|
|||||
சீனாவில் பரவுது மர்ம காய்ச்சல் |
|||||
சீனாவில் உருவான கோவிட் வைரஸ் தொற்று உலகளவில் பரவி மக்களை அச்சுறுத்திய நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதியில் குழந்தைகளை அச்சுறுத்தும் மர்மகாய்ச்சல் பரவி வருகிறது.
அந்நாட்டு சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில் இது குறித்த தகவல்களை பகிரும்படி சீன அரசிடம் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது. எந்த அறிகுறிகளும் தென்படவில்லை சீனாவில் சுவாச பிரச்னை கோளாறுகளுடன் பெரும்பாலான குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள ஏராளமான குழந்தைகளுக்கு இருமல் உள்ளிட்ட எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. ஆனால் உடலில் அதிக வெப்பநிலை மற்றும் நுரையீரல் தொற்று இருப்பதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
இது தொடர்பாக சீன தேசிய சுகாதார அதிகாரிகள் கூறுகையில் கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தியதன் எதிரொலியாகவே இந்த புதிய தொற்று ஏற்பட்டுள்ளது என்றனர்.
இச்சூழ்நிலையில் சார்ஸ் கோவ் -2 வைரஸ் பரவல் இன்ப்ளூயன்சா வைரஸ் பரவல் இன்னும் பிற தொற்றுகள் நிலவரம் குறித்து அறிக்கை அளிக்கும்படி உலக சுகாதார அமைப்பு சீன அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
நாடுகள் மத்தியில் கவலை
மேலும் அந்த அமைப்பு சீன மக்கள் பரிந்துரை செய்யப்பட்ட தடுப்பூசி போட்டுக் கொண்டு சுவாச பிரச்னை நோய் அபாயத்தை குறைக்க வேண்டும். தொற்று உள்ளவர்கள் வீட்டியே இருப்பதுடன் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளது.
சீனாவில் இத்தொற்று பரவுவது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. |
|||||
by Kumar on 28 Nov 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|