LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

2023-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிப்பு

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசை நார்வே வழங்குகிறது. பிற பரிசுகளை ஸ்வீடன் வழங்குகிறது.
******************************************
ñ¼ˆ¶õ‹
******************
ஹங்கேரியில் பிறந்த கட்டாலின் கரிக்கோ, அமெரிக்காவை சேர்ந்த ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
*********************
கரோனா தொற்றுக்கு எதிராக பயனுள்ள எம்ஆர்என்ஏ தடுப்பூசி உருவாக்குவதற்கு இவர்களின் கண்டுபிடிப்புகள் பெரிதும் உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விருது அறிவிப்பு நிகழ்ச்சியில் ஸ்வீடனின் கரோலின்ஸ்கா நிறுவனம் கூறும்போது, “நமது நோய் எதிர்ப்பு அமைப்புடன் எம்ஆர்என்ஏ எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதுபற்றிய நமது புரிதலை இவர்கள் தங்களின் அற்புதமான கண்டுபிடிப்புகள் மூலம் அடிப்படையான மாற்றம் செய்துள்ளனர். இந்த நவீன காலத்தில் மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கிய கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கத்தில் இவர்களின் கண்டுபிடிப்புகள் முக்கியப் பங்காற்றி உள்ளன” என்று தெரிவித்துள்ளது.
**************************
இயற்பியல் 
********************
எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
**********************
விஞ்ஞானிகளான பியரி அகோஸ்தினி, ஃபெரெங்க் க்ரவுஸ் மற்றும் அன்னி எல் ஹூலியர் ஆகியோருக்கு இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியில் அட்டோசெகன்ட் அதிர்வுகளை உருவாக்கும் சோதனை முறைக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
***************************
விஞ்ஞானிகள் மூன்று பேரும் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் உலகிற்குள் இருக்கும் எலக்ட்ரான்களை ஆய்வு செய்வதற்கான கருவியை மனிதகுலத்துக்கு வழங்கிய பங்களிப்புக்காக அங்கீகரிக்கப்படுகிறார்கள். பியரி அகோஸ்தினி, ஃபெர்ங்க் க்ரவுஸ் மற்றும் அன்னி எல் ஹூலியர் ஒளியில் மிகக் குறுகிய துடிப்புகளை உருவாக்கும் வழிமுறைகளை நிரூபித்துள்ளனர். இது எலக்ட்ரான்கள் நகரும் அல்லது விரைவாக ஆற்றலை மாற்றும் விரைவான செயல்முறைகளை அளவிடப் பயன்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
***************************
வேதியியல்
*************************
2023 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மவுங்கி பவேண்டி, அமெரிக்காவை சேர்ந்த லூயி புருஸ், ரஷ்யாவை அலெக்செய் எகிமோவு ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் புள்ளிகள் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்பு ( discovery and synthesis of quantum dots) தொடர்பான ஆய்வு மேற்கொண்டதற்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
***************************
இலக்கியம்
******************************
2023 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸ் என்பவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கவிதை, உரைநடை, சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம் ஆகிய துறைகளில் இவரது பங்களிப்பிற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
*********************************
கடந்த 1959-ம் ஆண்டில் நார்வேநாட்டின் ஹாஜேசண்ட் பகுதியில் ஜான் பாஸ் பிறந்தார். 7 வயதில் மிகப்பெரிய விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். இந்த விபத்து அவரது வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தி பிற்காலத்தில் எழுத்தாளராக உருவெடுக்கச் செய்தது. கடந்த 1983-ம் ஆண்டில் அவரது முதல் நாவல் ரெட்- பிளாக் வெளியானது.
*********************** 
70-க்கும் மேற்பட்ட படைப்புகள்
***************************
இதைத் தொடர்ந்து நாவல், கவிதை, கட்டுரை, நாடகம் என 70-க்கும் மேற்பட்ட படைப்புகளை அவர் உருவாக்கி உள்ளார். அவரது முக்கிய படைப்புகள் சுமார் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. டெல்லி டெலிகிராப் நாளிதழ் வெளியிட்ட உலகின் 100 அறிவுஜீவிகளில் எழுத்தாளர் ஜான் பாஸ் 83-வது இடத்தைப் பிடித்தார். அவருக்கு 2023-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
***************************
அமைதிக்கான நோபல் பரிசு
*******************************
2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாடிட்ல் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி, பலமுறை சிறை சென்ற நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசை நார்வே வழங்குகிறது. பிற பரிசுகளை ஸ்வீடன் வழங்குகிறது.

மருத்துவம்

ஹங்கேரியில் பிறந்த கட்டாலின் கரிக்கோ, அமெரிக்காவை சேர்ந்த ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு எதிராக பயனுள்ள எம்ஆர்என்ஏ தடுப்பூசி உருவாக்குவதற்கு இவர்களின் கண்டுபிடிப்புகள் பெரிதும் உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விருது அறிவிப்பு நிகழ்ச்சியில் ஸ்வீடனின் கரோலின்ஸ்கா நிறுவனம் கூறும்போது, “நமது நோய் எதிர்ப்பு அமைப்புடன் எம்ஆர்என்ஏ எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதுபற்றிய நமது புரிதலை இவர்கள் தங்களின் அற்புதமான கண்டுபிடிப்புகள் மூலம் அடிப்படையான மாற்றம் செய்துள்ளனர். இந்த நவீன காலத்தில் மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கிய கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கத்தில் இவர்களின் கண்டுபிடிப்புகள் முக்கியப் பங்காற்றி உள்ளன” என்று தெரிவித்துள்ளது.

இயற்பியல் 

எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகளான பியரி அகோஸ்தினி, ஃபெரெங்க் க்ரவுஸ் மற்றும் அன்னி எல் ஹூலியர் ஆகியோருக்கு இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியில் அட்டோசெகன்ட் அதிர்வுகளை உருவாக்கும் சோதனை முறைக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் மூன்று பேரும் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் உலகிற்குள் இருக்கும் எலக்ட்ரான்களை ஆய்வு செய்வதற்கான கருவியை மனிதகுலத்துக்கு வழங்கிய பங்களிப்புக்காக அங்கீகரிக்கப்படுகிறார்கள். பியரி அகோஸ்தினி, ஃபெர்ங்க் க்ரவுஸ் மற்றும் அன்னி எல் ஹூலியர் ஒளியில் மிகக் குறுகிய துடிப்புகளை உருவாக்கும் வழிமுறைகளை நிரூபித்துள்ளனர். இது எலக்ட்ரான்கள் நகரும் அல்லது விரைவாக ஆற்றலை மாற்றும் விரைவான செயல்முறைகளை அளவிடப் பயன்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேதியியல்

2023 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மவுங்கி பவேண்டி, அமெரிக்காவை சேர்ந்த லூயி புருஸ், ரஷ்யாவை அலெக்செய் எகிமோவு ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் புள்ளிகள் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்பு ( discovery and synthesis of quantum dots) தொடர்பான ஆய்வு மேற்கொண்டதற்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியம்

2023 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸ் என்பவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கவிதை, உரைநடை, சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம் ஆகிய துறைகளில் இவரது பங்களிப்பிற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1959-ம் ஆண்டில் நார்வேநாட்டின் ஹாஜேசண்ட் பகுதியில் ஜான் பாஸ் பிறந்தார். 7 வயதில் மிகப்பெரிய விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். இந்த விபத்து அவரது வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தி பிற்காலத்தில் எழுத்தாளராக உருவெடுக்கச் செய்தது. கடந்த 1983-ம் ஆண்டில் அவரது முதல் நாவல் ரெட்- பிளாக் வெளியானது.

70-க்கும் மேற்பட்ட படைப்புகள்

இதைத் தொடர்ந்து நாவல், கவிதை, கட்டுரை, நாடகம் என 70-க்கும் மேற்பட்ட படைப்புகளை அவர் உருவாக்கி உள்ளார். அவரது முக்கிய படைப்புகள் சுமார் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. டெல்லி டெலிகிராப் நாளிதழ் வெளியிட்ட உலகின் 100 அறிவுஜீவிகளில் எழுத்தாளர் ஜான் பாஸ் 83-வது இடத்தைப் பிடித்தார். அவருக்கு 2023-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு

2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாடிட்ல் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி, பலமுறை சிறை சென்ற நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

by   on 09 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.