LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- சிங்கப்பூர்

சிங்கப்பூரில் 12ஆவது உலகத் தமிழாசிரியர் மாநாடு செப்டம்பர் 7,8 ஆகிய தேதிகளில் மிகச்சிறப்பாக நடந்தேறியது

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 7,8 ஆகிய தேதிகளில் 12ஆவது உலகத் தமிழாசிரியர் மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த பல தமிழ் கல்வி அமைப்புகளை சார்ந்த அறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியும், கலந்துகொண்டும் சிறப்பித்தனர். இந்த உலகத் தமிழாசிரியர் மாநாடு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. முதல் உலகத் தமிழாசிரியர் மாநாடு 1992 ஆம் ஆண்டு சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் இடம்பெற்றது. அதன்பின், 2005 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் இம்மாநாட்டைச் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ஏழாண்டுகளுக்குப்பின், மீண்டும் இம்மாநாடு நான்காவது முறையாகச் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் இடம்பெறுகிறது.

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், உலகத் தமிழாசிரியர் பேரவை, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

'பன்மொழிச் சூழலில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தல்' என்பது மாநாட்டின் கருப்பொருளாகக் கொண்டு

சிங்கப்பூர் உட்பட மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா, மொரீஷியஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 பேராளர்கள் மாநாட்டில் கலந்துகொள்வர்.

இந்த நிகழ்ச்சியில் உலகேந்துமிருந்து வந்த 50 ஆய்வுக் கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. மாநாட்டின் கருப்பொருளான, பன்மொழிச்சூழலில் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் தொடர்பான கட்டுரைகளைத் தமிழாசிரியர்கள் படைத்தனர்.

செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். முதன்மையுரையை பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா அவர்கள் வழங்கினார்.


நிகழ்ச்சியில் கல்வி அமைச்சின் முயற்சியில் சிங்கப்பூர் எழுத்துத் தமிழ் தரவகம் வெளியிடப்பட்டது. இதை சிறப்பு விருந்தினர் திரு கா. சண்முகம் வெளியிட்டார்.

இந்த மாநாட்டில் பேசப்பட்ட சில தலைப்புகள் :

  • தமிழ்மொழி கற்பிப்பதில் சாவல்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில்  முனைவர் ஆ. ரா.சிவகுமாரன், இணைப் பேராசிரியர், தேசியக் கல்விக் கழகம், சிங்கப்பூர் உரையாற்றினார்.
  • தமிழ் மொழி கற்றல் கற்பித்தலில் வீட்டுமொழியின் பங்கும் பயனும்.
  • மலேசியப் பன்மொழிச் சூழலில் தமிழை முதல் மொழியாகக் கற்கும் பல்கலைக் கழக மாணவர்களிடையே பிறமொழிகளின் தாக்கம் ஓர் ஆய்வு.
  • அமெரிக்கா நாட்டில் தமிழ்க்கல்வி சூழல் -திருமதி வெற்றிச்செல்வி ஆஸ்திரேலியாவில் தமிழ்க்கல்வி - மெல்பர்ன் பேராளர் திரு சுகுமாறன்.

  • இதை சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத் தலைவர், ஏற்பாட்டுக் குழுத் தலைவர்  திரு சி.சாமிக்கண்ணு அவர்கள் குழுவினருடன் மிகழ்ச்சிறப்பாக திட்டமிட்டிருந்தார்.

 

மாநாட்டின் நிறைவுரையை சிறப்பு விருந்தினர் திரு சீ ஹொங் டாட், மூத்த துணை அமைச்சர் வர்த்தக, தொழில் அமைச்சு, கல்வி அமைச்சு, சிங்கப்பூர். வழங்கினார்.

 

காணொளிகளைக் காண:

12-ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு ,2018- சிங்கப்பூர் - Part 1
https://youtu.be/RhgOnkoj-Ss

12-ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு ,2018- சிங்கப்பூர் - Part 2
https://youtu.be/5Xog6xrjrak

 

 

by Swathi   on 15 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.