LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- அமெரிக்க அணுகுமுறை

அமெரிக்க மனோபாவம்- 3

இக்கட்டுரையிலும், இனிவரும் கட்டுரையிலும், நான் ஒரு கண்ணாடி அணிந்துகொண்டு அமெரிக்காவைப் பார்க்கிறேன். அந்தக் கண்ணாடியின் மூலம் அமெரிக்காவிலுள்ள நல்ல விஷயங்களையும் வளர்ந்துவரும் இந்தியா எடுத்துக் கொள்ளவேண்டிய செய்திகளையும் கொடுப்பதே இக்கட்டுரையின் நோக்கம்,இந்நாட்டிலுள்ள விவாதத்திற்குரிய பல விஷயங்களை நாம் அறிந்திருந்தாலும், அவை நம் கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பாற்பட்ட விசயங்களாகக் கருதி அவைகுறித்து இங்கே எழுதப்போவதில்லை.


ஒரு தனிமனிதன் அல்லது நாட்டின் முனேற்றம் என்பது அந்த மனிதன் எண்ணங்கள் அல்லது நாட்டு மக்களின் எண்ணங்களைப் பொறுத்தே அமைகிறது, எனவே, இம்மாதம் அமெரிக்க மனோபாவம் குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

 

    இக்கட்டுரையில் ஒரு இந்தியனாக, தமிழனாக அமெரிக்காவை உற்றுநோக்கும் போது கிடைத்த விஷயங்களை தொகுத்திருக்கிறேன். அமெரிக்கர்களிடம் பல்வேறு விஷயங்கள் மிகவும் நேர்த்தியானவை, நாம் கற்றுகொள்ள வேண்டியவை, அதில் முக்கியமான ஒன்று உண்மையே பேசுவது, அமெரிக்கர்கள் பெரும்பாலும் எதையும் மறைக்காமல் அப்பட்டமாகக் கூறிவிடுவார்கள், அவர்களின் பேச்சில் ஒரு நம்பகத் தன்மை இருக்கும். அலுவலகத்தில் ஒரு விடுப்பு எடுக்க வேண்டுமென்றால் கூடத் தெளிவாக என் வீட்டுச் செல்லப்பிராணியைப் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவே விடுப்பு தேவை என்பார்கள். அது எவ்வளவு சிறிய விசயமோ அல்லது பெரிய விசயமோ மறைக்காமல் உண்மையைச் சொல்லி விடுவார்கள். ஆனால் நம் ஊரில் சிறு வயதில் பள்ளியில் விடுப்பு எடுக்கவேண்டுமென்றால்  தாத்தாவுக்கு உடல் நிலை சரியில்லை என்று அடுத்தவரை திருப்திபடுத்துவற்கான காரணத்தைத் தேட ஆரம்பித்து, வேலைக்குச் சென்று ஓய்வு பெரும் வரை பல்வேறு சந்தர்ப்பங்களில் அது தொடர்கிறது.

 

அடுத்து அமெரிக்கர்கள் எதற்கும் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுப்பதில்லை. அதைக் குற்றமாக அவமானமாகக் கருதுகிறார்கள் . எங்கு சென்றாலும் டோக்கன் வசதி அல்லது அப்பாயின்ட்மென்ட் வசதி இருக்கும். எனவே நீங்கள் எப்படிப்பட்டவராக இருப்பினும் உங்கள் நேரம் வரும்வரை காத்திருக்கவேண்டும் எத்தகைய சிபாரிசும் இங்கே இயலாத காரியம், நம் நாட்டில் மருத்துவமனைக்குச் சென்றால் கூட அங்குள்ள யாரையாவது தெரிந்திருந்தால் அல்லது வசதி படைத்தவர்களாக இருந்தால் உங்களை ராஜமரியாதையுடன் மருத்துவரிடம் நேரிடியாக அழைத்துச் செல்வார்கள், இதை மருத்துவரும் அனுமதிப்பார் , மற்றவர்களும் தவறில்லை என்றோ அல்லது நாம் என்ன செய்யமுடியும் என்று கருதும் மனோபாவம் தான் நிலவுகிறது.

 

மேலும் நம் ஊரில் குறுக்கு வழியில் செல்வதை புத்திசாலித்தனமாகக் கருதுகிறோம். இங்கு அதுபோல் நடந்தால் உடனே என்னுடைய உரிமை பறிபோகிறது என்று களத்தில் இறங்கிவிடுவார்கள்.

 

அடுத்ததாக அமெரிக்கர்கள், மற்றவர்களையும் அவர்களின் உரிமை மற்றும் திறமையையும் மதிப்பவர்கள் யாரையும் குறைத்து மதிப்பிடுவதோ, தலையில் வைத்துக் கொண்டாடி ஆராதிப்பதோ இருக்காது, மனிதனை மனிதனாகப் பார்ப்பார்கள் எதிரில் சந்திப்பவரிடம் “ ஹலோ “ என்று ஆரம்பித்து பொதுவான விசயங்களைச் சகஜமாகப் பேசுவார்கள், கணவன், மனைவி, தாய், தந்தை, மகன், மகள் என்று எத உறவானாலும் அவரவர்க்கு உரிய உரிமையில்தனிமனித சுதந்திரத்தில் தலையீடு இருக்காது, ஒருவர் உரிமையை மற்றவர்கள் மதித்தாலே வாழ்வில் ஒரு ஒழுங்கு வந்துவிடுகிறது, அதுவே இன்றைய பல்வேறு வாழ்வியல் பிரச்னைக்கு முடிவாக அமையும்.

 

அதுபோல் அமெரிக்கர்கள் சக மனிதர்களைப் பார்க்கும்பொழுது பெரியவர், சிறியவர், அறிவாளி, முட்டாள், பணக்காரர், ஏழை என்ற எற்றத்தாழ்வுகளைப் பார்க்கப் மாட்டார்கள். ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவர் அந்நிறுவனத்தின் துப்புரவுத்தொளிலாளியை எதிரில் காண நேர்ந்தால் அவர்கள் செல்லும் தூரம் வரை எவ்வித சங்கோஜமும் இல்லாமல் சகஜமாக பொதுவிசயம் குறித்துப் பேசிக்கொண்டு செல்வார்கள். இங்கே எவ்வித இக்கட்டான இறுக்கமும் இருக்காது, காரணம் அமெரிக்கர்கள் தொழில், பதவி, தகுதி மற்றும் மனிதத்தன்மை ஆகியவற்றை சேர்த்துக் குழப்பிக் கொள்வதில்லை, அலுவலகத்தில் நான் தலைமைப் பொறுப்பில் இருக்கிறேன். வெளியில் வந்துவிட்டால் நான் சாதாரண மனிதன் என்ற போக்கு இருக்கும் இங்கு தகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள், நம்மூரில் நாம் செய்யும் தொழில், படிப்பு, தகுதி, நாம் யார் போன்றவற்றை வைத்துத்தான் மரியாதை கொடுப்பதா இல்லையா? எந்த அளவில் கொடுப்பது ? என்பதைத் தீர்மானிக்கிறோம். ஒவ்வொருவரும் அடிப்படையில் ஓர் மனிதர் என்பதை மறந்துவிடும் மனோபாவம் உள்ளது.

 

அமெரிக்கர்களிடம் மணிக்கணக்கில் பேசினாலும், நம் உள் விஷயங்களில் அத்துமீறி வருவதோ, கேள்விகேட்டு தெரிந்துகொள்ள முயற்சிப்பதோ இருக்காது. அதை அநாகரிகமாகக் கருதுவார்கள்.

 

   நம் கருத்துக்களைக் காது கொடுத்துக் கேட்பார்கள் பிடிக்கவில்லையெனில் அதிகம் வெளியில் காண்பிக்க மாட்டார்கள், பேசும்போது பெரும்பாலும் இது  என கருத்து(திஸ் ஈஸ் மை ஒபினியன்)என்றே முடிப்பார்கள். எனவே உங்களுடைய கருத்து மாறுபட்டதாயினும் தெரிவிப்பதற்கு வழி இருக்கும். மனிதர்கள் மாற்றுக் கருத்துடையவர்கள் என்பதை ஏற்றுக் கொள்வதால் அந்த கருத்துவேறுபாட்டை வைத்து அந்தமனிதரை வேறுப்பதோ, வருத்தப்படுவதோ இருக்காது, நான் பார்த்தவரை இந்தியர்கள் பெரும்பாலும் பேச ஆரம்பிக்கும்முன்  “நோ” என்று சொல்லித்தான் பேச்சைத் துவங்குவார்கள், உதாரணமாக, நம்மூரில் இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது “ இல்லை” நான் என்ன சொல்கிறேன் “ என்றால் என்றுதான்  ஒருவரின் கருத்தை எதிர்கொள்கிறோம். ஒரே நிகழ்வு, மருத்துவருக்கு ஒரு கண்ணோட்டத்தையும் . கவிஞனுக்கு வேறுகண்ணோடத்தையும் , சாதாரண மனிதனுக்கு வேறு கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தலாம். இல்லையா? எனவே தான் நினைத்ததுதான் சரி என்றோ. அடுத்தவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றோ கருதுவது எவ்விதத்தில் சரியாக இருக்கும்? நம்மூரில் அப்பா சொல்வதை பிள்ளையோ, கணவன் சொல்வதை மனைவியோ நாம் சொல்வதை பக்கத்து வீட்டுக்காரரோ ஏற்றுகொள்ள வில்லை எனில் நாம் கோபத்தின் உச்சிக்கே சென்று விடுகிறோம்.

 

காரணம் நாம் சொல்வதை அனைவரும் மாற்றுக் கருத்தின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் இதுவே இன்றைய அரசியல் மனோபாவமாக மாறி ஒரு திட்டத்தைக் குறித்து மாற்றுக்கருத்து சொல்லும் போது அவரை அழைத்து அதில் உள்ள நல்ல விஷயங்களை கலந்தாலோசிக்க முற்படாமல். அவரைத் தவறாக விமர்சிப்பதும், அவரை பேசவிடாமல் தடுப்பதும் நம்முடைய அரசியல் கலாச்சாரமாக மாறி வருகிறது, அமெரிக்கர்கள் பேசிக்கொள்ளும்போது ஆலோசனை செய்கிறார்களா அல்லது விவாதிக்கிறார்களா என்ற தெளிவு இருக்கும், நம்மூரில் பெரும்பாலும் ஆலோசிப்பது, விவாதிப்பது, இரண்டும் ஒன்றாகவே தோன்றும்.

 

  -தொடரும் 

-ச.பார்த்தசாரதி

by Swathi   on 21 Jan 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சிலேடை-பகடி சிலேடை-பகடி
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
கருத்துகள்
05-Mar-2014 04:29:46 sachithanantham said : Report Abuse
மிக்க பயனுள்ளதாக இருந்தது. நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.