கோபுரத்தில் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக திருக்கோயில் அமைந்துள்ளது. கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது.இது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பை ஒட்டி அமைந்துள்ளது.சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக ஆனது.அதோடு சென்னை பெசன்ட் நகர் பீச் மிகவும் புகழ் பெற்றது.
இந்த பீச்சுக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளதால் "பக்தர்கள் தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் என்ற ஊரில் இருக்கும் பெருமாள் கோயிலைப் போலவே இக்கோயில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது மிகவும் விசேஷம். அருமையான சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் உள்ள சுதைகள் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. |