LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    காய்கறிகள்-கீரைகள்-பூக்கள் Print Friendly and PDF

மிளகாயின் மருத்துவ குணங்கள் !

தமிழ்நாட்டு சமையலில் மிளகாய்க்கு என்றே சிறப்பான இடம் உண்டு. பொதுவாக மிளகாய் உணவின் கார சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது. 

 

மிளகாயின் வகைகள் :

 

மிளகாய் அவற்றின் காரத்தன்மையின் காரணமாக மூன்று வகையாக வகைபடுத்தப்பட்டுள்ளது.

 

1.ஊசி மிளகாய், 

2.குண்டு மிளகாய், 

3.குடமிளகாய் 

 

மருத்துவ பயன்கள் :

 

1. மிளகாயில் உள்ள கெப்சைசின் என்ற வேதிப்பொருள் உடலுக்கு வெப்பத்தினை அளிக்கிறது. இதனால் கை, கால், ஆகிய பகுதிகளுக்கும், மற்ற மைய உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது. 

 

2. மிளகாயை தோல்களின் மீது தடவும் போது நரம்பு நுனிகளின் உணர்வினை மழுங்கச் செய்து ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது. 

 

3. தோல் வியாதியான சொரியாசிஸ், நியூரால்ஜியா மற்றும் தலைவலி, மூட்டுவலி, ஆகியவற்றையும் போக்க வல்லது.

 

4. பாக்டீரியங்களுக்கு எதிராக செயல்புரிகிறது. உள்ளுக்குள் சாப்பிடும் போது வயிற்றுவலி, வாயு தீர்க்கும். ஜீரண சுரப்பிகள் சுரக்க தூண்டும். ஜீரண மண்டல நோய்களைப் போக்கும். தொண்டை கரகரப்பு கொப்பளிப்பாக பயன்படுகிறது.

 

5. சர்க்கரை மற்றும் குல்கந்த் ஆகியவற்றுடன் சேர்த்து தொண்டை கரகரப்புக்கு மருந்தாகிறது. 

 

6. இந்திய மருத்துவத்தில் சின்கோனாவுடன் சேர்த்து நாட்பட்ட மூட்டுவலிக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பெருங்காயம் மற்றும் கற்பூரத்துடன் சேர்ந்து காலரா நோய்க்கு மருந்தாகிறது. தீப்புண் மேல் தூவப்படுகிறது.

 

7. இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் - ( விதைகள் ) பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. 

 

8. விதைகளுடன் கனிகள், ஜீரணத்தை ஊக்குவித்து உடலுக்கு வலுவேற்றுகிறது. தசைக்குடைச்சல் வலியை போக்கும் தன்மை கொண்டது. கிருமி நாசினியாக செயல்படுகிறது. வியர்வை மற்றும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும். வலிபோக்கும் மருத்துவத்தில் பயன்படுகிறது.

by Swathi   on 10 Jul 2013  3 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் அரைக்கீரை. விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் அரைக்கீரை.
ஈரல் நோய்களை குணப்படுத்தும் வெண்தாமரை | White lotus flower cure liver diseases ஈரல் நோய்களை குணப்படுத்தும் வெண்தாமரை | White lotus flower cure liver diseases
ரோஜா பூவின் மருத்துவ பயன்கள் | Rose Medicinal Benefits ரோஜா பூவின் மருத்துவ பயன்கள் | Rose Medicinal Benefits
அகத்தி கீரையை ஏன் சாப்பிட வேண்டும்? அகத்தி கீரையை ஏன் சாப்பிட வேண்டும்?
செம்பரத்தை பூவின் மருத்துவ குணங்கள் | Medicinal benefits of Hibiscus பிலோவேர் செம்பரத்தை பூவின் மருத்துவ குணங்கள் | Medicinal benefits of Hibiscus பிலோவேர்
பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த மல்டி வைட்டமின் கீரை (தவசி கீரை) பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த மல்டி வைட்டமின் கீரை (தவசி கீரை)
செம்பருத்தியில் இருக்கு செழுமையான மருத்துவ பயன்கள் !! செம்பருத்தியில் இருக்கு செழுமையான மருத்துவ பயன்கள் !!
மருத்துவ குணங்கள் பல நிறைந்த குப்பைமேனி!! மருத்துவ குணங்கள் பல நிறைந்த குப்பைமேனி!!
கருத்துகள்
26-Apr-2017 05:01:21 லஷ்மி கார்த்திக் said : Report Abuse
சார் என் மகன் 4 வயதாகிறது. மைல்ட் ஆட்டிச குறைபாடு. சித்த மருத்துவ ்குறிப்புகள் தரவும்.
 
28-Jan-2014 03:39:35 மணி said : Report Abuse
தொழுநோய்க்கான மருத்துவமும் .... உணவு வகைகளையும் .... உடனடி தீர்வையும் எழுதினால் .... பலரும் பயன் பெறுவர் .... தங்களின் இயற்கை மருத்துவ சேவைக்கு நன்றி ....
 
15-Nov-2013 07:17:11 தேவதர்ஷினி said : Report Abuse
மருத்துவ குணமுள்ள காய்கள் பற்றிய செய்திகள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.