பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் கபாலி படத்தைப் பற்றி நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
கபாலி படத்தின் போட்டோ சூட் சில தினங்களுக்கு முன்பு AVM ஸ்டுடியோவில் நடைபெற்றது. எந்த கெட்டப்பும் வெளியே தெரிந்து விடக்கூடாது என போட்டோ சூட்டிற்கு பெரிய அளவில் பாதுகாப்பு போடப்பட்டது. இருப்பினும் உள்ளிருந்த ஒரு சிலர் ரஜினியின் கெட்ட- அப் பற்றி வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.
கபாலி படத்தில் சூப்பர் ஸ்டாரின் கெட்டப் சால்ட் ,பெப்பர் மற்றும் ஐவரி கலரில் "ஹேர் ஸ்டைல்" தாடி, கிட்டதட்ட 20 வருடங்களுக்கு முன் வெளியான "தர்மதுரை " படத்தின் கெட்ட-அப் மாதிரி இருக்குமென சொல்லப்படுகிறது இந்த படத்திற்கு பிரபல ஹிந்தி படத்தின் மேக்க-அப் ஆர்ட்டிஸ்ட் தான் இந்த படத்திற்கு மேக்க-அப் மேன். நடிகை ராதிகா ஆப்தேவும் 80களில் வரும் கெட்-அப்பில்தான் இருந்ததாக கூறப்படுகிறது..நடிகை தன்ஷிகா ரஜினிக்கு மகளாக நடிக்க, "அட்டக்கத்தி" தினேஷ் மகனாக நடிக்கிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் கபாலி படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|