பனையேற்றம்
DATE | TIMINGS |
---|---|
15 Jun 2018 | |
16 Jun 2018 | |
17 Jun 2018 |
நெகிழும் தன்மையுடையதும், வலுவானதுமான பனையோலைகளை தங்கள் திணைக்கு ஏற்றார்போல வார்த்துக்கொண்டனர் தமிழர். பனையையே திணையாகக் கொண்டோர் பனையேறுவோர்.
ஒரு நிகழ்விற்குக் காட்சிப்படுத்த, பதநீர் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் கருவிகளை நெல்லை மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த பனையேறி ஒருவரிடம் வாங்கச் சென்றிருந்தோம். அவர் அவற்றை ஒரு கோணிப்பையில் இட்டு சரடிற்குப்பதில் பனை ஓலை கீற்று ஒன்று கொண்டு கட்டிக் கொடுத்தது கோவை வரை வந்தது.
அவர்கள் வீட்டிலேயே முட்டைகள் போட்டு வைத்திருந்தனர் ஒரு ஓலைப் பெட்டியில். காய்கறிகளை பாதுகாத்து வைத்திருந்தனர் மற்றொரு ஓலைப் பெட்டியில். நாங்கள் கேட்டதிற்கு இணங்க பதநீர் பெட்டி ஒன்றும் அப்போது செய்து கொண்டிருந்தார் அவர். சென்னையில் பணிபுரியும் தனது மகனுக்கு ஓலைப் பாய் ஒன்று செய்யவேண்டும் என்றும் கூறினார்.
இவற்றில், பதநீர் ஊற்றினாலும் ஒழுகாதவாறு இறுக்கமாகவும் நேர்த்தியாகவும் பின்னப்படும் பதநீர் பெட்டி தற்போது பயன்பாட்டில் இல்லை. மற்றவை பனையைச் சார்ந்தோரின் வீடுகளில் மட்டுமே வாழ்கின்றன.
மீண்டும் நமது வீடுகளில் பனையோலைப் பொருட்கள் வெவ்வேறு கொள்கல பெட்டிகளாய், தோட்டத்துத் தொட்டிகளாய், பாய்களாய், சிறார் விளையாட்டுப் பொருட்களாய், அலங்காரப் பொருட்களாய் இடம்பெறவேண்டும். அவற்றையும் பனை போல தற்சார்பாய் நாமே பின்னிக் கொள்ள வேண்டும் என்கிற விருப்பத்தின் பேரில் இந்த மூன்று நாட்கள் பயிற்சியை அறிவிக்கிறோம். ஆனி 1,2,3 (சூன் 15, 16, 17) தேதிகளில், மதுரை மாவட்டம், M.கல்லுப்பட்டியில் (உசிலம்பட்டி வழி) இப்பயிற்சி நடைபெற உள்ளது.
பின்னல்களையுமே பனையிடமிருந்தே கற்றனர் மாந்தர். பனையின் ஓலைகள் காய்ந்து விழுந்தப் பின் பனையுடன் அவ்வோலைகளின் மட்டைகள் பின்னலிட்டு பனையுடனே ஒன்றியிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அதிலிருந்தே நாம் பின்னல் பயிலுவதைத் துவங்கலாம். ஆனி 1 வெள்ளி அன்று அருகே மேலப்பட்டியில் உள்ள பனங்காடுகளிற்குச் செல்லலாம், மட்டைகள் கொண்டு பனைகள் இடும் பின்னல்களைக் கற்கலாம். தவிர, பதநீர் குடிக்கலாம், கருப்பட்டி தயாரிப்பதை நேரில் காணலாம், பனையேறிகளுடன் உரையாடலாம்.
பதிவிற்கு திரு இராசு 9941690646.
பயிற்சிக் கட்டணம் ரூ. 600. குழந்தைகளுக்குக் கட்டணமில்லை.
அடிப்படையான தங்குமிடமும் உணவும் வழங்கப்படும்.
பயிற்சி அறிவிப்புப் படம் வடிவமைத்தவர் : திரு. மகேசு பிரபு (98941 89868)