LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF
- அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள்

வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் -3

வட அமெரிக்காவில் அச்சு நூல்களை வெளியிட்ட அனைத்து எழுத்தாளர்களையும் அடையாளம் கண்டு அவர்களின் விவரங்களைத் தொகுத்து வலைத்தமிழ்.காம் எழுத்தாளர்கள்->அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் (https://www.valaitamil.com/literature_tamil-writers_usa-tamil-writers/) பகுதியில் வெளியிடுதல் , ஒவ்வொருவரும் எழுதியுள்ள நூல்களின் அட்டைப்படத்துடன், நூல்களின் சுருக்கங்களை, கிடைக்கும் பதிப்பகம் உள்ளிட்ட விவரங்களுடன் பதிவிடுதல் என்று தொடர்ந்து செய்துவருகிறோம். இடத்தொடரின் முதல் கூடலில் ஈரோடு புத்தகத்திருவிழா திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களும், இரண்டாவது கூடலில் சந்தியா பதிப்பகம் திரு.நடராஜன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். எதிர்வரும் மூன்றாவது கூடலில் கலைமாமணி முனைவர்.லேனா தமிழ்வாணன் அவர்கள் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு சிறப்பிக்கவிருக்கிறார்.
 
இந்நிகழ்வில் ஆறு எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.
1. திருமிகு.வி.கிரேஸ் பிரதிபா , Georgia
2. திருமதி. நாகேஸ்வரி அண்ணாமலை , New Hampshire
3. திருமிகு.மீ.மணிகண்டன் , Texas
4. திருமிகு.ஜெயாமாறன் , Georgia
5. திருமிகு.இரம்யா ரவீந்திரன் , North Carolina
6. திருமிகு.சீனுவாசன் பாலகிருஷ்ணன் ,Texas
 
வட அமெரிக்காவில் உள்ள எழுத்தாளர்கள்களை ஊக்குவித்தல் , நூல்களை பதிப்பிக்க பதிப்பாளர்களை தொடர்புபடுத்துதல், புத்தகக் கண்காட்சிகளில் நூல்கள் இடம்பெற தொடர்புகளை ஏற்படுத்துதல், எழுத்தாளர்களை தமிழ்ச்சங்கங்கள் , தமிழ்ப்பள்ளிகள் அறிந்துகொண்டு சிறப்பு செய்து பயன்படுத்துதல் உள்ளிட்ட பலவற்றிற்கு இக்கூடல் பங்களிக்கிறது.
 
மேலும் வலைத்தமிழ் பன்னாட்டு மாதாந்திர இதழில் ஒவ்வொரு மாதமும் எழுத்தாளர்களின் நூல்களை கட்டுரையாகப் பகிர்வதும் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியை எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர் புளோரிடா மாகாணத்திலிருந்தும் , திருமிகு.சுபா காரைக்குடி நியூஜெர்சி மாகாணத்திலிருந்தும் ஒருங்கிணைக்கிறார்கள்.
 
தேதி/நேரம்: நவம்பர் 19, 8:30PM (அமெரிக்க கிழக்கு நேரம் ), சனிக்கிழமை
நவம்பர் 20,7:00PM (இந்திய நேரம் ) , ஞாயிற்றுக்கிழமை
நேரலையை www.ValaiTamil.TV -ல் காணலாம்.
 
குறிப்பு:
----------
இதுவரை இந்நிகழ்வில் கலந்துகொள்ளாத, அச்சு நூல் வெளியிட்டுள்ள எழுத்தாளர்களை அடுத்தடுத்த நிகழ்வில் கலந்துகொள்ள உங்கள் விவரங்களை shorturl.at/lstwX இந்த சுட்டியில் பகிர்ந்து உதவவும். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு உங்கள் எழுத்தாளர் நண்பர்களை அறிமுகப்படுத்தவும்.
by Swathi   on 28 Nov 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அறமனச் செம்மல்' சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள் அறிவிப்பு. அறமனச் செம்மல்' சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள் அறிவிப்பு.
பாரதிதாசன் பிறந்தநாளை ‛உலகத் தமிழ் நாள்’ ஆகக் கொண்டாட அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் தீர்மானம். பாரதிதாசன் பிறந்தநாளை ‛உலகத் தமிழ் நாள்’ ஆகக் கொண்டாட அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் தீர்மானம்.
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு. ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு.
பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர் பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர்
பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம் பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம்
சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார்
அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு
தியா (காண்டீபன் இராசையா) தியா (காண்டீபன் இராசையா)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.