LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

காசி காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் 13 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு புத்தகங்களை வெளியிட்டார் பிரதமர் மோடி

உத்தரப்பிரதேசத்தின் காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே நீண்டகாலப் பாரம்பரிய, கலாச்சாரத் தொடர்பு இருந்து வருகிறது. இதைப் புதுப்பிக்கும் நோக்கில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் ஒரு மாதக் காலத்திற்கு காசி- தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
**************************************
மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியை, கலாச்சாரம், ஜவுளி, ரயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், தகவல் ஒளிபரப்பு உள்ளிட்ட அமைச்சகங்களும், உத்தரப்பிரதேச அரசும் இணைந்து நடத்துகின்றன.
***************************************
வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து பிரதமர் மோடி பங்கேற்றார். இன்று தொடங்கும் காசி தமிழ்ச் சங்கமம், டிசம்பர் 19 ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெற உள்ளது.
****************************************************
 13 மொழிகளில் திருக்குறள் 
****************************************
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் திருக்குறள் மொழி பெயர்ப்பு புத்தகத்தைப் பிரதமர் மோடி வெளியிட்டார்.
அதன்படி சம்ஸ் கிருதம், இந்தி, மராத்தி, ஒடியா, மலையாளம், சவுராஷ்டிரி, நரிக் குறவர்களின் வாக்ரிபோலி, படுகு, நேபாளி, அரபி, உருது, பாரசீகம், கெமர் ஆகிய 13 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
சிஐசிடிஎல் சார்பில் ஏற்கெனவே 2012-ல் பஞ்சாபி மற்றும் மணிப்புரியிலும் 2014-ல் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் 2015-ல் குஜராத்தியிலும் திருக்குறள் வெளியாகியுள்ளது.
**********************************************
76 இந்திய மொழிகளிலும் திருக்குறள் 
*********************************************
இதன் தொடர்ச்சியாக உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் திருக்குறளைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஐரிஷ், தாய், மலாய், பர்மீஸ், சுவிடீஷ், டேனிஷ், கொரியன், ஜப்பானிய உள்ளிட்ட 10 அயலக மொழிகளிலும் அஸ்ஸாமி, துளு, போஜ்புரி, சந்தாலி, கொங்கணி, பேடோ, சிந்தி, மைதிலி, மால்டோ உள்ளிட்ட 76 இந்திய மொழிகளிலும் திருக்குறள் வெளியாக உள்ளது.
********************************
பிரதமர் மோடி, 100 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்று மத்தியச் செம்மொழி நிறுவனத்திடம் விருப்பம் தெரிவித்ததே இதற்குக் காரணம் ஆகும்.
*******************************************
தஞ்சாவூரைச் சேர்ந்த முனைவர் எம்.கோவிந்தராஜன், இந்தியில் திருக்குறளை மொழி பெயர்த்துள்ளார். இவர் மொழி களை இணைக்கும் அலகாபாத் அமைப்பான பாஷா சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளியில் இந்தி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பிரதமர் மோடியின் `சாக்ஷி’எனும் நூலை ‘அன்னையின் திருவடிகளுக்கு 2020’ எனும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
****************************************
ஒலிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, விளக்கம்
**********************************
சமஸ்கிருதத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேராசிரியர் எஸ்.ராஜகோபாலன், அரபியில் ராமநாதபுரம் பேராசிரியர் ஏ.பஷீர் அகமது ஜமாலி, உருதுவில் சென்னை பல்கலை உதவிப் பேராசிரியர் முனைவர் அமானுல்லா, பாரசீகத்தில் இந்திய விமானப்படையின் முன்னாள் விமானி எஸ்.சாத்தப்பன் எனப் பலர் மொழிபெயர்த்துள்ளனர்.
***************************************
இந்த மொழிபெயர்ப்பு அனைத்தும் அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப ஒலிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, விளக்கம், அருஞ்சொற்பொருள் விளக்கம் எனப் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது.
*********************************
இந்தநிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.,முருகன், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இசையமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இளையராஜா, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
**********************************
இருபிராந்தியங்களிலிருந்தும் அறிஞர்கள், மாணவர்கள், தத்துவவாதிகள், வர்த்தகர்கள், கலைஞர்கள் போன்றோர் அறிவு மற்றும் கலாச்சாரத்தை பகிர்ந்து கொள்வது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

உத்தரப்பிரதேசத்தின் காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே நீண்டகாலப் பாரம்பரிய, கலாச்சாரத் தொடர்பு இருந்து வருகிறது. இதைப் புதுப்பிக்கும் நோக்கில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் ஒரு மாதக் காலத்திற்கு காசி- தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியை, கலாச்சாரம், ஜவுளி, ரயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், தகவல் ஒளிபரப்பு உள்ளிட்ட அமைச்சகங்களும், உத்தரப்பிரதேச அரசும் இணைந்து நடத்துகின்றன.

வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து பிரதமர் மோடி பங்கேற்றார். இன்று தொடங்கும் காசி தமிழ்ச் சங்கமம், டிசம்பர் 19 ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெற உள்ளது.

13 மொழிகளில் திருக்குறள் 

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் திருக்குறள் மொழி பெயர்ப்பு புத்தகத்தைப் பிரதமர் மோடி வெளியிட்டார்.
அதன்படி சம்ஸ் கிருதம், இந்தி, மராத்தி, ஒடியா, மலையாளம், சவுராஷ்டிரி, நரிக் குறவர்களின் வாக்ரிபோலி, படுகு, நேபாளி, அரபி, உருது, பாரசீகம், கெமர் ஆகிய 13 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.சிஐசிடிஎல் சார்பில் ஏற்கெனவே 2012-ல் பஞ்சாபி மற்றும் மணிப்புரியிலும் 2014-ல் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் 2015-ல் குஜராத்தியிலும் திருக்குறள் வெளியாகியுள்ளது.

76 இந்திய மொழிகளிலும் திருக்குறள்

இதன் தொடர்ச்சியாக உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் திருக்குறளைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஐரிஷ், தாய், மலாய், பர்மீஸ், சுவிடீஷ், டேனிஷ், கொரியன், ஜப்பானிய உள்ளிட்ட 10 அயலக மொழிகளிலும் அஸ்ஸாமி, துளு, போஜ்புரி, சந்தாலி, கொங்கணி, பேடோ, சிந்தி, மைதிலி, மால்டோ உள்ளிட்ட 76 இந்திய மொழிகளிலும் திருக்குறள் வெளியாக உள்ளது.

பிரதமர் மோடி, 100 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்று மத்தியச் செம்மொழி நிறுவனத்திடம் விருப்பம் தெரிவித்ததே இதற்குக் காரணம் ஆகும்.

தஞ்சாவூரைச் சேர்ந்த முனைவர் எம்.கோவிந்தராஜன், இந்தியில் திருக்குறளை மொழி பெயர்த்துள்ளார். இவர் மொழி களை இணைக்கும் அலகாபாத் அமைப்பான பாஷா சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளியில் இந்தி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பிரதமர் மோடியின் `சாக்ஷி’எனும் நூலை ‘அன்னையின் திருவடிகளுக்கு 2020’ எனும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

ஒலிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, விளக்கம்

சமஸ்கிருதத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேராசிரியர் எஸ்.ராஜகோபாலன், அரபியில் ராமநாதபுரம் பேராசிரியர் ஏ.பஷீர் அகமது ஜமாலி, உருதுவில் சென்னை பல்கலை உதவிப் பேராசிரியர் முனைவர் அமானுல்லா, பாரசீகத்தில் இந்திய விமானப்படையின் முன்னாள் விமானி எஸ்.சாத்தப்பன் எனப் பலர் மொழிபெயர்த்துள்ளனர்.

இந்த மொழிபெயர்ப்பு அனைத்தும் அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப ஒலிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, விளக்கம், அருஞ்சொற்பொருள் விளக்கம் எனப் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது.

இந்தநிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.,முருகன், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இசையமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இளையராஜா, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இருபிராந்தியங்களிலிருந்தும் அறிஞர்கள், மாணவர்கள், தத்துவவாதிகள், வர்த்தகர்கள், கலைஞர்கள் போன்றோர் அறிவு மற்றும் கலாச்சாரத்தை பகிர்ந்து கொள்வது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

by Kumar   on 19 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.