LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- உலக நாடுகளில் தமிழர்கள்

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாடிய அமெரிக்கா - (பிரசாத் பாண்டியன்)

 

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாடிய அமெரிக்கா
             (பிரசாத் பாண்டியன்)
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் நினைவுநாள் (ஏப்ரல் 21) மற்றும் பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு புரட்சிக்கவிஞரின் புகழை உலகெங்கும் பரப்பும் வகையில் "புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா" என்ற பெயரில் 9-நாள் தொடர்விழாவினை அமெரிக்காவிலிருந்து இயங்கும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் மற்றும் அமெரிக்கத் தமிழ் ஊடகம் இணைந்து உலகத் தமிழர்களுடன் கொண்டாடியது.  அவ்விழாவானது கருத்தரங்கம், தமிழிசையரங்கம், சிறார்களுக்கான கட்டுரைப்போட்டி, பெரியவர்களுக்கான பேச்சுப்போட்டி, கவியரங்கம், இலக்கிய அரங்கம்,பட்டிமன்றம், நினைவு நாள், பிறந்தநாள் சிறப்புரைகள் என உலகத் தமிழர்கள் பலநாடுகளிலிருந்து பங்கேற்றுச் சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஏப்ரல் 21, முதல் நாள் நிகழ்வு - பேரனின் பார்வையில் பாரதிதாசன் என்ற தலைப்பில் பாரதிதாசனின் பெயரன் திருமிகு. கோ. பாரதி அவர்கள் தன் தாத்தாவைp பற்றிய அவரது நினைவலைகளைப் பகிர்ந்தார். தன் தாத்தா பாட்டாளி மக்களை அழைத்து அவர்களுடன் உரையாடிப் பெற்ற பட்டறிவை கவியாக வடித்த காட்சியை கண் முன்னே நிறுத்தினார். கவிஞர் ஒரு குடும்பத்தலைவராக இருந்த பாங்கை அவர் விவரித்து நம் நேயர்களுடன் உரையாற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் நம் நேயர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்து நிகழ்வினை சிறப்புறச்செய்தார்.
ஏப்ரல் 22, இரண்டாம் நாள் நிகழ்வு - "புரட்சிக்கவிஞர் ஒரு பார்வை" என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கத்தை பட்டிமன்றப் புகழ் பைந்தமிழ்ச்செல்வி புதுகை பாரதி தலைமையேற்று நடத்தினார். புரட்சிக்கவிஞரின் பன்முகத் திறனை ஆய்ந்து பேசுவது இந்நிகழ்ச்சியின் நோக்கு. கருத்தரங்கதில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்கள் அந்த நோக்கத்தை நிறைவேற்றினார்கள் என்று கூறினால் மிகையாகாது. புரட்சிக்கவிஞரும் விளிம்புநிலை மக்களும் என்ற தலைப்பில் கவிஞர் திருமிகு. இப்ராகிம், பாரதியின் சொத்து பாரதிதாசன் என்ற தலைப்பில் செந்தமிழ்க்குரிசில் புலவர் கோ. கோபாலகிருஷ்ணன் , பாரதிதாசன் திருக்குறள் உரையின் சிறப்பு என்ற தலைப்பில் ஊடகவியலாளர் திருமிகு ஜெயா மாறன் மற்றும்  பாவேந்தரின் திரையிசைப் பாடல்கள் என்ற தலைப்பில் பேச்சாளர் திருமிகு விஜய் சண்முகம் ஆகியோர் பேசி விழாவை சிறப்பத்தனர்.
ஏப்ரல் 23, மூன்றாம் நாள் நிகழ்வு - தமிழிசையரங்கம்.  நிகழ்ச்சியைப் பற்றி பேசிய ஒருங்கிணைப்பாளர்கள் புரட்சிக்கவிஞர் பாடல்கள் திரையிசையில் பரவலாக இருந்தாலும் தமிழிசைக்கு ஏற்ற வகையில் அவரது நிறைய பாடல்களுக்கு இடமுண்டு. அந்த வகையில் இந்த முயற்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது சிறப்புமிக்கது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் மற்றும் பல இலக்கிய கலை நிகழ்ச்சிகளில் பாரதிதாசன் பாடல்களை உலகத்தமிழர்கள் எடுத்து செல்ல இது ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று கூறினார்கள். தமிழிசை நிகழ்ச்சியை திருமிகு மம்மது ஐயா ஒருங்கிணைக்க, திருமிகு பாபு விநாயகம், திருமிகு கரிசல் கருணாநிதி, திருமிகு  மினு பாஸ்கரன் மற்றம் திருமிகு ஒரத்தநாடு கோபு ஆகியோர் பாரதிதாசன் பாடல்களைப் பாடிச் சிறப்பித்தனர்.
ஏப்ரல் 24, நான்காம் நாள் நிகழ்வு -  பாவேந்தரின் பார்வையில் இயற்கை என்ற தலைப்பில் அகவை 8 முதல் 15 வரையிலானவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இதில் அமெரிக்கா, அபு தாபி, இந்தியா மற்றும் ஈழத்திலிருந்து குழந்தைகள் பங்கு பெற்றுப் பேசினார்கள். சின்னஞ்சிறு பிஞ்சுகள் பாரதிதாசனின் இயற்கைப் பாடல்களை உள்வாங்கி பேசிய விதம் நடுவர்களான முனைவர் திருமிகு. பிரபாகரன், முனைவர் திருமிகு வாசு அரங்கநாதன் மற்றும் முனைவர் திருமிகு மேகலா இராமமூர்த்தி ஆகிய மூவரையும் திக்குமுக்காடவைத்தது. இயற்கையின் பல பாடுபொருள்களையும் அவரது காப்பியங்களில் அழகின் சிரிப்பு, சஞ்சீவீ பர்வதத்தின் சாரல் போன்றவைகளிலிருந்து பேசினார்கள். இத்தகைய கடுமையான போட்டியைக் கண்டு நடுவர்களில் ஒருவரான முனைவர் வாசு அரங்கநாதன், பங்கு கொண்ட அனைவருக்கும் ஊக்கப் பரிசு அளிப்பதாக உறுதியளித்தார். அவரோடு அமெரிக்கத் தமிழ் ஊடகத்தைச் சார்ந்த திருமிகு. இரூபண் அவர்களும் ஊக்கப் பரிசு அளிக்க உறுதியளித்தார்.  போட்டியில் முதலாம் இடத்தில் சிறுமி ஜெ ஆரணி, இரண்டாம் இடத்தில் சிறுமி அமிழ்தினி மற்றும் மூன்றாம் இடத்தில் சிறுமி தீ. கு. சங்கமித்திரா வெற்றி பெற்றார்கள். 
ஏப்ரல் 25 ஐந்தாம் நாள் நிகழ்வு -  "பாரதிதாசன் படைப்புகள்" என்ற தலைப்பில் பாரதிதாசனின் ஐந்து நூல்களை அறிமுகப்படுத்தும் வகையில் இந்தக் கருத்தரங்கம் நடைப்பெற்றது. இதில் ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஈழத்திலிருந்து பங்கு கொண்டு பேசி சிறப்பித்தார்கள். தலைமையேற்ற முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் பாரதிதாசன் படைப்புகள் பற்றிய நல்லதொரு அறிமுகம் தந்தார். புரட்சிக்கவி நூல் குறித்து பேராசிரியர் தமிழ்ச்சுடர் வ. விசயரங்கன், சஞ்சீவி பர்வதத்தின் சாரல் நூல் குறித்து  முனைவர் திருமிகு கா. பிரிதா, பாண்டியன் பரிசு நூல் குறித்து  முனைவர் திருமிகு சித்ரா மகேஷ், இரணியன் அல்லது இணையற்ற வீரன் நூல் குறித்து திருமிகு சாரங்கன் விக்கினேசுவரநாதன், கண்ணகி புரட்சிக் காப்பியம் நூல் குறித்து  திருமிகு டிலோஜினி மோசேஸ் பேசினார்கள். இந்நிகழ்ச்சியைப் பற்றி பேசிய ஒருங்கிணைப்பாளர்கள், பாரதிதாசன் காப்பியம் என்பது பெருங்கடல் அதிலிருந்து ஒருத்துளியை மக்கள் பார்வையில் எடுத்துவைக்கும் முயற்சி. இது மக்களை சென்றடைந்ததில் மகிழ்ச்சி என்றனர்.
ஏப்ரல் 26 ஆறாம் நாள் நிகழ்வு - "பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது காதலா? வீரமா?" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைப்பெற்றது. பலரும் எதிர்ப்பார்த்த, சிலாகித்த பட்டிமன்றம் இது என்றால் அது மிகையாகாது. நடுவராக வீற்றிருந்த இலக்கியச்சிம்மம் எழுச்சிக்கவிஞர் கங்கை மணிவண்ணன் அவர்களின் தமிழாற்றாலைக் கண்டு அனைவரும் பாராட்டினார்கள்.  காதல் என்ற தலைப்பில் அமெரிக்காவிலிருந்து திருமிகு அனிதா இராஜேஷ் மற்றும் தமிழகத்திலிருந்து செந்தமிழ்க்குரிசில் புலவர் கோ. கோபாலகிருஷ்ணன் பாவேந்தரின் காதல் பாடல்களின் சிறப்பை எடுத்துக்கூறினார்கள். மலேசியவிலிருந்து ஊடகவியலாளர் திருமிகு பொன் கோகிலம் மற்றும் தமிழகத்திலிருந்து முப்பா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாவலர் கோட்டாறு தமிழரசன் (எ) ச.ச.வேலரசு புரட்சிக்கவிஞரின் வீரம் பற்றி பாடிய பாடல்களின் சிறப்பைப் பேசினார்கள். இரு அணியின் பொழிவைக் கேட்ட நடுவர் இறுதியில் பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது வீரமே என்ற தீர்ப்பைக் கொடுத்தார்.  இரண்டு மணி நேரம் நிகழ்ச்சி நடந்த பின்னும் இவ்வளவு சீக்கரம் முடிந்ததே என்று பங்கு பெற்றவர்கள் எண்ணுமளவுக்கு நிகழ்ச்சி இருந்தது சிறப்பு.
ஏப்ரல் 27 ஏழாம் நாள் நிகழ்வு - "குடும்பவிளக்கு - முதியோர் காதல்" என்ற  தலைப்பில் இலக்கியப் பேச்சாளர் முன்னாள் அண்ணா பேரவைத் தலைவர் திருமிகு துரை. எழில்விழியன் உரையாற்றினார். காதல் உணர்வு இளைஞர்களுக்கு மட்டுமா? அன்று, காதல் அனைத்து வயதினருக்கும், முதியோரக்கும் உண்டு என்பதை குடும்பவிளக்கு காப்பியத்தில் பாரதிதாசன் எடுத்து கூறியதை தன் வாழ்க்கைப் பக்கங்களிலிருந்து எடுத்துரைத்தார். " எது எனக்கின்பம் நல்கும்? இருக்கின்றாள்’ என்ப தொன்றே! என்ற பாடல் வரிகள் மொத்த பங்கேற்பாளர்களையம் அமைதியில் ஆழ்த்தியது. சொற்பொழிவுக்குப் பிறகு இக்ககாப்பியத்தை பற்றி எழுந்த அனைத்து கேள்விகளுக்கும் திருமிகு துரை. எழில்விழியன் பதிலளித்தார். இந்நிகழ்ச்சியை தமிழ் ஆர்வலர் திருமிகு கல்யாணசுப்பு சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
ஏப்ரல் 28 எட்டாம் நாள் நிகழ்வு - மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் தலைமையில் "அழகின் சிரிப்பு" என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. அதில் தமிழ் என்ற தலைப்பில் செந்தமிழ்குரிசில் புலவர். இ. சீனிவாசன், கடல் என்ற தலைப்பில் திருமிகு இராஜி வாஞ்சி, வானம் என்ற தலைப்பில் கவிஞர் தி. அமிர்தகணேசன், குன்றம் என்ற தலைப்பில் கவிஞர் ம.வீ. கனிமொழி மற்றும் தென்றல் என்ற தலைப்பில் கவிஞர் டெய்சி ஜெயப்ரகாஷ் பங்குபெற்று அவர்களது கவித்திறனால் பாவேந்தருக்கு புகழ் வணக்கம் செலுத்தினர். கவிஞர்களின் கருத்துத்திறனையும், உவமைத்திறனையும், எழுத்துத்திறனையும் ஈரோடு தமிழன்பன் அவர்கள் சிலாகித்துப் பேசினார். தங்கள் தலைமுறைக்குப் பின்னர் பாரதிதாசனின் கொடியேந்தி நிற்கும் பல  இளைஞர்களைக் கண்டு மனமகிழ்ந்தார். குறிப்பாக ஒன்பது நாட்கள் இத்தகைய விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றத்தை வாழ்த்திப் பேசினார்.  
ஏப்ரல் 29 ஒன்பதாம் நாள் நிகழ்வு - புரட்சிக்கவிஞர் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி நடைப்பபெற்றது. கவிஞர் அறிவுமதி அவர்கள் பாரதிதாசனுடன் ஒரு நேர்க்காணல் போன்று ஒரு கற்பனை நிகழ்ச்சியை "பாரதிதாசன் - மெய்யெழுத்து" என்ற தலைப்பில் நடத்தினார். பாரதிதாசன் உள்ளக்கிடங்கிலிருந்து பேசியது போல் இருந்தது என்று பலர் கூறினர்.  தற்போது பாரதிதாசன் இருந்திருந்திருந்தால் தமிழக மக்களுக்கு என்ன கூறுவார் என்று கேட்டதற்கு "உயிர்ப்பற்ற வட மொழியை உங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டி மீண்டும் உயிர்புடன் வைக்கும் செயல் ஒழித்து நல்ல தமிழ்ப்பெயர்களை சூட்டுங்கள்" என்றுரைப்பார் என்றார் கவிஞர் திருமிகு அறிவுமதி அவர்கள். 
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக "புரட்சிக்கவிஞரின் மொழி வளர்ச்சிச் சிந்தனைகளின் இன்றைய தேவை" என்ற தலைப்பில் அகவை 16 முதல் அதற்கு மேற்ப்பட்டவர்களுக்கு நடத்திய கட்டுரைப் போட்டியின் முடிவுகளை நடுவுர்களில் ஒருவரான முனைவர் திருமிகு மேகலா இராமமூர்த்தி அறிவித்தார். இன்றைய நிலையில் தமிழ் மொழி வளர்ச்சியின் மேம்பாட்டை கவிஞரின் சிந்தையில்  உதித்த இலக்கியங்களிலிருந்தும் காப்பியங்களிலிருந்தும் அருமையாக எடுத்துரைத்திருந்தனர் போட்டியாளர்கள் என்று கூறினார்.  நடுவர்கள் எழுத்துத்திறன், கருத்துத்திறன் மற்றம் இன்ன பிற காரணிகளின் அடிப்படையில் முதல் மூன்று வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்திருந்தனர். முதல் பரிசினை திருமிகு செந்தமிழ்ச் செல்வி, இரண்டாம் பரிசினை திருமிகு ஹேமலதா மற்றும் மூன்றாம் பரிசினை முனைவர் உரு. அசோகன் பெற்றனர். 
இறுதியாக இந்த ஒன்பது நாள் நிகழ்ச்சியில் பங்குப்பெற்ற அனைவருக்கும் அமெரிக்கத் தமிழ் ஊடக்த்தின் நிறுவனர் திருமிகு ஆறுமுகம் பேச்சிமுத்து நன்றி தெரிவித்து உரையாற்றி புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2021 நிகழ்வை நிறைவு செய்தார்.  ஒன்பது நாள் பாரதிதாசனுக்கு விழா எடுத்து சிறப்பித்ததை பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் புதல்வி திருமிகு சித்தரச்செந்தாழை பாராட்டிப் பேசினார். பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் திருமிகு சோம இளங்கோவன் அவர்கள் இளந்தலைமுறையின் இச்செயல் பாராட்டுக்குரியது என்று கூறினார். 
புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாடிக்கொண்டிருக்கும் போதே, ஏப்ரல் 25 அன்று மு.வரதாசனார் பிறந்த நாள் சிறப்பு நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.  அதில் "மு.வ. வின் பன்முக ஆளுமை" என்ற தலைப்பில் முனைவர் வ.மு.சே. ஆண்டவர், பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் சிறப்புரையாற்றினார். மு.வ - வின் எழுத்தாற்றல் எளிமையின் அடையாளம். மு.வ காலக்கட்டத்தில் மிக கடுமையான எழுத்து நடை நிலவிவந்தது அதனை எளிமைபடுத்தி மக்கள் இல்லங்களில் சங்க இலக்கிய நூல்களை, தமிழ்ச்சுவையை கொண்டு சேர்த்த பெருமை அவரையே சாரும். அவரது மாணவர் படை இன்றும் உயிர்ப்போடு உள்ளது அதற்குச் சான்று என்றார் சிறப்பு சொற்பொளிவாளர். நிகழ்ச்சியில் பங்குகொண்ட உலகத்தமிழர்கள் பலர் மு.வ பற்றி பல கேள்விகளை கேட்டு தெளிந்தனர்.  இந்நிகழ்ச்சியை நியூயார்க் தமிழ்ச்சங்க மேனாள் தலைவர் திருமிகு அரங்கநாதன் உத்தமன் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் திருமிகு துரைக்கண்ணன், திருமிகு பிரசாத் பாண்டியன் மற்றும் திருமிகு குமணன் நிகழ்ச்சி மக்களிடமும், இளந்தலைமுறையினருடமும் சென்றடைந்து தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்கள்.

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாடிய அமெரிக்கா    -   (பிரசாத் பாண்டியன்)

 

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் நினைவுநாள் (ஏப்ரல் 21) மற்றும் பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு புரட்சிக்கவிஞரின் புகழை உலகெங்கும் பரப்பும் வகையில் "புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா" என்ற பெயரில் 9-நாள் தொடர்விழாவினை அமெரிக்காவிலிருந்து இயங்கும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் மற்றும் அமெரிக்கத் தமிழ் ஊடகம் இணைந்து உலகத் தமிழர்களுடன் கொண்டாடியது.  அவ்விழாவானது கருத்தரங்கம், தமிழிசையரங்கம், சிறார்களுக்கான கட்டுரைப்போட்டி, பெரியவர்களுக்கான பேச்சுப்போட்டி, கவியரங்கம், இலக்கிய அரங்கம்,பட்டிமன்றம், நினைவு நாள், பிறந்தநாள் சிறப்புரைகள் என உலகத் தமிழர்கள் பலநாடுகளிலிருந்து பங்கேற்றுச் சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏப்ரல் 21, முதல் நாள் நிகழ்வு -

பேரனின் பார்வையில் பாரதிதாசன் என்ற தலைப்பில் பாரதிதாசனின் பெயரன் திருமிகு. கோ. பாரதி அவர்கள் தன் தாத்தாவைp பற்றிய அவரது நினைவலைகளைப் பகிர்ந்தார். தன் தாத்தா பாட்டாளி மக்களை அழைத்து அவர்களுடன் உரையாடிப் பெற்ற பட்டறிவை கவியாக வடித்த காட்சியை கண் முன்னே நிறுத்தினார். கவிஞர் ஒரு குடும்பத்தலைவராக இருந்த பாங்கை அவர் விவரித்து நம் நேயர்களுடன் உரையாற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் நம் நேயர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்து நிகழ்வினை சிறப்புறச்செய்தார்.

ஏப்ரல் 22, இரண்டாம் நாள் நிகழ்வு -

"புரட்சிக்கவிஞர் ஒரு பார்வை" என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கத்தை பட்டிமன்றப் புகழ் பைந்தமிழ்ச்செல்வி புதுகை பாரதி தலைமையேற்று நடத்தினார். புரட்சிக்கவிஞரின் பன்முகத் திறனை ஆய்ந்து பேசுவது இந்நிகழ்ச்சியின் நோக்கு. கருத்தரங்கதில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்கள் அந்த நோக்கத்தை நிறைவேற்றினார்கள் என்று கூறினால் மிகையாகாது. புரட்சிக்கவிஞரும் விளிம்புநிலை மக்களும் என்ற தலைப்பில் கவிஞர் திருமிகு. இப்ராகிம், பாரதியின் சொத்து பாரதிதாசன் என்ற தலைப்பில் செந்தமிழ்க்குரிசில் புலவர் கோ. கோபாலகிருஷ்ணன் , பாரதிதாசன் திருக்குறள் உரையின் சிறப்பு என்ற தலைப்பில் ஊடகவியலாளர் திருமிகு ஜெயா மாறன் மற்றும்  பாவேந்தரின் திரையிசைப் பாடல்கள் என்ற தலைப்பில் பேச்சாளர் திருமிகு விஜய் சண்முகம் ஆகியோர் பேசி விழாவை சிறப்பத்தனர்.

ஏப்ரல் 23, மூன்றாம் நாள் நிகழ்வு -

தமிழிசையரங்கம்.  நிகழ்ச்சியைப் பற்றி பேசிய ஒருங்கிணைப்பாளர்கள் புரட்சிக்கவிஞர் பாடல்கள் திரையிசையில் பரவலாக இருந்தாலும் தமிழிசைக்கு ஏற்ற வகையில் அவரது நிறைய பாடல்களுக்கு இடமுண்டு. அந்த வகையில் இந்த முயற்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது சிறப்புமிக்கது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் மற்றும் பல இலக்கிய கலை நிகழ்ச்சிகளில் பாரதிதாசன் பாடல்களை உலகத்தமிழர்கள் எடுத்து செல்ல இது ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று கூறினார்கள். தமிழிசை நிகழ்ச்சியை திருமிகு மம்மது ஐயா ஒருங்கிணைக்க, திருமிகு பாபு விநாயகம், திருமிகு கரிசல் கருணாநிதி, திருமிகு  மினு பாஸ்கரன் மற்றம் திருமிகு ஒரத்தநாடு கோபு ஆகியோர் பாரதிதாசன் பாடல்களைப் பாடிச் சிறப்பித்தனர்.

ஏப்ரல் 24, நான்காம் நாள் நிகழ்வு - 

பாவேந்தரின் பார்வையில் இயற்கை என்ற தலைப்பில் அகவை 8 முதல் 15 வரையிலானவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இதில் அமெரிக்கா, அபு தாபி, இந்தியா மற்றும் ஈழத்திலிருந்து குழந்தைகள் பங்கு பெற்றுப் பேசினார்கள். சின்னஞ்சிறு பிஞ்சுகள் பாரதிதாசனின் இயற்கைப் பாடல்களை உள்வாங்கி பேசிய விதம் நடுவர்களான முனைவர் திருமிகு. பிரபாகரன், முனைவர் திருமிகு வாசு அரங்கநாதன் மற்றும் முனைவர் திருமிகு மேகலா இராமமூர்த்தி ஆகிய மூவரையும் திக்குமுக்காடவைத்தது. இயற்கையின் பல பாடுபொருள்களையும் அவரது காப்பியங்களில் அழகின் சிரிப்பு, சஞ்சீவீ பர்வதத்தின் சாரல் போன்றவைகளிலிருந்து பேசினார்கள். இத்தகைய கடுமையான போட்டியைக் கண்டு நடுவர்களில் ஒருவரான முனைவர் வாசு அரங்கநாதன், பங்கு கொண்ட அனைவருக்கும் ஊக்கப் பரிசு அளிப்பதாக உறுதியளித்தார். அவரோடு அமெரிக்கத் தமிழ் ஊடகத்தைச் சார்ந்த திருமிகு. இரூபண் அவர்களும் ஊக்கப் பரிசு அளிக்க உறுதியளித்தார்.  போட்டியில் முதலாம் இடத்தில் சிறுமி ஜெ ஆரணி, இரண்டாம் இடத்தில் சிறுமி அமிழ்தினி மற்றும் மூன்றாம் இடத்தில் சிறுமி தீ. கு. சங்கமித்திரா வெற்றி பெற்றார்கள். 

ஏப்ரல் 25 ஐந்தாம் நாள் நிகழ்வு -

  "பாரதிதாசன் படைப்புகள்" என்ற தலைப்பில் பாரதிதாசனின் ஐந்து நூல்களை அறிமுகப்படுத்தும் வகையில் இந்தக் கருத்தரங்கம் நடைப்பெற்றது. இதில் ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஈழத்திலிருந்து பங்கு கொண்டு பேசி சிறப்பித்தார்கள். தலைமையேற்ற முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் பாரதிதாசன் படைப்புகள் பற்றிய நல்லதொரு அறிமுகம் தந்தார். புரட்சிக்கவி நூல் குறித்து பேராசிரியர் தமிழ்ச்சுடர் வ. விசயரங்கன், சஞ்சீவி பர்வதத்தின் சாரல் நூல் குறித்து  முனைவர் திருமிகு கா. பிரிதா, பாண்டியன் பரிசு நூல் குறித்து  முனைவர் திருமிகு சித்ரா மகேஷ், இரணியன் அல்லது இணையற்ற வீரன் நூல் குறித்து திருமிகு சாரங்கன் விக்கினேசுவரநாதன், கண்ணகி புரட்சிக் காப்பியம் நூல் குறித்து  திருமிகு டிலோஜினி மோசேஸ் பேசினார்கள். இந்நிகழ்ச்சியைப் பற்றி பேசிய ஒருங்கிணைப்பாளர்கள், பாரதிதாசன் காப்பியம் என்பது பெருங்கடல் அதிலிருந்து ஒருத்துளியை மக்கள் பார்வையில் எடுத்துவைக்கும் முயற்சி. இது மக்களை சென்றடைந்ததில் மகிழ்ச்சி என்றனர்.

ஏப்ரல் 26 ஆறாம் நாள் நிகழ்வு -

"பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது காதலா? வீரமா?" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைப்பெற்றது. பலரும் எதிர்ப்பார்த்த, சிலாகித்த பட்டிமன்றம் இது என்றால் அது மிகையாகாது. நடுவராக வீற்றிருந்த இலக்கியச்சிம்மம் எழுச்சிக்கவிஞர் கங்கை மணிவண்ணன் அவர்களின் தமிழாற்றாலைக் கண்டு அனைவரும் பாராட்டினார்கள்.  காதல் என்ற தலைப்பில் அமெரிக்காவிலிருந்து திருமிகு அனிதா இராஜேஷ் மற்றும் தமிழகத்திலிருந்து செந்தமிழ்க்குரிசில் புலவர் கோ. கோபாலகிருஷ்ணன் பாவேந்தரின் காதல் பாடல்களின் சிறப்பை எடுத்துக்கூறினார்கள். மலேசியவிலிருந்து ஊடகவியலாளர் திருமிகு பொன் கோகிலம் மற்றும் தமிழகத்திலிருந்து முப்பா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாவலர் கோட்டாறு தமிழரசன் (எ) ச.ச.வேலரசு புரட்சிக்கவிஞரின் வீரம் பற்றி பாடிய பாடல்களின் சிறப்பைப் பேசினார்கள். இரு அணியின் பொழிவைக் கேட்ட நடுவர் இறுதியில் பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது வீரமே என்ற தீர்ப்பைக் கொடுத்தார்.  இரண்டு மணி நேரம் நிகழ்ச்சி நடந்த பின்னும் இவ்வளவு சீக்கரம் முடிந்ததே என்று பங்கு பெற்றவர்கள் எண்ணுமளவுக்கு நிகழ்ச்சி இருந்தது சிறப்பு.

ஏப்ரல் 27 ஏழாம் நாள் நிகழ்வு -

"குடும்பவிளக்கு - முதியோர் காதல்" என்ற  தலைப்பில் இலக்கியப் பேச்சாளர் முன்னாள் அண்ணா பேரவைத் தலைவர் திருமிகு துரை. எழில்விழியன் உரையாற்றினார். காதல் உணர்வு இளைஞர்களுக்கு மட்டுமா? அன்று, காதல் அனைத்து வயதினருக்கும், முதியோரக்கும் உண்டு என்பதை குடும்பவிளக்கு காப்பியத்தில் பாரதிதாசன் எடுத்து கூறியதை தன் வாழ்க்கைப் பக்கங்களிலிருந்து எடுத்துரைத்தார். " எது எனக்கின்பம் நல்கும்? இருக்கின்றாள்’ என்ப தொன்றே! என்ற பாடல் வரிகள் மொத்த பங்கேற்பாளர்களையம் அமைதியில் ஆழ்த்தியது. சொற்பொழிவுக்குப் பிறகு இக்ககாப்பியத்தை பற்றி எழுந்த அனைத்து கேள்விகளுக்கும் திருமிகு துரை. எழில்விழியன் பதிலளித்தார். இந்நிகழ்ச்சியை தமிழ் ஆர்வலர் திருமிகு கல்யாணசுப்பு சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

ஏப்ரல் 28 எட்டாம் நாள் நிகழ்வு -

மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் தலைமையில் "அழகின் சிரிப்பு" என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. அதில் தமிழ் என்ற தலைப்பில் செந்தமிழ்குரிசில் புலவர். இ. சீனிவாசன், கடல் என்ற தலைப்பில் திருமிகு இராஜி வாஞ்சி, வானம் என்ற தலைப்பில் கவிஞர் தி. அமிர்தகணேசன், குன்றம் என்ற தலைப்பில் கவிஞர் ம.வீ. கனிமொழி மற்றும் தென்றல் என்ற தலைப்பில் கவிஞர் டெய்சி ஜெயப்ரகாஷ் பங்குபெற்று அவர்களது கவித்திறனால் பாவேந்தருக்கு புகழ் வணக்கம் செலுத்தினர். கவிஞர்களின் கருத்துத்திறனையும், உவமைத்திறனையும், எழுத்துத்திறனையும் ஈரோடு தமிழன்பன் அவர்கள் சிலாகித்துப் பேசினார். தங்கள் தலைமுறைக்குப் பின்னர் பாரதிதாசனின் கொடியேந்தி நிற்கும் பல  இளைஞர்களைக் கண்டு மனமகிழ்ந்தார். குறிப்பாக ஒன்பது நாட்கள் இத்தகைய விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றத்தை வாழ்த்திப் பேசினார்.  

 ஏப்ரல் 29 ஒன்பதாம் நாள் நிகழ்வு -

புரட்சிக்கவிஞர் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி நடைப்பபெற்றது. கவிஞர் அறிவுமதி அவர்கள் பாரதிதாசனுடன் ஒரு நேர்க்காணல் போன்று ஒரு கற்பனை நிகழ்ச்சியை "பாரதிதாசன் - மெய்யெழுத்து" என்ற தலைப்பில் நடத்தினார். பாரதிதாசன் உள்ளக்கிடங்கிலிருந்து பேசியது போல் இருந்தது என்று பலர் கூறினர்.  தற்போது பாரதிதாசன் இருந்திருந்திருந்தால் தமிழக மக்களுக்கு என்ன கூறுவார் என்று கேட்டதற்கு "உயிர்ப்பற்ற வட மொழியை உங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டி மீண்டும் உயிர்புடன் வைக்கும் செயல் ஒழித்து நல்ல தமிழ்ப்பெயர்களை சூட்டுங்கள்" என்றுரைப்பார் என்றார் கவிஞர் திருமிகு அறிவுமதி அவர்கள். 
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக "புரட்சிக்கவிஞரின் மொழி வளர்ச்சிச் சிந்தனைகளின் இன்றைய தேவை" என்ற தலைப்பில் அகவை 16 முதல் அதற்கு மேற்ப்பட்டவர்களுக்கு நடத்திய கட்டுரைப் போட்டியின் முடிவுகளை நடுவுர்களில் ஒருவரான முனைவர் திருமிகு மேகலா இராமமூர்த்தி அறிவித்தார். இன்றைய நிலையில் தமிழ் மொழி வளர்ச்சியின் மேம்பாட்டை கவிஞரின் சிந்தையில்  உதித்த இலக்கியங்களிலிருந்தும் காப்பியங்களிலிருந்தும் அருமையாக எடுத்துரைத்திருந்தனர் போட்டியாளர்கள் என்று கூறினார்.  நடுவர்கள் எழுத்துத்திறன், கருத்துத்திறன் மற்றம் இன்ன பிற காரணிகளின் அடிப்படையில் முதல் மூன்று வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்திருந்தனர். முதல் பரிசினை திருமிகு செந்தமிழ்ச் செல்வி, இரண்டாம் பரிசினை திருமிகு ஹேமலதா மற்றும் மூன்றாம் பரிசினை முனைவர் உரு. அசோகன் பெற்றனர். 
இறுதியாக இந்த ஒன்பது நாள் நிகழ்ச்சியில் பங்குப்பெற்ற அனைவருக்கும் அமெரிக்கத் தமிழ் ஊடக்த்தின் நிறுவனர் திருமிகு ஆறுமுகம் பேச்சிமுத்து நன்றி தெரிவித்து உரையாற்றி புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2021 நிகழ்வை நிறைவு செய்தார்.  ஒன்பது நாள் பாரதிதாசனுக்கு விழா எடுத்து சிறப்பித்ததை பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் புதல்வி திருமிகு சித்தரச்செந்தாழை பாராட்டிப் பேசினார். பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் திருமிகு சோம இளங்கோவன் அவர்கள் இளந்தலைமுறையின் இச்செயல் பாராட்டுக்குரியது என்று கூறினார். 
புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாடிக்கொண்டிருக்கும் போதே, ஏப்ரல் 25 அன்று மு.வரதாசனார் பிறந்த நாள் சிறப்பு நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.  அதில் "மு.வ. வின் பன்முக ஆளுமை" என்ற தலைப்பில் முனைவர் வ.மு.சே. ஆண்டவர், பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் சிறப்புரையாற்றினார். மு.வ - வின் எழுத்தாற்றல் எளிமையின் அடையாளம். மு.வ காலக்கட்டத்தில் மிக கடுமையான எழுத்து நடை நிலவிவந்தது அதனை எளிமைபடுத்தி மக்கள் இல்லங்களில் சங்க இலக்கிய நூல்களை, தமிழ்ச்சுவையை கொண்டு சேர்த்த பெருமை அவரையே சாரும். அவரது மாணவர் படை இன்றும் உயிர்ப்போடு உள்ளது அதற்குச் சான்று என்றார் சிறப்பு சொற்பொளிவாளர். நிகழ்ச்சியில் பங்குகொண்ட உலகத்தமிழர்கள் பலர் மு.வ பற்றி பல கேள்விகளை கேட்டு தெளிந்தனர்.  இந்நிகழ்ச்சியை நியூயார்க் தமிழ்ச்சங்க மேனாள் தலைவர் திருமிகு அரங்கநாதன் உத்தமன் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் திருமிகு துரைக்கண்ணன், திருமிகு பிரசாத் பாண்டியன் மற்றும் திருமிகு குமணன் நிகழ்ச்சி மக்களிடமும், இளந்தலைமுறையினருடமும் சென்றடைந்து தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்கள்.

 

by Lakshmi G   on 04 May 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
செப்டம்பர் 28-ந் தேதி தொடங்கி கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு  6 நாட்கள் நடக்கிறது செப்டம்பர் 28-ந் தேதி தொடங்கி கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு 6 நாட்கள் நடக்கிறது
மலேசிய மக்களின் அசைக்க முடியாத அரசியல் ஆளுமை துன்  சாமிவேலு  அவர்களுக்குப் புகழ்வணக்கம்! மலேசிய மக்களின் அசைக்க முடியாத அரசியல் ஆளுமை துன் சாமிவேலு அவர்களுக்குப் புகழ்வணக்கம்!
சாலையின் பெயர் வள்ளுவர் வழி சாலையின் பெயர் வள்ளுவர் வழி
TNF 48 தேசிய மாநாட்டு விழா TNF 48 தேசிய மாநாட்டு விழா
"வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் - 1" - நேரலை
நார்வேயின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கம்சாயினி குணரத்தினம் நார்வேயின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கம்சாயினி குணரத்தினம்
நார்வே நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராகும் தமிழச்சி கம்சி குணரத்தினம் நார்வே நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராகும் தமிழச்சி கம்சி குணரத்தினம்
என்றும் வாழட்டும் இம்மனிதநேயம்...மனதை நெகிழ வைக்கும் போலந்து நிகழ்வு என்றும் வாழட்டும் இம்மனிதநேயம்...மனதை நெகிழ வைக்கும் போலந்து நிகழ்வு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.