LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

மூன்று இலட்சம் அமெரிக்க வெள்ளிகள் கொடுத்து ஹூஸ்டனில் தமிழ் இருக்கை அமைய பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளது தமிழ்நாடு அரசு

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை.
வட அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஹூஸ்டனில் தமிழர்களின் முன்னெடுப்பால் ஹூஸ்டன் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ அனைத்து தமிழர்களின் உதவியை அங்கு அமைந்துள்ள தமிழ்ச்சங்கமானது நாடியது. அதன் முதற்க்கட்ட நிதியாக ஒரு கோடி ரூபாயை முதலில் ஹூஸ்டன் நடைபெற்ற சந்திப்பில் அங்குள்ள தமிழர்கள் வழங்கினார்கள்.
 
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க மொத்தம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 16 கோடி தேவைப்பட்டது. நாம் கொடுக்கும் 16 கோடிக்கு இணையாக 16 கோடியை டெக்சாஸ் மாநில அரசு வழங்குகிறது. தேவையான 16 கோடி ரூபாயை சர்வதேச அளவில் அனைத்து தமிழர்களிடமும் திரட்ட முடிவு செய்த நிலையில் அதற்கான முதற்கட்ட நிதியை அமெரிக்கா வாழ் தமிழர்கள் வழங்கி இதற்கான பணியை முன்னெடுத்தனர்.
 
இதனைத் தொடர்ந்து ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கையை ஒருங்கிணைக்க ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கான அமைப்பு ஒன்று நிறுவப்பட்டது. இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக திரு. சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளராக திரு. பெருமாள் அண்ணாமலை ஆகியோர் அமெரிக்க வாழ் தமிழர்கள் மற்றும் உலகளாவிய தமிழ் அமைப்புகளுடன் ஒன்றிணைந்து நிதி திரட்டுக்களுக்கான செயற்ப்பாட்டை முன்னெடுத்தனர். தமிழ் இருக்கையை நிறுவுவதற்கான முதல் தவணையாக 1 மில்லியன் அமெரிக்க வெள்ளிகள் சுமார் 8 கோடி ரூபாய்க்கான இறுதிக்கட்டப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் ஆளும் தமிழக அரசானது இன்று மூன்று இலட்சம் அமெரிக்க வெள்ளிகள் கொடுத்து ஹூஸ்டனில் தமிழ் இருக்கை அமைய பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளது உலகத் தமிழர் நலனில் ஒரு மைல் கல்.
 
மேலும் தமிழ் இருக்கை அமைவதற்கான ஆரம்ப கட்ட நிலையிலிருந்து இன்று வரை நடைபெற்ற கீழ்க்காணும் முக்கிய நிகழ்வுகளை தங்களின் பார்வைக்காக முன்வைத்துள்ளோம்.
 
1.இருக்கைக்கான முதற்க்கட்ட நிதியாக அமெரிக்க ரூபாய் மதிப்பில் 5 லட்சம் அமெரிக்க வெள்ளிகளை நவம்பர் 11 ஆம் தேதி 2021 ல் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திற்கு செலுத்தப்பட்டது.
2.மீண்டும் அடுத்த கட்ட நிதியாக 5 லட்சம் டாலர்களை டிசம்பர் 20 ஆம் தேதி 2022 க்குள் பல்கலைக்கழகத்திற்கு செலுத்த முயற்சியானது மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது
3.2023 ஆம் ஆண்டில் ஹுஸ்டன் தமிழ் இருக்கையில் ஆராய்ச்சிக்கான முன்னெடுப்புகள்,மறுசீராய்வு மேற்க்கொள்ளுதல் மற்றும் கட்டுரைகள் வெளியிடுதலுக்கான பணிகள் துவங்கும்
4.ஆகஸ்ட் 2023 ஆண்டு ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழில் விருப்ப பாடமானது துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
5.பல்கலைக்கழகத்திற்கு செலுத்த வேண்டிய இறுதிக் கட்ட நிதியான ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை 2026 க்குள் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
6.முழு நேர விரிவுளையாளருக்கான சம்பளமானது அவர் பதவி வகிக்கும் காலம் முழுவதும் அளிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகமானது ஏற்றுக்கொண்டுள்ளது
7.இந்திய அரசானது ஹூஸ்டன் பல்கலையில் தமிழைப் பயிற்று விக்க வருகைப் பேராசிரியருக்கான செலவினங்களை ஏற்றுக்கொண்டுள்ளது.
8.ஹூஸ்டன் தமிழ் இருக்கையை மென்மேலும் சிறப்பிக்க அமெரிக்க டெக்சாஸ் மாநிலத்தைச் சார்ந்த டெக்சாஸ் ஆராய்ச்சிக்கான ஊக்குவிப்பு திட்ட அமைப்பானது நிதி நெருக்கடியை சமாளிக்க உதவவும் முன் வந்துள்ளது
9.அமெரிக்காவில் 1971 ஆம் ஆண்டு தொடங்கி வேற்று மொழியை விருப்பப் பாடமாக கற்க ஆர்வமுள்ளவர்களுக்கு தமிழ் மொழியை ஹூஸ்டன் பல்கலைக்கழகமானது நடத்தி வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
10.தொன்மை மற்றும் வணிகம் சார்ந்த ஆராய்ச்சிகள் குறித்த ஆய்வுகள் மேற்க்கொள்ளும் துறையாக ஹுஸ்டன் தமிழ் இருக்கையானது சிறந்து விளங்கும்.
11.ஹூஸ்டன் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் ரேனு கட்டோர் ,ஹூஸ்டனுக்கான துணைத் தூதரக அதிகாரி மேதகு.அசீம் மஹாஜன் மற்றும் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் திரு.டேன் ஓ ஆகியோர் தமிழ் இருக்கை அமைய பேராதரவாக உள்ளனர்
12.அமெரிக்கவில் நிறுவப்பட்டுள்ள தமிழ் பயிற்று வழிப் பள்ளிக்கூடங்களில் பயில்பவர்களுக்கும் மேற்படிப்பை தமிழில் தொடருவதற்கான சிக்கல்களை களைய ஹூஸ்டன் தமிழ் இருக்கைகான அமைப்பானது ஒரு குழுவை நியமித்துள்ளது.
13.ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கான அமைப்பானது ஒரு குழுவை நியமித்து அமெரிக்காவில் அமைந்துள்ள அனைத்துப் பள்ளிக் கூடங்களிலும் தமிழ் மொழியை அறிமுகப்படுத்த முயன்று வருகிறது.
14.நிதி அளிப்பவர்கள் வருமான வரி விலக்குப் பெற ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பானது
IRS 501(c) (3) விதியின் படி வரி விலக்குப் பெற்றுள்ளது.
15.தமிழ்நாட்டில் மஞ்சு விரட்டுப் போட்டியில் 2019 ஆம் ஆண்டில் அதிகமான மாடுகளை அடக்கி முதலிடம் பிடித்த தமிழர் ஒருவரை அமெரிக்காவிற்கு அழைத்து ரோடியோ எனப்படும் மாடுபிடி விளையாட்டில் பயிற்சியளிக்க ஹூஸ்டன் தமிழ் இருக்கைை அமைப்பானது திட்டமிட்டுள்ளது.
16.2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் நாள் ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பானது மதுரை காமராசர் பல்கலைகழகத்துடன் இணைந்து
கிராமிய கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி தமிழ் இருக்கை அமைய நிதி திரட்டியது.
17.தமிழ்நாட்டில் இதற்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த மாநில அரசின் உதவியுடன் ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைய ரூபாய் 1 கோடி நிதியானது வழங்கப்பட்டது.
18.மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ் துறை உதவியுடன் தெருக்கூத்து நாடகங்கள் தொடர்ந்து 500 நாட்கள் அரங்கேற்றம் செய்யபட்டு நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி மற்றும் விருதுகளை தமிழ் இருக்கை அமைப்பானது
வழங்கியது.
19.ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை விரைவில் தொடங்கிட தமிழக அரசு 3,00,000 லட்சம் அமெரிக்க வெள்ளிகள் (இந்திய மதிப்பில் 2 கோடி 50 லட்சம் ரூபாய்)இன்று (நவம்பர் 15 ஆம் தே‌தி 2022) தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டது.
 
நன்றி
ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கான அமைப்பு.
ஹூஸ்டன்
வட அமெரிக்கா.
by Swathi   on 07 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இன்று உலக இதய தினம் இன்று உலக இதய தினம்
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் தொடங்கியது 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் தொடங்கியது
நாகையில் இருந்து இலங்கைக்கு அக்டோபர் முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து நாகையில் இருந்து இலங்கைக்கு அக்டோபர் முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து
இந்தியா தூதரக அதிகாரியை வெளியேற்றியது கனடா இந்தியா தூதரக அதிகாரியை வெளியேற்றியது கனடா
கடலூர் தியாகி அஞ்சலை அம்மாளின் பேத்தி இங்கிலாந்து  பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி கடலூர் தியாகி அஞ்சலை அம்மாளின் பேத்தி இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி
வலைத்தமிழ் கல்விக்கழகம் வழங்கும் கலை பயிற்சிகள் வலைத்தமிழ் கல்விக்கழகம் வழங்கும் கலை பயிற்சிகள்
சூட்டி மகிழ்வோம் தமிழ்ப் பெயர்கள்' புத்தகம் கிடைக்கும் வலைதளம் சூட்டி மகிழ்வோம் தமிழ்ப் பெயர்கள்' புத்தகம் கிடைக்கும் வலைதளம்
அமெரிக்காவின் F-35 போர் விமானம் பறக்கும் போதே திடீர் மாயம் அமெரிக்காவின் F-35 போர் விமானம் பறக்கும் போதே திடீர் மாயம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.