தாயார் பெருந்தேவி சுவாமிக்கு வலதுபுறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். நவக்கிரகங்களுக்கு தனிச்சன்னதி உள்ளது. இச்சன்னதியில் ஒரு
தாமரையின் மீதுள்ள பீடத்தின் மீது அனைத்து கிரகங்களும் இருக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது.இங்குள்ள உற்சவர்பவளவண்ணப்பெருமாள்
பிரசித்தி பெற்றவர். இவர் இடது கையில் தண்டம் வைத்தபடி காட்சி தருகிறார். பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில்
உற்சவர் பவளவண்ணர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தாயார் சன்னதி முன்மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அப்போது பவளவண்ணருக்கும்,பெருந்தேவி
தாயாருக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று முழுதும் பெருமாள், தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். அப்போது விசேஷ திருமஞ்சனங்கள்
நடக்கும். மறுநாள் காலையில் இவர் மீண்டும் மூலஸ்தானம் திரும்புகிறார்.திருக்கல்யாணத் தின்போது திருமணமா காதவர்கள் சுவாமிக்கு
மட்டைத்தேங்காய் நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள். பின்பு இந்த தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜையறையில் வைத்து
வணங்குகிறார்கள். இவ்வாறு செய்வதால் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. திருமண வரம் அருளும் பெருமாள் என்பதால் இவருக்கு, "கல்யாண
வரதராஜப்பெருமாள்' என்ற பெயரும் உண்டு.
தாயார் பெருந்தேவி சுவாமிக்கு வலதுபுறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். நவக்கிரகங்களுக்கு தனிச்சன்னதி உள்ளது. இச்சன்னதியில் ஒரு தாமரையின் மீதுள்ள பீடத்தின் மீது அனைத்து கிரகங்களும் இருக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள உற்சவர்பவளவண்ணப்பெருமாள் பிரசித்தி பெற்றவர். இவர் இடது கையில் தண்டம் வைத்தபடி காட்சி தருகிறார். பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது.
அன்று காலையில் உற்சவர் பவளவண்ணர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தாயார் சன்னதி முன்மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அப்போது பவளவண்ணருக்கும்,பெருந்தேவி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று முழுதும் பெருமாள், தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். அப்போது விசேஷ திருமஞ்சனங்கள் நடக்கும். மறுநாள் காலையில் இவர் மீண்டும் மூலஸ்தானம் திரும்புகிறார்.
திருக்கல்யாணத் தின்போது திருமணமா காதவர்கள் சுவாமிக்கு மட்டைத்தேங்காய் நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள். பின்பு இந்த தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜையறையில் வைத்து வணங்குகிறார்கள். இவ்வாறு செய்வதால் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. திருமண வரம் அருளும் பெருமாள் என்பதால் இவருக்கு, "கல்யாண வரதராஜப்பெருமாள்' என்ற பெயரும் உண்டு. |