LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் நூல்கள் (Thirukkural Books)

Thirukkural-English Translation and Explanation - Dr SM Diaz IPS PhD

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளி தோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-32

நாள்: 29/09/2023 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6:30-07:45 மணி

நூல்: Thirukkural-English Translation and Explanation
ஆசிரியர்: Dr SM Diaz IPS PhD
முனைவர் எஸ் எம் டயஸ் (1919-2000)

திருக்குறளுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புகள், எல்லிஸ் (1812) அவர்களிடமிருந்து தொடங்கி தற்போதுவரை, 80க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள், 2000ம் ஆண்டு வெளியான, Dr எஸ்.எம். டயஸ் அவர்களது மொழிபெயர்ப்பு முக்கியமானதாகும். டயஸ் அவர்கள் ஒவ்வொரு குறளுக்கும் மொழியாக்கம் மட்டுமின்றி விரிவான விளக்கத்தையும் செய்துள்ளார். இந்நூலுக்கு முன்பு வந்த ராஜாஜி, கஸ்தூரி சீனிவாசன், வி.வி.எஸ். ஐயர், கே.எம். பாலசுப்பிரமணியம் போன்றோரின் மொழிபெயர்ப்புகளில் மாற்றம் செய்தும் அவசியமான இடத்தில் அப்படியே பயன்படுத்தியும் இருக்கிறார். "மொழிபெயர்ப்பில் இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களையும் கருத்தில்கொண்டு, செய்யப்பட்டுள்ள சிறந்த முயற்சி", என இந்த நூலைப் பற்றிக் குறிக்கிறார் ஒரு ஆய்வாளர். அருட்செல்வர் பொள்ளாச்சி ந. மகாலிங்கம் அவர்களின் ஆதரவுடன் இராமானந்த அடிகளார் அறக்கட்டளையால் (2000) வெளியிடப்பட்டுள்ள இந்த நூலை வர்த்தமானன் பதிப்பகம் அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது.

நூல் அறிமுகம் செய்வார்: Dr க. பாலமுருகன் IRS

அரியலூரில் உள்ள வாரியங்காவல் என்ற சிற்றூரைச் சார்ந்தவர். பொறியியல் பட்டம் பெற்றவர். 1997ம் ஆண்டிலிருந்து மத்திய குடிமைப்பணியில் இருப்பவர். தற்போது பெங்களூரில் சுங்கம் மற்றும் GST துறையில் கூடுதல் தலைமை இயக்குனராக உள்ளார். மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்றவர். திருக்குறள் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களிலும் வரலாறு-பண்பாடு ஆகியவற்றில் ஆர்வமுடன் ஈடுபட்டு, பேசியும் எழுதியும்.

by Swathi   on 29 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.