சிகரம் மழலையர், இளம்சிறார் அறிவகம்
DATE | TIMINGS |
---|---|
26 Aug 2018 | 09.30 AM |
“கதைகள்”- காதுகளில் விதைக்கப்படும் விதைகள்....எழுத்து மொழி உருவாவதற்கு முன்,எந்த சாதனங்களும் இல்லாத போது செய்திப் பரிமாற்றம் என்பது செவிவழியாகவே இருந்தது... மிகவும் எளிமையான அதே சமயம் இன்றளவும் வலிமையான பரிமாற்றம் செவிகள் வழியே..... உண்மையில் கதைகள் அஷ்டாவதானி,தசாவதானி ஏன் சதாவதானிகள்....
நம் கற்பனையை நிமிண்டுபவை;சிந்திக்க வைப்பவை;நிஜம் தாண்டி..நடக்க முடிந்தவை தாண்டி யோசிக்கவைப்பவை... தனிக்குடும்பம் என்பது வந்த பின்...பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வது கட்டாயமான தேவையான பிறகு... தாத்தா பாட்டியை அவ்வப்போது பார்ப்பதில் நாம் அதிகம் இழப்பவை கதைகள்...இழந்ததை மீட்டெடுக்க..பழைய பொக்கிஷத்தை மீண்டும் குழந்தைகளுக்கு தரும் சிறு முயற்சி.. சிகரத்தின் மூலமாக ... தமிழக அளவில் சிறந்த மழலை கதைசொல்லிகளில் ஒருவரான... வனிதா அத்தை என சிறார்களால் அன்போடு அழைக்கப்படும் திருமதி வனிதாமணி கதை சொல்லி சிறுவர்களுடன் கதைக்க வருகிறார்... குழந்தைகளே....வாருங்கள் கதையாடுவோம்.... 26.8.18 ஞாயிறு காலை சிகரம் அறிவகத்தில்...