|
||||||||
தொட்டில் |
||||||||
பாப்பாக்கள் இனி
விரல் சூப்ப மாட்டார்கள்.
ஒன்பதாம் நூற்றாண்டு யுகமா?
விரல் சூப்ப
கை நக்க
காட்டுப் பீ விட்டுக் கத்த.....
றப்பர் பொம்மையிலே உடலுறவு கொண்டு
கருக்கட்டும் காலத்துச் சிசுக்கள்
வாப்பாவின் பெயரென்ன?
அவர்களுக்குத் தெரியும்.
அவர் வந்த வழியென்ன?
அவர்களுக்குப் புரியும்.
உம்மா 'இசாக்காலம்' புளிமாங்காய் சப்புகையில்
உப்புக்கல் வைத்துச் சப்பச் சொல்வார்கள்.
கருப்பைக்குள் இருக்கையிலே ஆகாரம் விழும்போது
ருசிபார்த்து குறைநிறையை தெரிவிக்கும் குழந்தைகள்.
நம்மைப்போல் கைசூப்பி
அண்ணார்ந்து பூப்பார்த்து
முலைப்பால் குடிப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை
விழுந்தாற்போல் அவர்கள்
எழும்பி நடப்பார்கள்.
எழும்பி நடக்கையிலே காலுக்குள் சிக்குகின்ற
பொக்கணிக் கொடியையும் கத்தரித்துக் கொள்வார்கள்.
பாப்பாக்கள் இனி
விரல் சூப்ப மாட்டார்கள்.
இந்தத் தொட்டில்
தாலாட்டுப் பாட்டெல்லாம்
ஆடவும் பாடவும் 'உருப்படிகள்' கிடையாதே!
பாப்பாக்கள் இனி விரல் சூப்ப மாட்டார்கள். ஒன்பதாம் நூற்றாண்டு யுகமா? விரல் சூப்ப கை நக்க காட்டுப் பீ விட்டுக் கத்த.....
றப்பர் பொம்மையிலே உடலுறவு கொண்டு கருக்கட்டும் காலத்துச் சிசுக்கள் வாப்பாவின் பெயரென்ன? அவர்களுக்குத் தெரியும். அவர் வந்த வழியென்ன? அவர்களுக்குப் புரியும்.
உம்மா 'இசாக்காலம்' புளிமாங்காய் சப்புகையில் உப்புக்கல் வைத்துச் சப்பச் சொல்வார்கள். கருப்பைக்குள் இருக்கையிலே ஆகாரம் விழும்போது ருசிபார்த்து குறைநிறையை தெரிவிக்கும் குழந்தைகள்.
நம்மைப்போல் கைசூப்பி அண்ணார்ந்து பூப்பார்த்து முலைப்பால் குடிப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை
விழுந்தாற்போல் அவர்கள் எழும்பி நடப்பார்கள். எழும்பி நடக்கையிலே காலுக்குள் சிக்குகின்ற பொக்கணிக் கொடியையும் கத்தரித்துக் கொள்வார்கள். பாப்பாக்கள் இனி விரல் சூப்ப மாட்டார்கள். இந்தத் தொட்டில் தாலாட்டுப் பாட்டெல்லாம் ஆடவும் பாடவும் 'உருப்படிகள்' கிடையாதே!
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|