|
|||||
உளுந்து களி |
|||||
தேவையானவை : 1. நெல் அரிசி, சாமை அரிசி – கால் கிலோ 2. உளுத்தம் பருப்பு – கால் கிலோ 3. ஏலக்காய் பொடி - அரை ஸ்பூன் 4. நல்லெண்ணெய் - 3 ஸ்பூன் 5. கருப்பட்டி - 1 கப் செய்முறை : 1. நெல் அரிசியையும், சாமை அரிசியையும் நன்றாக கழுவி, வாணலியில் கொட்டி சிவக்க வறுக்கவும். அதனுடன் உளுந்தையும் சிவக்க வறுத்து, சேர்த்து மிசியில் மாவாக அரைக்கவும். 2. கருப்பட்டியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொதிக்க விடவும். அதனுடன் 3 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும். 3. நன்கு கொதித்து வரும்போது அரைத்து வைத்துள்ள மாவை தூவி கட்டி இல்லாமல் கை விடாமல் கிளறவும். 4. கலவை ஒட்டாமல் வந்ததும் ஏலக்காய் பொடியை தூவி இறக்கவும். சுவையான, சத்தான உளுந்து களி ரெடி. |
|||||
by Swathi on 06 Aug 2014 7 Comments | |||||
Tags: Ulundhu Kali உளுந்து களி | |||||
|
கருத்துகள் | |||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|