நமது நாட்டின் கப்பல் படையில் கமிஷண்ட் ஆபிசர்ஸ் பிரிவில் யுனிவர்சிடி என்ட்ரி ஸ்கீம் வாயிலாக பல்வேறு பிரிவுகளிலுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள்: இந்தியக் கப்பல் படையில் எக்சிகியூடிவ் பிரிவில் ஜெனரல் சர்வீஸ்-எக்ஸ், பைலட், அப்சர்வர், ஐ.டி., போன்ற பிரிவுகளிலும், டெக்னிகல் பிரிவில் இன்ஜினியரிங் பிராஞ்ச், எலக்ட்ரிகல் பிராஞ்ச், நேவல் ஆர்கிடெக்சர் போன்ற பிரிவுகளிலும், சப்மரைன் டெக்னிகல் பிரிவில் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிகல் பிராஞ்சுகளிலும் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது:
01.07.2016 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 02.07.1992க்கு பின்னரும், 01.07.1997க்கு முன்னரும் பிறந்தவராக இருக்கவேண்டும்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் தற்சமயம் இன்ஜினியரிங் படிப்புகளான பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்பதோடு குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகள் ஏதாவது ஒன்றில் இன்ஜினியரிங் படிப்பை படித்துக் கொண்டிருப்பது கட்டாயம் தேவைப்படும்.
தேர்ச்சி முறை :
நேவல் கேம்பஸ் செலக்சன் முறையில் தேர்ச்சி இருக்கும். இந்த நேர்காணலை பெங்களூரு, கோவை, போபால், விசாகப்பட்டினம் போன்ற ஏதாவது ஒரு மையத்தில் எதிர்கொள்ள வேண்டும். நேர்காணல் தேர்வுகள் வரும் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 19.07.2015
கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.joinindiannavy.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
|