LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

டெவில் வால் நட்சத்திரம் பூமிக்கு அருகில் கடந்து செல்ல உள்ளது

அடுத்த ஆண்டு 2024 ஜூன் 2-ல்வால்நட்சத்திரம் பூமிக்கு அருகில் கடந்து செல்ல உள்ளது. இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதை வெறும் கண்களால், பைனாகுலரில் பார்க்கலாம்.
***********************************
இந்த வால்நட்சத்திரம் முதலில் 1812 ஜூலை 12ல் பிரான்ஸ் விஞ்ஞானி ஜீன் லுாயிஸ் பான்ஸ்சால் கண்டு பிடிக்கப்பட்டது. பின் 1883ல் அமெரிக்காவின் வில்லியம் ராபர்ட் ப்ரூக்ஸ்சால் மீண்டும் கண்டறியப்பட்டது. இதற்கு '12பி/ பான்ஸ் - ப்ரூக்' என இவர்களது பெயர் சூட்டப்பட்டது. இது 71.32 ஆண்டுக்கு ஒருமுறை பூமிக்கு அருகில் வந்து கடந்து செல்கிறது. மணிக்கு 1600 கி.மீ., வேகத்தில் சுற்றிவரும்.
**************************
23.2 கோடி கி.மீ., துாரத்தில் இருக்கும் 
******************************
இதிலிருந்து 2023 அக். 31ல் வெடிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களிலும் இதிலிருந்து ஒளி பிரகாசிக்கும். இதன்படி அடுத்தாண்டு ஏப். 8ல் சூரிய கிரகணம் ஏற்படும். அப்போது 25 டிகிரி கோணத்தில் இருக்கும் இந்த வால் நட்சத்திரம் ஏப். 21ல் சூரியனை அருகில் கடந்து செல்லும் அடுத்து 42 நாட்களுக்கு பின் பூமிக்கு அருகில் கடந்து செல்லும். அப்போது பூமியில் இருந்து 23.2 கோடி கி.மீ., துாரத்தில் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
******************************
இதன் வாலின் விட்டம் 29 கி.மீ., இருக்கும். இது உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை விட மூன்று மடங்கு பெரியது. இதன் 'ராட்சத' அளவு காரணமாக இதற்கு 'டெவில்' எனவும் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.இதற்கு முன் இந்த வால் நட்சத்திரம் 1952 மே 22ல் பூமிக்கு அருகில் வந்து சென்றது. அடுத்து 2095ல் தான் பூமியை நெருங்கி வரும்.
*************************
வால் தோன்றுவது எப்படி
******************************
வால்நட்சத்திரம் என்பது விண்வெளியில் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் துாசி, கற்கள், வாயுக்கள், பனிக்கட்டிகளால் ஆன கலவை. 'காமெட்' என்றால் கிரேக்க மொழியில் 'முடி' என பெயர். இதில் உள்ள நீண்ட வால், தலைமுடி போல இருப்பதால் 'காமெட்' என பெயரிட்டனர். இது சூரியனுக்கு அருகில் வரும்போது, சூரிய ஒளியால் பிரகாசமான வால் போல மாறுகிறது. இதன் அகலம் அதிகபட்சம் 20 கி.மீ, இருக்கும்.
*************************************
எத்தனை வகை
**************************
இதுவரை 3650 வால் நட்சத்திரங்கள் கண்டறியப் பட்டுள்ளன. ஒவ்வொன்றும் சூரியனை சுற்றும் காலம் வேறுபடும். சில ஆண்டுக்கு / சில 20 - 200 ஆண்டு / சில 60,000 ஆண்டுக்கு ஒரு முறை, சில வாழ்நாளில் ஒரு முறை மட்டும் சூரியனை சுற்றி விட்டு செல்லும். இதனால் பூமிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
***************************
முதல் கண்டுபிடிப்பு
**************************
உலகில் வால்நட்சத்திரத்தை முதலில் (1786) கண்டறிந்தவர் ஜெர்மனியின் பெண் விஞ்ஞானி கரோலின் ஹெர்ச்சல். பின் 1680ல் தொலைநோக்கி மூலம் பார்த்தவர் ஜெர்மனியின் காட்பிரைட் கிர்ச். முதலில் புகைப்படம் எடுத்தவர் அமெரிக்காவின் எட்வர்ட் எமர்சன் பெர்னார்ட்.

அடுத்த ஆண்டு 2024 ஜூன் 2-ல்வால்நட்சத்திரம் பூமிக்கு அருகில் கடந்து செல்ல உள்ளது. இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதை வெறும் கண்களால், பைனாகுலரில் பார்க்கலாம்.

இந்த வால்நட்சத்திரம் முதலில் 1812 ஜூலை 12ல் பிரான்ஸ் விஞ்ஞானி ஜீன் லுாயிஸ் பான்ஸ்சால் கண்டு பிடிக்கப்பட்டது. பின் 1883ல் அமெரிக்காவின் வில்லியம் ராபர்ட் ப்ரூக்ஸ்சால் மீண்டும் கண்டறியப்பட்டது. இதற்கு '12பி/ பான்ஸ் - ப்ரூக்' என இவர்களது பெயர் சூட்டப்பட்டது. இது 71.32 ஆண்டுக்கு ஒருமுறை பூமிக்கு அருகில் வந்து கடந்து செல்கிறது. மணிக்கு 1600 கி.மீ., வேகத்தில் சுற்றிவரும்.

23.2 கோடி கி.மீ., துாரத்தில் இருக்கும்

இதிலிருந்து 2023 அக். 31ல் வெடிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களிலும் இதிலிருந்து ஒளி பிரகாசிக்கும். இதன்படி அடுத்தாண்டு ஏப். 8ல் சூரிய கிரகணம் ஏற்படும். அப்போது 25 டிகிரி கோணத்தில் இருக்கும் இந்த வால் நட்சத்திரம் ஏப். 21ல் சூரியனை அருகில் கடந்து செல்லும் அடுத்து 42 நாட்களுக்கு பின் பூமிக்கு அருகில் கடந்து செல்லும். அப்போது பூமியில் இருந்து 23.2 கோடி கி.மீ., துாரத்தில் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் வாலின் விட்டம் 29 கி.மீ., இருக்கும். இது உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை விட மூன்று மடங்கு பெரியது. இதன் 'ராட்சத' அளவு காரணமாக இதற்கு 'டெவில்' எனவும் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.இதற்கு முன் இந்த வால் நட்சத்திரம் 1952 மே 22ல் பூமிக்கு அருகில் வந்து சென்றது. அடுத்து 2095ல் தான் பூமியை நெருங்கி வரும்.

வால் தோன்றுவது எப்படி

வால்நட்சத்திரம் என்பது விண்வெளியில் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் துாசி, கற்கள், வாயுக்கள், பனிக்கட்டிகளால் ஆன கலவை. 'காமெட்' என்றால் கிரேக்க மொழியில் 'முடி' என பெயர். இதில் உள்ள நீண்ட வால், தலைமுடி போல இருப்பதால் 'காமெட்' என பெயரிட்டனர். இது சூரியனுக்கு அருகில் வரும்போது, சூரிய ஒளியால் பிரகாசமான வால் போல மாறுகிறது. இதன் அகலம் அதிகபட்சம் 20 கி.மீ, இருக்கும்.

எத்தனை வகை

இதுவரை 3650 வால் நட்சத்திரங்கள் கண்டறியப் பட்டுள்ளன. ஒவ்வொன்றும் சூரியனை சுற்றும் காலம் வேறுபடும். சில ஆண்டுக்கு / சில 20 - 200 ஆண்டு / சில 60,000 ஆண்டுக்கு ஒரு முறை, சில வாழ்நாளில் ஒரு முறை மட்டும் சூரியனை சுற்றி விட்டு செல்லும். இதனால் பூமிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

முதல் கண்டுபிடிப்பு

உலகில் வால்நட்சத்திரத்தை முதலில் (1786) கண்டறிந்தவர் ஜெர்மனியின் பெண் விஞ்ஞானி கரோலின் ஹெர்ச்சல். பின் 1680ல் தொலைநோக்கி மூலம் பார்த்தவர் ஜெர்மனியின் காட்பிரைட் கிர்ச். முதலில் புகைப்படம் எடுத்தவர் அமெரிக்காவின் எட்வர்ட் எமர்சன் பெர்னார்ட்.

by Kumar   on 20 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.