LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

”யாதும் ஊரே யாவரும் கேளிர்” - உலகத் தமிழாராய்ச்சி மற்றும் பேரவை - சிகாகோ மாநாட்டு பாடல் அமெரிக்காவில் சிறப்பாக வெளியிடப்பட்டது..

”யாதும் ஊரே யாவரும் கேளிர்” - உலகத் தமிழாராய்ச்சி மற்றும் பேரவை - சிகாகோ மாநாட்டு பாடல் அமெரிக்காவில் சிறப்பாக வெளியிடப்பட்டது..

 

Song URL:  https://www.youtube.com/watch?v=NtHYz6FuiAc 

வரும் ஜூலை மாதம் அமெரிக்காவில் முதல்முறையாக நடக்கவிருக்கும் 10வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் மையநோக்குப் பாடல் ( Theme song) அமெரிக்காவின் சார்சியா மாகாணத்தில் மிகச்சிறப்பாக வெளியிடப்பட்டது.

தமிழ் இலக்கியத்தின் உச்ச சாதனைகளில் ஒன்றான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற புறநானூற்றுப் பாடலுக்கு, டர்ஹாம் சிம்பொனியுடன் இணைந்து, இசையில் உச்சம் தொட்டிருக்கிறார் இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம். யாதும் ஊரே பாடலின் முதல் வரிக்கேற்ப, பல நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்களை ஒன்றிணைத்து, பல இசை வடிவங்களையும் ஒன்றாய்க் கோர்த்து தமிழ்த்தாய் பெருமைகொள்ளும் அற்புதமான இசைமாலையாய் உருவாகி இருக்கிறது இப்பாடல்.

ஆப்பிரிக்க குரலிசையில் தொடங்கும் பாடல், ராக் இசைக்கு தாவி, பின் ராப், பாப் என்று பயணித்து, பாடகர் கார்த்திக்கின் இனிமையான குரலில் யாதும் ஊரே என்று தொடங்கும்போது ஒரே நிமிடத்தில் உலகைச்சுற்றி நம் ஊருக்கு வந்து சேர்ந்த உணர்வு ஏற்படுகிறது! நடுவில் சீனர்களின் இசை, அரேபிய இசை, மேற்கிந்திய தீவுகளின் காலிப்ஸோ, ஜாஸ், கர்நாடக சங்கீதம் இவற்றுடன் நம் நாட்டுப்புற இசை உற்சாகமாக இணையும் போது, எப்படி இத்தனை இசைவகைகளும் வேறுபாடின்றி இவ்வளவு எளிதாக ஒன்றுடன் ஒன்று கலக்க முடியும் என்ற வியப்பை அளிக்கிறது! கணியன் பூங்குன்றனாரின் சாகா வரம்பெற்ற வரிகளில் 'மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' என்னுமிடத்தில் இசை முழுமை அடைந்து நம் இதயத்தையும், கண்களையும் நிறைக்கிறது.

பிரபல இசை நடத்துனரும், அமெரிக்காவின் 40 பெரிய சிம்பொனி குழுக்களை வழி நடத்தியவருமான மேஸ்ட்ரோ வில்லியம் ஹென்றி கர்ரி வழிகாட்டலில், டர்ஹாம் சிம்பொனி வழங்கியிருக்கும் மேற்கத்திய இசை, தடையற்ற அருவியாய் நம்மேல் பொழிந்து, இப்பாடலை வேறொரு தளத்திற்கு உயர்த்திச் செல்கிறது.

கம்பீரமும், பெருமையும் கலந்து அபாரமாகப் பாடியிருக்கிறார் கார்த்திக். பாடகி பாம்பே ஜெயஸ்ரீ புது உற்சாகம் பாய்ச்சி இருக்கிறார். தமிழ் தெரியாத இத்தாலிய பாப் பாடகி சார்லட் கார்டினாலே, லண்டனைச் சேர்ந்த ராப் இசை பாடகர் தர்ட்டின் பீட்ஸ் இருவரும் தமிழ் வார்த்தைகளைக் கற்று பாடியிருக்கிறார்கள். உக்ரேனைக் சேர்ந்த கிதார் கலைஞர் ஆர்ட்டம் எபிமோவின் ராக் கிதாருடன், ராஜேஷ் வைத்யாவின் கர்னாடக வீணையிசை, ராப் மற்றும் பறையிசை கலக்குமிடம் சிலிர்ப்பூட்டுகிறது.

இசையில் பல வடிவங்களை இணைத்ததைப் போல, பல வகை நடனங்களையும் கலந்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள் வீடியோவில். இசை வடிவங்களுக்கேற்ப பாலே, ஜாஸ், டேப், ஹிப்ஹாப், ஜிப்ஸி ,பரதநாட்டியம், அமெரிக்கர்கள் ஆடும் நம் நாட்டுப்புற நடனம் என்று அலையலையாய் வந்துகொண்டே இருக்கின்றன. மேலும், தமிழர்கள் அதிகமாய் வசிக்கும் பல நாடுகள் பின்னணியில் வந்து செல்வது, பல இனத்தை சேர்ந்த மக்களும் ஒன்றாக நம் உணவை சாப்பிடுவது, ஒன்றாக நடனம் ஆடுவது என்று பாடலின் வரிகளுக்கேற்ப யோசித்து செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ராஜன், டர்ஹாம் சிம்பொனியுடன் இணைந்து ஏழு சங்கத்தமிழ் பாடல்களை முழு இசைத்தொகுப்பாக கொண்டுவரும் பெரும்முயற்சியில் இருக்கிறார். அதைப்பற்றி கூடுதல் தகவல்களைப் பெறவோ, உதவிக்கரம் அளிக்கவோ அவரை பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். ComposerRajan@gmail.com.

In English:
-----------
International Association of Tamil Research (IATR) and FeTNA (Federation of Tamil Sangams in North America) proudly present the theme song of the 10th World Tamil Conference scheduled in the United States of America for the first time!

For one of the greatest and most visionary Tamil Sangam era poetry written 2000 years, “Yathum Oore, Yavarum Kelir”, Composer Rajan has created a grand and matching musical form with Durham Symphony and some of the leading singers of our times.

True to the meaning of the first line, ‘Yathum Oore’, Rajan has collaborated with artists from multiple countries, ethnicities and languages.

The song has an astonishing number of genres fused together- African voices, Rock, Rap, Calypso, Jazz, Pop, Chinese and Mediterranean along with melodic layers woven in Carnatic and western classical.


As the music review website TheBandCampDiaries put it:
Listening “Yathum Oore Anthem” is not just like listening to any other composition. What’s really amazing about this song is that it offers a true, authentic peek at some of the earliest musical traditions in the world. The composition, in fact, features lush soundscapes and tasteful arrangements, inspired by South Indian Classical Music, and pretty much anything in between - including influences from the western world.

America’s acclaimed conductor, Maestro William Henry Curry who has directed 40 large Symphony orchestras in the United States, has lead Durham Symphony that provides a silky backdrop for the lead melody to glide through.


Singer Karthik and Bombay Jayashri have provided a majestic rendition of the song. Italian Pop singer Charlotte Cardinale and London based rapper Thir13een Beatz have learnt Tamil words and provided totally different flavors to the song.

One of the highlights of the song is when the Rock guitars by Ukranian Artem Efimov seamlessly fuse with the Carnatic Veena of Rajhesh Vaidya along with Rap and South Indian folk beats.

The choreographer has tried a similar challenge of fusing 8 different genres of dances to suit the music and has succeeded in the attempt. The team has carefully chosen many ingredients to suit the video like people of different races eating South Indian food, dancing together, showing backgrounds of countries and cities where predominant Tamil populations exist.


Ultimately, “Yathum Oore Anthem” is a hauntingly beautiful track, which doesn’t just showcase the passion behind the work of these musicians, but also their deep respect for timeless musical traditions. From the unique mix of great melodic layers and engaging structures, down to the immediacy of the sound, this release channels a various range of influences to perfection, resulting in a balanced, diverse and exciting tone that will certainly please a very broad audience.

Composer Rajan is leading an effort to create a music album with Durham Symphony for 7 Sangam era poems. He’s reachable at the following email id for any additional information or support. ComposerRajan@gmail.com

by Swathi   on 02 Jun 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.