LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

மனித மூளையில் ‘சிப்’ - சோதனையைத் தொடங்கியது எலான் மஸ்கின் ‘நியூராலிங்க்’ - மருத்துவத்தில் ஒரு மைல் கல்.

நம் மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்போது அதைச் சரி செய்ய மூளையில் சிப் பொருத்தினால் என்ன நேரும்?! மருத்துவ உலகில் குறிப்பாக நரம்பியல் மருத்துவத்தில் பெரும் சவாலாக இருக்கும் நோய்களுக்குத் தீர்வு காணக் கூடியதாக இருக்கும் இந்தக் கேள்விக்குச் செயல் வடிவம் கொடுக்கும் முன் ஆயத்தப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது எலான் மஸ்கின் நியூராலிங் நிறுவனம்.

 

ஆம், நியூராலிங்க் நிறுவனம் தான் வடிவமைத்துள்ள எண்ணங்களைச் செயல்படுத்தும் வகையில் மூளைக்கும் கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையிலான ‘சிப்’-ஐ மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையைத் தொடங்கியுள்ளது.

 

அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாடு நிர்வாகம் கடந்த ஆண்டு நியூராலிங்க் மனிதர்களைக் கொண்டு சோதனை செய்ய அனுமதி வழங்கிய நிலையில் தற்போது அச்சோதனை நடைபெற்றுள்ளது.

 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளை வைத்து இந்தச் சோதனையை நியூராலிங்க் நிறுவனம் செய்திருந்தது. தற்போது முதன்முறை மனிதருக்குப் பொருத்தப்பட்டு சோதனை நடைபெறுகிறது.

இதனை எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் சோதனை தொடங்கியதாகவும், சிப் பொருத்தப்பட்டிருக்கும் அந்த நபர் உடல்நலன் தேறி வருவதாகவும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். மேலும், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபரின் முதற்கட்ட மருத்துவ அறிக்கை, அவருடைய நியூரான் ஸ்பைக்குகள் நேர்மறையான அறிகுறிகளைக் காட்டுவதாகவும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

 

டெலிபதி தான் பெயர்

 

நியூராலிங்கின் முதல் தயாரிப்பின் பெயர் டெலிபதி (Telepathy) என மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த டெலிபதி உபகரணமானது எண்ணங்கள் மூலம் தொலைப்பேசி மற்றும் கணினியைக் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கை, கால் போன்ற உறுப்புகளை இழந்தவர்களின் பயன்பாட்டுக்காக இந்த உபகரணம் வழங்கப்படும் என்றும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

 

ஸ்டீபன் ஹாக்கிங்கால் வேகமாகத் தொடர்பு கொள்ள முடிந்திருந்தால் எப்படி இருக்கும். அதைச் சாத்தியமாக்குவது தான் எங்களின் இலக்கு என்று மஸ்க் கூறியுள்ளார்.

ஏற்கெனவே மஸ்க் நியூராலிங் பற்றிப் பேசியபோது, நம் கபாலத்துக்குள் ஒரு ஃபிட்பிட் (Fitbit) உபகரணம் போல் நியூராலிங் சிப் செயல்படும். மூளை செயல்பாட்டைத் தூண்டிவிடும். இதன்மூலம் ஆட்டிசம் பாதித்தோர் பலனடைவர். மனச்சிதைவு (schizophrenia) நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கூட பலனடையலாம் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

by Kumar   on 31 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
பப்புவா நியூ கினி ஆளுநருக்கு சாதனைத் தமிழன் விருது. பப்புவா நியூ கினி ஆளுநருக்கு சாதனைத் தமிழன் விருது.
75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமானச் சேவை தொடர்ந்து பாதிப்பு. 75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமானச் சேவை தொடர்ந்து பாதிப்பு.
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.