நவில்தொறும் நூல்நயம் நிகழ்வு-57

  • Venue
    • online
    • Chennai
    • Tamil nadu
    • India
  • Organizer

    valaitamil

    • valaitamil.com
Events Schedule
DATE TIMINGS
05 Apr 2024 6.30pm to 7.45pm

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-57
நூல்: தெய்வப் புலவர் திருவாய்மொழி
நூலாசிரியர்: பேரா அரங்க. இராமலிங்கம்
நாள்: 05/04/2024 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 06:30-07:45 மணி
*நூல்-நூலாசிரியர் குறிப்பு*:
நூலின் ஆசிரியர் பேராசிரியர் அரங்க இராமலிங்கம் அண்மையில் தமிழக அரசின் "இலக்கிய மாமணி" விருது பெற்றவர் .சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறையின் மேனாள் தலைவர். அப் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் இருக்கையின் தலைவராகவும் இருந்திருக்கிறார். ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தெய்வப் புலவர் திருவாய்மொழி, என்ற தன் நூலில் வள்ளுவர் காட்டும் பேருண்மைகளை ஆய்வுரையாகவும் செய்யுளுரையாகவும் யாத்திருக்கிறார். சங்க இலக்கியம் மற்றும் பக்தி இலக்கியங்களில் இருந்து பல்வேறு மேற்கோள்களைக் கையாண்டு தனது உரைக்குத் தெளிவும் உறுதியும் சேர்த்துள்ளார். இந்நூலை வானதி பதிப்பகத்தார் (2019) வெளியிட்டுள்ளனர்.
*நூல் குறித்த நயவுரை*:
திரு கா. வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி IRS (ஓய்வு)
கா வி ஶ்ரீ என்கிற காஞ்சிபுரம் விசுவநாதன் ஸ்ரீநிவாஸமூர்த்தி தினமணி கதிரில் 1970ஆம் ஆண்டு வெளிவந்த 'இப்படியும் சில ஆத்மாக்கள்' என்ற சிறுகதை மூலம் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். 1979இல் 'விசுவரூபம்' என்ற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. 'பாப்பாப் பாட்டில் பகவத்கீதை' கா.வி.ஸ்ரீயின் ஆய்வு நூல். இதைத் தொடர்ந்து வெளிவந்த 'சொல் பொருள் அறிவோம்' இவரது மொழியியல் ஆர்வத்தையும் அறிவையும் முன்வைக்கிறது.
'பாரதி ஓர் அத்வைதியே' என்ற இவரது நூல் 2016ஆம் ஆண்டு வெளியானது. 'சிந்தனை என்னும் மல்லல் பேர்யாறு' இவரது குறிப்பிடத்தக்க கட்டுரைத் தொகுப்பு.சமீபத்தில் வெளியான இவரது சிறுகதைத் தொகுப்பு 'சம்ஸ்காரம்'.பாரதியியலிலும் திருக்குறளிலும் தொடர்ந்து ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டு வருகிறார். 'நாடோடி மனம்', 'வேதாந்த மரத்தில் சில வேர்கள்' ஆகிய இரண்டு ஆய்வு நூல்கள் 2019இல் வெளியிடப்பட்டன.
கா.வி.ஸ்ரீ 02.02.1946இல் ராய வேலூரில் பிறந்தவர். நடுவண் அரசில் சுங்க-கலால்துறையில் பணியாற்றி உதவி ஆட்சியராக ஓய்வு பெற்றவர். இவருக்குத் திரைப்படங்களிலும் இசையிலும் ஆர்வம் உண்டு, சமஸ்கிருத மொழியில் பயிற்சி பெற்று தனது மொழி, எல்லைகளையும் விரிவுபடுத்திக் கொண்டுள்ளார் கா.வி.ஸ்ரீ.

நவில்தொறும் நூல்நயம்வெள்ளிதோறும் இணைய வழிகுறள் நூல்கள் அறிமுகத் தொடர்நிகழ்வு-57

நூல்: தெய்வப் புலவர் திருவாய்மொழி
நூலாசிரியர்: பேரா அரங்க. இராமலிங்கம்

நாள்: 05/04/2024 வெள்ளிக்கிழமைநேரம்: மாலை 06:30-07:45 மணி

*நூல்-நூலாசிரியர் குறிப்பு*:

நூலின் ஆசிரியர் பேராசிரியர் அரங்க இராமலிங்கம் அண்மையில் தமிழக அரசின் "இலக்கிய மாமணி" விருது பெற்றவர் .சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறையின் மேனாள் தலைவர். அப் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் இருக்கையின் தலைவராகவும் இருந்திருக்கிறார். ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தெய்வப் புலவர் திருவாய்மொழி, என்ற தன் நூலில் வள்ளுவர் காட்டும் பேருண்மைகளை ஆய்வுரையாகவும் செய்யுளுரையாகவும் யாத்திருக்கிறார். சங்க இலக்கியம் மற்றும் பக்தி இலக்கியங்களில் இருந்து பல்வேறு மேற்கோள்களைக் கையாண்டு தனது உரைக்குத் தெளிவும் உறுதியும் சேர்த்துள்ளார். இந்நூலை வானதி பதிப்பகத்தார் (2019) வெளியிட்டுள்ளனர்.

*நூல் குறித்த நயவுரை*:திரு கா. வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி IRS (ஓய்வு)