தெனாலிராமன் படத்தை தொடர்ந்து, வைகைப் புயல் வடிவேலு - யுவராஜ் தயாளன் கூட்டணியில் உருவாகி வரும் அடுத்த படம் எலி. இந்த படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி சதிஷ் குமார் தயாரிக்கிறார்.
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படபிடிப்பு இரவு பகலாக இடைவிடாமல் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக சதா நடிக்கிறார். வித்யாசாகர் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.
ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் போன்று உளவாளியான வடிவேலு செய்யும் காமெடி அட்டகாசம் தான் எலி படத்தின் கதையாம்.முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளை கவரும் படியான காமெடி காட்சிகள் படத்தில் நிறைந்து இருக்கும் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிகின்றன.
பின்னி மில் வளாகத்தில் பிரமாண்ட செட்கள் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம் எலி படத்தின் படபிடிப்பு. தொடர்ந்து படப்பிடிப்பில் இருக்கும் எலி ஏப்ரல் இறுதியில் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று மே மாதம் திரைக்கு வருகிறதாம்.
இந்தப் படத்தில் புகழ்பெற்ற சிறப்பம்சம் ஒன்றும் உண்டு. பூனைகள் துரத்தும்போது எலி எப்படி சமாலிக்குமோ, அதே போன்று சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சியில், வைகை புயல் வடிவேலு எலியாக தனது நடிப்பில் பிரம்மாண்டமான சண்டைக் காட்சியில் நகைச்சுவையால் அசத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
|