LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள்.

மிசௌரி ... மகிழ்ச்சி.. வாழ்த்துகள்.. அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி ...வாழ்க உங்கள் தமிழ்ப்பணி.. 

 

தமிழ்ச்சங்கமும் , தமிழ்ப்பள்ளியும் ஒன்றாக இணைந்து பயணிப்பது அமெரிக்காவின் ஒருசில மாகாணங்களில்தான் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் தமிழ் உணர்விலும், ஒருங்கிணைந்த செயல்பாட்டிலும் முன்னுதாரணமாக இருப்பது அமெரிக்காவின் மிசௌரி தமிழ்ச்சங்கமும்,மிசௌரி தமிழ்ப்பள்ளியும்.    

 

தமிழ்ச்சங்கம் என்பது மொழி-கலை -பண்பாடு -வாழ்வியல்- உரிமை-அரசியல் - தொழில் என்று அனைத்திலும் அங்குள்ள மக்களுக்காக முன்னிற்கும் அமைப்பாக விளங்குகிறது.  

 

தமிழ்ப்பள்ளி என்பது தாய்மொழியைக் கற்றுக்கொடுக்கும் பாடசாலை. அதன் நோக்கம் அடுத்த தலைமுறையைத் தமிழ் மொழி உணர்வுடன் உருவாக்கும் முக்கிய நோக்கம் கொண்டது. அதில் தமிழ் அல்லாத பிற மொழியினரும், பிற நாட்டுக்காரர்களும், ஒரு பெற்றோர் தமிழைத் தாய்மொழியாக இருந்து திருமணம் செய்துகொண்டவர்களும் தமிழ்மொழியைத் தன் குழந்தைகள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்பும் அனைவருக்கும் மொழியைக் கற்றுக்கொடுக்கும் ஒரு அமைப்பு.   

 

தமிழ்ச்சங்கம் என்பது தமிழ்ப்பள்ளிகளை முன்னிறுத்தும், ஊக்கப்படுத்தும் அமைப்பு. தமிழ்ப்பள்ளியைவிடத் தமிழ்ச்சங்கத்திற்கு விரிந்த பார்வையும், ஒட்டுமொத்தத் தமிழர்களின் அரணாகவும் , ஆபத்துக்கு நிற்கும் அமைப்பாகவும், கொள்கைகளை வகுத்துச் செயல்படும் அமைப்பாகவும், உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பாகவும் விளங்குகிறது. தமிழ்ப்பள்ளி என்பது குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்குச் சேவையாற்றும் அமைப்பு. தமிழ்ச்சங்கம் வயது கடந்து ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்கும் சேவையாற்றும் அமைப்பு.  

 

இது இரண்டும் அதனதன் தேவை, நோக்கம், எல்லை உணர்ந்து கரம் கோர்த்துச் செயல்படுவது ஒரு மாகாணத்தின் தமிழ் வளர்ச்சிக்கு, மக்களின் நலனுக்கு நல்லது. இந்த ஒருங்கிணைப்பில் ஒரு முன்மாதிரியாக இருப்பது மிசௌரி தமிழ்ச்சங்கமும் -தமிழ்ப்பள்ளியும் என்று பல மாநிலங்களில் தமிழ்ச்சங்க-தமிழ்ப்பள்ளி நிர்வாகிகளுடன் பேசும்போது குறிப்பிடுவதுண்டு.. 

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக மிசௌரி தமிழ்ப்பள்ளியின் தலைமைப்பொறுப்பிலிருந்து அடுத்து தமிழ்ச்சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்பிற்கினிய நண்பர் திரு.செந்தில் இராதாகிருட்டிணன் தன்னுடைய பொறுப்பு காலத்தில் பல ஆண்டுகளின் கனவாக விளங்கும் ஒரு திட்டத்தை, தமிழ்ச்சங்கச் செயற்குழு, தமிழ்ப்பள்ளி தலைவர், செயற்குழு ,சங்கம் - பள்ளி உறுப்பினர்கள் என ஒட்டுமொத்தத் தமிழ்ச்சமூகமும் இணைந்து ஒரு 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்கு வகுப்பறைகள், தமிழ்ச்சங்கத்திற்கான வசதிகள் என்று ஒருங்கிணைந்த தமிழ் கட்டிடத்தைக் கட்ட இடம் வாங்கியுள்ளது மகிழ்ச்சியான செய்தி.

 

முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறோம்

 

தமிழ்ச்சங்கமும் - தமிழ்ப்பள்ளியும் ஒருங்கிணைந்து ஒருங்கிணைந்த வளாகமாகச் சுமார் 7 ஏக்கர் என்பது மிகப்பெரிய நிதித் திட்டமிடலில் முன்னெடுக்கப்படும் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறோம்.. 

 

மிசௌரி தமிழ்ச்சங்கம் மட்டுமல்லாமல் அனைத்து மாகாணங்களை இணைந்து இந்த ஒருங்கிணைந்த வளாகம் முன்மாதிரியாக அமெரிக்காவில் எழுந்து நிற்க உரிய ஒத்துழைப்பை, உதவியை , பங்களிப்பைச் செய்யவேண்டும். ஒவ்வொரு மாகாணத்தில் இதுபோன்ற பெரிய திட்டங்கள் வரும்போது அனைத்துத் தமிழ்ச்சங்கங்களும், பேரவையும் ஒத்துழைத்து அதைச் சாத்தியமாக்கினால் , உதவி அதிகம் தேவைப்படும் சில மாகாணங்களில் இதைச் சாத்தியமாக்குவது எளிதாகும். 

 

மிசௌரி தமிழ்ச்சங்கம், தமிழ்ப்பள்ளி உறுப்பினர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ளும் தருணம். 

 ஒற்றுமையாகக் கைகோர்த்து அமெரிக்காவில் ஒரு ஒருங்கிணைந்த கட்டிடத்தை, சொந்த இடத்தைத் தமிழுக்கு உருவாக்கி அதை முன்மாதிரியாகக்கொண்டு பிற மாநிலங்களும் செய்துமுடிக்க உந்துசக்தியாக விளங்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.. 

 

வளைகுடா பகுதி தமிழ்மன்றம் ஏற்கனவே ஒரு ஏக்கர் இடம் வாங்கியுள்ளது, மேலும் பல மாகாணங்கள் திட்டமிட்டுவருகின்றன என்ற செய்தி தமிழன்னையைச் சொந்த இடங்களில் ஒவ்வொரு மாகாணத்திலும் அமெரிக்காவில் கூடி கொண்டாடுவது சாத்தியமாகும்.   

 

தமிழ் இருக்கைகளைத் தொடர்ந்து தமிழுக்கு அமைப்புகள் சொந்த இடம் வாங்குவது என்பது அனைத்து அமைப்புகளும் சிந்திக்கவேண்டிய, முன்னெடுக்கவேண்டிய அடுத்தகட்ட வளர்ச்சியாகும்.. 

 

வாழ்த்துகள்...

by Kumar   on 28 Mar 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.