்மநாதன் / முனைவர் இ. கே. தி. சிவகுமார் / பேராசிரியர் உலகநாயகி பழநி / முனைவர் வ. மு. சே. ஆண்டவர் / அ.அறிவன் / பொறியாளர் தமிழ் இயலன் / / வலைத்தமிழ் ச. பார்த்தசாரதி / மு. கலைவாணன்
ஏற்புரை: முனைவர் மு. இளங்கோவன்
அனைவரும் வருக!
அழைப்பின் மகிழ்வில்
வயல்வெளிப் பதிப்பகம்,
வலைத்தமிழ் தமிழிசைக் கல்விக்கழகம்
தொடர்புக்கு: 9442029053
நூல் அறிமுகம்:
கடந்த ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழை நடுவணாகக் கொண்டு இயங்கிய இசைத்தமிழ்க் கலைஞர்களைப் பற்றி அறியும் ஆர்வத்தில் தேடியபொழுது சற்றொப்ப 5764 பேர் குறித்த பட்டியல் ஒன்றை உருவாக்க முடிந்தது. என்னொருவனிடம் இப்பட்டியல் இருப்பதைவிட, உலகத் தமிழர்களின் கையினுக்குக் கிடைத்தால் பட்டியலில் விடுபட்ட இசைத்தமிழ்க் கலைஞர்களின் பெயரும் இப்பட்டியலில் இணையும் என்பதால் இசைத்தமிழ்க் கலைஞர்கள் – நோக்கீட்டு நூல் என்னும் பெயரில் வெளியிட உள்ளோம்.
கடந்த ஈராண்டுகளாக இந்த நூலினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். 304 பக்கம் கொண்ட இந்த நூலின் விலை 350 உருவா ஆகும். ஒற்றை வரியில் இசைத்தமிழ்க் கலைஞர்களின் சிறப்புகளை இந்த நூல் அடையாளப்படுத்துகின்றது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நோர்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள இசைதமிழ்க் கலைஞர்களின் பணிகளை இந்த நூலின் வழியாக அறிய இயலும். வாய்ப்பாட்டு அறிஞர்கள், கருவியிசை அறிஞர்கள், ஓதுவார்கள், இசையாய்வு அறிஞர்கள், இசைத்தமிழ்ப் புரவலர்கள் குறித்த விவரங்களும் இந்த நூலில் உள்ளன.

முனைவர் மு. இளங்கோவனின் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி