இங்கு சுவாமி சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்தபடி ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, பிற
சமயத்தினர் கோயிலை அடைத்து சுவாமி வழிபாட்டை நிறுத்தி வைத்திருந்தனர். சம்பந்தர் பதிகம் பாடி கதவை திறந்து மீண்டும் வழிபாட்டிற்கு
கொண்டு வந்தார். அவர் எளிதாக சுவாமியை தரிசனம் செய்ய பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்து
கொடுத்ததாம். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள இரண்டு நந்திகளும் இரு வேறு திசைகளில் திரும்பியபடியே இருக்கிறது.இங்கு சிவனுக்கு
ஒப்பிலாமணீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இங்குள்ள ராஜகோபுரம் 7 நிலைகளைக் கொண்டது.தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் உள்ள
மலையின் மீது இக்கோயில் அமைந்துள்ளது.கருவறையை சுற்றி அகழி போன்ற அமைப்பு இருக்கிறது. தல விநாயகர் வலம்புரி விநாயகராக சுயம்புவாக
இருக்கிறார். பிரகாரத்தில் உள்ள முத்துக்குமாரர் ஒரு முகமும், ஆறு கரங்களுடன் காட்சி தருகிறார்.
இங்கு சுவாமி சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்தபடி ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, பிற சமயத்தினர் கோயிலை அடைத்து சுவாமி வழிபாட்டை நிறுத்தி வைத்திருந்தனர். சம்பந்தர் பதிகம் பாடி கதவை திறந்து மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். அவர் எளிதாக சுவாமியை தரிசனம் செய்ய பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்து கொடுத்ததாம்.
இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள இரண்டு நந்திகளும் இரு வேறு திசைகளில் திரும்பியபடியே இருக்கிறது.இங்கு சிவனுக்கு ஒப்பிலாமணீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இங்குள்ள ராஜகோபுரம் 7 நிலைகளைக் கொண்டது.தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் உள்ள மலையின் மீது இக்கோயில் அமைந்துள்ளது. கருவறையை சுற்றி அகழி போன்ற அமைப்பு இருக்கிறது. தல விநாயகர் வலம்புரி விநாயகராக சுயம்புவாக இருக்கிறார். |