LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

27 பேர் மட்டுமே வாழும் நாடு எது தெரியுமா...!

இங்கிலாந்துக்கு அருகில் உள்ள சீலாந்து எனப்படும் நாடு, உலகின் மிகச்சிறிய நாடாகக் கருதப்படுகிறது. 

 

இங்கிலாந்தின் சஃபோல்க் கடல் கடற்கரையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நாடு, மைக்ரோ தேசம் எனவும் அழைக்கப்படுகிறது.

 

இரண்டாம் உலகப் போரின் போது, பிரித்தானியாவால் அமைக்கப்பட்ட இந்தப் பகுதி பாழடைந்த கடல் கோட்டையின் மீது அமைந்துள்ளது. 

 

மைக்ரோ நேஷன்

 

சீலாந்தின் பரப்பளவு 6000 சதுர அடியில் பரவியுள்ளது. மைக்ரோ நேஷன் எனப்படும் இந்தக் கடல் நிலத்தைப் பலர் ஆக்கிரமித்தனர்.

 

பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி, ராய் பேட்ஸ் என்ற நபர் தன்னை சீலாந்தின் இளவரசராக அறிவித்தார். ராய் பேட்ஸ் இறந்ததிலிருந்து, அவரது மகன் மைக்கேல் ஆட்சி செய்து வருகிறார்.

 

ராய் பேட்ஸ் சீலாந்திற்கான தனியான தபால் தலைகள், பாஸ்போர்ட்கள் மற்றும் பணத்தை அறிவித்தார். நாணயத்தில் ராய் பேட்ஸின் மனைவி ஜான் பேட்ஸின் படம் உள்ளது.

 

 

இந்த நாட்டிற்கும் சொந்தமான கொடி உள்ளது, அதில் சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய நிறங்கள் உள்ளன.

 

பொருளாதாரம்

 

இந்தச் சிறிய நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் நன்கொடைகளை நம்பியே உள்ளது. எனினும், தற்போது மக்கள் சுற்றுலாவுக்காக சீலாந்துக்கு பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

 

இதனால் அந்த நாட்டுக்கான வருமானம் அதிகரித்திருக்கக் கூடுமென நம்பப்படுகிறது. 

 

தனி நாடு

 

சீலாந்தில் 27 பேர் மாத்திரமே உள்ளனர். சீலாந்தை தனி நாடாக அந்த நாட்டு இளவரசர் அறிவித்தாலும், சர்வதேச ரீதியில் அந்த த நாடு இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.

 

இந்தக் காரணத்திற்காக, உலகின் மிகச்சிறிய நாடாக தற்போது வாடிகன் நகரம் பதிவாகியுள்ளதுடன், வாடிகன் நகரம் 0.44 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்குச் சுமார் 800 பேர் மாத்திரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

by Kumar   on 21 Mar 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
பப்புவா நியூ கினி ஆளுநருக்கு சாதனைத் தமிழன் விருது. பப்புவா நியூ கினி ஆளுநருக்கு சாதனைத் தமிழன் விருது.
75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமானச் சேவை தொடர்ந்து பாதிப்பு. 75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமானச் சேவை தொடர்ந்து பாதிப்பு.
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.