இத்தலத்து மூலவர் மேற்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய சீடர்களுடன் காட்சி
தரும் தட்சிணாமூர்த்தி, விழுப்புரம் அருகிலுள்ள கோலியனூர் வாலீஸ்வரர் கோயிலில், சப்தகன்னியருடன் காட்சி தருகிறார். சனி பகவான் இங்கு தனி
சன்னதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனிபகவான். இவரது பெயர்ச்சியின்
அடிப்படையில் பாவ புண்ணியங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையில் நீதிமான் போல செயல்பட்டு அதற்கேற்ற பலன்களை
தருபவர். இவரது பார்வையில் சனிபகவான் உட்பட யாரும் தப்ப முடியவில்லை. ஒவ்வொருவரின் ஜாதகத்தில் ஆயுள்காரணமாக விளங்குவதால்
உலகின் சகல ஜீவராசிகளுக்கும் ஆயுளை தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவர். இத்தனை சிறப்பு வாய்ந்த சனீஸ்வர பகவான் பொதுவாக மற்ற
கோயில்களில் நவக்கிரகங்களுடன் தனி சன்னதி அமைந்திருக்கும். ஆனால் ஒரு சில பரிகாரக் கோயில்களில் திருநள்ளாறு, குச்சனூர் போன்ற தனி
சன்னதிகளில் மூர்த்தியாக காட்சி தருகிறார். அதைப் போலவே இந்த அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயிலில் ஈசான்ய மூலையில் தெற்கு நோக்கி
தனி சன்னதியில் சனிபகவான் காட்சி தருகிறார்.
இத்தலத்து மூலவர் மேற்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய சீடர்களுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, விழுப்புரம் அருகிலுள்ள கோலியனூர் வாலீஸ்வரர் கோயிலில், சப்தகன்னியருடன் காட்சி தருகிறார். சனி பகவான் இங்கு தனி சன்னதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனிபகவான்.
இவரது பெயர்ச்சியின் அடிப்படையில் பாவ புண்ணியங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையில் நீதிமான் போல செயல்பட்டு அதற்கேற்ற பலன்களை தருபவர். இவரது பார்வையில் சனிபகவான் உட்பட யாரும் தப்ப முடியவில்லை. ஒவ்வொருவரின் ஜாதகத்தில் ஆயுள்காரணமாக விளங்குவதால் உலகின் சகல ஜீவராசிகளுக்கும் ஆயுளை தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவர்.
இத்தனை சிறப்பு வாய்ந்த சனீஸ்வர பகவான் பொதுவாக மற்ற கோயில்களில் நவக்கிரகங்களுடன் தனி சன்னதி அமைந்திருக்கும். ஆனால் ஒரு சில பரிகாரக் கோயில்களில் திருநள்ளாறு, குச்சனூர் போன்ற தனி சன்னதிகளில் மூர்த்தியாக காட்சி தருகிறார். அதைப் போலவே இந்த அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயிலில் ஈசான்ய மூலையில் தெற்கு நோக்கி தனி சன்னதியில் சனிபகவான் காட்சி தருகிறார். |